Posted in உலக செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்

மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்

பிரிட்டனில் ஆளும் பிரதமர் பெரீஸ் ஜோன்சன் தனது குழப்பத்தில்

கொரனோ பரவல்


விதிகளைம் மாறி கூறிவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்

வடகிழக்கு பகுதிகளில் இவ்விதமான விதிகள் விதிக்க பட்டுள்ளதை

அவர் சுட்டி காட்டி தெளிவு பட மக்களுக்கு விளக்கியுள்ளார்

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்விதம் பதில் வழங்கியுள்ளார் ,அதனை காண்க

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை

19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை

இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பத்தொன்பது வயது இளம் பெண்

ஒருவர் மர்ம ரவுடி கும்பலினால் கோரமாக கற்பழித்து படு கொலை

செய்ய பட்டுள்ளார்

பலமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சுயநினைவின்றி மருத்துவ

மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,தொடராக வழங்க பட்ட

சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்

குறித்த பெண்ணை கற்பழித்தவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள்

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
கோப்புப்படம்

சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4

லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல

குழந்தைகள் உணவு கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போரினால் நிலைகுலைந்துள்ள சிரியாவில்

கொரோனா தொற்றும் பரவுவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது

46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில்

தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு

சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர்.

குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு

இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு

வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

வங்கிக்கணக்குளை முடக்கிய மத்திய அரசு – இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
புதுடெல்லி:

’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் பெங்களூரில் தனது கிளையை நிறுவியுள்ளது.

இந்தியாவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவதே ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும்.

ஆனால், தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இந்தியா அரசியல் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தது.

மேலும், அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பால் பெங்களூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெல்லி வன்முறை தொடர்பாக போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு மீது ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

இதற்கிடையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசிடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும். ஆனால், ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்போ தான் பெறும் வெளிநாட்டு நிதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிதி பெற்று வந்தது.

வெளிநாட்டில் இருந்து நிதிபெற ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.

அதன் பின் 20 ஆண்டுகளில் ஒருமுறைகூட வெளிநாட்டில் இருந்து நிதிபெற மத்திய அரசிடம் அந்த அமைப்பு உரிய அனுமதி பெறவில்லை. மேலும், இத்தனை ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அந்த அமைப்பு நிதிபெற்று இந்தியாவில் தனது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.

தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்திய சட்டவிதிகளை மீறியதற்காக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது.

இந்நிலையில், தனது வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதற்கு ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஆற்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயது பெண் -சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

வீதி நிரல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை

கொழும்பில் பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி நிரல் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல்

கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான

இந்திக்க ஹப்புகொட இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கடந்த இரண்டு வார காலமாக வீதி நிரல் சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் வீதிநிரல் சட்டத்தை மீறிய நபர்கள் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டு அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகுப்புக்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வீதிகளில் உள்ள மின்சார சமிஞ்சை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர்

ஹப்புகொட தெரிவித்தார். கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார கால ஒத்திகையாக வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பமானது.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் வீதி நிரல்

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்..

இதற்கு அமைவாக கொழும்பு பிரதான 4 வீதிகளை கேந்திரமாக கொண்டு வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையிலும் வீதி நிரல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

இந்திய எரிபொருள் கப்பலில் கொரோனா தொற்று – 40 பேர் தனிமைப்படுத்தல்

கொரோனா தொற்று 17 பணியாளர்களுடன் இந்தியாவில் இருந்து கொழும்பு’

துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலில் கடமையில் ஈடுபட்ட 7 பேர் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அவர் , சம்பந்தப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று

நோயாளர்களா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் இறுதி கொரோனா நோயாளர் குணமடையும் வரையில் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை

கடைப்பிடிப்பது கட்டாயமாகுமென்று இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

நாம் மேற்கொண்ட சிறந்த சேவையின் காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடிந்நது. இது தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு.

