ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தடயம்|துரத்தும் ஈரான் உளவுத்துறை
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தடயம்|துரத்தும் ஈரான் உளவுத்துறை


ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தடயம்|துரத்தும் ஈரான் உளவுத்துறை

ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தாரிகள் விட்டு சென்ற தாக்குதல் தடயம்.


துரத்தும் ஈரான் உளவுத்துறை ,குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக இரான்
அதிரடி அறிவிப்பு ,பொறியை வைத்து நடக்கும் சுற்றிவளைப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=0TSraWWGfkc
இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்|இறங்கி தாக்குவோம் லெபனான் அறிவிப்பு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்|இறங்கி தாக்குவோம் லெபனான் அறிவிப்பு


இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்|இறங்கி தாக்குவோம் லெபனான் அறிவிப்பு

இஸ்ரேல் காசா எல்லையோர இஸ்ரேல் நகரங்கள் மீது காசா போராட்ட காரர்கள்கடும் ஏவுகணை தாக்குதல் ,இறங்கி தாக்குவோம் என லெபனான் போராட்ட காரர்கள் அதிரடி அறிவிப்பு .


லெபனான் போராட்ட காரர்கள் அறிவிப்பால் பதட்டமாகும் போர்க்களம் ,வெடித்து பறக்கும் ஏவுகணைகள் ,

வீடியோ

https://www.youtube.com/watch?v=uwxnZ1qap48
முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

முகக்கவசம் மீண்டும் கட்டாயம்

அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நியூயோர்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

டிசம்பர் 17-23 வரையான வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகரிப்பாகும் என வௌிநாட்டு ஊடங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் (TIN) பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம். எனவே,

விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும். கோரிக்கையை பரிசீலித்த பிறகு,

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம்

வரி செலுத்துவோரின் அடையாள எண் (TIN) மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (PIN) ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, ​​அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித்

திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஜனவரி

01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்
Posted in இலங்கை செய்திகள்

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

9 ஆம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் திடீரென தீப்பறவியுள்ளது.

இதன் போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்கள் தீயில் கருகி உள்ளன.

வீட்டில் இருந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு

மனைவி குளிப்பதில்லை கணவன் முறைப்பாடு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.

கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர் மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத அலைபேசிககளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 அலைபேசிககளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் அலைபேசிககளை எடுத்துச்

செல்லும் போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது,

கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

நாடு முழுவதும் டெங்கு மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்த 23 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாகவும் , 189 பேருக்கு எச்சரிக்கை படிவம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,

“யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை (02) 114 பேர் டெங்கு நோய்க்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதேச மட்டங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தீவிரமடைந்துள்ள டெங்கு 23 பேருக்கு எதிராக வழக்கு

அதன் போது டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்கள் அவதானிக்கப்பட்டால் , அதன் குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு , தங்கள் குடியிருப்புக்கள் மற்றும் அயல் பிரதேசங்களில் நீர் தேங்க கூடிய இடங்கள் , பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை , டெங்கு தொடர்பான தகவல்களை பெறவும் , முறைப்பாடுகளை வழங்குவதற்கும் 076 179 9901 என்ற தொலைபேசி இலக்கத்தை வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

இந்த இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தகவல் பெறவோ முறைப்பாடுகளை வழங்கவோ முடியும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதகரின் பிரசங்கம்: ஏழுபேர் உயிர் மாய்த்தனர்

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீடியோ

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்

எமது நாட்டுக்குள் தாக்குதலை நடத்தியவர்களை தக்க பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை ,
இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் ஏவுகணை மோதல் ,
தொடரும் பரஸ்பர மோதல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=FK9bk0YIpCU
அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு

அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு

செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு ,
ஈரான் ஆதரவு ஹூதிகளுக்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் இறுதி சிவப்பு
எச்சரிக்கை,

வீடியோ

https://www.youtube.com/watch?v=WcodnF5DS8Y
காதல் ஜோடிக்கு வலை
Posted in இலங்கை செய்திகள்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

2023 டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி (நக்கல வத்த) கல்வெட்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜானக சிறிரத்ன தெரிவித்தார்.

மொனராகலை-பிபில வீதியில் இடம்பெற்றது விபத்தல்ல, அவரது முன்னாள் காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தம்பகல்ல, கொட்டகலை, மஹாலந்த கிவுல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான திசாநாயக்க முதியன்செலாகே அமிதா ஜீவமாலி (37) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் ஆயுர்வேத துறையில் பணியாற்றி வருகிறார்.

தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், மொனராகலை பிபில வீதியின் சாரதி ஒருவருடன் சுமார் ஐந்து வருடங்களாக வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரை பிரிந்து மற்றுமொரு சாரதியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.

