முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம் ,வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
கோடீஸ்வர தொழிலதிபர் கொகோடீஸ்வர தொழிலதிபர் கொலைலை

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆபத்தான நிலையில்

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2027முதல் இலங்கையில் புதிய வரி
Posted in இலங்கை செய்திகள்

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி ,2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கை

இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு

பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு

முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு முறைகள்

2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை அமுல்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள்

உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை

கோடீஸ்வர தொழிலதிபர் கொலை ,கட்டுனேரியில் ஒரு கோடீஸ்வர தொழிலதிபரை கொலை செய்து, சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்தில் உள்ள கழிவுநீர் தாங்கிக்குள் அவரது உடலை வீசிய குற்றச்சாட்டில்

இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான சகோதரர், வாகன பழுதுபார்க்கும் நபராவார். அதே நேரத்தில் அவரது 15 வயது தம்பி மாரவிலாவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படித்து வருகிறார்.

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்

அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள

அவரது 20 வயதுடைய நண்பனின் வீட்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்த கைதுசெய்யப்பட்ட வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு

வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை

பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் கழிவு நீர் குழிக்குள் வீசியதாக வர்த்தகரின் நண்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவனை தாக்கிய மாணவன்
Posted in இலங்கை செய்திகள்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன்

மாணவனை தாக்கிய மாணவன் பத்தரமுல்லையில் உள்ள ஒரு பிரபலமான தேசிய பாடசாலையின் 11 ஆம் தர மாணவன் ஒருவன் அதே பாடசாலையில்

உள்ள மற்றொரு மாணவனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 3 ஆம் திகதி மதியம் 12.05 மணியளவில் மூன்று மாணவர்களுடன் வந்த 11 ஆம் தர மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டதோடு, தாக்குதலுக்கு இலக்கான மாணவரின் காது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தாக்குதலின் விளைவாக காதில் காயம் ஏற்பட்ட மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க பாடசாலை நிர்வாகம்

எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவிய போது, குறித்த மாணவன் இன்று (07) செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பெற்றோர் இது தொடர்பாக தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலை நேரத்தில்

மாணவன் மீது இவ்வளவு கடுமையான தாக்குதல் நடந்துள்ள பின்னணியில், பாடசாலை நிர்வாகம் மாணவனை சிகிச்சைக்கு அனுப்பாமல் கடமை தவறி செயற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஒரு திறமையான இசைக்கலைஞர் என்றும், அவரது காதில் ஏற்பட்ட காயம் அவரது எதிர்காலத்தை கடுமையாக

பாதிக்கும் என்றும் கூறிய மாணவனின் தாயார், சட்டத்தின் மூலம் நீதி கோருவதாகவும் கூறினார்.

“எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. என் மகனுக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது என்பதற்காக நான் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் என் மகன் மீது

கத்தியால் குத்தி இருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் சட்டத்தின்படி செயல்பட விரும்புகிறேன். எனக்கு பணம் முக்கியமில்லை. நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.”

இருப்பினும், இது குறித்து நாங்கள் விசாரித்தபோது, ​​சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், தாக்குதல் குறித்து மறுநாள் காலையில் தனக்குத்

தெரிவிக்கப்பட்டதாகவும், பாடசாலை நிர்வாகம் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு ,எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்

சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத,

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான்

பொலிஸ் கான்ஸ்டபிள் லக்‌ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் ,முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (7) அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெண்ணொருவரின் பயணப் பையில்

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க

முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது,

மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் போது வௌியான தகவல்

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வௌியான தகவல்களுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான

அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சோதனை 120பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது ,சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ்

எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல் ,முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

இது தொடர்பில் அவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 ஆம் திகதி டுபாயில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதில் அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, ​​நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களுடன்

தொடர்புடைய நபர்களை மீண்டும் அழைத்து வர உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் கூறி, இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ‘அத தெரண’ பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் வினவியது.

பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் தன்னிடம் முறைப்பாடு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன்படி, அனைத்து பிரிவுகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இனிய பாரதி கைது
Posted in இலங்கை செய்திகள்

இனிய பாரதி கைது

இனியபாரதி கைது

இனிய பாரதி கைது ,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர்.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு

குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில் உறுதிப்படுத்தி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய்வு

சுற்றி வளைக்கப்பட்டு கைது

பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் இளைஞர், யுவதிகளை கடத்தி காணாமல் ஆக்கியமை உள்ளிட்ட

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை
Posted in உலக செய்திகள்

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை

தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை ,இஸ்ரேலிய விமான நிலையத்தை மீண்டும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஏமன் தாக்கியது.

