மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும்
தமுகூ தலைவர் மனோ கணேசன்
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.
இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, என தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
மலையகம் 200 தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப் 26ம் நாள் நடைபெறும் தமுகூ தலைவர் மனோ கணேசன்
இலங்கை இந்திய மலையக தமிழர், இலங்கைக்கு வந்த 1823ம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி
வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவை பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, வறுமை, உணவின்மை, காணியுரிமை இன்மை, வீட்டுரிமை இன்மை, கல்வியுரிமை இன்மைஆகிய
கொடுமைகளை எதிர்கொண்டு, இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக இல்லாமல், பெருந்தோட்டங்களிலும், தொழில் தேடி மாநகரங்களிலும், வாழ்கிறார்கள்.
இந்த மக்களின் பின்தங்கிய குறைவளர்ச்சியை ஆய்வு செய்து அவர்கள் இதுவரை காலமும்
இழந்த வளர்ச்சிகளை எட்டிபிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள,
மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 200வது ஆண்டு முதல் முன்னெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை கோருகிறோம்.
கொக்குத்தொடுவாய் காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பு
கொக்குத்தொடுவாய் காணிகளை அபகரிக்கும் முயற்சி மக்கள் எதிர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகளை, வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆதரவுடன், வெலிஓயா பகுதியில் உள்ள நில
அளவைத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வந்து, எல்லைக் கற்களை நாட்டியுள்ளார்கள். இதனை மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளதுடன் நாட்டப்பட்ட எல்லைக்கற்களையும் அகற்றவைத்துள்ளார்கள்.
கொக்குத்தொடுவாய் பிரதேசத்துக்கு உட்பட்ட கோட்டைக்கேணி பிள்ளையார் கோவில், அம்பட்டன் வாய்க்கால், வெள்ளைக்கல்லடி, குஞ்சுக்கால்வெளி,
சிவந்தா முறிப்பு போன்ற பகுதிகளிலேயே மேற்படி எல்லை கற்கள் நாட்டப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து மக்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனுக்கு முறையிட்டதுடன் அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர்.
இன்னிலையில், திங்கட்கிழமை (19) கரைதுறைப்பற்று பிரதேச செயக உத்தியோகத்தர்கள், காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்
ஆகியோர் சம்பவ இடத்துக்கு பிரசன்னமாகிய நிலையில், குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் வருகை தந்துள்ளார்கள்.
இந்த எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்கள் மக்களின் உறுதிக்காணி என்பதை மக்கள் மற்றும்
கமக்கார அமைப்புகள் தெளிவு படுத்தியதுடன் அவர்கள் போட்ட கற்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகத்திற்கு புதை குழி வெட்டும் பிரிட்டன் – ஈரான் அறிவிப்பு
உலகத்திற்கு புதை குழி வெட்டும் பிரிட்டன் – ஈரான் அறிவிப்பு
உலகத்திற்கு மிக பெரும் புதைகுழியை பிரிட்டன் வெட்டி வருவதாக ஈரான் Major General Hossein Salami தெரிவித்துள்ளார் .
உக்கிரேனில் இடம்பெறும் போருக்கு பிரிட்டன் முன்னிலை வகிக்கிறது .
அதுமட்டும் அல்ல ,ஈரானில் உள்ள பள்ளி வாசல்கள் மீதான தாக்குதல் ,மற்றும் கிளர்ச்சிக்கு பின்புலத்தில் பிரிட்டன் உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
நாடுகள் கடந்து பரந்து விரியும் பிரிட்டன் பயங்கரவாதம் , முடிவு கட்டப்பட வேண்டும் என அவர் சூளுரைத்துள்ளார் .
பிரிட்டன் ஈரானுக்கு இடையில் ,கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை
வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை
Nigeria’s Kaduna பகுதியில் வீட்டுக்குள் வைத்து 37 அப்பாவி மக்கள் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர் .
தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்த படுகொலை அரங்கேற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் எரித்து ,அவர்கள் கொலை செய்ய பட்ட சம்பவம் நாடு தழுவிய நிலையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரேனுக்கு அமெரிக்கா $1.85bn பில்லியன் ஆயுத உதவி
உக்கிரேனுக்கு அமெரிக்கா $1.85bn பில்லியன் ஆயுத உதவி
உக்கிரேன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா Patriot air defence missile system ஏவுகணைகளை $1.85bn பில்லியன் பெறுமதியான ஆயுத உதவிகளை வழங்குகிறோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்கிரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா உதவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .இந்த அறிவிப்பின் பின்னால் ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது .
விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
விமானத்தின் சில்லுக்குள் மனித சடலம் -லண்டனில் நடந்த பயங்கரம்
Tui Airways – விமானம் ஒன்று -Gambia’s தலைநகர் of Banjul இருந்து London’s Gatwick Airport,விமான நிலையம் நோக்கி பறந்து வந்தது .
லண்டன் விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது ,அந்த விமானத்தின் சில்லுக்குள் சிக்கிய நிலையில் மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கறுப்பினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .பலமணி நேரம் பயணித்து தரை இறங்கிய விமான சக்கரத்துக்குள் ,சிக்கி இறந்த நிலையில் காணப்பட்ட மனித சடலம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
விமான நிறுவனங்களை மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்
தமிழகம் அம்பத்தூர் பகுதியில் 48 வயது மனைவியை 55 வயதுடைய கணவன் சுவருடன் மதலையை அடித்து கொன்றுள்ளார் .
போதைக்கு அடிமையான கணவரை ,போதை தடுப்பு சீர் திருத்த பள்ளியில் மனைவி ஒப்படைத்துள்ளார் .
அங்கிருந்து திருந்திய மகனாக வெளியியல் வந்த கணவன், மீளவும் போதைக்கு அடிமையாகி ,மனைவி வீட்டுக்கு சென்று கெட்ட வார்த்தையால் திட்டி ,வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் .
அங்கு வைத்து கோரமாக மனைவியை தாக்கிய கணவன் ,தலை முடியை பித்து தலையை சுவருடன் பலமாக அடித்து கொன்றுள்ளார் .
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான மனைவி அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .
குடிகாரர்கள் தமது சுக போகத்திற்காக குடித்து தம்மை மட்டும் அழித்து வாழ்வை சீரழித்த போதாத நிலையில் ,
மனைவியையும் கொன்று பிள்ளைகளை அனாதையாககும் செயல் மிக கொடூரமானது .
சதோச நிறுவனத்தினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு
சதோச நிறுவனத்தினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதோச நிறுவனம் இன்று (21) முதல் 5 பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு),
மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒருகிலோ பெரிய வெங்காயம் 158 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 378 ரூபாவாகும். ஒரு கிலோ நெத்தலியின் புதியவிலை ஆயிரத்து 100 ரூபா. 425 கிராம் எடைகொண்ட டின்மீனின் புதிய விலை ஆயிரத்து 482 ரூபாவாகும்.
வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (20) திறக்கப்பட்டுள்ளது.
மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகசேவை அமைச்சின் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக 50 மாணவர்கள் பயிற்சி நெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதோடு தையல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம்
இப் பயிற்சி நிலையம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச வதிவிட பயற்சியினை வழங்கும் நிறுவனமாக தொழிற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மகளீர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர்
திரு.ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி நிலையத்தை திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள்.
இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது.
அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம்.
இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,
அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும்.
இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.
சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள்.
ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.
அதன்படி, எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.
மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.
உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.
தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார்.
எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.
இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற
கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.
இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில்,
எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம்.
இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ்,மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.
