Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே நபர் ஒருவர் திடீர்

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பாதுகாப்பு

அதிகாரி ஒருவர் ,மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடை ந்துள்ளனர்

பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

மேற்படி சூட்டு சம்பவத்தினால் ஊடக வியளாளர்களை சந்தித்து கொண்டிருந்த

டிரம்புக்கு எதுவித பாதிப்பும் இல்லாது தப்பித்து கொண்டதாக தெரிவிக்க படுகிறது

இந்த சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

அமெரிக்கா வெள்ளை மாளிகை
அமெரிக்கா வெள்ளை மாளிகை
      Posted in இலங்கை செய்திகள்

      தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

      தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

      லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்று (10)

      இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

      தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக

      சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

      வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை

      அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

      அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து

      தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3

      மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

      இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

      இத் தீவிபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள்

      உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

      இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர்

      தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

      இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

      இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான

      விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை

      அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

          பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

          பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்களது

          தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மத்திய நிலையத்தை விட்டு வெளியேறினர்.

          அதன்படி, 2020 ஆகஸ்ட் 08 ஆம் திகதி 08 நபர்களும், ஆகஸ்ட் 09 ஆம் திகதி 09

          நபர்களும், நேற்றைய தினம் 10 நபர்களும் (2020 ஆகஸ்ட் 10) இவ்வாரு

          பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

          இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களை

          ப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை

          வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களும் கடற்படையால் வழங்கப்பட்டன.

          தற்போதைய நிலவரப்படி, 70 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல்

          மையத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

          பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
          பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
              Posted in இலங்கை செய்திகள்

              பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

              பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

              புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த

              ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன்

              தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

              இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                  கொவிட் தொற்று நோயாளர்கள் 27 பேர் இன்று காலை வரையில் அடையாளம்

                  காணப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                  இந்த 27 பேரில் 23 பேர் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில்

                  தங்கியிருந்தவர்கள் ஆவர். ஏனைய 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தியத்தலாவ இராணுவ

                  வைத்தியசாலை, முதலாவது கெமுணு படையணி மற்றும் ஈடன் றிசோட் ஆகிய தினிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                  இதற்கமைவாக இன்று (11) காலை அளவில் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு

                  மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.

                  புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் – 508

                  பணியாளர்கள் எண்ணிக்கை – 67

                  அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் – 05

                  குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் – 48

                  வெலிக்கடை சிறைச்சாலை கொவிட் 19 தொற்று கைதியுடன் தொடர்புட்ட நபர் – 1

                  மொத்தம் – 629

                      Posted in இலங்கை செய்திகள்

                      கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                      கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                      சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த

                      தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                      சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க எமது செய்திப்பிரிவிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

                      உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கைதிகளை பார்வையிட

                      வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                      ஒரு கைதியை சந்திக்க ஒருவருக்கு வாரத்தில் ஒருமுறை மா்திரமே அனுமதி

                      வழங்கப்படும் எனவும் உணவுப் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கோர விபத்தில் தாய் மகள் பலி

                          தொம்பே, மல்வான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

                          மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த

                          முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                          சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் அவருடைய

                          மகளும் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

                              Posted in சினிமா

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்

                              நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

                              விஜய், சூர்யா பற்றி அதிகரிக்கும் அவதூறு பேச்சு – இயக்குனர் பாரதிராஜா கண்டனம்
                              விஜய் – சூர்யா


                              பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ்

                              நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது நடவடிக்கையால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

                              அண்மையில் தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக

                              விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக

                              விமர்சித்தனர். விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்.

                              மீரா மிதுனும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிப்பேன் என்று கூறி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

                              இந்நிலையில் நடிகர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

                              பாரதிராஜா

                              இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:-

                              நடிகர் சங்கம் உள்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பு அளிக்கிறது. நடிகர்கள் விஜய், சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல் நிற்கிறது.

                              அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேறடிப்பது போல் பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும்

                              பணியை சூர்யா செய்து வருகிறார். மனிதாபிமான பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் விஜய். பல்வேறு

                              அடித்தளங்கள் அமைத்து விஜய்யும் சூர்யாவும் உயரத்துக்கு வந்துள்ளனர்.

                              இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

                              Posted in சினிமா

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்

                              பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான வி.சாமிநாதன், கொரோனா தொற்றால் இன்று மதியம் காலமானார்.

                              கொரோனா தொற்றால் மரணமடைந்த பிரபல தயாரிப்பாளர்
                              தயாரிப்பாளர் சாமிநாதன்


                              லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனதின் மூன்று பங்குதாரர்களில் ஒருவர் வி.சாமிநாதன் (67). இவர் இன்று

                              (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரது உடல் அரசு வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெறும்.

