Author: நிருபர் காவலன்
இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி
இலங்கை விமானங்கள் திடீர் திசை திருப்பல் – பயணிகள் அவதி
பங்களாதேஸ் டாக்காவில் இருந்து பறந்து வந்து கொண்டிருந்த இலங்கை எயார்லங்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று இலங்கை கட்டு நாயாக்க விமான நிலையத்தில் தரை இறங்காது மாத்தளை விமான நிலையத்திற்கு திசை திருப்பி விடப்பட்டது , கால நிலை சீர்கேட்டால் இந்த விமானங்கள் இவ்விதம் திசை திருப்பி விடப்பட்டதாக குறித்த வான்நிலைய குரல் தரவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார்

கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை
கோட்டபாய வென்றால் இலங்கை சுடுகாடாகும் – மேற்குலக ஊடகம் அபாய எச்சரிக்கை
இலங்கையில் மகிந்த குடும்பம் மீளவும் ஆட்சியில் அமர்ந்தால் இலங்கை மீளவும் அதே நிலை ஏற்படும் எனவும் இதனால் சிறுபான்மை தமிழர்கள் முதல் சிங்களவர்கள் வரை கலக்கத்தில் உறைந்துள்ளனர் என அந்த ஊடகம் சுட்டி காட்டியுள்ளது , பணபலத்தின் ஊடாக ஆட்சியை பிடிக்க துடிக்கும் கோட்டபாய வெற்றி பெறுவார் என்ற மாயையை அவர் தம் ஆதரவு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது ,தேர்தல் பரப்புரைகள் நிறைவடைந்த பின்னரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பெரும் பரப்புரை நிகழ்ந்து வருவதாகவும் அது சுட்டி காட்டியுள்ளது , எனினும் பரவலான கருத்துக்கள் ,உளவுத்துறையின் அறிக்கை என்பன சஜித் வெல்வார் என்றே தெரிவிக்கப்படுகிறது ,அத்துடன் கூட்டணி ஆட்சியே அமைய கூடும் என்ற வாதம் நிலை பெற்றுள்ளது

இலங்கை -பொரளையில் பற்றி எரிந்த கார் – நடந்தது என்ன .?
பொரளையில் பற்றி எரிந்த கார்
இலங்கை – பொரளை பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இந்த் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . இதனால் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்
மக்கள் வாக்களிக்க 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில்
இன்றும் நாளையும் மக்கள் வாக்களிப்பதற்கு இலகுவாக 150 அரச பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது ,மக்கள் பெரும்பாலும் கூடும் இடம் என கருத படும் பகுதியில் இந்த சேவைகள் ஈடுபடுத்த பட்டுள்ளனவாம்
தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்
தேர்தல் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் 60 ஆயிரம் பொலிஸார்
இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கவும் ,பாதுகாப்பபுப்பணியில் சுமார் அறுபதாயிரம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் ,அவசரகால நிலைமைகளை சமாளிக்கும் முகமாக இராணுவமும் ஈடுபடுத்த பட்டுள்ளதாக அவர் சுட்டி காட்டியுள்ளார்
தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு
தேர்தல் வேளையில் – சீன போர் கப்பல் கொழும்பில் தரிப்பு
இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் விறு விறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் கொழும்பில் சீனாவின் அதிநவீன போர் கப்பல்கள் தரித்துள்ளன ,இதில் கைக்கர்கள் வருகை தந்து இருக்கலாம் எனவும் கோட்டாவின் வெற்றியை தீர்மானிக்க இவர்கள் அவருக்கு உதவ கூடும் என எதிர்பார்க்க படுவதுடன் ,பலத்த சந்தேகத்தையும் இது கிளப்பியுள்ளது

புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்
புலிகளை அழித்த என்னை வெல்ல வையுங்கள் கோட்டா முழக்கம்
தமிழீழ விடுதலை புலிகள் இலங்கை நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்கள் அவர்களை அழித்து இலங்கை முழுவதும் சிங்களவருக்கு சொந்தம் என்பதை நிலை நிறுத்திய என்னை வெல்ல வையுங்கள் என பிரதான வேட்ப்பாளரும் இரத்தக்கறை படிந்தவருமான கோட்டபாய முழங்கியுள்ளார் ,.இனவாதத்தை கக்கி நல்லிணக்கத்தை சிதைக்கும் முயற்சியில் கோட்டா நகர்ந்து செல்வது இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது
