அகதிகள் கப்பல் முக்கியது 31 பேர் சடலமாக மீட்பு
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல
முயன்றபோது நீரில் மூழ்கிய 31 ஆப்பிரிக்க குடியேற்றவாசிகளின் ,
உடல்களை திங்களன்று மீட்டுள்ளதாக துனிசிய
கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்களில்,
இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாகவும்
தெரிவிக்க பட்டுள்ளது .

துனிசியாவிலிருந்து இத்தாலிய
கடற்கரையை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்த படகுகளின்
எண்ணிக்கை சமீபத்தில் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது .

காலநிலையை கருத்தில் கொள்ளாது பயணிக்கும் அகதிகள் ,
அறியாமையின் காரணமாகவே ,இவ்வாறான உயிர் புலிகள் இடம்பெறுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

முட்டை ஒன்று 44 ரூபா

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெளியிடுவதற்கான சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை மேலும் காலதாமதம் செய்வதால் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திட்டமிட்டபடி முட்டைகளை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மேலும் 5 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிலியந்தலை பிரதேசத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட கடையொன்று நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பு திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி விலையை விட 9 ரூபா அதிக விலையில் முட்டை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனையின்போது, ​​கடையில் தலா 3,120 முட்டைகள் அடங்கிய 12 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த முட்டைகளை 44 ரூபா கட்டுப்பாட்டு விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வர்த்தகரை எச்சரித்துள்ளனர்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது

புதையல் தோண்டச் சென்ற பொலிஸ் பரிசோதகர் கைது

கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டச் சென்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கப்படுகின்றது.

உன்னால் அழுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் அழுகிறேன்

உன்னால் அழுகிறேன் ..

உன்னை பாட தான்
உயிராய் நினைக்கிறேன்
உள்ளம் அழுவதால்
உயிரோடே வாடுகிறேன்

நினைவுகளை தந்து விட்டு
நீ எங்கே போனாய்
நான் மட்டும் அழுவதற்காய்
நாட்களை ஏன் படைத்தாய்

ஒன்றான நாட்களில்
ஒருமையான காலங்கள்
இன்று நினைத்தாலும்
இதயம் கனக்கிறதே

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று
ஏன் எனை எறிந்தாய்
எதற்காய் என்னை தண்டித்தாய்

கடந்த நாள் ஒன்றில் – உன்
கடப்பை கடக்கையில
தேம்பி தேம்பி அழுதேனே
தெருவெல்லாம் நனைத்தேனே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-04-2023

வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி
Posted in உலக செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி

வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி

ரஷ்யா உக்ரைனுக்குள் இடையில் வெடித்த கடும் யுத்தம்
பலநூறு ,இராணுவம் பலி ,வீழ்ந்த உலங்குவானூர்தி ,
வெடித்த குண்டுகள் எரியும் பயங்கரம் ,

வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி


இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான்

இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான்

ஈரானுக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான் ,
எதிரிகளை அலற விட்ட ஈரான் வான் காப்பு படைகள் .

கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்
Posted in உலக செய்திகள்

கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்

கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்

இந்திய கொல்கத்தா பகுதியில் உள்ள கழிவறை ஒன்றுக்குள் ,
பிள்ளையை பெற்ற 32 வயது இளம் பெண் ஒருவர் ,
அந்த அழகிய ஆண் சிசுவை ,கழிவறையின் கண்ணாடிகளை ,
உடைத்து ,வெளியே தூக்கி இருந்துள்ளனர் .

சிசு கால்வாய் பகுதியில் வீழ்ந்து காணப்பட்ட நிலையில் ,
அந்த சிசுவை கண்ணுற்ற மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
ஒரு நாள் கழித்து அந்த அழகிய ஆண் சிசு இறந்து விட்டது என தெரிவிக்க பட்டுள்ளது .

தான் கர்ப்பமாக உள்ளது தெரியாது என சிசுவை பெற்ற பெண் தெரிவித்துள்ளார் ,
கணவன் மனைவி இருவரையும் பயங்கர குடிகாரர்கள் எனவும் ,அதனால் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது .

இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க .

Error: View 9293b2au4w may not exist
வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு எட்டு பேர் காயம்

வெடித்த குண்டு எட்டு பேர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
நடந்த வெடி விபத்தில் 8 பேர் பலி.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது .

இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர் .

குறித்த அலுவலகத்தில் பழைய ஆயுத சேமிப்பு கிடங்கும் உள்ளதாகவும் ,
அது வெடிததா அல்லது ,பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவில்லை
என தெரிவித்துள்ள ,பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று
வருவதாக குறிப்பிட்டுள்ளனர் .

சாமீப நாட்களாக தொடர் குண்டுகள் வெடித்த,
வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்
Posted in இலங்கை செய்திகள்

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 4 ஆண்டுகளில் பெறப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கிடைக்கும் நிதிக்கு வட்டிகட்ட வேண்டும் என்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட மாசுபாட்டுக்கு கிடைக்கும் இழப்பீடு நாட்டுக்கு சொந்தமான பணம் என்பதால் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கப்பல் விபத்து நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்துவிட்டாலும் எதுவும் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், இழப்பீட்டை பெற்றுக்கொள்ள அரசாங்கம் உழைக்கவில்லை என்றார்.

