கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி

கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி ,இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான

கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2025 மே மாதத்தில் இந்த பெறுமதி 6,286 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தினுள் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 3.3 சதவீதத்தால் அதாவது 206 மில்லியன் அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு

விசேடமாக, அந்நிய செலாவணி இருப்பு 6,231 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 6,023 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு
Posted in இலங்கை செய்திகள்

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.6 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருட இறுதிக்குள் டொலரொன்றின் பெறுமதி 365 ரூபாவாக இருந்தது. தற்போது டொலரொன்றின் பெறுமதியை 320 ரூபாவிற்கு கொண்டுவர முடிந்துள்ளது என மனுஷ நாணயக்கார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய டொலரின் பெறுமதியை 11 வீதத்தால் குறைக்க முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