இலங்கையின் தற்போதையை ஜனாதிபதி -தேர்தல் செலவு சுமார் 7.5 பில்லியன் –
இலங்கையின் தற்போதையை ஜனாதிபதி -தேர்தல் செலவு சுமார் 7.5 மில்லியன் –
இலங்கையின் தற்போது இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் செலவு சுமார் 7.5 பில்லியன் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார் ,ஆண்டு தோறும் இந்த தேர்தல் செலவுகள் அதிகரித்து செல்வதாக அவர் சுட்டி காட்டியுளளார் ,அதை எண்ணி தான் கவலை படுவதாகவும் முழங்கியுள்ளார்
விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு
விமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு
சங்க நடிகர் நடிப்பில் தற்போது அதிரடியாக படம் ஒன்று உருவாகியுள்ளதாம். இதன் படப்பிடிப்பு முழுவதும்
வெளிநாட்டில் படமாக்கப்பட்டதாம். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடிக்கும் மேலயாம். ஆனால், இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்காக
மூன்று முறை விமான டிக்கெட் புக் செய்து கேன்சல் செய்திருக்கிறார்களாம்.
இதற்கான செலவு மட்டும் ரூபாய் 2 கோடிக்கும் மேல ஆனதாம். இதுபோல், பல தேவையற்ற செலவுகளை படக்குழுவினர்கள் செய்திருக்கிறார்களாம்.
குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்
குடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்
பிரபல இந்தி நடிகையான ஸ்வேதா திவாரி, நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது 2-வது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபினவ்வை கைது செய்தனர். தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.
கணவருடன் ஸ்வேதா திவாரி

குடும்ப வாழ்க்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கணவரை பிரிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். எனக்கு தைரியம் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாடகர் சுஜித்தாவை காணவில்லை – வீடியோ
பாடகர் சுஜித்தாவை காணவில்லை – வீடியோ
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்புத் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் தமிழின அழிப்பு தொடரவே செய்யும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் அதிபர் தேர்தல் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் முன்வைத்துள்ளார்.
சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் விவாதிக்கப்பட்டு, அரசவைப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 16-11-2019 அன்று இடம்பெறுகின்ற தேர்தல் சிறிலங்கா அரசின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமைவதால் சிறிலங்கா அரசு குறித்து எமது பார்வையினை முதலில் தெளிவுபடுத்துவதும் அவசியமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசியற்கட்டமைப்பு சிங்களப் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பாக இறுகிப் போயிருக்கும் காரணத்தால், இக் கட்டமைப்பின் கீழ் தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வையும் கண்டு விட முடியாது என்பதே சிறிலங்கா அரசு தொடர்பாக எமது நிலைப்பாடு ஆகும்.
தமிழீழ மக்கள் தமது தாயகத்தில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், கௌரவமாகவும், இனஅழிப்புக்கு உட்படாமல் வாழவேண்டுமாயின் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றினை அமைப்பதனைத் தவிர வேறுவழியேதுமில்லை என்பதனை நாம் உறுதியாக நம்புகிறோம். இதுவே வரலாறு எமக்குக் காட்டி நிற்கும் வழியாகவும் இருக்கிறது. இதுவே மாவீரர்களுக்கும், சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்ட நமது மக்களுக்கும் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச நீதியாகவும் இருக்கும்.
