காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி உற்பத்தி
Posted in இலங்கை செய்திகள்

காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி
உற்பத்தி

இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி
உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, கேகாலை மாவட்டத்தை அடிப்படையாக
கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசனை சேவை பணிப்பாளர் சஞ்சீவ குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.ன்படுத்தி கடதாசி உற்பத்தி.

No posts found.
தீயில் எரிந்த
Posted in இலங்கை செய்திகள்

ஆடை தொழிற்சாலையில் தீ

ஆடை தொழிற்சாலையில் தீ

வாத்துவ மொரந்துடுவ வீதியில் கந்தவுடவத்த பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் காட்சியறையில் தீ பரவியுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, மூன்றாவது மற்றும் முதல் தளங்களுக்கும் பரவியதுடன், மின்சாதனங்கள் மற்றும் ஜவுளிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்படுத்த களுத்துறை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No posts found.
ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

உக்கிரேனை மீள ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரசியா புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இந்த தாக்குதல் நடவடிக்கையில் ,மிக பெரும் நாசகார தாக்குதலை தொடுத்து, அதன் மூலம் ,உக்கிரேன் நாட்டில் இழந்த பகுதிகளை மீள மீட்டுவிடலாம் என ரசியா நம்புகிறது .

உக்கிரேனில் மிக பெரும் போர் திட்டங்களை தயாரித்து ,அதன்வழியாக தாக்குதல் நடத்த ,ரசியா தயாராகி வரும் நிலையில் ,அதனை தடுக்கும் முயற்சிகளில் பிரிட்டன் களத்தில் குதித்துள்ளது .

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

தற்போது உக்கிரேனுக்கு ஆட்டிலொறிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கிட பிரிட்டன் தன்னை தயார் படுத்தி வருகிறது என அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீதான தாக்குதலை பிரிட்டன் ,அமெரிக்கா ஆயுத உதவிகள் மூலமே நடத்த பட்டு ,ரசியா படைகள் துரத்தியடிக்க பட்டு வருகின்றன .,

அவ்வாறான நிலையில் தற்போது மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள ரசியா ,நடத்த போகும் புதிய தாக்குதல் எவ்வாறு அமைய போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா
Posted in உலக செய்திகள்

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா இந்தியாவின் எல்லையாக விளங்கும் வடகிழக்கு அருணாசல பிரதேச பகுதியில் ,இந்தியா இராணுவம் 1000 மைலக்ளுக்கு இராணுவத்தை குவித்து வருகிறது .

இந்த வழியில் புதிய விரைவு சாலைகள் அமைக்க பட்டு வருகிறது .

இந்த சாலை விரிவுபடுத்தல் திட்டம் ,ஐந்து ஆண்டுகளில் முடிவடையும் என இந்தியா தெரிவிக்கிறது .

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா இந்தியா இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற ,தாக்குதலில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன .

பொல்லுகள் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,இந்தியா இராணுவத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னரே ,தற்போது இந்த புதிய பணிகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

இந்த பாதுகாப்பு சாலை அமைப்பின் ஊடாக ,சீனாவின் கால்நடைகள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க முடியும் என்கிறது இந்தியா .

சீனாவில் பலர் மரணம் - மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்
Posted in உலக செய்திகள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் மீளவும் கொரனோ நோயானது வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .சீனா மருத்துவ மனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன .

எனினும் இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பும் ,அதனால் ஏற்பட்ட உண்மையான மரண இழப்பு விகிதத்தை ,சீனா அரசு வெளியிடவில்லை .

முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்றுக்கு கிடைக்க பெற்ற இரகசிய காட்சிகளை அது வெளியிட்டு ,சீனாவில் பரவும் கொரனோ நோயின் தாக்குதல் இழப்பை அம்பல படுத்தியுள்ளது .

லண்டன் பகுதியிலும் புதுவித நோயானது பரவிய வண்ணம் உள்ளது .பலருக்கு தும்மலுடன் கூடிய சளி காய்ச்சல் காணப்படுகிறது .

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் - ஜெர்மனி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் – ஜெர்மனி அறிவிப்பு

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் – ஜெர்மனி அறிவிப்பு

ஜெர்மனி இராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது .இந்த பயிற்சியின் பொழுது Puma tanks வகை யுத்த டாங்கிகள் பயன் படுத்த பட்டன .

பயிற்சியின் பொழுது இந்த யுத்த டாங்கிகள் உடைந்துள்ளன .இவை தமது பெரும் ம் ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும் ,இதனால் இந்த வகையான டாங்கியை நாம் கொள்வனவு செய்யமாட்டோம் என ,ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் இராணுவ போர்க்களம் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது இராணுவத்தை ஜெர்மன் தற்போது தயார் படுத்தி வருகிறது .

எவ்வேளையும் ரசியாவினால் ,ஜெர்மனி மீதும் தாக்குதல் நடத்த படலாம் என,எதிர் பார்ப்பதால் இந்த இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு

புலிகளை அழித்தவருடன் பிரபாகரனை கொலைகாரன் என்றவர் பேச்சு

தமிழீழ விடுதலை புலிகளை அழித்தவருடன் பிரபாகரன் கொலைகாரன் என்று பேசிய முன்னாள் ஒட்டு குழு உறுப்பினரும் ,இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் ,சிங்கள அடிகழுவியாக விளங்கும் ,சம்பந்தன் ,மற்றும் எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர் பேச்சில் ஈடுபட்டனர் .