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்

அதற்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வந்துள்ள அரசாங்கம் மக்களை பலிகடா ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 4 ஆண்டுகளில் பெறப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் வழக்குத் தொடுப்பதன் மூலம் அதிக டொலர்களை செலவிட நேரிடும் என்று குறிப்பிட்ட அவர், இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் வழக்கு தொடர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு சொந்தமான 6.4 பில்லியன் டொலர்களை தடுக்கும் வகையில் 250 மில்லியன் டொலர்கள் பிரித்தானிய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியுள்ளார் என்றும் நாடு வங்குரோத்து அடையும் சந்தர்ப்பத்திலும் தமது சட்டைப் பையை நிரப்பும் தாகம் தீரவில்லை என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை

கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி

நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர்,ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் டபிய்யூ. சரத் குமார,கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் செயலாளர்

ஏ.பி.விக்ரமசிங்க,கிங்குச சங்கத்தின் முன்னாள் இளைஞர் அலுவல்கள் செயலாளர் சட்டத்தரணி ஜயதிலக்க முதுகம உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

குறித்த நபர் நகர் பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

முழுமையாக முடங்கிய மன்னார்
Posted in இலங்கை செய்திகள்

முழுமையாக முடங்கிய மன்னார்

முழுமையாக முடங்கிய மன்னார்

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (25) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து

உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள

முழுமையாக முடங்கிய மன்னார்

திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை

தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்

வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்

நாட்டில் நிலவும் வெப்பமான வானிநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீரிழப்பு அபாயத்தில் உள்ள தரப்பினர் வெயிலில் நடமாடுவதை குறைப்பதுடன், அதிகளவில் நீரை அருந்தி நீரேற்றத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் இருந்து, குறிப்பாக அத்தியாவசியமற்ற வெளிப்புற செயல்பாடுகளில் இருந்து விலக்கி வைக்குமாறும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்பமான வானிலை சில நாட்கள் தொடரும்

இதேவேளை, அனுராதபுரம், இரத்தினபுரி மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களில் சராசரி வெப்பநிலையை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாவும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை நிலவும் என்றும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே, பொதுமக்கள் வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் கிரிமியா துறைமுகமான செவாஸ்டோபோல்
மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைன் ட்ரோன் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

வான்வழி மற்றும் கடல் வழிகள் விமானங்கள் மூலம் ,
ரஸ்யாவின் நீர்மூழ்கிகள் ,மற்றும் ஏவுகணை கப்பல்கள் மீது
தாக்குதல் நடத்த உக்ரைன் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்க பட்டுள்ளதாக ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் பத்துக்கு மேற்பட்டதா ரஷ்ய போர் கப்பல்கள் தரித்துள்ளன .


செவாஸ்டோபோல் துறைமுகத்தின் வெளிப்புற பகுதியில் ,
நங்கூரம் இட்ட கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்க பட்டது .
ஆனால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ..

உக்ரைன் இந்த திடீர் தாக்குதலை அடுத்து ,
உக்ரைன் பல பகுதிகள் மீது ரசியா காடும் வான்வழி மற்றும்
ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
.

Error: View 9293b2au4w may not exist
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்

சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்

சீறி பாய்ந்த விமானங்களை ,சுட்டு வீழ்த்திய ஏவுகணைகள் ,
ரஷ்ய துறைமுகத்தில் தாக்குதல் ,
பழி வாங்கும் தாக்குதலை நடத்தும் ரஷ்ய.

click watch full video

வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் -ஆயுதம் இன்றி திணறும் இராணுவம்
Posted in உளவு செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் -ஆயுதம் இன்றி திணறும் இராணுவம்

வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் -ஆயுதம் இன்றி திணறும் இராணுவம்

வெடித்த கடும் யுத்தம் எரியும் உக்ரைன் நகரங்கள் ,
ஆயுதம் இன்றி திணறும் இராணுவம் ,
சுற்றி வளைத்து தாக்கும் எதிரி .

வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்
Posted in உலக செய்திகள்

வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்

வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்

அமெரிக்கா போயிங் ரக விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த பொழுது
திடீரென தீ பிடித்து கொண்டது .

விமான இயந்திரத்தில் பறவைகள் மோதி கொண்டதால்,
இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தீயில் எரிந்தவாறே விமான நிலையத்தில் பத்திரமாக தரை
இறக்க பட்டது ,ஆனால்
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .

அதில் பயணித்த பயணி ஒருவர் பிடித்த காணொளி,
டிக்டாக் பகுதியில் வெளியாகி வைரலாகிய வண்ணம் உள்ளது

அமெரிக்கா போயின்ங் மேக்ஸ் ரக விமானம் ,
பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய சம்பவங்கள்,
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
Posted in உலக செய்திகள்

சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்

சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்

சுற்றி வளைத்த ரஷ்யா இராணுவம் உக்ரைனில் வெடித்த கடும் போர்

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்
Posted in உலக செய்திகள்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்

வடக்கு ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராசிங்கில்
ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹனோவர் நகருக்கு வெளியே உள்ள,
நியூஸ்டாட் ஆம் ரூபென்பெர்ஜ் அருகே,
பிராந்திய வேகமாக பயணித்த ரயிலுடன் கார் மீது மோதியதாக,
காவல்துறை தெரிவித்துள்ளது .

கார் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஐவர் கொலை கத்தி மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐவர் கொலை கத்தி மீட்பு

ஐவர் கொலை கத்தி மீட்பு

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேகநபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை 2 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது.

அதன் அடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் தலைமை பொலிஸ் அதிகாரி மேனன் தலைமையிலான உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்பின் நெறிப்படுத்தலில் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12 ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐவர் கொலை கத்தி மீட்பு

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.