சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

களுத்துறை மாகாணத்தின் கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியில் வைத்து நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (17) இரவு களுத்துறை, கல்லஸ்ஷேன பகுதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த வேளையில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய தந்தையை கொலை செய்த மகன் கைது

சந்தேகநபர் இன்று (18) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு களுத்துறை, கொடபரகாஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை, பலாதொட, கொடபரகாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய திருமணமாகாத சுஜித் தர்மசேன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது தலை மற்றும் கழுத்து பகுதிக்கு கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.
தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்
Posted in இலங்கை செய்திகள்

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

மாத்தறை, நெடொல்பிட்டிய, ரன்மாலு கிராமத்தில், வீடொன்றில் இருந்த சீமெந்து தூண் சரிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அவரது தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பலியான சோகம்

பாதி கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்தில் இரண்டு சீமெந்து தூண்களுக்கு இடையில் ஊஞ்சல் போன்ற தொட்டிலை தந்தையும் மகளும் தயார் செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் மேல் தளத்தில் குறித்த சீமெந்து தூண் கம்பிகளை பயன்படுத்தி முறையான வகையில் நிர்மாணிக்கப்படாமல் நான்கு ஆணிகள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

No posts found.
கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு
Posted in உலக செய்திகள்

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

லிபியாவில் இருந்து படகில் சென்ற 117 புலம்பெயர்ந்தோரை,
ஸ்பானிஷ் தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது

ஆபத்தான மரப் படகில் ,மத்திய தரைக்கடல் கடலை கடந்து ,
பயணித்த பொழுது இவர்கள் மீட்க பட்டுள்ளனர் .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான, கடல் வழியாக பயன் படுத்தி
இவ்வாறு பயணித்து வருகின்றனர் .

இவ்விரு பயணித்தவர்கள் ,பதின் நான்காயிரம் பேர் கடலில் மூழ்கி ,
இறந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.

கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (18.06) காலை முதல் பிற்பகல் வரை இடம்பெற்றது.

இதன்போது, கட்சிக்கான நிர்வாக குழு தெரிவு இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினை சேர்ந்த (புளொட் ) ஆர். ஆர். எனப்படும் ஆர்.ராகவன், ஊடகப் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தேசிய அமைப்பாளராக தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா எனப்படும் கருணாகரமும் பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க.துளசி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

இணைத்தலைவர்களாக செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், க. சுரேஸ் பிறேமச்சந்திரன், என். சிறிகாந்தா, வேந்தன் ஆகியோரும் செயற்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

வடகிழக்கு சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரில் துருக்கிய இராணுவத்தின்,
கட்டுப்பாட்டில் உள்ள ,சிறையிலிருந்து ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,
என்று குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள் தப்பித்து ஓடினர் .

தப்பியோடியவர்களில் பத்து ஈராக்கியர்கள், ஒரு சவுதி, ஒரு குவைத் மற்றும் 13 சிரியர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

அவர்கள் எங்கு தப்பி சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியவாவில்லை ,
இராணுவத்தினர் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஜெர்மனியில் இந்த அமைப்பினருக்கு நிதி திட்டியவர்கள் ,
இவ்வாறான சிறைகளில் உள்ளவர்களுக்கு ,லஞ்சம் வழங்க பட்டு தப்புவிக்க பட்டு வருகின்றனர் என ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
நான்கு பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .

நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இது திட்டமிடப்பட்ட படுகொலையாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

இவர்கள் மரணம் மிக பயங்கரமான சம்பவம் என்று தெரிவித்த போலீசார் ,
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

அண்ணாமலை பேசியதில் என்ன தவறு
Posted in சீமான் பேச்சு

அண்ணாமலை பேசியதில் என்ன தவறு கருணாநிதி துரோகி

அண்ணாமலை பேசியதில் என்ன தவறு கருணாநிதி துரோகி

Error: View 1833908z1f may not exist
Posted in இலங்கை செய்திகள்

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டனிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக குறித்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம் வவுனியா, இராண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று (18.06) இடம்பெற்றது.

