Tag: மூவர் பலி
யானை தாக்குதலில் மூவர் பலி
யானை தாக்குதலில் மூவர் பலி
யானை தாக்குதலில் மூவர் பலி அனுராதபுரத்தில் மூன்று கிராமவாசிகள் மிதிபட்டு உயிரிழந்தனர்
அனுராதபுர மாவட்டத்தில் மனித-யானை மோதலில்
அனுராதபுர மாவட்டத்தில் மனித-யானை மோதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில், எப்பாவலாவைச் சேர்ந்த இருவர் மற்றும்
பிரியங்கரகமவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று கிராமவாசிகள் நேற்று காலை காட்டு யானைகளால் மிதிபட்டு உயிரிழந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் ஒருவரான உதய சந்தனா (36), எப்பாவலாவின் பாலுகஸ்வேவாவைச் சேர்ந்தவர் மற்றும் தேசிய வீட்டுவசதி ஆணையத்தின்
தொழில்நுட்ப அதிகாரி ஆவார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். மற்றொருவரான திசநாயக்க முதியன்செலகே மங்கள பிரசாத் (48), அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி ஆவார்.
யானை அவர்கள் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமுகொலவேவ குளத்தின் கீழ் உள்ள நெல் வயலில் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அருகிலுள்ள காட்டில் இருந்து வந்த ஒரு வழி தவறிய யானை அவர்கள் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பிரியங்கரகம கிராமத்தைச் சேர்ந்த கிரிஹமிகே ரங்க தர்மசந்திரா (51) என்பவர், தனது வீட்டுத் தோட்டப் பயிர்களுக்குப் பணி செய்து
கொண்டிருந்தபோது காட்டு யானையால் மிதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் அனுராதபுர போதனா மருத்துவமனையின் ஊழியர் ஆவார்.
எப்பாவல மற்றும் பிரியங்கரகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

மூவர் பலி வீடு எரிந்து
மூவர் பலி வீடு எரிந்து
மூவர் பலி வீடு எரிந்து ,சிலாபம், சிங்கபுர பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீடொன்று தீக்கிரை ஆகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கிடைத்த தகவலின் பிரகாரம், உடனடியாக செயற்பட்ட சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
விபத்தில் மூவர் பலி
விபத்தில் மூவர் பலி
விபத்தில் மூவர் பலி ,நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஹோமாகம, மடாட்டுகம மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஹோமாகம – கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – கண்டி வீதியின் பஹல புலாகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிதுல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

கோர விபத்தில் மூவர் பலி
கோர விபத்தில் மூவர் பலி
அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோர விபத்தில் மூவர் பலி
லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
by நிருபர் காவலன் - கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by நிருபர் காவலன் - வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
by நிருபர் காவலன் - வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
வெல்லவாய, நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது.
வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் முச்சக்கரவண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் (44 வயது) அவரது மனைவி (42 வயது) மற்றும் அவருடைய தந்தை (70 வயது) ஆகியோரே அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியில் பயணித்த 12 வயது சிறுவன் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




