                              இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அரண்மனை

                              காவலன், வேலுச்சாமி, மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மசக்கரம், பகவதி, பிரியமுடன், உன்னை நினைத்து,

                              உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, உன்னருகே நானிருந்தால், உனக்காக எல்லாம் உனக்காக,

                              உன்னைத்தேடி, அன்பே சிவம், தாஸ், ஒருவன், சிலம்பாட்டம், புதுப்பேட்டை, ஆட்டநாயகன், சகலகலா வல்லவன் உட்பட இருபத்தி

                              ஐந்துக்கும் மேல் பிரமாண்டமன படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

                              இவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு லட்சுமி என்ற

                              மனைவி மற்றும் அசோக், அஸ்வின் (கும்கி) ஆகிய மகன்களும் உள்ளனர். அன்னாரது மறைவுக்கு திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

                                Posted in சினிமா

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்

                                தமிழ் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் பிரியா ஆனந்த், அவர்கள் காதலர்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

                                அவர்கள் காதலர்கள் அல்ல… பிரியா ஆனந்த்
                                பிரியா ஆனந்த்


                                பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல்… இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும், பிரியா ஆனந்துக்கும்,

                                கவுதம் கார்த்திக்கும் காதல்… இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

                                அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் சொல்கிறார்:-

                                கவுதம் கார்த்திக் – அதர்வா

                                “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என் நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே

                                தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே

                                விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்றார்.

                                Posted in சினிமா

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா.

                                தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெனிலியா, தன்னுடைய முதல் பட நாயகனுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து இருக்கிறார்.

                                முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
                                ஜெனிலியா


                                சங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாய்ஸ். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

                                இந்தப் படத்தில் சித்தார்த், பரத், நகுல், தமன், மணிகண்டன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதில் சித்தார்த் –

                                ஜெனிலியா ஜோடியின் நடிப்பு அதிகளவில் பேசப்பட்டது. இந்த ஜோடி தமிழில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில்

                                பல படங்களில் நடித்தார்கள். அதில் ஒரு திரைப்படம் தான் ‘பொம்மரிலு’. இந்த படம் தமிழில் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்ற

                                பெயரில் ரீமேக் ஆனது. ஆனால், இதில் ஜெயம் ரவி-ஜெனிலியா நடித்து இருந்தார்கள்.

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                                பிரிட்டன் ஒருபகுதி அதிக வெப்பத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில்

                                பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதி நகர் பகுதி கடும் மழையின் கோரத் தாண்டவத்தால் வெள்ளத்தில் சிக்கியுள்ளது

                                இந்த வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்துள்ளது

                                சுமார் இருபது நிமிடங்கள் இடை விடாது பொழிந்த கனமழை காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                                வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                                    பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                                    பிரட்டனில் வேகமாக பரவும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மீள் அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டது .

                                    தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வியை தொடக்கி

                                    வைக்க தமது ஆதரவை வழங்கிய நிலையில் திட்டமிட்டபடி பாடசாலைகள்

                                    திறக்க பட்டு கற்றல் செயற்கைகள் ஆரம்பிக்க படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                                    இவரது அறிவிப்பு மாணவர்கள் பெற்றோர்கள் இடத்தில எதிர்ப்பு கிளம்பியுள்ளது


                                    கொரனோ நோயானது முழுமையாக கட்டு படுத்த தவறி வரும் அரசு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிட கூறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                    வியாபார நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்விதம்

                                    கல்வி சாலைகளை அரசு திறந்திட அடம் பிடித்து வருவதான குற்ற சாட்டுக்கள் மக்கள் மன்றில் முன் வைக்க படுகிறது

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

                                        28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் – புதன் கிழமை அமைச்சரவை பதவிப் பிரமாணம்

                                        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களைக் கொண்ட அமைச்சு

                                        கட்டமைப்பு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                        ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வகிக்கப்படும் அமைச்சுக்களும் இதில் அடங்கும்.

                                        அமைச்சுக்கள், அமைச்சுக்களுக்குரிய விடயங்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள்,

                                        நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டங்கள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்படும்.

                                        அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள்

                                        கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும்

                                        குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

                                        அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி,

                                        சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய

                                        அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

                                        ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப

                                        தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்

                                        ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள

                                        மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

                                            காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு – நடந்துன் என்ன …?

