அமெரிக்கா இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற அமெரிக்கா சிப்பாய்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற அமெரிக்கா சிப்பாய்

அமெரிக்கா இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற அமெரிக்கா சிப்பாய்

அமெரிக்கா இராணுவதின் இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற அமெரிக்கா சிப்பாய் மடக்கி பிடிக்க பட்டார் .

உலக வல்லரசான அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்த அமெரிக்கா இராணுவத்தின் ,இராணுவ படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இவ்வாறு கைது செய்யப்பட்ட அமெரிக்கா சிப்பாய் தொடர்ந்து தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

சீனா உளவாளிகள் யார் யார் இவர்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என்கின்ற விடயம் தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

வீடியோ

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்

அமெரிக்காவில் பறந்த பயணிகள் விமான டயர் கழன்று நொறுங்கிய கார்,நடுவானில் அலறிய விமான பயணிகள் .

அமெரிக்கா யுனைடெட் பயணிகள் விமானம் ஒன்று 249 பேருடன் வானில் பறந்தது .

விமான ஓடுபாதையில் இருந்து வானில் பறந்து கொண்டிருந்த பொழுது ,விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று .

விழுந்ததது விமான டயர் கழன்று கார் ஒரு மீது ,விழுந்ததில் அந்த கார் அப்பளமாக .

மேற்படி விபத்து காட்சிகள் காணொளி வாயிலாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு


எரியும் இஸ்ரேல் மக்கள் போராட்டம் திணறும் நெதன்யாகு

எரியும் இஸ்ரேல் மக்கள் வீதிகளை மறித்து எங்கும்
போராட்டம்.

திணறும் நெதன்யாகு ஆளும் அரசு ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி போர்

வீடியோ

அகதி தமிழனின் வாலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதியாய் போன ஒவ்வொருத் தமிழர்களின் வலியில் உருவானப் பாடல் (தோணிப் புடிச்சு). இப்பாடலினுடைய கால அளவு பெரிதுதான் ஆனால் அதைவிட பெரிது, இப்பாடல் கொடுக்கும் தாக்கம்.

தோணிப் புடிச்சு சென்ற ஈழ தமிழரின் அகதி வாழ்வும் ,ஒப்பாரி சத்தங்களும் ,தாயகம் விட்டு பிரிந்த சொந்தங்களின் ஏக்கமும் ,கவலை கண்ணீராக ஓடும் ,தோணிப் புடிச்சு செல்லப்பா பாடல் கேட்டல் அழுகை வரும் பாடல் .

இந்த தோணிப் புடிச்சு என்ற பாடலை கேட்டு பலமுறை நானே அழுது விட்டேன் ,அவ்விதம் பெரும் தாக்கத்தை எனக்குள் தோணிப் புடிச்சு பாடல் ஏற்படுத்தியது ,அது போலவே உங்களுக்கும் அமையும் .

தேனிசை செல்லப்பா தோணிப் புடிச்சு பாடலை உருகி உருகி ,பாடியுள்ளார் உணர்வு ,அற்புதம் இசை ,காணொளி கலவை சிறப்பு ,பங்காற்றிய யாவருக்கும் எதிரி இணையத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் .

வலிகள் நிறைந்த வரிகளும், உணர்வு நிறைந்த குரலும், இரண்டையும் தாங்கிப் பிடிக்கும் இசையும் தோணிப் புடிச்சு இப்பாடலின் தாக்கத்தை நன்றாகவே எடுத்துச் சொல்லும்.

எனவே வலிகள் நிறைந்த வரிகளை உணர, முழுமையாகக் இப்பாடலைக் கேளுங்கள், பகிருங்கள்.

நன்றி.

