நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
Posted in இலங்கை செய்திகள்

சதிகளை அம்பலப்படுத்துவேன்

சதிகளை அம்பலப்படுத்துவேன்

சதிகளை அம்பலப்படுத்துவேன்

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சதித் திட்டம் குறித்து மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்திய பின்னர் சதித் திட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியை கோருவதற்காக நாங்கள் அவரை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சதித்திட்டம் குறித்த முதல்கட்ட விபரங்களை “ஒன்பது பேரின் மறைக்கப்பட்ட கதை“ என்ற ஏப்ரல் மாதம் வெளியான நூலில் அவர் வெளியிட்டிருந்தார்.

சதிகளை அம்பலப்படுத்துவேன்

எனினும் புதிய தகவல்கள் குறித்து மேலதிக விபரங்களை அவர் வெளியிட மறுத்துள்ளார் அவற்றை தவறாக அர்த்தப்படுத்தலாம் என்பதால் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக அந்தவிபரங்களை முதலில் ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும்,என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச தனது பிரசுரத்தில் உள்ள விடயங்கள்

ஜனாதிபதிக்கு தெரியும் லண்டனில் சமீபத்தில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தான் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் உள்ள ஆதாரங்களை குழப்ப விரும்பவில்லை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு

குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் சைவவழிபாடுகளை மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) குருந்தூர்மலையில் சைவவழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற தமிழ் மக்களுடைய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை

உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்களான அன்டனி ஜெயநாதன் பீட்டர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் பொலிஸில் முறைப்பாடு

அந்தவகையில் தேரர்கள் மற்றும், சில சிங்கள மக்களே இவ்வாறு இடையூறு விளைவித்ததாக குறித்த முறைப்பாட்டில் தாம் குறிப்பிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பக்கச்சார்பாகச் செயற்பட்டதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் பேருந்து கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தனியார் பேருந்து கோர விபத்து

தனியார் பேருந்து கோர விபத்து

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று தெமோதராவில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் குறைந்தது 25 பேர் இருந்ததாகவும், இதில் இதுவரையில் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.

காயமடைந்த பயணிகள் மருத்துவ சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் மீட்பு பணிகள் துரதமாக இடம்பெறுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஈரான்-கடலுக்குள்-அமெரிக்கா-பதட்டம்-அதிகரிப்பு.jpg
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு

ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு

யாழ் மக்களுக்கான அரிய வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மக்களுக்கான அரிய வாய்ப்பு

யாழ் மக்களுக்கான அரிய வாய்ப்பு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று (15) யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

குளோபல் பெயார் இன்றும் (16) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ்

ஜெயபாஸ்கரன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட

உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ் மக்களுக்கான அரிய வாய்ப்பு

கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் கொழும்புக்கு வராமல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக் கொள்ளுவதற்கான வாய்ப்பை குளோபல் பெயார் வழங்குகிறது.

ஊழியர் சேமலாப நிதி , ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினைகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் தூதரகத் துறையின் சேவைகள் முதலானவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகள் குளோபல் ஃபேர்-2023 யில் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழில் திணைக்கம் ஆகியவற்றின் சேவைகளை பொதுமக்களின் காலடிக்கு கொண்டு வருவதுடன் பாடசாலை மாணவர்களுக்கு கல்விக்கான உதவி மற்றும் சமூக சேவை வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் குளோபல் பெயாரில் இதற்காக இணைந்துள்ளன.

முதலாளிகளின் அறக்கட்டளை நிதியச் சபை, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய தொழில் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அதிகார சபை, சமூக சேவைகள் திணைக்களம் போன்றவற்றின் அனைத்து நிறுவனங்களின் சேவைகளும் இங்கு இடம்பெறவுள்ளன.

யாழ் மக்களுக்கான அரிய வாய்ப்பு

உள்நாடு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். பயிற்சி பெற்றும் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு தொழில் பயிற்சி அதிகார சபை மூலம் சான்றிதழ் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளைப்

பொறுத்தவரை, அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பில் தேவையான சேவைகள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொழிலாளர் தொடர்பான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி இங்கு இடம்பெறவுள்ளது.

இரவு நேரத்தில் பொழுது போக்கு இசைக் கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.-

யுவதி மரணம் அதிரடியாக தடை விதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யுவதி மரணம் அதிரடியாக தடை விதிப்பு

யுவதி மரணம் அதிரடியாக தடை விதிப்பு

பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன்

எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

“கொவிட் நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன. இதனால், பல விமானங்கள் தரையிலேயே இருந்தன. ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம். கொவிட் காலத்தில், தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.

விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

“260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது. அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால், அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர்.

ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள்.

ஆனால் அவர்கள் வெளியேறினால், வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு, விமான சேவை தொடரும் என குறிப்பிட்டார்.