வெளி நாடுகளில் கூழ்முட்டை அடிவாங்கி தப்பி ஓடிய சுமந்திரனும் , கட்சிக்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளவரும் ,அரசியல் வியாபாரியாக விளங்கும் ,சுமந்திரனும் பேச்சில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த பேச்சுக்களில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்கப்படவில்லை .

No posts found.
இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா

இலங்கைக்கு பாடசாலை உடைகளை இலவசமாக வழங்கிய சீனா

இலங்கையில் எதிர்வரும் ஆண்டின் 75 வீதமான மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில், ஐந்து பில்லியன் இலங்கை ,ரூபாய்களுக்கு சீனா அரசு இலவசமாக பாடசாலை சீருடைகளை வழங்கியுள்ளது .

மிக பெரும் தொகையில் இலங்கைக்கு சீனா நாடு வழஙகியுள்ள இந்த சீருடைகள் பின்னால் ,மிக பெரும் அரசியல் வியாபாரம் உள்ளதை எடுத்து காட்டுகிறது .

சீனா இலவசமாக ஒன்றை வழங்குகிறது என்றால் ,அதன் பின்னால் மிக பெரும் ஆபத்து உள்ளது என்பதை, பட்டவர்கள் கூறி கடந்து செல்கின்றனர் .

சீனாக்காரானா சும்மாவா ..?

No posts found.
தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது VIDEO

தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது VIDEO

தாய்லாந்து கடற்படை போர் கப்பல் ஒன்று 100 சிப்பாய்களுடன் கடலில் மூழ்கியது .கப்பல் கடலில் மூழ்கியது .

https://www.youtube.com/watch?v=jGOB6lEmX_k

எனினும் அதில் பணிபுரிந்தவர்கள் ,தற்காப்பு படகுகள் மூலம் காப்பாற்ற பட்டனர் .எனினும் எதுவித உயிரிழப்பும் ஏற்படவில்லை .

மீட்பு கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் ,மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்க பட்ட நிலையில் ,உயிரிழப்பு இன்றி சிப்பாய்கள் காப்பாற்ற பட்டனர் .

கடந்த தினம் இரவு கடும் புயல் வீசிய நிலையில் ,அதில் சிக்கி கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது .இந்த கப்பல் பலமில்லியன் டொலர் பெறுமதியானது என்பது குறிப்பிட தக்கது .

No posts found.
ஆப்கானிஸ்தான் நாடு தம் வசமானதை கொண்டாடும் தலிபான்கள்
Posted in இலங்கை செய்திகள்

பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு

பிக்குகள் தலிபான்கள் போன்றவர்கள் வெடித்த குண்டு

இலங்கையில் பல்கலைக்கழங்கங்களில் உள்ள பிக்குகள் தாலிபான்களை போன்றவர்கள் என ,மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதான பீடாதிபதி வலஹகுணவெவ தம்மரதன தெரிவித்துள்ளார் .

இவரது இந்த பகிரங்க அறிவிப்பு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ,தாலிபான்களை இலங்கை அரச மகாநாயக்க சபையின் முக்கிய நபர் ,இவ்விதம் தெரிவித்துள்ள கருத்தியல் ,மதவாதத்தை இலங்கை பவுத்த பீடம் முன்னிலையாக நகர்த்துவதாக காட்டி நிற்கிறது .

No posts found.
கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News |VIDEO

உக்கிரேனில் ரசியா கரும்புலி விமானங்கள் அதிரடி தாக்குதல் .
நூற்றுக் கணக்கில் தாக்குதல் நடத்தும் கரும்புலி தற்கொலை விமானங்கள் .

கதறி அழும் சிறுவர்கள் ,இடிந்து விழும் கட்டிடங்கள் .உக்கிரனில் இப்பொழுது நடப்பது என்ன காணொளி பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=H5lcTnMGzjM
பல்லாண்டு வாழ்க | kavithaikal /Vanni mainthan kavaithai
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பல்லாண்டு வாழ்க | kavithaikal /Vanni mainthan kavaithai

பல்லாண்டு வாழ்க | kavithaikal /Vanni mainthan kavaithai

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

https://www.youtube.com/watch?v=OYs8npDOkSw
பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

கம்பளை நகரில் இருக்கும் பிரபல பாடசாலைக்குள் கஞ்சா சுருட்டை பிடித்த நால்வர் கம்பளை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை(16) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த பாடசாலையின் இரவு நேர காவல் தொழிலில் ஈடுபடும் காவலாளியின்

உதவியுடன் சந்தேகநபர்கள் நால்வரும் பாடசாலைக்குள் இச்செயலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது

குறித்த பாடசாலை வளாகத்தில் இரவு நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, கம்பளை

பொலிஸாரால் பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது,
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No posts found.
உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள்

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை

இலங்கை ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவாக உரிமையாள சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

குறித்த உணவகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அவர்மீது திடீர் துப்பாககி சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

உந்துருளி ஒன்றியி பயணித்த நபர்களே இந்த சூட்டு தாக்குதலை நடத்தினர் .

