கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி ,இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான

கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2025 மே மாதத்தில் இந்த பெறுமதி 6,286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தினுள் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.3 சதவீதத்தால் அதாவது 206 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு

விசேடமாக, அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு

ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு ,தென் கொரியா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு

இந்த வரிவிதிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “வரும் ஒகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜப்பான் / கொரியா ஆகிய நாடுகளின் அனைத்து வகையான பொருட்களுக்கும் தனித்தனியாக 25 சதவீத வரி விதிக்க

உள்ளோம். உங்கள் நாடுகளுடன் எங்களுக்கு உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு இந்த 25% வரி என்பது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் காரணத்துக்காக உங்கள் வரிகளை உயர்த்த

நீங்கள் முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தத் தேர்வுசெய்தாலும், அது நாங்கள் வசூலிக்கும் 25 சதவீதத்தில் சேர்க்கப்படும்” இவ்வாறு ட்ரம்ப் அந்த கடிதங்களில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா

இந்த கடிதங்கள் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் இருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் புதிய வரி விதிப்பு மற்றும்

திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று கூறியிருந்தார். அதன்

முதல்கட்டமாக தற்போது ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள் தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி

இன்று (08) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் பரிசோதகர்

தற்போது உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை ​

பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையில், விசாரணை தரத்தில் உள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

இது மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

5வயது சிறுவன் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

5வயது சிறுவன் திடீர் மரணம்

5வயது சிறுவன் திடீர் மரணம்

5வயது சிறுவன் திடீர் மரணம் ,மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் திடீர் நோய் நிலைமை காரணமாக ஐந்து வயது சிறுவன் ஒருவன் நேற்று (07) உயிரிழந்துள்ளான்.

சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சிறுவன் கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு ,இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்

மஹேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொகோடீஸ்வர தொழிலதிபர் கொலைலை

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில்

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2027முதல் இலங்கையில் புதிய வரி
Posted in இலங்கை செய்திகள்

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி ,2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கை

இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு

பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு

முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு முறைகள்

2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை அமுல்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள்

உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை ,கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்

இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார். அதே நேரத்தில் அவரது 15 வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்

அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள

அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு

வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை

பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள் வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவனை தாக்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்

உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்

மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக

பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.

“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது

கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”

இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்

தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு ,எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்

சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத,

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான்

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெண்ணொருவரின் பயணப் பையில்

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க

முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது,

மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் போது வௌியான தகவல்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான

அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சோதனை 120பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது ,சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ்

எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல் ,முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன்

தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘அத தெரண’ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வினவியது.

பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இனிய பாரதி கைது
Posted in இலங்கை செய்திகள்

இனிய பாரதி கைது

இனியபாரதி கைது

இனிய பாரதி கைது ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர்.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு

குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய்வு

சுற்றி வளைக்கப்பட்டு கைது

பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர், யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை
Posted in உலக செய்திகள்

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை ,இஸ்ரேலிய விமான நிலையத்தை மீண்டும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஏமன் தாக்கியது.

பென் குரியன் விமான நிலையத்தை

காசா மக்களுடன் ஒற்றுமையுடன் இஸ்ரேலிய ஆட்சியின் பென் குரியன் விமான நிலையத்தை ஏமன் மக்கள் மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனம் 2

எனப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் குறிவைத்துள்ளதாக ஏமன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமன் அல்-மசிரா தொலைக்காட்சி வலைத்தளத்தின்படி, பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களை ஆதரிப்பதற்கான அதன் மத, தார்மீக மற்றும்

மனிதாபிமான கடமையின் அடிப்படையில், ஏமன் இராணுவ ஏவுகணைப் பிரிவு பாலஸ்தீனம் 2 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது, இது அல் லாட்

விமான நிலையத்தை [பென் குரியன் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது] துல்லியமாக குறிவைத்தது” என்று கூறினார்.

“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது, விமானங்கள் நிறுத்தப்பட்டு மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகள் தங்குமிடங்களுக்கு தப்பிச் செல்ல வழிவகுத்தது” என்று யஹ்யா சாரி மேலும் கூறினார்.