2009 ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் ஊடாக தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டது. இவ் ஆக்கிரமிப்பு நிலைக்குள் நம்மை வைத்துக் கொண்டு தமிழீழ மண்ணையும் தமிழ் மக்களையும் கபளீகரம் செய்வதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசு பகீரத முயற்சி செய்து வருகிறது. இவ் இனக்கபளீகரம் சிறிலங்கா அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இதனாற்தான்; சிறிலங்கா அரசினை ஆட்சி செய்யும் எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்தக் கட்சியினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தமிழின அழிப்பைத் தமது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறார்கள். இங்கு தமிழின அழிப்பு என்பதனை உயிர்க்கொலைகளாக மட்டும் சுருக்கிப் பார்ப்பதற்குப் பதிலாக தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதற்குரிய தகமைகளையெல்லாம் அழித்து, அவர்களை உதிரி மக்களாகச் சுருக்கி சிங்களத்தின் மேலாண்மைக்கு உட்படுத்தல் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
தமது இந்த தமிழின அழிப்பு இலக்கை அடைந்து கொள்வதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை நீண்டகாலத் திட்டத்துடன் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மிகவும் மனவருத்தம் தரக்கூடிய விடயமாக இருப்பது என்னவென்றால் தமிழர் தேசம் என்ற மரத்தை வெட்டுவதற்கு தமிழர்களே கோடரிக்காம்பாக சிறிலங்கா அரசால் பயன்படுத்துப் படுவதுதான். சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் திட்டத்துக்கு என்ன காரணத்துக்காகவேனும் முண்டு கொடுக்கும் தமிழர்கள் பெரும் வரலாற்றுப்பழியைச் சுமந்து நிற்கிறார்கள். சிறிலங்கா அரசின் அடிவருடித் தமிழர்;கள் மட்டுமல்ல தமிழர் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களும் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழின அழிப்புக்குத் துணைபோய்க் கொண்டிருப்பது தமிழ் மக்களின் சாபக்கேடாக அமைந்திருக்கிறது.
இக் குறிப்புகளோடு சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களைப் பதிவு செய்கிறோம் :
- தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட சிறிலங்கா அரசியல்யாப்பின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொள்கை அடிப்படையில் பங்கெடுக்க முடியாது. இத் தேர்தல்களில் எந்தவகைப் பங்குறபற்றலும் கொள்கையினை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய உத்தி அடிப்படையில் மட்டுமே அமைய முடியும்.
- சிறிலங்கா அதிபர் தேர்தல் தமிழர் தாயகப்பகுதியின் மக்கள் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிப்பதில்லை. இத் தேர்தல்களில் தமிழின அழிப்புக் குற்றவாளிகளுக்கு தமது வாக்குகளை அளிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்களை தமிழர் தலைவர்கள் தள்ளியுள்ளனர். 2010 ஆம் ஆண்டிலும் 2015 ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலில்
அளிக்கப்பட்ட தமிழர் வாக்குகள் தமிழ் மக்களுக்கு உரிய பயனை அளிக்கவில்லை. - அதிபர் தேர்தலை உத்தி சார்ந்து கையாள்தில் கடந்த காலங்களைப் போல இத் தடவையும் தமிழ் தரப்பு வெற்றியடையவில்லை என்பதே எமது அவதானிப்பு. இத் தேர்தலில் பங்குபற்றும்போது தமிழர் தேசத்தின் பலத்தை வளர்த்தெடுத்தல், அனைத்துலக அரசுகளுடனான உறவுகளில் சிங்களத் தரப்புக்கு இணையான ஒரு தரப்பாக தம்மை நிலைநிறுத்துதல் போன்றவை குறைந்தபட்ச உத்திகளாகக் கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இவையேதும் நடைபெறவில்லை.
- இந்த தேர்தலை எவ்வாறு தமிழர் தரப்பு கையாளவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கின்ற பணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக சமூகத்தினை நாம் பாராட்டுகின்றோம். அதில் எட்டப்பட்ட 13 அம்ச கோரிக்கை மட்டமல்ல எத்தனை கோரிக்கைகளை முன்வைத்தாலும், சிங்கள ஆட்சியாளர்களால் அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் வெளி, சிறிலங்காவில் அதற்கு இல்லை என்பதே தெளிவு. இனநாயகமயப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் அரசியற்கட்டமைப்பு இதற்கு காரணமாக இருக்கின்றது.
எம்மைப் பொறுத்தவரை பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் மேற்கோள்ளபட்ட 5 கட்சிகளின் 13 அம்சத்திட்டக் கோரிக்கை முன்னெடுப்பும் உத்திரீதியாக சரியாக வடிவமைக்கப்படவில்லை என்றே கருதுகிறோம். இதனை எந்த சிங்கள பேரினவாதத்தலைவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை உய்த்துணர்ந்து கொள்வது கடினமானதொன்றல்ல. இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. சிங்களத் தலைவர்கள் இக் கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் போது தமிழர் தேசிய பலத்தை நிலைநிறுத்துவதற்குரிய அடுத்த கட்ட நடவடிக்கைத் திட்டம் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாது போனமை தமிழர் தரப்பின் அரசியல் வறுமையின் வெளிப்பாடகவே தெரிகிறது.