விபத்தில் மூன்று பெண்கள் பலி
விபத்தில் மூன்று பெண்கள் பலி
நாரம்மல – பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக
குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி
8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது
வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது
காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் திட்டங்களில் ஒன்றாக அதனை தணிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்தியின் 70 சதவீத இலக்கை அண்மித்தல், 2050இற்குள் காபன் மத்திய நிலையை (Carbon Neutrality) எட்டுதல், காபன் வெளியேற்ற
அனுமதி பத்திரத்துக்கு பதிலாக சர்வதேச சந்தையைக் கண்டறிவது ஆகிய மூன்று இலக்குகளையும் அடைவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதே அரசின் திட்டம் ஆகும்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன்
விஜயவர்தன மற்றும் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
எதிர்கால எரிசக்தி ஆதாரங்கள், கார்பன் வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றின் மீதான தனது சர்வதேச அறிவை
சொல்ஹெய்ம் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் கருத்து தெரிவித்த எரிக் சொல்ஹெய்ம், இந்தியா, சீனா போன்ற நாடுகள் இதன்மூலம் அதிக நன்மைகளை
வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது
பெற்றிருப்பதாகவும் அதே நன்மைகளை இலங்கையாலும் பெற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தீர்த்து வைப்பார் என தாம் நம்புவதாகவும் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன, புதுப்பிக்கத்தக்க சக்தி மிக
வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை என்றும், ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் இத்துறை சார்ந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே இலங்கை மக்கள் பயன்பெறும் வகையில் அவ்வாறான முதலீடுகள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ருவன்
விஜயவர்தன, கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான மாநாடு ஒன்றை எதிர்காலத்தில் நடத்தவிருப்பதாகவும் அதன் ஊடாக முதலீட்டாளர்களை எமது நாட்டுக்கு ஈர்க்க முடியும் என நம்புவதாகவும் ருவன் விஜயவர்தன மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலக பணிப்பாளர் குமுதுனி வித்யாலங்கார, உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஆர்.டி.வீரசூரிய, மின்வலு மற்றும் எரிசக்தி
அமைச்சின் பணிப்பாளர் பன்டு டி சில்வா, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.எல். வீரசிங்க, பிரதம பொறியியலாளர் வஜிர விஜேகோன்,பிரதம பொறியியலாளர் கே. ராம்ஜி, சஜனா சூரியராச்சி, ஹஷான் ஜெயகொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .
இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
வடமேற்கு லண்டன் north-west London. , Mowbray Road, Kilburn பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப் பட்டுளளார் .
இவ்வாறு பலியானவர் நாற்பது வயது மதிக்க தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் ,அம்புலன்ஸ் ,மற்றும் அம்புலன்ஸ் உலங்குவானூத்தி என்பன வரவழைக்க பட்டது .
எனினும் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார் .
குறித்த படுகொலைகக்கான கரணம் தெரியவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்
பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்
பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல புதிய தடையினை தலிபான்கள் ஏற்படுத்த உள்ளனர் .
இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் பெண்கள் வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் .வெளியில் செல்ல கூடாதது என்கின்ற முசுலீம் கடும்போக்கு மதவாதத்தை ,தலிபான்கள் கடைபிடிக்கின்றனர் .
பல இடங்களில் இஸ்லாமிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .
பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்
அதுபோன்று தற்போது பொது இடங்களில் பர்தா அணிய வேண்டும் .இதுபோலவே தற்போது ,பொது இடங்கள் மற்றும் பார்க் ,ஜிம் என்பனவற்றுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
சுருங்க சொல்ல போனால், சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் பிள்ளைகளை பெற்று போட்ட வண்ணம் இருப்பதே ,பெண்கள் வேலை என்பதாக போல தலிபான்கள் அறிவித்து கொள்கின்றனர் .