இனி தலைவர் இல்லை இணைத்தலைவர்களே என முடிவெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

குறித்த கலந்துரையாடலில் ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அங்கு வருகை தந்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் யோசனையை முன்வைத்த போது அதனை கடுமையாக எதிர்ந்த தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும் இணைத்தலைவர்களாக தொழிற்பட வேண்டும் என வாதிட்டு தனது கருத்தை முன்வைத்தார். இது தொடர்பில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று இறுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் இணைத்தலைவர்களாக செயற்படுவர் எனவும் நிறைவேற்றுக் குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் வேந்தன் ஆகியோர் இணைத் தலைவர்களாக செயற்படுவர் என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை

இராணுவ சமன் நிலையில் பலமாகும் ஈரான் ,தடுக்க புது ஆயுதம் தேடும் இஸ்ரேல் ,திசை மாறும் போர்முனை

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டன் நாட்டில் தமிழர் ஒருவரது கடைக்குள் திருடனுக்கு நடந்த,
தரமான சம்பாவம் ஒன்று வைரலாகிய வண்ணம் உள்ளது .

கடைக்குள் திருடன் நுழைந்து பியர் மற்றும் சில பொருட்களை திருடியுள்ளார் ,
இதனை கண்ணுற்ற கடை,ஊழியர் ஓடி சென்று கதவை பூட்டியுள்ளார் .

சற்றும் எதிர்பாரத திருடன் ,கதவின் சட்டர் கீழே நுழைந்து,
தப்பிக்க முயன்றுள்ளான் ,ஆனால் அதற்குள் ,
விரைந்து வந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

ஆபத்தான நேரத்தில் சாதுரியமாக சிந்தித்த ஊழியருக்கு
வாழ்த்துக்கள் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்ட கடும் வெப்பத்தில் சிக்கி ,கடந்த இரண்டு நாட்களில்,
34 பேர் பலியாகியுள்ளனர் .

இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ,
அதிக வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என் தெரிவிக்க பட்டுள்ளது .

ஆண்டு தோறும் இந்தியாவால் ,
வெப்பத்தில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைன் கெர்சன் மாகாணத்தின் ஆபத்தான பகுதிகளிலிருந்து,
மக்களை இலவசமாக வாகனங்களில் ஏற்றிச் சென்ற ,
பிரபலமான தன்னார்வலர் குண்டர்களினால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார் .

போர் இடம்பெறும் அபாய வலயங்களில், மக்களுக்கு உணவுகள் ,
மற்றும் போக்குவரத்து உதவிகளை சிலர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறான மக்களிடம் அதிக பணம் அறவிடும் இந்த நபர்கள் ,
இதனை தொழிலாக கொண்டு செயல் படுகின்றனர் .

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

துயர படும் தனது மக்கள் மீது அதே மக்கள் கூட்டத்தை சேர்ந்த இவ்வாறான ,.
மக்களை குறிவைத்து ,பணம் கறப்பதில் ஈடுபட்ட செயல்,
இப் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அங்கு பொருத்த பட்ட கமராக்களில் இவை பதிவான நிலையில் ,
அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,தாக்குதல் ,
காட்சிகளை போலீஸ் இராணுவம் கூட்டாக வெளியிட்டுள்ளது.

No posts found.
ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

Posted in இலங்கை செய்திகள்

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

யாழ் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்த நாகபாம்புகள்

இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்த பக்தர்கள் பார்வையிட்டதுடன், தமது தொலைபேசிகளிலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

நாகபூஷணி அம்மனே வந்து காட்சி கொடுத்ததாகவும், திருவிழாவை முன்னிட்டு இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும் பக்த அடியார்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்

இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமிக்க பட மேற்கு கரை பகுதியில் ,
அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது இராணுவ வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டும் ,
மக்கள் மீது தாக்குதல் நடத்த பட்டால் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

மேற்கு கரையின் தெற்கு பகுதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக,
பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து குறித்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்

உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்

உக்ரைனில் உள்ள பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ,
ஜெர்மனியால் 64 வழிகாட்டுதல் ஏவுகணைகளை வழங்க உள்ளது என அறிவித்துள்ளது .