- தமிழ்த் தேசியம் சாரந்த அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு பொது வேடபாளரை தமிழ் மக்களின் கொள்கைசார் நிலைப்பாடுகளோடு அதிபர் வேட்பாளராக தமிழர் தரப்பு நிறுத்தியிருக்குமானால் தமிழ் மக்களை ஒரு அரசியற்சக்தியாகப் பொருட்படுத்தாத சிங்களத் தலைவர்களையும் அனைத்துலக அரசுகளையும் எம் மீது கவனத்தைத் திருப்ப வைத்திருக்க முடியும். தமிழ் மக்களை தாம் நினைத்தவாறெல்லாம் பயன் படுத்த முடியாதென்பதனை நிறுவியிருக்க முடியும். இத்தகையதொரு வாய்ப்பும் தவற விடப்பட்டிருக்கிறது.
- சிலர் பரப்புரை செய்வது போல அதிபர் தேர்தலில் ஆபத்து குறைந்த பேயைத் தேர்ந்தெடுத்தல் என்பது கொள்கை சார் உத்தியாக இருக்க முடியாது. ‘பேய்’ என அடையாளம் கண்ட பின்னர் எந்தப் பேய்க்கும் வாக்களிப்பது மனிதர்கள் மேற் கொள்ளும் முடிவாக இருக்க மாட்டாது. எந்தப் ‘பேய்க்கு’ வாக்களித்தாலும் அது தமிழின அழிப்பைத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் என்பதனை நாம் மறந்து போகக் கூடாது.
- தாயகத்தில் உள்ள மக்களுக்கு இக் கருத்துகளுக்கு மேலதிகமாக அதிபர் தேர்தல் குறித்து எந்த வழிகாட்டுதலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.
- அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளப் போகும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றினை எதிர் கொள்வதற்கான செயற்பாடுகளில் நாம் ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற வேண்டுதலை அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் இத் தருணத்தில் முன்வைக்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச – மலையக மக்கள்
ஜனாதிபதியாக வெற்றிபெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும்
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி
அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
ஜனாதிபதியாக வெற்றி பெரும் சஜித் பிரேமேதாச அவர்களின் வெற்றியில் மலையக பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். தற்போது கிடைக்கபெற்ற தகவல்களுக்கும் புள்ளி விபரங்களும் வெளிநாடுகளின் முன்னணி கணீப்பீட்டுக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றி நிச்சயிக்கபட்டுள்ள ஒன்னறாக இருக்கின்றது. இந்த வெற்றிக்கு மலையக பெண்களும் காரணமாக இருந்து உள்ளார்கள் என்ற நிலைக்கு அனைத்து பெண்களும் கட்டாயம் அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாச அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறுகின்றார் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்கும் ஒன்றாய் முன்னோக்கி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மலையக மக்கள் முன்னணியின் மகளீர் அணியுடனான மாபெரும் ஒன்று கூடல் இன்று (13) ஹட்டனில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மகளீர் முன்னணியின் செயலாளார் திருமதி சுவர்ணலதா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விரிவுரையாளர் திருமதி விஷாகா புதிய ஜனநாயக முன்னணி மகளீர் இணைப்பாளர் திருமதி ருவனவெல மனிதவள அபிவிருத்தி ஸ்தானப மகளீர் இணைப்பாளர் திருமதி மெட்லின் மேரி உட்பட கட்சியின் உயர் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள்
மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் வாக்கு வங்கியில் பெரும்பாலன வாக்குகள் பெண்களுக்கு உரியதே. இந்த வாக்குகள் அனைத்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு அளிக்கபட வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள். இந்த நாட்டில் வாழும் அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் மிகவும் பொருத்தமான பெண்கள் சாசனம் ஒன்றினை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து உள்ளார். பெண்களின் உரிமை உட்பட பெண்கள் சார்பான நல்ல பல சமூகசார் அபிவிருத்தி விடயங்களையும் முன் வைத்துள்ளார். இந்த நாட்டில் உள்ள சனத்தொகையில் 51 வீதமானோர் பெண்களே. ஆனால் இவர்கள் குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்த ஜனாதிபதிகள் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்று தான் கூர முடியும். பேச்சுகளுக்கு பலர் பல கூறினாலும் அவை நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. இந்த நாட்டிற்கு பெருமளவிளான வருமானத்தை பெற்றுத் தருபவர்கள் பெண்களே. இலங்கையை பொருத்த வரையில் உயர்பதவிகளுக்கு வருபவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் பெண் அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட உள்ள செயற்திட்டங்கள் பாராட்டதக்க ஒன்றாகும்.