வெடித்த குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு பலர் மரணம்

வெடித்த குண்டு பலர் மரணம்

சோமாலியா தலை நகரில் திடீரென வெடித்த கூண்டில் .
சிக்கி மூவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

அருகில் உள்ள கட்டடங்கள் ,அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பன,
பலத்த சேதமடைந்துள்ளன .

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் இராணுவம் குவிக்க பட்டு ,
பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது .

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ,ஒருவர் பலியாகியும் 24 பேர் காயமடைந்துள்ளனர் .

மேலும் 790000 மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து உடைக்க பட்டுள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை


ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை

மட்டக்களப்பில் விபத்து 4 பேர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் விபத்து 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பில் விபத்து 4 பேர் படுகாயம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

கம்பஹாவிலிருந்து காத்தான்குடி நூதனசாலையை பார்வையிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரில் பயணித்துள்ளனர்.

மட்டக்களப்பில் விபத்து 4 பேர் படுகாயம்

இந்நிலையில் திடீரென குறுக்கீடு செய்து வீதியைக் கடக்க முயன்ற மோட்டார் வண்டியில் மோதுவதைத் தவிர்ப்பதற்கு முற்பட்டவேளை கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கார் எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது மோதியுள்ளது. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உட்பட காரில் பயணித்தவர்களும் அடங்கலாக 4 பேர் பலத்த காயங்களுக்குட்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்

. இதில் துவிச்சக்கர வண்டி காருக்குக் கீழ் அக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 14 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளுக்கு இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகத்தை நாளை (16) எட்டரை மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்த வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் 14 மணித்தியால நீர் வெட்டு

அன்றைய தினம் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் எனவும், அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட உள்ளூராட்சி சபை பகுதிகள் மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் இவ்வாறு இடை நிறுத்தப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

விசாரணையில் இறந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்தது.

கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு
Posted in இலங்கை செய்திகள்

லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு

லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு

கிழக்கு கடற்கரையில் இருந்த ‘லோடியா’ என்ற மீன் இனம் தெற்கு கடற்கரையிலும் பரவியுள்ளதாக தேசிய விஷ தகவல் மையம் அறிவித்துள்ளது.

இந்த உயிரினம் மனித உடலில் உரசினால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதானி வைத்திய நிபுணர் கலாநிதி ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இந்த மீன் இனத்தை கடலில் காணமுடியும் என கலாநிதி ரவி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.

லோடியா என்ற மீன் இனம் கிழக்கிலிருந்து தெற்கிற்கு

இந்த மீன் ஒரு சிறிய பலூனைப் போலவும், வயிற்றில் நீலமான நுாலை போன்ற சுரப்பிகளைக் கொண்டிருப்பதாகவும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த மீனை தொடுவதன் மூலம், ஒரு நபர் ஒவ்வாமையிலிருந்து அதிர்ச்சி நிலைக்குச் செல்லலாம், இதன் மூலம் நரம்பு மண்டலம், இதயம் மற்றும் சுவாச மண்டலம் பாதிக்கப்படலாம் என்பது மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை

ஈரானை சுற்றிவளைத்த அமெரிக்கா பதட்டமாகும் எல்லை

இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்

இராணுவத்தின் புதிய பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதானியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது

வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்
Posted in இலங்கை செய்திகள் சமையல் சமையல் cook

வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்

வடை விற்று கோடீஸ்வரன் கோடிகளை அள்ளும் தமிழன்

வடை விற்று கோடீஸ்வரன் ஆன இலங்கை தமிழன் ஒருவர்
வீதியோர உணவகம் ,வடை ,ரோல் ,பட்டீஸ் ,பொரியல் ,
கட்லட் ,கடல வடை ,பஸ் ,ஆட்டோ ,வீடு வாங்கி கோடிகளில் சம்பாதிக்கும் தமிழன் ,குவியும் பாராட்டு ,

https://youtu.be/NLeh9loBszA
ஈரான் விமானங்கள் முடக்கம் சுற்றி வளைத்த இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானங்கள் முடக்கம் சுற்றி வளைத்த இஸ்ரேல்

ஈரான் விமானங்கள் முடக்கம் சுற்றி வளைத்த இஸ்ரேல்

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வில் பேருந்துகள் கையளிக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா 4, கிளிநொச்சி 4, மன்னார் 3, முல்லைத்தீவு 3, யாழ்ப்பாணம் 4, பருத்தித்துறை 3, காரைநகர் 3 என 24 பேருந்துகள் வடமாகாண சாலைகளுக்கு பகிரப்பட்டது.

வடக்கிற்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு

குறித்த நிகழ்வில் போக்குவரத்து பெருந்தெருக்கள் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ்

ஜெயபாஸ்கரன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.அல்விஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கெட்டகொட,

ரகுமான் மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

நேற்று (13) சொட்டுக்கருவி ஊடாக ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் என தெரிவிக்கப்படுகிறது.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.

எனினும், அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், சொட்டுக்கருவியில் இருந்து ஏற்பட்ட கிருமித் தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்