தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது.

சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள்,
சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக் கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார்.

அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது.

இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது.

அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது.

மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது.

இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார்.

அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத்
வீரசேகர கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது.

இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது.

எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் அடித்து நொறுக்கிய போர் படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் அடித்து நொறுக்கிய போர் படைகள்

எரியும் இஸ்ரேல் ஆயுத களஞ்சியம் அடித்து நொறுக்கிய போர் படைகள்

எரியும் இஸ்ரேல் இராணுவ ஆயுத களஞ்சியம் ,
அடித்து நொறுக்கிய போர் படைகள் ,
பல மில்லியன் இழப்பு என தெரிவிப்பு

video

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘அபயம்’ 24 மணித்தியால குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்


சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் சேதம்

சற்று முன்னர் ஹவுதி தாக்குதலில் அமெரிக்கா கப்பல் கடும் சேதம் ,ஒரே நாளில் இரு கப்பல்கள் மீது தாக்குதல் .அலறும் செங்கடல் கப்பல் போக்குவரத்து ,

இஸ்ரேல் குடியேற்றங்களை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா
50 ஏவுகணை தாக்குதல்

வீடியோ

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்


அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்

அமெரிக்கா எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் ,
அமெரிக்கா இரான் போர் உச்சம் ,அமெரிக்கா செய்த அதே வேலையை திருப்பி செய்து ஒட விட்ட இரான்

வீடியோ

இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் மக்கள் பலி

தெற்கு லெபனானுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் வான்வழித் தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பொதுமக்கள் வீரமரணம் அடைந்ததாக லெபனான் வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.

தெற்கு லெபனானில் உள்ள மஜ்தால் சோனின் புறநகர்ப் பகுதியை இஸ்ரேலியர்கள் வான்வழித் தாக்குதலுடன் தாக்கியதாக லெபனான் வட்டாரங்கள் செவ்வாயன்று தெரிவித்தன.

சமீபத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹௌலா மீது பல பொதுமக்கள் வீரமரணம் அடைந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி

வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி

எதிர்காலத்தில் ​வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி

இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் என்றார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.

இந்நிலையில் குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இளம் தாய் துஷ்பிரயோகம் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அதேநேரம் சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி புலிகள் கப்பல் பலத்த சேதம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி புலிகள் கப்பல் பலத்த சேதம்


ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி புலிகள் கப்பல் பலத்த சேதம்

ஓட ஓட கப்பலை தாக்கிய ஹவுதி வீர புலிகள்,கப்பல் ஏவுகணை தாக்குதலில்
கப்பல் பலத்த சேதம் என ஹவுதி போர் படைகள் அறிவிப்பு .


திணறும் செங்கடல் போக்குவரத்து ,

வீடியோ

அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான்


அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான்

அமெரிக்கா இராயதந்திரியை இசுரேலில் போட்ட ஈரான் .


இஸ்ரேல் தலைநகர் ஜெருசலம் பகுதியில் இவர் சடலமாக மீட்பு

வீடியோ

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேல் முகாம்களை அடித்து நொறுக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணைகள் ,பற்றி எரியும் இஸ்ரேல்

இஸ்ரேலை பகுதிகளில் நிறுவ பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவ முகாம்களை குறி வைத்து லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் கடும் ஏவுகணை தாக்குதல் .

ஹிஸ்புல்லா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு , முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள் ,இஸ்ரேல் விமான படையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

சிரியா உள்ளே நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

அதற்கு பதிலடியாக சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் போராளி குழுக்கள் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளன .

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி


மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி

மொசாட் உளவாளிகள் ஏழு பேரை தூக்கிய துருக்கி .


துருக்கி உள்ளே நுழைந்து இராணுவ இரகசியங்களை
விற்பனை செய்த குற்றவாளிகள் கைது

வீடியோ

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

பசில் இலங்கை வந்தார்

பசில் இலங்கை வந்தார்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று (05) காலை தாயகம் திரும்பியுள்ளார்.

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று தாயகம் திரும்பியுள்ளார்.

பெசில் ராஜபக்ஷவை வரவேற்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம், எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது.

அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கூகுள் மப்பை நம்பி அலரி மாளிகைக்குள் சென்ற இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கூகுள் மப்பை நம்பி அலரி மாளிகைக்குள் சென்ற இருவர் கைது

கூகுள் மப்பை நம்பி அலரி மாளிகைக்குள் சென்ற இருவர் கைது

கூகுள் வரைபடத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, கொழும்பு அலரிமாளிகை வளாகத்திற்குள் தவறுதலாக அத்துமீறி நுழைந்த இருவருக்கு, கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

இவர்கள் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மென் பொறியியலாளர் மற்றும் கடலோடி ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் முஹந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு திரும்ப முயற்சித்ததாகவும் கூகுள் வரைபடத்தை நம்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கூகுள் மப்பை நம்பி அலரி மாளிகைக்குள் சென்ற இருவர் கைது

இருப்பினும், வழிகாட்டுதல்கள் அவர்களை அலரி மாளிகையின் சுற்றுச்சுவருக்கு அருகில் ஒரு முட்டுச்சந்திற்கு செல்ல வழிகாட்டியுள்ளது. தங்கள் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், அவர்கள் சுவரைக் கடந்து அலட்சியமாக அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்தனர்.

இதன்போது, ​​பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.