Tag: மாணவனை
மாணவனை தாக்கிய மாணவன்
மாணவனை தாக்கிய மாணவன்
மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்
உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்
மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக
பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.
“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது
கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”
இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்
தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர் , இலங்கையில் பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியர் ஒருவர் மாணவனை உள்ளாடையுடன் யட்டியோடு விட்டு அடிக்கின்ற காட்சி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது .
அந்தக் காணொளியில் சிங்கள டீச்சர் மாணவனை யட்டியுடன் முழங்காலில் நிக்க விட்டு மிகக் கொடூரமாக அடிக்கின்ற காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது .
இலங்கையில் பாடசாலைகளில் கல்வி கற்க செல்கின்ற மாணவர்களுக்கு இந்த விடயங்கள் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதே பாடசாலை ஆசிரியர் டீச்சர் மற்றும் வாத்தியாருடைய கடமையாகும்.
ஆனால் அதற்கு மாறாக மாணவர்களை கொடூரமாக தண்டிப்பது மற்றும் துஷ்பிரோயோகங்களுக்கு உள்ளாக்குவது என்று நடவடிக்கை தற்போது அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை வன்முறை சம்பவங்களை மாணவர்களுக்கு எதிராக உருவாக்கப்படுகின்ற அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துவது யார் .
என்பது ஆளுகின்ற அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்சி இதனை கவனத்தில் எடுத்து குறித்த டீச்சருக்கு தண்டனை வழங்குமா என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது.
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

- வங்காள விரிகுடாவில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்
தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்
தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார் ,வவுனியா பகுதியிலுள்ள பாடசாலையின் பிரபல ஆசிரியராக காணப்படும் பிரபா என்கின்ற வாத்தியார் தனியார் வகுப்பு ஒன்றை வுனியா குருமன் காடு பகுதியில் நடத்தி வருகின்றார் .
இவர் அங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மீது சரமரியான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் வாயிலாக தகவல் வெளியாகி இருக்கின்றன .
இந்த மாணவர்கள் மீது சரமரியாத தாக்குதலை இது போன்று நடத்தி வருவதாகவும் அதனை தட்டிக் கேட்க முற்பட்டால் மாணவர்களை பழி வாங்குவதாகவும் அந்த பெற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள்
90க்கு அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலங்கையுடைய கல்வி அமைச்சரால் அங்கு வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 90க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்கள் மீதும், சரமரியான தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கதறியபடி தமது பெற்றவுடன் தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்து அவர்கள் தமது உறவினர்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்தியது அடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
இலங்கையிலே மாணவர்களை தண்டிக்க கூடாது என்கின்ற விடயத்தனையும் நீதிபதியாக விளங்கிவரும் ஐயா இளம்செழியான் அவர்கள் வழங்கி இருந்தார் .
மாணவர்கள் தண்டிக்கக் கூடாது எனவும் அவர்கள் பாடசாலைக்கு வருவதற்கான அடிப்படை காரணம் அறிவுஜீவிகளாக புத்திகளாகவும்வளரும் நோக்குடேனேயே பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .
அவ்வாறு பாடசாலையில் கல்வி கற்க வருகின்ற அந்த மாணவர்களை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி அவர்களே சமூகத்தில் சிறந்த ஒரு நபர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர் பொறுப்பு .
அவர்களை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த கூடாது என்கின்ற விடயத்தை அவர் தெரிவித்து இருந்தார் .
நீதிபதியின் இந்த உத்தரவுகள் இருக்கின்ற பொழுதும் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா
குருமன் காட்டில் தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா எனப்படும் ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலத்தில் மாவட்டம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பாடசாலைகள் காணப்படுகின்றது .
அவ்வாறு சிறப்பு மத்திய மாவட்டத்தில் கல்வி கற்று வருகின்ற இந்த வாத்தியாருடைய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதி முன் நிறுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பட்டவர்களின் கண்ணீர் குமுறலாக உள்ளது .
பிரபா என்கின்ற இந்த வாத்தியார் எப்பொழுது கைது செய்யப்படுவார் ..?இவரை கைது செய்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பெற்றவர்களின் குரலாக இருக்கின்றது .
இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்து அந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதாகவே நமது கருத்தாக இருக்கின்றது .
பத்து நாட்களுக்கு ஒருக்கா அந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்க .பட்டுள்ளது
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்

மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
“முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.
பாடசாலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நாடத்திய சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டின் சட்டத்தை தமது கையிலெடுத்து ,தமது அதிகார வரைமுறையை மீறி ,அப்பாவி மாணவர்களை போலீசாரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவங்களை நடத்தி படுகொலை புரிதல் ,மற்றும் ,சிறையில் கைதிகளை கொலை செய்தல் என்ற குற்ற சாட்டுக்கள் போலீசார் மீது வைக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது




















