உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி

வாய்க்கு சுவையான உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி .

கடை சுவையில் நம்ம வீட்டில் இப்படி செஞ்சு அசத்துங்க .

நம்ம சமையல் காலை நிபுணர் இப்படி பண்ணுறாங்க ,அதை பார்த்து அப்படியே செஞ்சு அசத்துங்க மக்களே .

உருளைக்கிழங்கு கறி செய்வது எப்படி வீடியோ

உக்ரைன் கப்பல் துறைமுகம் அழிப்பு 13 விமானங்கள் வீழ்த்தல் |ukrain russia news|ukrain russia war|ரஷ்யா உக்ரைன் போர்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் கப்பல் துறைமுகம் அழிப்பு 13 விமானங்கள் வீழ்த்தல் |ukrain russia news|ukrain russia war|ரஷ்யா உக்ரைன் போர்


உக்ரைன் கப்பல் துறைமுகம் அழிப்பு 13 விமானங்கள் வீழ்த்தல் |ukrain russia news|ukrain russia war|ரஷ்யா உக்ரைன் போர்

மிக பெரும் கப்பல் துறைமுகம் மீது அதிகாலை வேளை
விமானங்களை தாக்குதல் ,13 விமானங்கள் வீழ்த்தல்

full video

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்குபாதுகாப்பு முறை அமலில் உள்ளது. திங்கட்கிழமை (14) இரவு இளைஞர் ஒருவர் விமானடிக்கெட், சிறப்பு அனுமதி பாஸ்எதுவும் இல்லாமல், விமான

நிலையத்தின் பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும்கவுன்ட்டர் பகுதி வரை சென்றுஅங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.

7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த யாழ். இளைஞன்

இரவு 10 மணி அளவில் குடியுரிமை அலுவலக கவுன்ட்டர் பகுதியில் ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். இதையடுத்து, அந்தஇளைஞரைப் பிடித்து அடித்தஅதிகாரிகள், விமான நிலையமேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், 3 மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறிஒருவர் எந்த ஆவணமும் இல்லாமல் விமான நிலையத்துக்குள் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி

நையீரியாவில் சுட்டு வீழ்த்த பட்ட உலங்குவானூர்தி

நையீரியாவில் அரச இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அரச இராணுவத்தின் உலகுவானூர்தியை இலக்கு வைத்து பதுங்கி இருந்த கிளர்ச்சி படைகள் ,இலக்கு நெருங்கியதும் திடீரென தாக்குதல் நடத்தினர்

,அதில் அந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த 26 பேர் பலியாகியுள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து திடீர் கரும்புலி தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து திடீர் கரும்புலி தாக்குதல்

எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து திடீர் கரும்புலி தாக்குதல்

எதிரிகள் கோட்டைக்குள் நுழைந்து திடீர் கரும்புலி தாக்குதல் ,
எதிர்பாராத தாக்குதலினால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இராணுவம் .

full video

ஈரான் நாசகாரி புதிய ஆயுதம் எதிரிகளை அலறவிட்ட ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் நாசகாரி புதிய ஆயுதம் எதிரிகளை அலறவிட்ட ஈரான்


ஈரான் நாசகாரி புதிய ஆயுதம் எதிரிகளை அலறவிட்ட ஈரான்

எதிரிகளை ஈரான் கடற்படையின் புதிய நாசகார கப்பல் அலற வைத்துள்ளது
,அதில் பயன் பாட்டுக்கு எடுத்து வர படும் புதிய ஆயுதங்கள் மிக கூடியவை

என்பதே ,அந்த பதட்டம் ஏற்பட காரணம் ,கரணம் தப்பினால்
மரணம் என்பது தான் ஈரான் கடற்படையின் முழக்கம்

full வீடிய

https://youtu.be/5xhjmlMKDsI
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு ஒருவர் பலி

துப்பாக்கி சூடு ஒருவர் பலி

திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல, போதரகந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் மோட்டார் சைக்களில் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மணித்தியாலத்துக்கு 30 40 கிலோ மீற்றர் வரை காற்று வீசும்

மணித்தியாலத்துக்கு 30 40 கிலோ மீற்றர் வரை காற்று வீசும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மணித்தியாலத்துக்கு 30 40 கிலோ மீற்றர் வரை காற்று வீசும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மணித்தியாலத்துக்கு 30 40 கிலோ மீற்றர் வரை காற்று வீசும்

கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த குழு இலங்கையில் தங்கியிருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக இக்குழு இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

இஹல கோட்டை – பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறைந்தது 7 ரயில்களின் பயண அட்டவணை தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

தற்காலிகமாக கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையம் வரை இயங்கும்.பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவை ரயில் நிலையம் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட 9பெண்கள் கைது

கொள்ளையில் ஈடுபட்ட 9 பெண்கள் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள் தேவாலயம் ஆகியவற்றின் திருவிழாக்களின் போது பெண்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3¼ பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், அதில் ஒரு பெண் தப்பியோடிவிட்டார்.

அத்துடன் ஆலயத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆலையத்தில் 5 பேருடைய 19 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என மட்டு தமையைக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட 9பெண்கள் கைது

மரியாள் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் இன்றாகும். (15) காலை 9 மணியளவில் திருப்பலி ஒப்பு கொடுத்து ஆராதனை முடிவுற்ற பின்னர் தேவாலய பகுதியில் தானமாக கஞ்சி வழங்கப்பட்டது.

அதனை வாங்கி கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 2 அரை பவுண் கொண்ட தங்க சங்கிலியை 4 பேர் கொண்ட பெண் கொள்ளைக் குழுவினரைச் சேர்ந்த ஒரு பெண், அறுத் தொடுத்ததையடுத்து அவர் கள்ளன் என சத்தமிட்டுள்ளாh.;

இதனையடுத்து தப்பியோட முற்பட்ட பெண் கொள்ளைக்குழுவைச் சேர்ந்த 3 பெண்களை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்தனர் இதன்; போது ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து மடக்கி பிடித்த பெண் கொள்ளையர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட , 27, 33 வயதுடையவர்கள் எனவும் மூன்று பேரும் உறவினர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

கொள்ளையில் ஈடுபட்ட 9 பெண்கள் கைது

இதேவேளை மாமாங்கேஸ்வரர் ஆலைய தேர்திருவிழாவான இன்று (15) காலை பக்தர்கள் தேர் இழுத்து கொண்டிருந்தபோது முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த முக்கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த புத்தளம் பகுதியைச் சோந்த 45 வயது பெண் ஒருவரை கைது செய்தனர்.

களுவாஞ்சிக்குடி மற்றும் அனுராதபுரம் பகுதிகளில் ஏற்கெனவே இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் மீண்டும் பயங்கரம் - மர்ம கும்பல் அட்டூழியம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீண்டும் பயங்கரம் – மர்ம கும்பல் அட்டூழியம்

யாழில் மீண்டும் பயங்கரம் – மர்ம கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் ஜன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கெமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

யாழில் மீண்டும் பயங்கரம் – மர்ம கும்பல் அட்டூழியம்

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை
Posted in இலங்கை செய்திகள்

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி

வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.

இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .

வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும்

நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும் என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பாராளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராவணன்.தமிழில் இராவணன்.சிங்களத்தில் இராவண என்று சொல்வார்கள்.இந்த இராவணன் என்பவர் யார்?இந்த இராவணன் தமிழனா?

சிங்களவனா என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல.படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம்

விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஆனால் இவ்விடயம் 100 க்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்.

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.2013 ஆண்டு இவ்வாறு தெளிவாக தெரிவித்துள்ளேன் என நினைக்கின்றேன்.

இது தவிர 2020 ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலும் இவ்விடயம் குறித்து சொல்லி இருக்கின்றோம்.இராவணன் என்பவர் இலங்கையை

ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.இவ்விடயம் கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள்.

கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம். ஆகவே இராமாயணம் என்பது ஒரு புராணக்கதை.இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது.அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல.புராணக் கதை

எனும் போது அதில் கற்பனைகளும் இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் .ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது.

இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

ஆனால்நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவெனில் அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு

மொழிக்கு நெருக்கமான இருக்கின்ற காரணம் என்ன என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் .

இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை நையாண்டி செய்வதை தான் நாம் பார்க்கின்றோம்.நாங்கள் இன்னும் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.

இந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா -சைதா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது.

ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக

உள்ளது.இராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறு தான் என்பதை சிலர் கேட்க கூடும்.இது உண்மையில் இஸ்லாம் பற்றி

தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம்.இஸ்லாத்தின் வரலாறு என்பது 1400 வருடமல்ல.இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம்.இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் இஸ்லாமும் முஸ்லீம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை ஹதீஸ் குர்ஆன் என்பன மிக தெளிவான கருத்தாக கூறுகின்றன.

நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லீம் என்கின்றோம்.நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

.எனவே அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது தான் இஸ்லாமிய வரலாறு என்பதை நாம் காண்கின்றோம்.அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 1 இலட்சம் ஆண்டு வாழ்க்கை வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இஸ்லாம் என்பது முதல் மனிதன் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது.முஹம்மது நபி அவர்கள் இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை.

இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர்கள் தான் எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்கள்

.இஸ்லாத்தை புதுப்பிக்க வருகை தந்தவர்களே தவிர இஸ்லாத்தை அவர்கள் கொண்டு வரவில்லை.இப்றாகீம் நபியினுடைய வழியில் தான் இருக்கின்றென் என்பதை எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே கூறி இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.