பாடியவர் :
“பாசறைப்பாணர்”
தேனிசை செல்லப்பா

இசை : இளங்கோ செல்லப்பா

வரிகள் : “கவிஞர்” கவிஅன்பன்

காணொளி ஆக்கம் : பாவேந்தன் கலையகம்

https://www.youtube.com/watch?v=oSWdyWHbXdc
இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி
Posted in இலங்கை செய்திகள்

இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி

இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்


ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்கள்

ஹிஸ்புல்லா விமானங்கள் கடும் தாக்குதல் தாக்குதல், எரியும் இஸ்ரேல் முகாம்கள் ,
ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையில் வெடித்த புதிய போர் ,அலறும் சைரன்கள் ,

வீடியோ

மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்

மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்

ரஷ்யா கடற்ப்படையின் £170 000 000 போர் கப்பல் ஒன்று மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் காணொளி வெளியிட்டுள்ளது .

தமது விமானங்கள் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் மிதக்கும் ரஷ்ய போர் கப்பல் மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது

மூழ்கடிக்க பட்ட நான்காவது போர் கப்பல் இதுவாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது

வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்

வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்

பிரேசில் நாட்டில் வீழ்ந்த பயணிகள் விமானம் பலர் மரணம்.

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருந்த இலகுரக பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கியது ,

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் . இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஹவுதி அடியில் மூழ்கும் அமெரிக்கா கப்பல் 3 பேர் பலி பலர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி அடியில் மூழ்கும் அமெரிக்கா கப்பல் 3 பேர் பலி பலர் காயம்


ஹவுதி அடியில் மூழ்கும் அமெரிக்கா கப்பல் 3 பேர் பலி பலர் காயம்

ஹவுதி ஏவுகணை அடியில் மூழ்கும் அமெரிக்கா கப்பல்.


3 பேர் பலி பலர் காயம் ,முதன் முதலாக அமெரிக்கா கப்பலில் மக்கள் பலியென அறிவிப்பு

வீடியோ

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை அழைத்து கேட்டறிந்துகொண்டதன் பின்னர் விலையை மேலும் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். “இது ஒரு குழுவாகப் பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. விலைச் சூத்திரத்தில் செலவுகளைக் காட்டுவதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. VAT சேர்க்காவிட்டால் ஒரு லீற்றர் எரிபொருளை 50 – 55 ரூபாய் வரை குறைக்கலாம்.”

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) மாலை லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கெப் வாகனத்தில் குறித்த தங்க வாள் கடத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது..

வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுடான கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.

இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்

காசா மக்களுக்கு உணவு பொதிகளை வீசிய இஸ்ரேல் விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசா மக்களுக்கு உணவு பொதிகளை வீசிய இஸ்ரேல் விமானம்


காசா மக்களுக்கு உணவு பொதிகளை வீசிய இஸ்ரேல் விமானம்

காசா மக்களுக்கு உணவு பொதிகளை வீசிய இஸ்ரேல் விமானம் ,
எதிரி விமானங்கள் உணவு வீசியதால் குழப்பத்தில் மக்கள்

வீடியோ

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பொலிஸ் அதிகாரி சிக்கினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவியமை தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி தரவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ஹரக் கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம் என்பன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு வருவதில் சுத்தா என்ற நபர் ஈடுபட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பான விசாரணையில், அவர் வசிக்கும் இடத்தைவிட்டு வௌியேறியுள்ளமை தெரியவந்தது.

சுத்தா என்ற நபர் தொடர்பில் மேலும் தொலைபேசி மூலம் ஆராயப்பட்டதுடன், அவர், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டுடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்லும் முயற்சிக்கு வெளிநாட்டில் இருந்து வழிநடத்திய மிதிகம ருவான் என்ற ஜெயசேகர விதானகே ருவன் சாமரவுடன் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (06) பிற்பகல் மிதிகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் அஹங்கம திக்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் உதய குமார அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது 2023 ஆம் ஆண்டில் 1,639 காணப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2022 ஆண்டில் 13 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், 2023 ஆண்டில் அது 22 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நிதியமைச்சின் புதிய தீர்மானம்

நிதியமைச்சின் புதிய தீர்மானம்

மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை செலுத்தப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.