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 60 விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் தங்கள் வாழ்வில் சொல்லன்னா துயரங்களை அடைந்து வருகின்றனர். இவர்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் பெண்கள் தொர்பான உயர்வான அவளுடன் இணைய குற்றங்களில் இருந்து பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க புதிய சட்;டங்களையும் உருவாக்க உள்ளார் அதுவும் வரவேற்க்கதக்க ஒன்றாகும். என்று அவர் மேலும் தெரிவித்தார்
ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்
ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரொமாண்டிக் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
காதல் காமெடி படமான இந்த திரைப்படத்தில் ஆகாஷ் பூரி மற்றும் கித்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரம்யா கிருஷ்ணன்
இதற்காக படக்குழுவினர் கோவா சென்றிருக்கின்றனர். அடுத்து வரும் 30 நாட்களுக்கு ரம்யாகிருஷ்ணன் படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்
ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் ஜோதிகா கைவசம் உள்ளது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.
ஜோதிகா – சசிகுமார்
இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேணி விஜய்யிடம் கதையை கூறி ஒப்புதல் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் – மகிழ்திருமேணி
விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 64’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. 65வது படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
மிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்
மிக மிக அவசரம் படத்தை பாராட்டிய பாண்டிச்சேரி முதலமைச்சர்
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இப்படத்தை பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்த்து படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
நாராயணசாமியுடன் படக்குழுவினர்
இப்படத்தில் நாயகனாக ஹரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா
முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா
இலங்கையில் நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதல் தொடர்பான அணைத்து விடயங்களும் கிளற பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தி ,சம்பந்த பட்டவர்களை நீதியின் முன் நிலை நிறுத்துவேன் என கோட்டபாய அதிரடியாக அறிவித்துள்ளார் ,முசுலீம் கட்சிகள் பெரும் பான்மையினர் இவரை கைவிட்ட நிலையில் இந்த விடயத்தை இவர் அறிவித்துள்ளார் ,இந்த செய்தியை கேட்டு கிசுப்புல்லா ,ரிச்சர்டு, உள்ளிட்டவர்கள் பீதியில் உறைந்துள்ளனராம்
மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு
மீண்டும் இலங்கையை ஆட்சியை செய்ய துடிக்கும் மகிந்த கும்பல் – வெளிநாட்டு ஊடகம் பரபரப்பு
இலங்கையில் மீளவும் இரத்தக்கறை படிந்த மகிந்த குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் ஏறி ,ஆட்சி செய்ய துடிப்பதாக மேற்குலக முக்கிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது ,இலங்கை தேர்தல் களம் உலகநாடுகள் பார்வையில் சிக்கியுள்ளது மேற்படி செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது ,2009 ஆம் ஆண்டில் தமிழர்களை கொன்று குவித்து இனவாதத்தை தூண்டி ஆட்சியில் ஏறி உட்க்கார்ந்து கொலைகள் ,கடத்தல் ,கப்பம் என நாட்டையே சூறையாடிய கும்பல் மீளவும் அரியணை ஏறிட துடிப்பது குறிப்பிடத்தக்கது
சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்
சிறைச்சாலை கூரைமேல் ஏறி கைதிகள் – போராட்டம்
இலங்கை வெலிக்கடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி இரு கைதிகள் போராட்டம் நடத்தி ,.வருகின்றனர் ,கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தணடனை விதிக்க பட்ட இரு கைதிகள் ஜனாதிபதி தம்மை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்







