முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்
காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது
பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது
இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை
பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார்.
இதன்போது எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பதாதைகளையும் சபையில் ஏந்தி நின்று எதிர்ப்பு கோஷம்
எழுப்பினர்.Capture Parliment Oppசட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் எந்தவொரு பிரஜையும் அதற்கு எதிராக
நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுவொன்று தொடுக்கப்படாத பட்சத்தில், மக்களவையில் 7
நாட்களின் பின்னர் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகும்.
இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் முடிவில் திருத்தச் சட்டமூல பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை
அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் குழு நிலை விவாதத்தில் பிரேரணையின் சகல ஷரத்துக்களும்
பரிசீலிக்கப்படும். இந்தச் சமயத்தில் திருத்தங்களை பிரேரிக்கலாம். பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தை அடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
அரசியல் யாப்பின் மீதான 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்தும்
பரிசீலிப்பதற்காக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கு
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான
நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.
இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா
யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
நேற்று (21) இரவு 9.45 மணியளவில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்,அங்கிருந்து
தப்பியோடியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு
தப்பி ஓடியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்
வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்
வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்து விடலாம் என அமெரிக்கா திட்டம் போட்டது
ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீர புதல்வன் கிங் யோங்
உண், தமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றும் அதி தீவிர நகர்வுகள் துணிவுடன் செயல் பட்டார்
,அதன் விளைவு வடகொரியாவில் இருந்த படியே அமெரிக்காவின் வெள்ளை
மாளிகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து அசத்தினார் .
மிரண்டே போனது அமெரிக்கா ,அது மட்டுமா கிழமை தோறும் ஒரு ஏவுகணை சோதனை என விடாது சோதனை செய்து மிரள வைத்தது வடகொரியா ,
தொடர்ந்து அந்த சோதனையை புரிந்த வண்ணமே உள்ளது .இப்பொழுது
உலக சண்டியர் அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டது ,அதனை அடுத்து
தமது உளவு படையினர் மூலம் இரகசியமாக வடகொரியா அதிபரை போட்டு தள்ளும் விளையாடல்களை ஆரம்பித்துள்ளது
இதன் மூலம் அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் பரப்புரை செய்தது,
ஆனால் அது பலிக்கவில்லை ,டிரம்ப், ஆட்சி ஏறிய கால பகுதியில் வடகொரியா
மீது என்பது அணுகுண்டுகளை வீசி அந்த நாட்டை முற்றாக அழித்து கட்ட அமெரிக்கா தலமை டிரம்புடன் திட்டம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது
ஜப்பானை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்தது போல
வடகொரியாவையும் அமெரிக்கா அடக்கிட நினைப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது
முக்கிய பாதுகாப்புதுறை மந்திரி ஒருவர் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடற்பரப்பில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்
திடீரென கரை ஒதுங்கியுள்ளன
இந்த திமிங்கலங்கள்
இவ்வாறு ஏன் திடீரென வருகை தந்தன என்பது தொடர்பில் கடல் சார்
ஆய்வியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவ்விதம் ஒதுங்குவதால் பெரும் கடல் பேரிடர் இடம் பெற கூடும் என அஞ்ச படுகிறது
அவ்விதம் எனின் சுனாமி வருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா …?