பலத்தகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் பொழுது மரணமாகியுள்ளார் .

மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், நவம்பர் மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென தெரிவித்து நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

கனடாவுக்கு சட்டவிரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் ஒப்படைப்பு

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (19)
இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்

24ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரிய நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பரீட்சையில் சித்திபெறும் இருபத்தாறாயிரம் புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

இக்குழுவுக்கு மேலதிகமாக விஞ்ஞான பீடங்களில் சித்தியடைந்த மேலும் ஆறாயிரம் பேருக்கு
நியமனங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை
Posted in இலங்கை செய்திகள்

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

போராட்டத்தினால் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

போராட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களினால் நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மினுவாங்கொடை புதிய வர்த்தக நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வருகை தந்த போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வர்த்தக நிலையத்தின் திறப்பு விழா நேற்று (18) மினுவாங்கொடையில் இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 395 மில்லியன் ரூபாவை செலவழித்து இந்த புதிய மூன்று மாடி வர்த்தக நிலையத்தை நிர்மாணித்துள்ளது.

போராட்டக்காரர்களுக்கு அமைச்சர் சொன்ன ஆலோசனை

இந்த திறப்பு விழாவில் அண்மைக்கால போராட்டங்களில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவும் கலந்து கொண்டதுடன், தமது தேவை ஒன்றை நிறைவேற்றுவதற்காக அமைச்சரை சந்தித்தனர்.

இந்த சூழ்நிலையிலேயே அந்த உரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தானம் செய்வதும், ஐஸ் போதைப் பொருள் குடிப்பதும் சரியல்ல. ஐஸ் போதைப் பொருள் பாவிப்பவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதன் பின்னர் அந்த விஷயங்கள் நடக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்.

போராடுபவர்கள், ஐயா, நாங்கள் தவறு செய்தோம். அந்த மாதிரி வேலைக்கு இனி போக மாட்டோம்.

சரியாக வேலை செய்யுங்கள். உங்களை வழிநடத்தியவர்கள் இருந்தால், எங்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் இவர்கள்தான் என்று
அவர்களின் பெயரை காவல்துறையிடம் கொடுங்கள். இந்த விஷயங்களில் வந்து வேலை செய்யுங்கள் என குறிப்பிட்டார்.

No posts found.
4 கால்களுடன் பிறந்த குழந்தை
Posted in உலக செய்திகள்

4 கால்களுடன் பிறந்த குழந்தை

4 கால்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இவர், கம்லா ராஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள், அதிர்ந்துள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையோடு ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், நான்கு கால்களோடு இருந்துள்ளது.


அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் சிறப்புக் குழந்தைகள் நலப்பிரிவில் வைத்து, குழந்தை தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

4 கால்களுடன் பிறந்த குழந்தை


இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “குழந்தை நான்கு கால்களோடு, உடல் குறைபாடோடு பிறந்துள்ளது.

சில நேரங்களில் கருவானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, உடல் இரண்டு இடங்களில் வளர்ச்சி அடையும்.


இதற்கு `Ischiopagus’ என்று பெயர். அதேபோல இந்தப் பெண் குழந்தையின் இடுப்பு பகுதிக்குக் கீழ் இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளன. அந்தக் கூடுதல் கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.


மருத்துவர்கள் குழந்தைக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில்,
அறுவைசிகிச்சையின் மூலமாகச் செயலற்ற கால்கள் அகற்றப்படும்’’ என்று தெரிவித்தனர்.

பாதாள உலக குழுவில் இணைந்து செயல் பட்ட இராணுவ அதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் (18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று (18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் 17 வயது மகள் ஒருவரை தந்தை மற்றும் மாமா இணைந்து கொலை செய்து எரித்துள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

காதலனுடன் சென்று விட்டு மறுநாள் மகள் வீடு திரும்பியுள்ளார் .இந்த செயலை கேள்வி உற்ற தந்தை பலத்த சீற்றம் அடைந்துள்ளார் .

வீடு வந்த மக்களை அடித்து துன்புறுத்திய தந்தை பின்னர் ,அவளை கழுத்தை நெரித்து கொன்று ,யாருக்கும் தெரியாது அவளது சடலத்தை எரித்துள்ளனர் .

இந்த சம்பவத்தை அவதானித்த அயல் வீட்டார் ஒருவ ,காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து கொலை சம்பவம் அம்பல பட்டது .

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

தற்போது தந்தை ,மாமா ,கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இப்படியும் தந்தை மார் இருக்கத்தான் செய்யிறாங்க என்பதை ,எண்ணும் பொழுது மனம் வேதனையின் அடைகிறது .

தனக்கு பிடித்த ஒருவரை மணக்க நினைத்த மகளை கொன்று ,அவளது உடலை எந்த குற்ற உணர்வும் இல்லாது எரித்துள்ள பயங்கரத்தை என்னவென்று சொல்ல மக்களே .