“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அதன் இலக்குகளை அடைந்தது” என்று யேமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு

“காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நின்று அதன் முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை எங்கள் ஆதரவு நடவடிக்கைகள் தொடரும்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

“வரவிருக்கும் நாட்களில் எந்தவொரு சாத்தியமான முன்னேற்றங்களையும் எதிர்கொள்ள யேமன் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன, மேலும் மிக

உயர்ந்த மட்டத்தில் தயாராக உள்ளன” என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல் ,பிரிட்டன் கப்பல் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல்

ஏமன் கடல் வழிஊடாக பயணித்து கொண்டிருந்த பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றினை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி

அன்சரல்லா படைகள் சிறிய ரக படகுகள் வந்து தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டதாகும். எனும் கப்பலில் பயணித்த பாதுகாப்பு படைகள் திருப்பித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதி நடத்திய தாக்குதலில் கப்பலுக்கு ஏற்பட்ட முழுமையான செய்த விபரங்கள் தொடர்பாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நீண்ட நேரடி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து , நடத்தப்பட்ட முதலாவது கடல் வழி கப்பல் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக ஒரு கப்பல் கடலில் காணாமல் போய் விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்பொழுது எந்த கப்பல் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளது வெளிவந்துள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

செங்கடல் மத்திய அரபு கடல்

இதனால் செங்கடல் மத்திய அரபு கடல் பாதிக்கப்படக்கூடிய சவால்கள் இருப்பதாக நோக்கங்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக ஹவுதிகள் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா ,ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் சட்டபூர்வமானவை அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வெள்ளிக்கிழமை கூறினார், இஸ்ரேலுக்கும்

ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

பாரிஸில் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்டுடன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டின் போது வாங் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய அணுசக்தி பிரச்சினை மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​ஈரானிய அணுசக்தி பிரச்சினை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் சர்வதேச

மத்திய கிழக்கில் ஒரு புதிய சுற்று நெருக்கடி

மோதல்களைத் தீர்ப்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம், ஆனால் அது இப்போது மத்திய கிழக்கில் ஒரு புதிய சுற்று நெருக்கடியைத் தூண்டுகிறது என்று வாங் கூறினார்.

உலகம் அமைதிக்கான கதவைத் தட்டுவதைக் கேட்டிருந்தாலும், இறுதியில் அமைதிக்கான கதவைத் திறக்கத் தவறிவிட்டது, இது குறித்து சீனாவின்

ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், பாடங்களைப் பற்றி சிந்திக்க அழைப்பு விடுத்தார்.

“போர் ஈரானிய அணுசக்தி பிரச்சினையை தீர்க்க முடியாது, மேலும் பலத்தை துஷ்பிரயோகம் செய்வது மோதல்களை அதிகரிக்கும் மற்றும் வெறுப்பை ஆழப்படுத்தும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் குண்டுவீச்சு நடத்தியது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்தது என்று வாங் கூறினார்.

ஒரு அணுசக்தி பேரழிவு ஏற்பட்டால், அதன் விளைவுகளை முழு உலகமும் தாங்கும் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

“வலிமைக்குப் பிறகுதான் அமைதி வரும்” என்ற கருத்து அதிகார அரசியலின் தர்க்கம் என்று வாங் வலியுறுத்தினார்.

“சரியும் தவறும் வலிமையால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டால், விதிகளும் நீதியும் எங்கே நிற்கின்றன? வலிமையால் மட்டுமே உண்மையான

அமைதியை அடைய முடியாது – அது பண்டோராவின் பெட்டியைத் திறக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது” என்று வாங் கூறினார்.

தமிழா வீர தமிழா புதிய பாடல்
Posted in பாடல்கள்

தமிழா வீர தமிழா புதிய பாடல்

தமிழா வீர தமிழா புதிய பாடல்

தமிழா வீர தமிழா புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்


இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – கரவையூர் ராஜ் London
-தயாரிப்பு – கரவையூர் ராஜ் London

வெளியீடு – எதிரி இணையம் |கரவையூர் ராஜ் அய்யா அவர்கள் எழுதிய வீரத்தமிழா

வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு

இதில் அழுத்தி பாருங்க

27பேரை காணவில்லை அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்,டெக்சாஸ் வெள்ளப்பெருக்கு குறித்த அறிவிப்புகள்: 850 பேர் மீட்கப்பட்டதாகவும், 27 பேர் இன்னும் காணவில்லை என்றும் அபோட் கூறுகிறார்.

குவாடலூப் ஆற்றின் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அருகிலுள்ள பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகும்,

அவசரகால மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறினார்.

“ஒரு அசாதாரண பேரழிவில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என்று அபோட் கூறினார், குடியிருப்பாளர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர், மேலும் அந்தப் பகுதியில் உள்ள கோடைக்கால முகாமான கேம்ப் மிஸ்டிக் பகுதியைச் சேர்ந்த சுமார் 23

முகாம்வாசிகள் காணாமல் போயுள்ளனர் என்று லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

டெக்சாஸின் கெர் கவுண்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் குறைந்தது 43 பேர் இறந்தனர், இது “பேரழிவு” வெள்ளத்திற்கு வழிவகுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் கூறினார்.

இந்தப் பகுதியில் பல முக்கிய முகாம்கள் உள்ளன, அவற்றில் ஒன்றான கேம்ப் மிஸ்டிக் முகாமில், அதன் 750 முகாமில் உள்ளவர்களில் சுமார் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை டஜன் கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர் மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கெர் கவுண்டி நீதிபதி ராப் கெல்லி கூறினார்.

குடியிருப்பாளர்கள் இடத்தில் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சனிக்கிழமையும் கடுமையான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, திடீர் வெள்ள எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.