                                            இலங்கை அளுத்மாவத்தை பகுதியில் காருக்குள் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்


                                            இவ்வாறு மீட்க பட்ட மனித சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                                            42 வயது நபர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்கப் படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                            இது கொலையா ? அல்லது இயற்கையை மரணமா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு

                                            திருமலையில் புத்தர் சிலைகள் அடித்து நொறுக்கு – இராணுவம் குவிப்பு

                                            இலங்கை திருகோணமலை சேருவளை பகுதியில் புத்தர் சிலை அடித்து நொறுக்க பட்டது

                                            மேற்படி சம்பவத்தை புரிந்த இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்


                                            அமைதியை குழப்பி இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில்

                                            மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கருத படுகிறது

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்

                                            ஆற்றில் மிதந்த மனித தலை -கண்ணீரில் குடும்பம்

                                            அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே

                                            மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில் தலை மாத்திரம் நேற்று (09) மாலை கிராம மக்களின் உதவியுடன் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

                                            கடந்த சனிக்கிழமை (8) வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக வயல்வெளிகளுடன் இணைந்த வழுக்கைமடு நீர்க்கால்வாய் அருகில் சென்றுள்ளார்.

                                            பின்னர் தனது உடுதுணிகளை நீர்க்கால்வாய் அருகில் வைத்துவிட்டு கால்வாயில் இறங்கி குளித்துள்ளார்.இவ்வேளை

                                            குறித்த நபரை கால்வாயில் இருந்த முதலைகள் இழுத்துச்சென்றுள்ளது.

                                            இவ்வாறு இழுத்தச்சென்றவரை காணவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்த நிலையில் கிராமத்தவர்களின்

                                            உதவியுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காணாமல் சென்றவரின் ஆடைகள் கால்வாய் கரையோரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

                                            பின்னர் சுமார் 800 மீற்றர் தொலைவில் குறித்த கால்வாயில் மிதந்து வந்த நிலையில் தலை மீட்கப்பட்டது.பின்னர் மீட்கப்பட்ட தலை

                                            கரைக்கு கொண்டுவரப்பட்டு சவளக்கடை பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.

                                            இவ்வாறு இடம்பெற்ற விசாரணை அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க றோக்கு ஜோசப் என சடலமாக மீட்கப்பட்டவரை சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.

                                            சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிவானின் உத்தரவிற்காக சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

                                            ஆற்றில் மிதந்த மனித தலை
                                            ஆற்றில் மிதந்த மனித தலை
                                            Posted in இலங்கை செய்திகள்

                                            அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு

                                            அமெரிக்க தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி – இராணுவ தளபதிக்கிடையில் சந்திப்பு

                                            இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி லெப்டினன்ட் கேணல் ரைவிஸ் கொஸ் அவர்கள்

                                            பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான

                                            லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் உடனான சந்திப்பு கடந்த 07ம் திகதி ஜயவர்தனபுர இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

                                            இந்த நல்லுறவு கலந்துரையாடலில் இரு நாடுகளிடையே மேம்படுத்த வேண்டி முக்கியத்துவம் விடயங்கள் தொடர்பாக

                                            கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இலங்கையில் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கை இராணுவம் மற்றும்

                                            பங்குதாரர்களின் பங்களிப்பை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி பாராட்டினார்.

                                            இந் நல்லெண்ண சந்திப்பின் நிறைவில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றி கொள்ளப்பட்டது.

                                            அமெரிக்க தூதரக பாதுகாப்பு
                                            அமெரிக்க தூதரக பாதுகாப்பு
                                            Posted in இலங்கை செய்திகள்

                                            கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                            கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                            கட்டார் மற்றும் ஜப்பானில் இருந்து 176 இலங்கையர்கள் இன்று (10) காலை நாட்டிற்கு வந்துள்ளனர்.

                                            அவுஸ்திரேலியாவில் இருந்து 286 இலங்கையர்களுடன் விசேட விமானம் நேற்று இரவு மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தது

                                            இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

                                            மேலும் நாட்டில் பதிவான கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2844 ஆக அதிகரித்துள்ளது.

                                            நேற்றைய தினம் (09) புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மூன்று.

                                            அவர்களில் ஒருவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தவர்., மற்ற இருவர் சேனகபுர புனர்வாழ்வு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

                                            மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்த வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2579.

                                            COVID-19 பரம்பலின் தரவுகள்

                                            புதுப்பிக்கப்பட்டது 2020-08-10 11:07:07

                                            2844
                                            உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                            254
                                            சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                            0
                                            புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                            2579
                                            குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                            11
                                            இறப்பு எண்ணிக்கை

                                            Posted in இலங்கை செய்திகள்

                                            இலங்கையில் இன்றைய காலநிலை

                                            இலங்கையில் இன்றைய காலநிலை

                                            நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                            மழை நிலைமை:
                                            புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மழையோ

                                            அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                            காற்று :
                                            நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது

                                            மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                            காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும்

                                            மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது

                                            அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்

                                            சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                            கடல் நிலை:
                                            காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான

                                            கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

                                            நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                                            பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது

                                            கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                            கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.