Author: நிருபர் காவலன்
நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பெண் தனது காரின் ஜன்னல் வழியாக
மீட்கப்பட்ட வியத்தகு சம்பவம் இடம்பெற்றுள்ளது
செவ்வாய்க் கிழமை காலை வொர்செஸ்டருக்கு அருகிலுள்ள பெர்ஷோர் மற்றும் டிரேக்ஸ் ப்ரோட்டன் இடையே தண்ணீரில் மெதுவாக ஆழமாக மூழ்கியதால், காவல்துறை அதிகாரிகள் தண்ணீரில் தத்தளித்து, வாகனத்திலிருந்து பெண்ணை இழுது மீட்டனர் .
30 அடி கீழே மற்றும் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருப்பதைக் கண்ணுற்ற காவல்துறையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து ,அதற்குள் இருந்து பெண்ணை உயிரோடு மீட்டனர் .
இந்த மீட்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
Featured
ரகுராமின் மருத்துவ முறையை ஏற்றுக்கொள்ளலாமா
ரகுராமின் மருத்துவ முறையை ஏற்றுக்கொள்ளலாமா
எந்த வகையான நோய்கட்கு பயன் பெறலாம்
உடற்கூற்றியல் நூறு வீதம் உண்மை, உடற்றொழிலியல் நூறுவீதம் உண்மை , மருந்தியல் நூறு வீதம் உண்மை … ஆனால் ஆய்வுத்தரவுகளை மட்டுமே மருந்து மாபியா தனக்கு சார்பாக நகர்த்து கின்றது
எங்கள் தேசத்தில் கியூபா போன்ற ஒரு நடை முறைதான் தேவை
ஆய்வுகள் யாவும் அந்நாட்டுக்கே உரியது
தனியார் வைத்தியசாலைகளை நிறுவ முடியாது மருந்து உற்பத்தியும் மக்கள் நலனை நோக்கியது …
Video link
Featured
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு ,
விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை .
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்
பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்
பிரிட்டனில் பிட்சா ஹட்டில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டதால், பிரித்தானிய இராணுவ வெடிகுண்டுப்
படை மற்றும் பொலிசார் சுற்றி வளைத்தனர் .
கென்ட்டின் டார்ட்ஃபோர்டில் உள்ள ப்ராஸ்பெக்ட் பிளேஸில் உள்ள,
கடைகளில் இருந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பிரித்தானிய இராணுவ வெடிமருந்து நிபுணர்கள் ,
சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் ,குறித்த பொதியை
வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோ உதவியுடன் சோதனை செய்ய பட்டது
இவ்வேளை அருகில் உள்ள கடைகள் யாவும் பூட்ட பட்டு மக்கள்
வெளியேற்ற பட்டனர் .
குறித்த பொதியை யார் அவ்விடத்திற்கு எடுத்து வந்தது என்பது தொடர்பில் ,இதுவரைதெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த சம்பவத்தால் சில மணித்தியாலங்கள் அங்கு பதட்டம் நிலவியது .
சூடானில் தரை இறங்கிய பிரிட்டன் சிறப்பு இராணுவ விமானம்
சூடானில் தரை இறங்கிய பிரிட்டன் சிறப்பு இராணுவ விமானம்
சூடானில் அரச இராணுவத்தினருக்கும் ,
துணை படைகளிற்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்று வருகிறது .
இவ்வேளை அங்கிருந்த பிரிட்டன் மக்களையும் ,
தூதரே ஊழியர்களையும் வெளியேற்ற ,
பிரிட்டன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது .
பிரிட்டனில் இருந்து சென்ற இராணுவ விமானம் ,
சூடானில் தங்கி இருந்து 260 மக்கள் ,
மற்றும் முக்கிய நபர்களை காவிய படி சைப்பிரஸ் பயணித்தது .
மேலும் விமான நிலைய வரமுடியாது தவிக்கும் ,
பிரிட்டன் மக்களையும் வெளியேற்றும் நகர்வில் ,
பிரிட்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
ஆப்கனிஸ்தானை போல சூடானும் ,
துணை படைகள் வசம் விழும் நிலைக்கு செல்கிறது .
இவை அமெரிக்கா போட்டு கொடுத்த திட்டமிடலின்
அடிப்படையில் நகர்வதாகவே நோக்க முடிகிறது .
துருக்கியிடம் விமானங்களை வாங்கி பாதுகாப்பை பல படுத்தும் ருமேனியா
துருக்கியிடம் விமானங்களை வாங்கி பாதுகாப்பை பல படுத்தும் ருமேனியா
துருக்கி நாட்டின் உளவு விமானங்கள் 18 ஐ ருமேனியா நாடு வாங்கி குவிக்கிறது .