உக்ரைன் களத்தில் ரஸ்யாவின் புதியவகை ஏவுகணைகள் ,
அல்லது கைபர் சோனிக் ஏவுகணைகள் தாக்குதல் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ,அதற்க்கு முன்னால் ,அமெரிக்கா நேட்டோ நாடுகளின் ,
ஏவுகணைகளினால் தாக்கு பிடிக்க முடியவில்லை ,.

ஒலியை விட வேகமாக பாய்ந்து செல்வதால் ,ராடர்கள் ,
அதன் அளவு எடுப்பதற்குள் ,அந்தஏவுகணைகளை அழித்து விடுகிறது .

உக்ரைனுக்கு 64 பேட்ரியாட் ஏவுகணைகள் வழங்கவும் ஜெர்மன்

பல ஆயிரம் டொலர் செலவு கொண்ட ,கைபர் சோனிக் ஏவுகணை,
பயன்பாட்டை ரஷ்யா அதிகரிக்கும் என்றால் ,உக்ரைனால் தாக்கு பிடிக்க முடியா நிலை ஏற்படும்,என்பதாக களம் உள்ளது .

தோற்று போவோம் என அறிந்தும் ,தோல்வியை சந்திக்காதவர்கள்,
நாங்கள் என உக்ரைன் உறுமி வருகிறது .


மேற்கு நாடுகளின் தொழில் ஏறி ஆடும் உக்ரைன்
விரைவில் வேரோடு சரியும் நிலை ஏற்பா போகிறது .

சோவியட்ச் ரஷ்ய உடைக்க பட்டது போல ,ரஷ்ய என்றா நாடு அழிக்க படுமா
பார்க்கலாம் நடக்க போவது என்ன .

ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு
Posted in உலக செய்திகள்

ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு

ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு

ரஷ்யா மொழி பேசும் கைக்கர்கள் குழு அமெரிக்கா ,
பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் மிக முக்கிய நிறுவங்களின் ,
தரவுகளை திருடி சென்றுள்ளது .

BBC, Shell, Johns Hopkins Health Systems, British Airways, ஆகியவை
முதன்மை இடம் வகிக்கின்றன .

ரஷ்யா கைக்கர்கள் கைவரிசை அமெரிக்கா பிரிட்டன் முக்கிய நிறுவன தகவல் திருட்டு

டசினுக்கு மேற்பட்ட நிறுவனங்களை குறிவைத்து ,
முக்கிய தரவுகளை திருடி விட்ட்தாக ,அமெரிக்கா உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது .

உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்யா இராணுவத்தின் கைபேசியை,
கைக்கிங் செய்து அதன் மூலம் ,அமெரிக்கா தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்தியது .

அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இதனை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக நோக்க முடிகிறது .

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
Posted in உலக செய்திகள்

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்

Posted in இலங்கை செய்திகள்

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது எல்லாம் புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை காணி விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டங்களிலும், ஜனாதிபதி வவுனியா வந்த போதும் நாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று 400 ஏக்கர் விவசாய நிலத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.

ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

தற்போது பௌத்த பிக்குகள் எல்லா விடயங்களிலும் தலையிடுகிறார்கள். எங்களது பிரதேசத்தில் எங்களுக்கு சொந்தமான வயல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்ட பின்பு பௌத்த பிக்குகள் இதற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

மூளைக்கு மூளை புத்த கோவில்களை கட்ட முனைகிறார்கள். அதை ஒரு பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறார்கள். இனப்பிரச்சனையில் கூட புத்த பிக்குகளின் இனத் துவேசத்தை கக்குபவர்களாக தான் இருக்கிறார்கள்.

புத்தர் அந்தப் போதனையை செய்யவில்லை. ஆனால் இங்கு ரவுடித் தனம் செய்வதெல்லாம் புத்த பிக்குகள். என்னைப் பொறுத்தவரை இந்த காணி விடயத்தில் புத்த பிக்குகள் தலையிடக் கூடாது. ஜனாதிபதி உத்ததரவிட்ட விடயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் அது தான் எமது கோரிக்கை. இந்த புத்த பிக்குகளின் குரல்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்வது எங்களை மலினப்படுத்தும் என்பது தான் எனது கருத்தாகும் எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேரூந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் பயணித்த ஒருவர் வவுனியாவில் கைது

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ஒரு கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டனர்.அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் அவரை நீதிமன்றில் முற்ப்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.