50 000 ரூபா தண்டப்பணம் எப்போது அறவிடப்படும்
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள
போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றார்.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து
- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,
- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்
- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்
- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்