பென் குரியன் விமான நிலையத்தை

காசா மக்களுடன் ஒற்றுமையுடன் இஸ்ரேலிய ஆட்சியின் பென் குரியன் விமான நிலையத்தை ஏமன் மக்கள் மீண்டும் ஒருமுறை பாலஸ்தீனம் 2

எனப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் குறிவைத்துள்ளதாக ஏமன் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமன் அல்-மசிரா தொலைக்காட்சி வலைத்தளத்தின்படி, பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், “காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களை ஆதரிப்பதற்கான அதன் மத, தார்மீக மற்றும்

மனிதாபிமான கடமையின் அடிப்படையில், ஏமன் இராணுவ ஏவுகணைப் பிரிவு பாலஸ்தீனம் 2 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது, இது அல் லாட்

விமான நிலையத்தை [பென் குரியன் விமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது] துல்லியமாக குறிவைத்தது” என்று கூறினார்.

“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது, விமானங்கள் நிறுத்தப்பட்டு மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகள் தங்குமிடங்களுக்கு தப்பிச் செல்ல வழிவகுத்தது” என்று யஹ்யா சாரி மேலும் கூறினார்.

“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அதன் இலக்குகளை அடைந்தது” என்று யேமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு

“காசாவுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நின்று அதன் முற்றுகை முழுமையாக நீக்கப்படும் வரை எங்கள் ஆதரவு நடவடிக்கைகள் தொடரும்” என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

“வரவிருக்கும் நாட்களில் எந்தவொரு சாத்தியமான முன்னேற்றங்களையும் எதிர்கொள்ள யேமன் ஆயுதப் படைகள் தயாராக உள்ளன, மேலும் மிக

உயர்ந்த மட்டத்தில் தயாராக உள்ளன” என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்

பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல் ,பிரிட்டன் கப்பல் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல்

ஏமன் கடல் வழிஊடாக பயணித்து கொண்டிருந்த பிரிட்டன் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றினை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி

அன்சரல்லா படைகள் சிறிய ரக படகுகள் வந்து தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் போது கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டதாகும். எனும் கப்பலில் பயணித்த பாதுகாப்பு படைகள் திருப்பித் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதி நடத்திய தாக்குதலில் கப்பலுக்கு ஏற்பட்ட முழுமையான செய்த விபரங்கள் தொடர்பாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் நீண்ட நேரடி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து , நடத்தப்பட்ட முதலாவது கடல் வழி கப்பல் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக ஒரு கப்பல் கடலில் காணாமல் போய் விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

அதனை அடுத்து தற்பொழுது எந்த கப்பல் மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளது வெளிவந்துள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

செங்கடல் மத்திய அரபு கடல்

இதனால் செங்கடல் மத்திய அரபு கடல் பாதிக்கப்படக்கூடிய சவால்கள் இருப்பதாக நோக்கங்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக ஹவுதிகள் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா

அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா ,ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் சட்டபூர்வமானவை அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வெள்ளிக்கிழமை கூறினார், இஸ்ரேலுக்கும்

ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

பாரிஸில் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட்டுடன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டின் போது வாங் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய அணுசக்தி பிரச்சினை மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, ​​ஈரானிய அணுசக்தி பிரச்சினை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் சர்வதேச

மத்திய கிழக்கில் ஒரு புதிய சுற்று நெருக்கடி

மோதல்களைத் தீர்ப்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம், ஆனால் அது இப்போது மத்திய கிழக்கில் ஒரு புதிய சுற்று நெருக்கடியைத் தூண்டுகிறது என்று வாங் கூறினார்.

உலகம் அமைதிக்கான கதவைத் தட்டுவதைக் கேட்டிருந்தாலும், இறுதியில் அமைதிக்கான கதவைத் திறக்கத் தவறிவிட்டது, இது குறித்து சீனாவின்

ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், பாடங்களைப் பற்றி சிந்திக்க அழைப்பு விடுத்தார்.

“போர் ஈரானிய அணுசக்தி பிரச்சினையை தீர்க்க முடியாது, மேலும் பலத்தை துஷ்பிரயோகம் செய்வது மோதல்களை அதிகரிக்கும் மற்றும் வெறுப்பை ஆழப்படுத்தும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் குண்டுவீச்சு நடத்தியது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்தது என்று வாங் கூறினார்.

ஒரு அணுசக்தி பேரழிவு ஏற்பட்டால், அதன் விளைவுகளை முழு உலகமும் தாங்கும் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

“வலிமைக்குப் பிறகுதான் அமைதி வரும்” என்ற கருத்து அதிகார அரசியலின் தர்க்கம் என்று வாங் வலியுறுத்தினார்.

“சரியும் தவறும் வலிமையால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டால், விதிகளும் நீதியும் எங்கே நிற்கின்றன? வலிமையால் மட்டுமே உண்மையான

அமைதியை அடைய முடியாது – அது பண்டோராவின் பெட்டியைத் திறக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது” என்று வாங் கூறினார்.

தமிழா வீர தமிழா புதிய பாடல்
Posted in பாடல்கள்

தமிழா வீர தமிழா புதிய பாடல்

தமிழா வீர தமிழா புதிய பாடல்

தமிழா வீர தமிழா புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்


இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – கரவையூர் ராஜ் London
-தயாரிப்பு – கரவையூர் ராஜ் London

வெளியீடு – எதிரி இணையம் |கரவையூர் ராஜ் அய்யா அவர்கள் எழுதிய வீரத்தமிழா

வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு

இதில் அழுத்தி பாருங்க

27பேரை காணவில்லை அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்

27பேரை காணவில்லை அமெரிக்காவில்,டெக்சாஸ் வெள்ளப்பெருக்கு குறித்த அறிவிப்புகள்: 850 பேர் மீட்கப்பட்டதாகவும், 27 பேர் இன்னும் காணவில்லை என்றும் அபோட் கூறுகிறார்.

குவாடலூப் ஆற்றின் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அருகிலுள்ள பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகும்,

அவசரகால மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் கூறினார்.

“ஒரு அசாதாரண பேரழிவில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என்று அபோட் கூறினார், குடியிருப்பாளர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர், மேலும் அந்தப் பகுதியில் உள்ள கோடைக்கால முகாமான கேம்ப் மிஸ்டிக் பகுதியைச் சேர்ந்த சுமார் 23

முகாம்வாசிகள் காணாமல் போயுள்ளனர் என்று லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

டெக்சாஸின் கெர் கவுண்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் குறைந்தது 43 பேர் இறந்தனர், இது “பேரழிவு” வெள்ளத்திற்கு வழிவகுத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று பொறுப்பு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் கூறினார்.

இந்தப் பகுதியில் பல முக்கிய முகாம்கள் உள்ளன, அவற்றில் ஒன்றான கேம்ப் மிஸ்டிக் முகாமில், அதன் 750 முகாமில் உள்ளவர்களில் சுமார் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை டஜன் கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர் மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கெர் கவுண்டி நீதிபதி ராப் கெல்லி கூறினார்.

குடியிருப்பாளர்கள் இடத்தில் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சனிக்கிழமையும் கடுமையான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, திடீர் வெள்ள எச்சரிக்கைகள் அமலில் உள்ளன.

2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்
Posted in உலக செய்திகள்

2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்

2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்

2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் ,இண்டியானாபோலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பதின்ம வயதினர்கள் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்: காவல்துறை.

அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூடு

இண்டியானாபோலிஸில் சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு டீனேஜ் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன் மற்றும் மெரிடியன் தெரு அருகே அதிகாலை 1:27 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டபோது, ​​அதிகாரிகள் பதற்றம் குறித்த

அழைப்புகளுக்கு பதிலளித்ததாக இந்தியானாபோலிஸ் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிர் பிழைத்தவர்களை 16 வயது, 17 வயது, இரண்டு 19 வயது மற்றும் ஒரு 21 வயது என மட்டுமே புலனாய்வாளர்கள் விவரிப்பார்கள்.

யாரும் அடையாளம் காணப்படவில்லை

சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை, மேலும் சனிக்கிழமை பிற்பகல் வரை எந்த காரணமும் போலீசாருக்குத் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

வன்முறை குறித்து இண்டியானாபோலிஸ் காவல்துறைத் தலைவர் கிறிஸ் பெய்லி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

புலனாய்வாளர்கள் உயிர் பிழைத்த பாதிக்கப்பட்டவர்களை 16 வயது, 17 வயது, 19 வயதுடைய இரண்டு மற்றும் 21 வயதுடைய ஒருவர் என மட்டுமே விவரிப்பார்கள்.

சந்தேகத்திற்குரியவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை, மேலும் சனிக்கிழமை பிற்பகல் வரை காவல்துறையினருக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. விசாரணை நடந்து வருகிறது.

வன்முறை குறித்து இண்டியானாபோலிஸ் காவல்துறைத் தலைவர் கிறிஸ் பெய்லி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

போர் நிறுத்தம் காசா
Posted in உலக செய்திகள்

போர் நிறுத்தம் காசா

போர் நிறுத்தம் காசா

போர் நிறுத்தம் காசா தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேல் கத்தாருக்கு தூதுக்குழுவை அனுப்ப உள்ளது

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பான சமீபத்திய திட்டம் குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த

#ஞாயிற்றுக்கிழமை கத்தாருக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் முன்வைத்த திட்டத்தில் ஹமாஸ் செய்ய விரும்பிய “ஏற்றுக்கொள்ள முடியாத” மாற்றங்கள் என்று அவர் விவரித்த போதிலும், அவர் அழைப்பை

ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்குத் தயார் ஹமாஸ்

வெள்ளிக்கிழமை இரவு, 60 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு “நேர்மறையான பதிலை” வழங்கியதாகவும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியது.

இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் போர் மீண்டும் தொடங்கப்படாது என்ற உத்தரவாதம்

உள்ளிட்ட திருத்தங்களை குழு கோரியதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காசாவில், ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் சனிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது.

அருகிலுள்ள நகரமான கான் யூனிஸில் உள்ள ஒரு மருத்துவமனையின்படி, அல்-மவாசி பகுதியில் கூடாரங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதில் ஒரு

மருத்துவர் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் சர்ச்சைக்குரிய உதவி விநியோக அமைப்பான காசா மனிதாபிமான

அறக்கட்டளையின் (GHF) இரண்டு அமெரிக்க ஊழியர்கள், கான் யூனிஸ் பகுதியில் அதன் தளத்தில் ஒரு கையெறி குண்டுத் தாக்குதலில் காயமடைந்தனர்.

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இரண்டும் ஹமாஸைக் குற்றம் சாட்டின, ஆனால் ஹமாஸ் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை
Posted in உலக செய்திகள்

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை

டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை ,டிரம்பிலிருந்து மேலும் பிரிந்து ‘அமெரிக்க கட்சி’ அமைப்பதாக எலோன் மஸ்க் அறிவித்தார்

எலோன் மஸ்க்கும் இடையேயான சண்டை

குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முக்கிய பிரச்சார நிதியாளரான எலோன் மஸ்க்கும் இடையேயான சண்டை சனிக்கிழமை

மற்றொரு பிளவுபட்ட திருப்பத்தை எடுத்தது, விண்வெளி மற்றும் வாகன கோடீஸ்வரர் டிரம்பின் “பெரிய, அழகான” வரி மசோதா அமெரிக்காவை திவாலாக்கும் என்று கூறினார்.

ஒரு புதிய அமெரிக்க அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமா என்று தனது X தளத்தில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் கேட்ட ஒரு நாள் கழித்து, மஸ்க்

சனிக்கிழமை ஒரு பதிவில் “இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சி உருவாக்கப்பட்டது” என்று அறிவித்தார்.

“2க்கு 1 என்ற விகிதத்தில், நீங்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீர்கள், அது உங்களுக்குக் கிடைக்கும்!” என்று அவர் எழுதினார்.

டிரம்ப் வெள்ளிக்கிழமை தனது சுய பாணியிலான “பெரிய, அழகான” வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை சட்டமாக கையெழுத்திட்ட பிறகு மஸ்க்கின் அறிவிப்பு வந்துள்ளது, இதை மஸ்க் கடுமையாக எதிர்த்தார்.

டெஸ்லா கார் நிறுவனம்

தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைக்கோள் நிறுவனம் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறிய மஸ்க், டிரம்பின் மறுதேர்தலுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன்களைச் செலவிட்டார்,

மேலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலிருந்தே அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தினார்.

மசோதா குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பின்னர் வியத்தகு முறையில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

மஸ்க் முன்பு ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி மசோதாவை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய பணத்தைச் செலவிடுவதாகக் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் டிரம்ப், மஸ்க்கின் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பெறும் பில்லியன் கண

ரயில்கடவையில் ரயில்மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் பலி ரயில் மோதி

ஒருவர் பலி ரயில் மோதி

ஒருவர் பலி ரயில் மோதி ,கொச்சிக்கடையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொச்சிக்கடையில் லுர்டு மாவத்தைக்கு செல்லும் துணை சாலையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதே நேரத்தில் பின்னால் இருந்தவர் பலத்த காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர் நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர்.

சம்பவம் குறித்து கொச்சிக்கடை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்

இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்

இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதர் நியமனம்,இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

டக்வொர்த் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் மூத்த தொழில் அதிகாரி ஆவார், மேலும் சமீபத்தில் அமெரிக்க வர்த்தக பணிக்குழுவின் உதவிச்

செயலாளராகவும், ஆஸ்திரேலியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் துணைத் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் இருந்தார்.

அவர் முன்னர் இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் முக்கிய பங்காளியாக இலங்கை இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவான

சமூக இணைப்புகள், நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மை, வளர்ந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மற்றும் அமைதியான, நிலையான

மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.

“நாடுகடந்த குற்றம், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு மற்றும் மக்கள் கடத்தல் உள்ளிட்ட பகிரப்பட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களுக்கு

நடைமுறை தீர்வுகளைக் கண்டறிய ஆஸ்திரேலியாவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.

“எங்கள் நாடுகள் வலுவான மக்களுக்கு இடையேயான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் 160,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட

ஆஸ்திரேலியாவின் இலங்கை சமூகம் ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகத்திற்கு ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பைச் செய்கிறது” என்று அமைச்சர் பென்னி வோங் மேலும் கூறினார்.

2022 முதல் இலங்கையில் ஆஸ்திரேலியாவின் நலன்களை முன்னேற்றுவதற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பதவி விலகும் உயர் ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் அவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.