தற்பொழுது சிலர் நினைக்கின்றனர் இந்த தொற்றினால் நாட்டிற்கு பிரச்சினை இல்லை என்றும், இன்னும் சிலர் தொற்று ஏற்பட்டால்

அதனை இராணுவத்தினர் கட்டுப்படுத்திவிடுவர் என்றும் நினைக்கக் கூடும். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் மக்கள்

பல சிரமங்களை எதிர்கொண்டனர். அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது என்றும் இராணுவ தளபதி கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ,இந்திய பிரதமருக்கு பதில்

இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை

அமுல்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலிளித்திருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கை மக்கள் வழங்கியுள்ள ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதன் மூலம் அரசியலமைப்பு

விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக

புரிந்துகொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதில் வெளிப்படுத்தியிருப்பதாகவும்; அமைச்சர் தெரிவித்தார்.

13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கைக்கு, இந்தியா

15 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்று பொய்யானதாகும் என்றும் அவர் கூறினார்.

13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்தியாவின் நிதி உதவி பேரம்பேசப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்;று விசேட செய்தியாளர்

மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,, இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வீடியோ கலந்துரையாடல்

பற்றிய உண்மைக்கு புறம்பான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், கடன்கள் , அரசியல் அமைப்பு ரீதியான விடயங்கள் ,. மீனவர்கள் தொடர்பான நெருக்கடிகள் பற்றி இதன் போது ஆராயப்பட்டது. இரண்டு

நாடுகளுக்கும் இடையில் , எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது பற்றி இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் நிதி உதவி தேவையாயின் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த

அமைச்சரரிடம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான மாகாண சபை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை முன்வைத்தனர்.

ஊடகவியலாளர்: இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: இந்த திருத்தம் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது இப்பொழுதும் நடைமுறையில் உண்டு. இராஜாங்க அமைச்சரின் கூற்று அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது.

இதனை நீக்குவதாக பிரதமரோ ஜனாதிபதியோ ஒரு போதும் தெரிவிக்கவில்லை. இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர் அமுல்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தின்

கீழான மாகாண சபை முறையை எமது அமைப்பு வரவேற்றது. அதனை இப்பொழுதும் நாம் வரவேற்கின்றோம். சில தமிழ் அமைப்புக்கள் தான் இதனை விமர்சித்தன.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல : இலங்கை பிரதமருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற இந்த

கலந்துரையாடல் 45 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தது. இது நாடுகளுக்கு இடையில் பொதுவான விடயங்கள் குறித்து விரிவாக

கலந்துரையாடப்பட்டது. எந்த முரண்பட்ட விடயங்களும் இதில் இடம்பெறவில்லை, சுமுகமான நல்லுறவுடன் பேச்சுவார்த்தைகள நடைபெற்றன.

பல கலந்துரையாடல்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும்.

தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து ஒருபோதும் முடிவு எடுக்கமாட்டோம்

Posted in இலங்கை செய்திகள்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

சுனாமியில் காணாமல் போன மகனுடன் மீண்டும் இணைந்த தாய்

2014.12.26 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தால், அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பகுதியில்

தனது மகனை இழந்த அபுசாலி சித்தி ஹமாலியா என்ற பெண், 16 வருடங்களுக்கு பின்னர் மகனைக் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தில் 05 வயதில் காணாமல் போன றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் (வயது 21) எனும் இளைஞனே 16

வருடங்களின் பின்னர் இவ்வாறு தனது தாயாருடன் இணைந்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் போது சிற்றூழியராக வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்ததாகவும் வீடு சென்று பார்த்த போது

தனது மகனைக் காணாது கதறியதாக, அபுசாலி சித்தி ஹமாலியா தெரிவித்தார்.

எனினும், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இன்று தனது மகன் தன்னுடன் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது விடா முயற்சியால், அம்பாறை மாவட்டத்தின் புற நகர் பகுதிகளில், மகனின் சிறுபாராய புகைப்படத்துடன் மகனைத் தேடி

அலைந்தமையால் மகன் படிக்கும் பாடசாலையைக் கண்டறிந்ததாகவும் சிங்களப் பாடசாலையொன்றில், நான்

பெயரிட்ட அதே பெயருடன் மகன் கல்வி கற்றுக்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று விரும்பி என்னுடன் வந்து இணைந்துள்ள எனது மகனை வளர்த்தவர்கள் எப்போதும் எந்த நேரமும் மகனை சந்திப்பதற்கு

வருகை தந்தாலும் நான் ஆட்சேபனை செய்யப் போவதில்லை எனவும் மேலும் கூறினார்.

Posted in சினிமா

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப்

பெற்ற ஓவியா, தனது ரசிகை ஒருவர் மரணத்திற்கு துடி துடித்து போயிருக்கிறார்.

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா
ஓவியா


பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது.

ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே

அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில்

ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார்.

ஓவியாவின் பதிவு

இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின்

மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை

தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள்

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக

இருக்கும் ஷிவானி, அது நானில்லை… யாரும் நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.

அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி
ஷிவானி


சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில்

கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும்

பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

ஷிவானி

தற்போது கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்

போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில்

தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர்

பக்கத்தில் நான் இல்லை… என் பெயரில் போலி கணக்கை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்

Posted in உலக செய்திகள்

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.

இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு

ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும்

பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்தது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்

பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்

பிரிட்டனில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள சட்ட விதிகளை மீறி திருமண

விழா ஒன்றில் முப்பத்தி
ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் விவசாய

பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபர் ஒருவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

அது தவிர அந்த நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றாது

கூடியவர்களுக்கு தண்டம், அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அரசு கொண்டு

வந்துள்ள நடைமுறையை பின் பற்றாது மக்கள் இவ்விதம் உலவி வருவது

மேலும் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வைக்கும் என அடித்து கூறலாம்

Posted in உலக செய்திகள்

65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்

65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் மத்தளம் அமைத்து போராடி வரும்

தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கும்

இடையில் தீவிர சண்டை இடம்பெற்றது

இதில் அறுபத்தி ஐந்து போராளிகளை தாம் படுகொலை செய்துள்ளதாக

அரச இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த

பகுதியை தாம் பாதுகாத்து வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

65 தாலிபான்கள் சுட்டு கொலை
65 தாலிபான்கள் சுட்டு கொலை
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

ஈரான் புரட்சி காவல் படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை

ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர்

சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது

அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு தீவிரம் பெற்று வரும்

நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று

என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறது

இந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

இவை ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது

ஏவுகணை ஈரான்
ஏவுகணை ஈரான்
Posted in உலக செய்திகள்

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி

மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு

சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம்

மிகுந்து காணப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள்

கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் அந்த மாகாணத்தில் ஜரல் டெல் புரோகிரெசோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று காலை பெண்கள்

உள்பட ஏராளமான இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது கார்களில் வந்து இறங்கிய மர்ம கும்பல் மதுபான

விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.

மதுபான விடுதிக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம கும்பல்

சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்

. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்

பிரிட்டனில் முதல்தர வங்கிகள் ஒன்றாக உள்ள Barclays வங்கியின்

ஆன்லைன் அப்பிளிக்கேஷன் செயல் இழந்து காணப்பட்டது

இதனால் பல்லாயிரம் மக்கள் தமது ஆன்லைன் செயல் பாடுகளை செய்திட

முடியாது திணறினர் .தொடர்ந்து தமது சேவைகள் மீள் வழமைக்கு திரும்பும்

எனவும் குறிப்பிட பட்ட சில மக்களே இந்த தடையினை சந்தித்து இருப்பர்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,

இந்த தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை

Posted in இலங்கை செய்திகள்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்

திருடிய மூன்று தையல் இயந்திரங்களை திருட்டுப் போன இடத்தில் திருடன் மீண்டும் வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர்

பாடசாலையில் இருந்த மூன்று தையல் இயந்திரங்களும் திருடப்பட்டிருந்தன.

இதனை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு பொலிஸாரிடம்


ஒப்படைத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

குறித்த தகவலை அறிந்து கொண்ட திருடன், திருடப்பட்ட மூன்று தையல்

இயந்திரங்களையும் திருடிய இடத்தில் மறுநாள் வைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 8 பேருக்கும் ஐக்கிய அரபு

இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் தொற்று

உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, 3 ஆயிரத்து 208 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். 139 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

தமிழரின் நினைவேந்தல் உரிமை மற்றும் அடக்குமுறைகளை வலியுறுத்தி

முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் இடம்பெறவுள்ள

பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிணைந்த

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு

மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.