இவ்விதமான அடக்குமுறை தொடர்ந்து நீடித்தால் தலிபான்கள் ,ஆட்சி விரைவில் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்
காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்
தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செல்கையில் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தீர்ந்துவிட்டமையால், காதலியின் சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு சென்ற சம்பவமொன்று வேயாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
சடலத்தை காட்டுக்குள் வீசிவிட்டு காதலன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அத்தனகல பதில் நீதவான் சம்பத் கஸ்தூரிரத்னவின் முன்னிலையில் திங்கட்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற அடிப்படை நீதவான் விசாரணையின் போதே இந்த சம்பவம் அம்பலமானது.
வெயாங்கொடையில் வாடகை வீடொன்றில் தனியாக இருக்கும் 20 வயதான பெண்ணின் சடலமே, காட்டுப்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (18) மாலை மீட்கப்பட்டுள்ளது.
வத்துப்பிட்டியவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது என்பது நீதவானின் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
காதலியின் சடலத்தை வீசியெறிந்த காதலன்
மனைவியால் கைவிட்டு செல்லப்பட்ட இளைஞனுடன் இந்த யுவதி, காதல்வயப்பட்டுள்ளார். அதுதொடர்பில் அந்த யுவதியின் வீட்டார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அந்த இளைஞன் மீதும் அண்மையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனால் வீட்டைவிட்டு வெளியேறி சென்ற அந்த யுவதி, வெயாங்கொடையில் வாடகை அறையொன்றை எடுத்து தங்கியிருந்துள்ளார்.
வாடகை வீட்டுக்கு வரும் காதலன் மூவேளை உணவுகளையும் கொண்டு வந்து தந்துள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறே, ஞாயிற்றுக்கிழமை (19) இரவு உணவை எடுத்துக்கொண்டு செல்வதற்கு முன்னர், காதலியின் தொலைபேசிக்கு அழைப்பை எடுத்தபோதும். அழைப்புக்கு பதிலே கிடைக்கவில்லை. எனினும், வாடகை வீட்டுக்கு வந்த காதலன் பல முறை கதவை தட்டியபோதும் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
அதன்பின்னர் சந்தேகம் கொண்ட காதலன், அந்த அறையின் கூரையின் மீதேறி, கூரையை பிய்த்துக்குகொண்டு அறைக்குள் இறங்கியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய காதலி தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு தூக்கிட்டுக்கொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்டுள்ளார்.
உடனடியாக நண்பருக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரையும் வரவழைத்துக்கொண்டு காதலியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். எனினும், மோட்டார் சைக்கிளில் எரிபொருள் இடையிலேயே தீர்ந்துவிட்டது.
சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் (காதலன்) தன்னுடைய தாய்க்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். தாயின் அறிவுரைக்கு அமைவாக சடலத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு அவ்விளைஞன் சென்றுள்ளார் என்பதும் நீதவான் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரான காதலன் வேயாங்கொடை பொலிஸ் நிலையத்துக்கு செல்கையில், வாடகை வீட்டின் உரிமையாளர் தனது மனைவியுடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, வாடகைக்கு இருந்த யுவதியை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனையடுத்து, சந்தேகநபரான காதலனும் அந்த வீட்டின் உரிமையாளர் அவருடை
மனைவி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை
பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளால் தங்களிடம் பணம் இல்லாததால், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டை சீரழித்த, வக்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக கூறுவதாகவும்,
இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிப்தாகவும், இது பெரும் நகைச்சுவை எனவும், இதற்கு மக்கள் இடமளிப்பீர்களா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை
தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது ஜனாதிபதி நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எமது தாய் நாட்டை மொட்டு விற்பனை நிலையமாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் நேற்று முன்தினம் (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதி அமைப்பாளர் அஜித் செனவிரத்ன அவர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிரத்தியேக பணியாளர் குழாமின் பிரதானியுமாக
செயப்பட்ட W.N.P.விஜயகோன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்
கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்
யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு 8 மணி அளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்
இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
கடற்பரப்பில் தத்தளித்து 104 பேர் யாழ் சிறையில்
இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி
கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம்
(UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட
மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.




































