இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை

குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன
Posted in இலங்கை செய்திகள்

10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன

10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன

நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 – 40 வீதத்தினால் குறைந்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பருவமழைக்கு முன்னதாக சேதமடைந்த தொட்டிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

10000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன

தற்போது நிலவும் எல்-நினோ செயன்முறை காரணமாக அடுத்த பருவத்தில் நல்ல மழைவீழ்ச்சி கிடைக்குமெனவும், அதற்கு அடுத்த பருவத்தில் மீண்டும் வறட்சி ஏற்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே பருவமழைக்கு முன் இந்த தொட்டிகளை புனரமைத்து அவற்றில் நீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகளின் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரொக்கட் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்


ரொக்கட் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்

இராணுவ முகாம் மீது எதிரி படைகள் திடீர் ரொக்கட் தாக்குதல் ,
சிதறிய இராணுவ முகாம் ,வெடித்த போர் ,

full video

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

காரில் சிக்கிய இளம் ஜோடி

காரில் சிக்கிய இளம் ஜோடி

சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி அதில் இருந்த பெண் மற்றும் ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன.

அதன்படி, நுவரெலியா பொலிஸார் அவர்கள் இருவரையும் போலி ஆவணங்களுடன் கைது செய்தனர்.

போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் நுவரெலியாவுக்கு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (27) மாலை காருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களிடம் 03 மோட்டார் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள், 03 வருமான உரிமங்கள், 03 காப்புறுதிச் சான்றிதழ்கள், நிதி நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி தவணைகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த 03

காரில் சிக்கிய இளம் ஜோடி

கடிதங்கள், வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான ஆட்சேபனை இல்லை என 03 கடிதங்கள், வாகன இலக்கத் தகடு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டின் 03 பிரதிகள், 03 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முச்சக்கரவண்டியொன்றின் பதிவு சான்றிதழை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் இருந்து 180,000 ரூபாய் பண மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

பின்னர், இது தொடர்பான முறைப்பாடு பேராதனை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நகுலகமுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும் 21 வயதுடைய பெண் சந்தேகநபர் ஹிங்குராக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இன்று (28) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஏவுகணைகளை காண்பித்து இஸ்ரேலை மிரட்டிய ஹிஸ்புல்லா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணைகளை காண்பித்து இஸ்ரேலை மிரட்டிய ஹிஸ்புல்லா


ஏவுகணைகளை காண்பித்து இஸ்ரேலை மிரட்டிய ஹிஸ்புல்லா

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்து இஸ்ரேலை மிரட்டிய ஹிஸ்புல்லா

ஆயுத தயாரிப்பில் ஈரான் அசுர வளர்ச்சி|Iran Army
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுத தயாரிப்பில் ஈரான் அசுர வளர்ச்சி|Iran Army


ஆயுத தயாரிப்பில் ஈரான் அசுர வளர்ச்சி|Iran Army

ஈரான் ஆயுத தயாரிப்பில் அசுர வளர்ச்சி ,புதிய ஆயுதங்கள் வெளியீடு ,பதறும் எதிரிகள் ,

https://www.youtube.com/watch?v=bOnD-6yXwvU
4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு


மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் நுரைச்சோலை ஷெடபொல களப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஷெட்டபொல மன்பூரிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய செபஸ்டியன் உர்சுலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 பிள்ளைகளின் தாயின் சடலம் களப்பிலிருந்து மீட்பு

மீனவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் தலையில் இரண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணைக் கொன்ற பின்னர், அவளிடம் இருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய், உடைகள் மற்றும் தங்க நெக்லஸ், ஒரு தங்க மோதிரம், மருந்து, அலைபேசி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து சதுப்புநிலக் காட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கணவன் கடந்த புதன்கிழமை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் திகதி வந்தாறுமூலையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக 74 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

மனைவியை கொன்றவர் வைத்தியசாலையில் மரணம்

இந்த நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவர் சுகயீனம் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 23 ம் திகதி புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த 74 வயதுடைய வீரக்குட்டி தவராசாவின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி

ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி

5 வருட கள்ளக்காதலில் வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி சிறைச்சாலைக்கு சென்றிருக்கின்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி லால் 60 வயதாகிறது. இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார். அவருக்கு 45 வயதாகிறது. இந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருகிறார். அவருக்கு 19 வயதாகிறது.

