மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
9 ஆம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் திடீரென தீப்பறவியுள்ளது.
இதன் போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்கள் தீயில் கருகி உள்ளன.
வீட்டில் இருந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை