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்
இந்தியாவில் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது ,இதில் சிக்கி பலர்
படுகாயமடைந்தும் ,இறந்தனர் ,ஆனால் நான்கு வயது சிறுவன் ஒருவன்
தெய்வாதீனமாக உயிருடன் மீட்க பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அவ்வாறான காட்சி ஒன்று கீழே
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
சிம்பாவே நாட்டில் உள்ள அருவியில் நீரை அருந்திய காட்டு
யானைகள் 330 பேர் திடீரென இறந்துள்ளது
குறித்த யானைகள் ஏன் இவ்விதம் இறந்தன என பரிசோதனை செய்த
பொழுது அந்த நீரில் கொடிய பக்டீரியா கிருமிகள் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டன
இதனை அடுத்தே குறித்த யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது
தொடர்ந்து இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை
80 ஆயிரம் – சீனா ரஷியா இணைத்து பெரும் இராணுவ ஒத்திகை
உலகின் முதல் முக்கிய வல்லரசுகளாக விளங்கி வரும் சீனா
ரசியாவுடன் இணைந்து
பெரும் இராணுவ ஒத்திகை நடத்தி வருகின்ற்னர் ,Belarus, Armenia, China,
Pakistan and Myanmar
போன்றவை இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்
இவை அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,இதன்
பின்னர் இவர்களுடன் இணைந்த நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா
இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடும் என எதிர்
பார்க்க படுகிறது

தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்
தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்
இந்தியாவின் புகழ் பூத்த காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகால்
தற்போது மீள மக்கள் பாவனைக்கு திறக்க பட்டுள்ளது ,
இதனை அடுத்து மீள உல்லாச பயணிகள் படை எடுத்து வருகின்றனர்
லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை
லண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை
பிருத்தானில் பரவி வரும் கொரனோ நோயானது லெவல் நான்கை எட்டியுள்ளது
இது ஆள் ஒருவர் பலியாக முன்பு கோமா நிலையில் உள்ள செயளுக்கு ஒப்பானது
அதுவே இப்பொழுது நிலவி வருகிறது ,அதனை தொடர்ந்து அவசரமாக 15 விதிகளின் கீழ் தடைகள் பிறப்பிக்க படவுள்ளன ,
அவற்றில் உணவகங்கள் ,பார்கள் என்பன வரையறை செய்யப்பட்டவை
மட்டும் திறப்பது ,ஏனையவை அடித்து பூட்டுதல் ,மேலும் சமூக இடைவெளி
கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் ,முக கவசம் ,கையுறை என்பன அணியப்படல் வேண்டும் .
வீட்டுக்கு ஒருவர் என்கின்ற விகிதத்தில் வெளியில் நடமாடுதல் ,அதைவிட
பத்து மணிக்கு பின்னர் ஊரடங்கு பிறப்பிக்க பட்டு மக்கள் முடக்க படுதல் என்ற சட்டம் பாயவுள்ளது
மக்களே ஓடி சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
மறக்காது மருந்து பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்
,நாளை இந்த அறிவுப்பு திடிரென வெளியாகலாம் ,பிரதமர் முக்கிய உரை ஆற்றவுள்ளார்
அதன் பின்னர் இவை நடைமுறைக்கு கொண்டுவர லண்டன் மேயர் நடவடிக்கை எடுத்து வருகிறார்
நாள் ஒன்றுக்கு 49,000 பேர் இந்த நோயால் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி கொள்ளுங்கள்

ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்
ஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்
கிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த விவசாய மன்னரும் ,தொழில்
தருணருமான சிற்றம்பலம்- குருநாதன் – ( குஞ்சி ) அவர்கள் வீட்டை உடைத்து
புகுந்த யானையின் கோர தாக்குதலில் சிக்கி அகல மரணமானார் ,அன்னாரின் ஓராம் ஆண்டு நினைவஞ்சலி இன்றாகும்
இத் தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறிய தருகின்றோம்
- தகவல் கருணா ,மற்றும் குடும்பத்தினர்

விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் நடிக்கும் படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?
டாப்சி, விஜய் சேதுபதி
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து
வருகிறார்கள். இந்த படத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. திகில்
நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதன்படி இப்படத்திற்கு ‘அனபெல் சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனபெல்
என்பது டாப்சியின் பெயராகவும், சுப்பிரமணியம் என்பது விஜய் சேதுபதியின் பெயராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாப்சி, விஜய் சேதுபதி
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக்
சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர், நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். மேலும் இப்படத்தில் ராதிகா
சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெறுகிறது
சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை
சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல நடிகை சிகரெட் கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.
சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை
சஞ்சனா கல்ராணி
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட
நடிகை சஞ்சனா கல்ராணி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல்நாள் சிறையில் கொடுத்த உணவை
அமைதியாக வாங்கி சாப்பிட்ட சஞ்சனா, அதன்பின்னர் தனக்கு தினமும் சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என்று கேட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு சஞ்சனா அடம்பிடித்து உள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒருநாள் தான் சிறையில் அசைவ
உணவு வழங்குவோம், இதனால் தற்போது கோழி இறைச்சி வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் சமாதானம் செய்து உள்ளனர்.
இதையடுத்து தனக்கு சிகரெட் வேண்டும் என்றும் சஞ்சனா கேட்டு உள்ளார். அதற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
சஞ்சனா கல்ராணி
இந்த நிலையில் தனக்கு சிகரெட், கோழி இறைச்சி வேண்டும் என்று நேற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் சஞ்சனா அடம்பிடித்ததாக
தெரிகிறது. ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட
பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டு உள்ளார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள்
இதற்கு மறுத்ததோடு, அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர்
சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி
சூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி – ஏன் தெரியுமா?
சூர்யா
கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய
வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க
உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த
ரூ.30 லட்சம் தொகையை தற்போது தயாரிப்பாளர்கள் கே ஆர் , கே. முரளிதரன் , கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிபதியிடம் காசோலையை வழங்கிய தயாரிப்பாளர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த
பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள். சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு
மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.64 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்-தப்பிய டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு
முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.
கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம்
அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என ஈரான் உறுதியளிக்க, அதற்கு
பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது.
எனினும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை ஈரான் மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும்
அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க
முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்கா தனது முடிவில் தீர்க்கமாக இருந்தது.
அதன்படி ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பது மற்றும் சோதிப்பதற்கான தடை; அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களை மாற்றுவதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.
அதேபோல் மற்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை ஈரானுடன் பகிர்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைகளை அமல்படுத்துவதற்கான கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறைவேற்றத் தவறினால் அவற்றுக்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்கும். ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடரும்.
எதிர்வரும் நாட்களில் ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், அதை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைக்கும் பல கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு
மாகாண சபை முறைமையை அழிக்கும் கோட்டா அரசு
மாகாண சபைகளை இல்லாமற் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அம்முறைமையில், ஏதாவது
பிரச்சினைகள் இருப்பின், அதனை திருத்தி, மாகாண சபை முறைமை, நாட்டுக்குள் பேணப்படவேண்டும் என்றார்.
மாகாண சபை முறைமை நீக்குவதற்கான முயற்சியை, முன்னாள் முதலமைச்சர் என்றவகையில், நானே முதலில் எதிர்ப்பேன் எனத்
தெரிவித்த அவர், மாகாண சபை முறைமை அமுலில் இருக்கவேண்டும் என்றார்.
கொக்கல ஏற்றுமதி வலயத்தில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்டும்
நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையானது இந்தியாவால் பலவந்தமாக
திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
“என்றாலும் நிர்வாக அதிகாரத்தை பிரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்” என்றார்.
“மாகாண சபைகளை “வௌ்ளை யானை” என குற்றம் சுமத்தினாலும் வேலைச் செய்யாதவர்களை முதலமைச்சர்
ஆசனங்களில் அமரவைத்தமையால், வேலைச் செய்யக்கூடிய திறமையானவர்களுக்கும் மாகாண சபைகள் ஊடாக வேலை செய்ய முடியாமல் போனது” என்றார்.
மாகாண சபைகளின் ஊடாக, சம்பளம் வழங்கப்படுகின்றமை கூடுதலான நிதி விரயமாக காட்டப்படுகின்றது. ஆனால், மாகாண
சபைகள் ஒழிக்கப்பட்டாலும் மாகாண சபைகளில் பணிபுரிந்த அந்த அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஊழியர்கள், அரச சேவைக்குள்
உள்வாங்கப்படுவர். அப்போது, அதேயளவான செலவையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் என்றார்.
எனவே, மாகாண சபைகள் என்ற வார்த்தை எவருக்கும் பிடிக்காமல் போகுமாயின், அதனை திருத்துவது பிரச்சினை இல்லையென்றும்
அதனை விடுத்து மாகாண சபைகளை நீக்குவது அதற்கான தீர்வு இல்லையெனத் தெரிவித்த அவர், அது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்
கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா
கேப்பாப்பிலவில் இருந்த 24 பேருக்கு கொரோனா
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த 257 பேர் ஓகஸ்ட் 02ஆம் திகதி கேப்பாப்பிலவு விமானப்படைத்தளத்தில்
அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம்
கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது, 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை (19) 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.