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பை மேற்கொண்டு வரும் நிலையில் ,
அடுத்து தமது நாட்டை ரஷ்ய அபகரிக்கும் என்பதால் தற்போது தமது நாட்டின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ருமேனியா ஈடுபட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தினர் முக்கிய ஆயுத தளபாடங்களுடன் ,
ருமேனியாவில் தரித்துள்ளனர் .,
அவ்வாறான நிலையில் துருக்கியிடம் ருமேனியா ,
உளவு விமானங்களை வாங்க குவித்துவருவது உக்ரைனை வீழ்த்தி ஐரோப்பா மீது ரஷ்யா,போர் தொடுக்கும் என்ற அபாயம் உள்ளதையே
இந்த ஆயுத குவிப்பு காண்பிக்கிறது .
மாடு களவாட வந்தவர்கள் மடக்கிப்பிடிப்பு
மாடு களவாட வந்தவர்கள் மடக்கிப்பிடிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமது வாழ்வாதாரமாக இருக்கின்ற 20 வரையான மாடுகள் இதுவரை திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தமக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக இவ்வாறு மாடுகள் களவாடப்பட்டு,
இரவு நேரங்களில் மாங்குளத்திலிருந்து கடத்திச் செல்லப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (26) மாங்குளம், நீதிபுரம் பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றுவதாக அறிந்த மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை எனவும் அதனைத்
தொடர்ந்து விசேட அதிரடி படையினருக்கு அறிவித்தபோது, அவர்கள் குறித்த மாடு ஏற்றுகின்ற இடத்துக்கு வருகை தந்துவிட்டு, அங்கிருந்த வாகனத்தையோ
அல்லது மாடுகளையோ ஏற்ற வந்தவர்களையோ கைது செய்யாது வாகனத்தில் ஏற்றிய மாடுகளை இறக்கிவிட்டு, வாகனங்களை செல்லுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.
மாடு களவாட வந்தவர்கள் மடக்கிப்பிடிப்பு
இதனையத்து விசனமடைந்த இளைஞர்கள், இன்று (27) அதிகாலை ஒரு மணியவில் குறித்த பகுதியில் இருந்து மாடுகளை இறக்கி விட்டு வந்த வாகனத்தை வீதியில் மறித்து ஊடகங்களையும் அழைத்து, பின்னர் 119
ஊடாகவும், ஊடகவியலாளர் ஊடாகவும் பொலிஸாரை அழைத்து, குறித்த இடத்தில் இரண்டு வாகனத்தோடு மாடு ஏற்றுவதற்காக வருகை தந்த ஐவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
15 மாடுகள் ஏற்றுவதற்காக கட்டிவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்திய அதே வேளையிலே, அந்த இடத்திற்கு வருகை தந்த தங்களுடைய மாடுகளை தொலைத்த இருவரை அழைத்துச் சென்று அந்த இடத்தில் அவர்களுடைய மாடுகள் இருக்கின்றதா என்பதையும் சோதித்தனார்.
இருப்பினும் அந்த இரண்டு நபர்களுடைய மாடுகளும் அங்கே இருக்கவில்லை. எனினும், தொடர்ச்சியாக இவ்வாறு இரவு நேரங்களில் மாடுகள் கடத்தப்படுவதன் ஊடாகவே தங்களுடைய மாடுகள் தமக்கு தெரியாமல்
கடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரினர்.
மாடுகளை ஏற்றுவதென்றால் உரிய முறையில் உரிய அதிகாரிகளின் அனுமதிகளை பெற்று பகல் வேலைகளில் ஏற்ற முடியும் எனவும் இவ்வாறு
இரவு வேலைகளில் ஏற்றுவது என்பது திருட்டுத்தனமான வேலைக்காகவே செய்கின்றார்கள் என்பதையும் இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Featured
அதிவேக வீதிகளின் கட்டணம் அதிகரிப்பு
அதிவேக வீதிகளின் கட்டணம் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிவேக வீதிகளின் கட்டணங்களையும் திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சில்லுகளை கொண்ட வாகனங்கள் அல்லது இரண்டு அச்சுகள் மற்றும் 06 சில்லுகளை கொண்ட இரு நோக்கு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பெண் ஒருவர் சடலமாக மீட்பு
பெண் ஒருவர் சடலமாக மீட்பு
களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்புறம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு கெலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட விக்கிரமராட்சி பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (27) காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Featured
ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை
ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரேவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (26) இரவு இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹிரேவத்த கடற்கரைக்கு அருகில் மேலும் இருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், குறித்த இடத்திற்கு வந்த நபர் மது அருந்திக்கொண்டிருந்த நபரை கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
Featured
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறியாட்டம் ,
வரத்து படுகொலையை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் போர் பதட்டம் நிலவி வருகிறது .