இந்த கள்ளக்காதல் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி உள்ளது. மகளுக்கு இப்போது 19 வயது என்றால், இந்த ஜோடி கள்ள உறவை தொடங்கியபோது, 14 வயது சிறுமியாக இருந்திருக்கிறார். தந்தை இல்லாமல் வளர்ந்த சிறுமிக்கு, தாயின் கள்ளக்காதல் குறித்து அந்த வயதில் அறியவில்லை.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கு தெரிந்துவிட்டது. இதனால், பெண்ணின் குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது. கள்ளக்காதலை கைவிடுமாறும், வயதுக்கு வந்த மகள் இருப்பதால், இதுபோன்று செய்ய வேண்டாம் என்றும் பெண்ணை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி

ஆனால், மெஹந்திலால், கள்ளக்காதலியையும், அவரது மகளையும் அழைத்து வந்து, ஊருக்கு வெளியே குடி வைத்தார். ஊருக்கு ஓரமாக ஒரு குடிசை போட்டு, அதில் அவர்களை தங்க வைத்தார். இத்தனைக்கும் மெஹந்தி லாலுக்கென, மனைவி, மகன் என தனி குடும்பமே உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 21ம் திகதி, மெஹந்திலால் இறந்துவிட்டார். உடம்பெல்லாம் காயங்களுடன் காட்டுப்பகுதியில் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு அவரது மகன் சுனில் என்பவர் தகவல் அளித்தார். இதனால் பொலிஸார் விரைந்த சென்று சடலத்தை பார்த்தனர். அப்போதுதான், மெஹந்திலாலின், அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டனர்.

பிறகு, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், அவரது விலா எலும்பு முறிந்திருந்ததாம். கழுத்து மோசமாக நெரிக்கப்பட்டிருந்ததாம். இதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவுமே மெஹந்தி லால் இறந்துவிட்டார் என்று அறிக்கையில் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, பொலிஸாரின் விசாரணை வலுவானது. கள்ளக்காதலி சிக்கினார். அப்போது விசாரிக்கும்போது, பல்வேறு திடுக் தகவல்களை சொல்லி உள்ளார். இதுகுறித்து பொலிஸார் சொல்லும்போது, “மெஹந்தி லாலும், அந்த பெண்ணும் நீண்ட காலமாகவே ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், கள்ளக்காதலியின் மகள் மீதும், மெஹந்தி லாலின் காமப்பார்வை விழுந்துள்ளது. பிறகு, 2 முறை பாலியல் ரீதியாகவும் இளம்பெண்ணை துன்புறுத்தல் செய்திருக்கிறார்.

ஆணுறுப்பை துண்டாக்கிய கள்ளக்காதலி

கடந்த 20ம் திகதியன்றும்கூட, இரவு நேரத்தில் தூங்கும்போது, இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.. இந்த தொந்தரவை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம்பெண், வேறுவழியின்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டதும், கொந்தளித்து போயுள்ளார் கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்து, மெஹந்தி லாலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மறுநாளே, அதாவது 21ம் திகதியன்று, மெஹந்தி லாலுக்கு, மயக்க மருந்து கலந்த மதுவை ஊற்றி தந்துள்ளார். அதைக்குடித்துவிட்டு, அவர் போதையில் விழுந்ததுமே அவரை கொடூரமாக கொன்றுள்ளார்.

அப்போதுதான், மகளிடமே அத்துமீறிய ஆவேசத்தில், அவரது அந்தரங்க உறுப்பையும் வெட்டியுள்ளார். பிறகு சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, காட்டில் வீசிவிட்டு வந்துள்ளார்.

இந்த கொலையை மகளின் உதவியுடன் செய்ததாகவும் வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார். எனினும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என்ற விசாரணையை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இப்போது, அந்த தாயும் – மகளும் சிறைச்சாலையில் உள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே இக்கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு

கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு

கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.

பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பேரூந்து விபத்து பயணிகள் காயம்
Posted in இலங்கை செய்திகள்

விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 வழி எண் சொகுசு பேருந்தின் சாரதிகள் நேற்று (26) முதல் பேருந்து சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

கட்டுநாயக்க 18ஆவது மைல்கல் சந்தியில் பேரூந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்தமையே இதற்குக் காரணம்.

விமான நிலையம் – கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணிக்கின்றன.

விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் அந்த பேரூந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேரூந்துகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

விமான நிலைய சொகுசு பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்

18வது மைல்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சொகுசு பேருந்துகளின் வருவாய் குறைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அனைத்து காரணங்களையும் முன்னிறுத்தி நேற்று முதல் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

ஹட்டன் ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஹட்டன் ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து


ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்தம் நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஹட்டன் ‌நுவரெலியா பிரதான வீதியில் விபத்து

சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

மொலகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாவனல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (26) காலை விபத்துக்குள்ளானதுடன், மொலகொட பிரதேசத்தில் பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியில் சென்றவர்கள் கைகளில் தடி விபத்தில் சிக்கிய பஸ்

கண்டியில் இருந்து பாணந்துறை நோக்கி அதிகாலை 05.35 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்து மாவனெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்துடன் வேகமாக முன்னோக்கி செல்ல முற்பட்ட வேளையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பாணந்துறை பேரூந்து முன்னோக்கிச் சென்றதுடன், சிறிது தூரம் சென்ற பின், வீதியில் சென்றவர்கள் கைகளில் தடிகளுடன் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்க முற்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த எவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்காததால், விபத்து தொடர்பில் மற்றைய பஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தன

ஈரான் முக்கிய நபரை விடுவித்த தலிபான்|Taliban |Ethiri News iran |today iran tamil news
Posted in உலக செய்திகள்

ஈரான் முக்கிய நபரை விடுவித்த தலிபான்|Taliban |Ethiri News iran |today iran tamil news


ஈரான் முக்கிய நபரை விடுவித்த தலிபான்|Taliban |Ethiri News iran |today iran tamil news

தாலிபான்களால் சிறை பிடிக்க பட்டிருந்த ஈரான் முக்கிய நபர் திடீர் விடுதலை ,
உள்ளே நடந்த இரகசிய டீல் ,அடுத்து நடக்க போகும் அந்த கூட்டு நகர்வு ,அலறும் எதிரிகள் ,

full video

https://www.youtube.com/watch?v=mjGzU07gNXA
உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு |Today World News in Tamil |Ethiri News today tamil
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு |Today World News in Tamil |Ethiri News today tamil

உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு |Today World News in Tamil |Ethiri News today tamil

உக்ரைனை கைவிடும் அமெரிக்கா ஆயுத வளங்கள் குறைப்பு உக்ரைனை அமெரிக்கா ஆகிவிடும் நிலைக்கு சென்றுள்ளது , ஆயுத வழங்குதல் குறைக்க படுகின்றன ,அதிர்ச்சியில் உக்ரைன் ,

இன்று போல் என்றும் வாழ்ந்திடு
Posted in பிறந்த நாள் வாழ்த்துக்கள் வன்னி மைந்தன் கவிதைகள்

இன்று போல் என்றும் வாழ்ந்திடு

இன்று போல் என்றும் வாழ்ந்திடு

ஆசானாய் எனக்குள்ளே உறைந்தவன்
ஆழ நெஞ்சுக்குள் குடி கொண்டவன்
தொண்டுக்கு முதலாகி நிற்பவன்
தொழும் படி பணிகளை செய்பவன்

வெற்றிக்கு துணையாகி நின்றவன்
வேங்கைக்கு வேராகி முளைத்தவன்
அன்பிலே குறையாது நடப்பவன்
அன்றாடம் தொடர்பிலே இருப்பவன்

வர்க்கத்தை தெரிந்தே வகுப்பவன்
வழிமாறா பணிகளை சுமப்பவன்
சொர்க்கத்தில் இருப்பதாய் நினைக்கிறன் – இவன்
சொந்தத்தில் ஒருவனாய் இருப்பவன்

ஈழத்தின் பெயர் சூடி நடப்பவன்
ஈகத்தின் தன்மானம் கொண்டவன்
இன்று போல் என்றும் வாழ்ந்திடு
இவ்வையாம் ஆண்டே வென்றிடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 26-08-2023

எலிக்காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதவேளை, குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிப்பது,

இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக் காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த 23 ஆம் திகதியன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலிஸாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர்.

இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது.

காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?

இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

யாழ்ப்பாணம் – பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது.

காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்ற போது வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகளையும் 40,000 ரூபா பணமும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்கு வந்த தடவியல் பொலிஸார், கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது சந்தேக நபர்களின் கைவிரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை திருட்டு நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.