இவ்வாறு எல்லாம் பார்க்கின்ற போது இந்த இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது எங்கயோ ஒரு இடத்தில் நாம் சொல்கின்ற காரணம் எவராலும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.

இந்த காரணத்தை நாம் கூறுகின்ற போது அதாவது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.என்ற கருத்தை கூட நாம் கூறி இருக்கின்றோம்

.உதாரணமாக இராவணன் எனும் பெயருக்கு நாம் அனைவரும் அறிந்த எகிப்து நாட்டு மன்னன் ராவுன் அல்லது பிர்அவ்ன் எனும் பெயர் ஏன் இங்கு வந்தது என்ற வினா எழுகின்றது.

அதாவது இலங்கையில் இராமாயண புராணக்கதை இடம்பெற்றிருந்தால் அங்கு இருந்த மன்னனுக்கு ஏன் சிங்கள பெயராகவோ அல்லது தமிழ் பெயராகவோ இல்லாமல் எகிப்திலே இருந்த மன்னனுடைய பெயர் பிரவுன் என்பது போன்று ஏன் இராவனை அழைக்க வேண்டும்.என்ற கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம்.

இந்த கேள்விக்கு எவரும் பதில் தர முன்வருவதில்லை.உண்மையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிடினும் எமக்கு பதில் அளிக்க முன்வாருங்கள்.ஏன் இந்த புராணக்கதையில் வருகின்ற

கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்கள் போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.அவ்வாறு இவ்விடயத்தை தெளிவு படுத்த முடியவில்லை எனின் நாங்கள் சொல்கின்ற முஸ்லீம்களின் சம்பவத்தை

கற்பனையாக வடிவமைத்து இராமாயணமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதே எமது கருத்தாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.இதை விட பாராளுமன்றத்தில் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கையின் வரலாறு சிங்கள தமிழ் மக்களது வரலாறு மிக சரியாக தெரியாது என்பது எமது கருத்தாகும்.

மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது.அவ்வாறாயின் இராவணன் ஆட்சி என்பது 2700 க்கு

உட்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.அவ்வாறாயின் இராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும்.

அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழர் வரலாற்றை கூறுகின்றார்கள்.ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.மாறாக இளவரசன் விஜயன்

தனது 700 கூட்டாளிகளுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது அந்த 700 பேருக்கும் மனைவிகள் இல்லாத சூழ்நிலையில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் இளவரசிகளும் அவர்களது தோழிகளும் இலங்கைக்கு வந்து மணம் முடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்

இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்

இந்தியாவின் 77 வது சுதந்திர தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணி அளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.

இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின்
ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people
Posted in உலக செய்திகள்

ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people

ஈரானில் பயங்கர குண்டு வெடிப்பு மக்கள் காயம் |Massive blast in Iran |injures people

ஈரான் நாட்டில் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,
ஈரானுக்குள் நடந்த குண்டு தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் ,உலக நாடுகள் பல கடும் கண்டனம் ,எதிரிகள் சதி நடவடிக்கை

பிரபாகரன் மனைவி மகள் உயிரோடு
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் மனைவி மகள் உயிரோடு

பிரபாகரன் மனைவி மகள் உயிரோடு

காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு
Posted in இலங்கை செய்திகள்

காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு

காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (14) மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 27 பேர் சிக்கியதுடன் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (14) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி ஆரையம்பதி, நாவற்குடா, கல்லடி பிரதேசங்களில் இத்திடீர் சுற்றி வளைப்பினை மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

காத்தான்குடியில் திடீர் சுற்றி வளைப்பு 27 பேர் மீது வழக்கு

இதன்போது மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி மற்றும் தஸ்தாவேஜூகள் இல்லாமை, தலைக்கவசம் அணியாதது போன்ற காரணங்களால் 27 பேர் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வாழ்வில் திருமணம் என்ற உறவு மிக முக்கியமானது. ஆண், பெண் உறவின் எல்லைக்கோடு திருமணம் என்ற புள்ளியின் மூலம் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாசார முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.

சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி என நகர் புறங்களில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு எடுக்கப்படும் போட்டோ, வீடியோக்கள் தற்போது பெரும் பாய்ச்சலாக வேறு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அது சமூகத்தில் பெரும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ

மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம்,

வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஃப்ரீ வெட்டிங் ஷூட் என அழைக்கப்படும் இப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகளில் எடுக்கப்படுகின்றன. ஆபத்தான முறையில் கடலிலும் இப்படியான ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு பங்கேற்ற ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சும் அந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய் தற்கொலை

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

கோர விபத்தில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் மூவர் பலி

கோர விபத்தில் மூவர் பலி

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் மூவர் பலி

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.