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டு விட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இவ்விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புத்தர் சிலை அகற்றப்பட்டது – ஆயர் இல்லம் அறிவிப்பு
கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவண செய்யுமாறும் கேட்டு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கடந்த மார்ச் 27ல் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்ச தீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
Featured
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி ,
தொடரும் உக்கிர மோதல் .
வட்ஸ்அப்-இல் வரவுள்ள அதிரடி மாற்றம்
வட்ஸ்அப்-இல் வரவுள்ள அதிரடி மாற்றம்
ஒரே வட்ஸ்அப் கணக்கை நான்கு அலைபேசிகளில் பயன்படுத்தும் வசதியை பயனர்களுக்கு வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, வட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே அலைபேசியில் மட்டுமே பயன்படுத்தும் கட்டாயம் இருக்காது.
எதிர்காலத்தில் புதிய அனுபவத்தை அனுபவிக்க தயாராகுமாறு Meta நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Featured
விவசாய கிணற்றில் வீழ்ந்த யானைகள்
விவசாய கிணற்றில் வீழ்ந்த யானைகள்
முல்லைத்தீவில் விவசாய கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்று (25) மீட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு, முள்ளியவளை தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள களிக்காடு விவசாய கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தாய் யானை ஒன்றும் இரண்டு குட்டிகளும் வீழ்ந்துள்ளன.
இந்த யானைகள், நேற்று முன்தினம் (25) இரவு வீழ்ந்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் அருகில் உள்ள வயல் நிலங்களை யானைக்கூட்டம் ஒன்று நாசம் செய்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதற்காக கூட்டமாக வந்த காட்டு யானைகள், விவசாய கிணற்றில் வீழ்ந்திருக்கலாம் என்றும் யானையினால் நாள்தோறும் அழிவை சந்தித்து வருவதாகவும் களிக்காட்டு விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாய கிணற்றில் வீழ்ந்த யானைகள்
யானைகள் கிணற்றில் வீழ்ந்த சம்பவம் தொடர்பில் விவசாயிகள் கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வளங்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், யானைகளை மீட்டு, காட்டில் விட்டுள்ளார்கள்.
குறித்த யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதை தொடர்ந்து, அருகில் உள்ள பற்றைக்காட்டில் யானைக்கூட்டம் நின்றுள்ளதுடன், மேற்படி யானைகளை மீட்கும் நடவடிக்கையின் போது, குறித்த யானைக்கூட்டம் கிணற்றை நோக்கி வந்தவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் வெடிகொழுத்தி யானைகளை கலைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Featured
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) மாத்தறை, நுபே புகையிரத கடவைக்கும் பாம்புரான புகையிரத நிலையத்திற்கும் இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பெந்தோட்டகேவத்த என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் மூன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்றுவிட்டு புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் மாத்தறை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்பு
சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்பு
சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் அவர்களில் 13 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எஞ்சியவர்கள் இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அமைச்சர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்திருந்தார்.
Featured
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் கைக்கார்கள் அதிரடி தாக்குதல் ,
இஸ்ரேல் விமான படைகள் சிலது முடங்கியது ,
பழிவாங்கும் தாக்குதலை நடத்தி ஈரான் கொண்டாட்டம் .
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல் .
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்
அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது ,
ஆயுதம் ஏந்திய போராளி குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது .
கிழக்கு சிரியாவில் அல்-ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் ,
அமெரிக்க தளத்திற்கு செல்லும் சாலையின்,
பாதுகாப்பிற்கு பொறுப்பான இராணுவ சோதனைச் சாவடிகளை ,
குறிவைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழு தாக்கியது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர்
காயமடைந்த இருவரும் இருவரும் அல்-ஷாஹைல் நகரில் உள்ள
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிரியாவில் எண்ணெய் கடத்தலில் ஈடுபாடும் ,
அமெரிக்கா இராணுவத்தை இலக்கு வைத்து,
இவ்வாறான தாக்குதல் ,
சமீப காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .













