புது ஜோடியைக் கொன்ற காதலன்

அவ்வாறு இருக்கையில், முதலாவது காதலன், அப்பெண்ணுக்கும், அவருடைய தற்போதைய காதலனுக்கும் தொலைபேசியிலும், பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை புதிய காதலனுடன் அப்பெண் மோட்டார் சைக்கிளில் பதுளை பகுதிக்கு செல்வதை அறிந்த பழைய காதலன் அவர்கள் மொனராகலை-பிபில வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணின் புதிய காதலன் மற்றும் பெண், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி வான், படல்கும்புர கரவிலபாறையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் காதலன், சட்டத்தரணி ஊடாக மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என கண்டறிந்தனர். இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்

50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்


வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள

போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, ​​மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றார்.

வீடியோ

செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|ஈரானில் உயிரிழப்பு அதிகரிப்பு|ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|ஈரானில் உயிரிழப்பு அதிகரிப்பு|ஹிஸ்புல்லா தாக்குதல்


செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|ஈரானில் உயிரிழப்பு அதிகரிப்பு|ஹிஸ்புல்லா தாக்குதல்

செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான பிரான்ஸ் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்.


ஈரானில் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு,லெபனான் எல்லையோர இஸ்ரேல் முகாம் குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்.

வீடியோ

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்


ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்

ஈரானில் சொலைமானி நினைவு நாளில் நுழைந்த எதிரிகள்
பெரும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதில் நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம் .


இராணுவம் குவிப்பு ,தேடுதல் தீவிரம் ,இஸ்ரேல் சதி அறிவிப்பு

வீடியோ

https://www.youtube.com/watch?v=ppVB5B_l0RQ
ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி


ஈரானில் இரண்டு குண்டு வெடிப்பு|அலறி ஓடும் மக்கள்|சொலைமானி நிகழ்வில் மொசாட் சதி

ஈரானில் இரண்டு மிக பெரும் குண்டு வெடிப்பு,
எதிரிகள் சதி அலறியபடி சிதறி ஓடும் மக்கள்.


சொலைமணி நிகழ்வில் மொசாட் புரிந்துள்ள சதி ,
இழப்பு அதிகரிக்கலாம் அச்சம்

வீடியோ

https://www.youtube.com/watch?v=Kf9fTCh7xK0
இஸ்ரேலுக்குள் விமானங்கள் வெடிக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் விமானங்கள் வெடிக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக அறிவிப்பு


இஸ்ரேலுக்குள் விமானங்கள் வெடிக்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் நடத்துவோம் என
ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக அறிவிப்பு .


தளபதி இல்லாமை செய்த நிகழ்வுக்கு பதிலடி நடத்துவோம் என முழக்கம்

வீடியோ

இரு கப்பல்கள் மீது ஹவுதி துரத்தி தாக்குதல்|இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|தளபதி அவுட்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இரு கப்பல்கள் மீது ஹவுதி துரத்தி தாக்குதல்|இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|தளபதி அவுட்


இரு கப்பல்கள் மீது ஹவுதி துரத்தி தாக்குதல்|இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|தளபதி அவுட்

இரு கப்பல்கள் மீது ஹவுதி படைகள் துரத்தி துரத்தி துரத்தி தாக்குதல் .


இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல், படையணி இஸ்ரேல் இராணுவ தளபதி அவுட்

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1182 பேர் சந்தேக நபர்கள் கைது

அத்துடன், 3 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் 287 கிராம்
ஐஷ் 246 கிராம்
கஞ்சா 5 கிலோ 400 கிராம்
கஞ்சா செடிகள் 19,052
மாவா 104 கிராம்
ஏஷ் 95 கிராம்
போதை மாத்திரைகள் 119

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த விதவை பெண் மித்ராணி பெர்னாண்டோவின் கொலைக்கான மூல காரணம் தற்போது அம்பலமாகியுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச். டி. எம் அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய, கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

திருமதி மித்ராணியின் கணவரான பியானோ ஒரு ஆசிரியர். 75 வயதான அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி இரவு திருமதி மித்ராணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது, ​​வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

பெண் இறந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதுடன், வீட்டின் டிரிப் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

தரையை சுத்தம் செய்யும் மின்சார இயந்திரம் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்ததாகவும், அந்த உபகரணத்தின் வயரும் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர், மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு இருந்த சிசிடிவி கெமராவை பரிசோதித்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய விதம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் கொழும்பு வீடுகளில் தோட்டங்களை சுத்தம் செய்யும் தொழிலாளி எனவும் அவர் திருமணமாகாதவர் எனவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) காலை சந்தேக நபரான தொழிலாளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 14 ஆம் திகதி மித்ராணி பெர்னாண்டோ என்பவரின் வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அதற்கு முன் பல்வேறு வேலைகளுக்காக இந்த வீட்டிற்கு வந்திருந்ததால், மித்ராணியும் அவருக்கு நன்கு தெரிந்தவர்.

அதன்படி, டிசம்பர் 15 ஆம் திகதி காலை மித்ராணியின் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்ற அவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கம்பியால் கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர், சமையல் அறையில் இருந்த இறந்த பெண்ணின் மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் கேஸ் சிலிண்டர்களை திருடி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குரந்துவத்தை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (03) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீடியோ