இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

Spread the love

இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

கொவிட் தொற்று நோயாளர்கள் 27 பேர் இன்று காலை வரையில் அடையாளம்

காணப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த 27 பேரில் 23 பேர் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில்

தங்கியிருந்தவர்கள் ஆவர். ஏனைய 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தியத்தலாவ இராணுவ

வைத்தியசாலை, முதலாவது கெமுணு படையணி மற்றும் ஈடன் றிசோட் ஆகிய தினிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று (11) காலை அளவில் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு

மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.

புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் – 508

பணியாளர்கள் எண்ணிக்கை – 67

அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் – 05

குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் – 48

வெலிக்கடை சிறைச்சாலை கொவிட் 19 தொற்று கைதியுடன் தொடர்புட்ட நபர் – 1

மொத்தம் – 629

      Leave a Reply