கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
கந்தளாய் சீனி தொழிற்சாலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்தக் கைத்தொழிற்சாலை மூலம் வருடாந்தம் சுமார் 25 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை சுமார் 26 வருடங்களாக மூடப்பட்டுள்ளது. கடந்த
அரசாங்கம் இதனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய போதிலும் அது திறக்கப்படவில்லை.
இதனால் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 21 ஆயிரம் ஏக்கர்
நிலப்பரப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் சீனி தொழிற்சாலை
ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் 2 ஆம் திகதியுடன் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு தேங்காய் விற்பனை – வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
அதிக விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும்
நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை உயர்ந்த பட்ச நிர்ணய விலைக்கு தேங்காய் விற்பனை செய்யப்படா
விட்டால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தேங்காயின் சுற்று வட்டத்திற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி
வெளியிடப்பட்டதன் பின்னர், இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜென்ரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்
பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்
என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் பேசியதாவது:-
நான் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
அது வெற்றிகரமாக அமைந்தால், அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கோடிக்கணக்கான ‘டோஸ்’ தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்க தயாராக உள்ளது.
மேலும், 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வினியோகிக்க இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மற்ற
நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்து அவை ஆரோக்கியமாக இருந்தால்தான், ஒவ்வொரு நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடந்த 9 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம். இந்த பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எந்த நாட்டையோ, எந்த அரசையோ
குறை கூறுவது எனது நோக்கம் அல்ல. ஒரு முன்னாள் கொரோனா நோயாளி என்ற முறையில், இதை அறிந்து கொள்வது எனது
உரிமை. அதன்மூலம், இது மறுபடியும் தாக்காதவாறு நம்மால் இயன்ற அளவுக்கு நாம் கூட்டாக போராட முடியும்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து 34 கோடி பவுண்டு நிதி உதவி அளித்துள்ளது.
இவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசினார்.
இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
இரு நாட்டு இராணுவம் மோதல் -23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஆர்மீனியா மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அர்மீனியா – அஜெரி இடையிலான மோதலில் 23 பேர் பலி – 100க்கும் மேற்பட்டோர் காயம்
அர்மீனியா அஜெரி இடையே மோதல்
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜெரி படைகளுக்கு இடையே சமீபகாலமாக மோதல்கள்
அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அசர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், நாகோர்னோ-கராபாக் பகுதிக்கு அசர்பைஜான் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஆர்மீனிய
படைகள் அசர்பைஜான் ராணுவ மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதில் 23 பேர் பலியானதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயம அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1994-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும், அசர்பைஜானும் ஆர்மீனியாவும் நாகோர்னோ-கராபாக்
மற்றும் தனி அஜெரி-ஆர்மீனிய எல்லைப்புறங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்க்கு குவியும் பிரபலங்கள் பாராட்டு
விஜய்க்கு குவியும் பிரபலங்கள் பாராட்டு
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு
விஜய், சரண்
பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர்
விஜய்யும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு அங்கு விஜய் வந்து அஞ்சலி
செலுத்திவிட்டு எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு எஸ்பிபி பாடல்கள் பாடியது மட்டுமின்றி அவருடன் சில
படங்களில் இணைந்து நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது,
இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் இருந்து விஜயை காத்து, போலீசார் அழைத்து சென்று
கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து, அருகாமையில் நின்றவரிடம் விஜய் அளித்தார்.
விஜய்
விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக
மரியாதை வந்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் இது பற்றி ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறியதாவது: “கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என
அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு
என எனக்கு தெரிகிறது. தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது” என கூறி இருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது: “தளபதி…. தளபதி தான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்” என
குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்
அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்
நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள
பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும்,
அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில்
கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக
வதந்திகளுடன் யாரும் வரமாட்டாங்கனு நம்புறேன்”.என லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த காட்டமான பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விமர்சித்தனர். பிளேட்டுகள், கழிப்பறையை கழுவுவது
கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் கடுமையாக சாடினர்.
போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்
போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்
போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்
ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி
இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி
உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் ரியாவின் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது
தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக்சக்ரவர்த்தி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
இது தவிர போதை கும்பலுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்த நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா, அலிகான், சிரத்தாகபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக
வேண்டும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியது. முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி
இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத்சிங் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையின் போது, நடிகை ரியாவுக்கும், ரகுல் பிரீத்சிங்குக்கும் இடையே போதைப் பொருள்
பரிமாற்றம் பற்றி நடந்த உரையாடல் பதிவை காண்பித்து விசாரித்தோம். அப்போது இருவரும் உரையாடியதை அவர் ஒப்புக் கொண்டார்
மேலும் தனது வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு
சொந்தமானது. அவர் அதை தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள இருந்தார் என்பதையும் ரகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்..
இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.
இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம்.
இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.
எஸ்.பி.பி., இளையராஜா
இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு.
இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை
பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.
பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த
மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.
இளையராஜா , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்
இளையராஜா. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம்.
அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., அந்த வீடியோவை மீண்டும் போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம்.
இந்தத் தகவலை அந்த ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா
அச்சுறுத்தல் காரணமாக நண்பன் எஸ்.பி.பி.,யின் மறைவுக்கு இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாவிட்டாலும்,
திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது
இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் சோதனை
இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது நவீன யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் Unibuffels (improved version of
Unicorns), ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன மாலி நாட்டில் உள்ள (மினுஸ்மா) ஐக்கிய நாட்டு சமாதான அமைதிகாக்கும் பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவை அந்நாட்டிலுள்ள கடினமான நிலப்பரப்புகளில் பரீட்சாத்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இத்த யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் படையணியினரால் The
Army’s Sri Lanka Electrical and Mechanical Engineer (SLEME) தயாரிக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.20200924 uni 1
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் குறித்த கவச வாகனங்கள் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள பின்தங்கிய
பகுதிகளில் பணிபுரியும் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டின் நிமித்தம் உத்தியோகபூர்வமாக இப்புதிய கவச வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
தற்போது மாலியில் 20 அதிகாரிகள் மற்றும் 223 இராணுவச் சிப்பாய்கள் உட்பட 243 ஐ.நா. இலங்கை அமைதிகாக்கும்
படையினர் மாலி அமைதிகாக்கும் படை அமைப்பில் பணியாற்றுவதுடன், 65 வாகனங்களும் சேவையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புதிய கவச வாகனங்களானது ஐக்கிய நாடுகள் பாதுகப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்தியப் பிரதமருக்கும் இலங்கை பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று 2020.09.26 இடம்பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பிரதமர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
காணொளி மூலம் நடத்தப்பட்ட முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின்போது இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்திய பிரதமர் கூறினார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான கட்சி பெற்ற பாரிய வெற்றி, இந்திய பொதுத்
தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தான் பெற்ற வெற்றிக்கு சமமானது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான
ஒத்துழைப்பிற்கு இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு
கிட்டியுள்ளதாகவும், அது தொடர்பில் இரு நாட்டு மக்களும் புதிய எதிர்பார்ப்புகளுடன் எம்மை நோக்கி அவதானித்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விரிவான கலந்துரையாடலொன்றில்
ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது இருதரப்பு உறவு மற்றும் பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையினதும், இந்தியாவினதும் பாதுகாப்பு துறை, வணிக தொடர்புகள் என்பவை தொடர்பான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் இருதரப்பு
ஒத்துழைப்பு பேணப்பட்டுவரும் ஏனைய பிரதான துறைகளினது ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சம்பந்தமாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
காணொளி மூலமான கலந்துரையாடலை ஆரம்பித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்,
“நான் இந்த மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எந்நாளும் போன்று உங்களை இந்தியாவிற்கு நாம் மிகுந்த
அன்புடன் வரவேற்கிறோம். பாரத தேசத்திற்கு விஜயம் செய்யுமாறு நான் உங்களுக்கு எந்நாளும் அழைப்பு விடுக்கிறேன். இந்த
கலந்துரையாடலை இவ்வாறு மேற்கொள்ள கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் எனது அழைப்பை ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமை குறித்தும் நான் இந்த சந்தர்ப்பத்தில்
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அத்துடன் பாராளுமன்றத்தில் இவ்வாறானதொரு மக்கள் ஆணையை பெற்று கொண்டுள்ளமை தொடர்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றியின் ஊடாக மக்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வெற்றி இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த பாரிய வாய்ப்பாகும். நம் இருவரதும் நாட்டு மக்கள் புதிய கனவுகளுடன், உத்வேகத்துடன் எம்மை நோக்கி
அவதானித்து கொண்டிருக்கின்றனர். எமக்கு அனைத்து தரப்பினரதும் முன்னேற்றத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியும். கல்வி, விவசாயத்துறை, வணிகம் போன்று பல்வேறு துறைகளில்
எம்மால் முன்னோக்கி செல்ல முடியும். உங்களது அரசாங்கத்தினால் அடிப்படை பொருளாதார திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.
இங்கு உரையாற்றிய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தாவது,
“இந்த மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று பிரதமராக பதவியேற்ற பின்னர் நான் பங்கேற்ற முதலாவது மாநாடு இதுவாகும்.
நாம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காவிட்டாலும், எம் இருவருக்கும் இடையிலான நட்பு, சகோதரத்துவத்துவ உறவு அதே நிலையில் இருக்கின்றது என நான் கூறிக் கொள்கின்றேன்.
உலகம் முகங்கொடுத்து கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று நெருக்கடி ஆரம்பித்த சந்தர்ப்பம் முதல் இந்தியா அயல் நாடுகளுக்காகவும்,அந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாம் பாராட்டுகின்றோம்.
சார்க் நாடுகளின் பிரதான நாடு என்ற வகையில் சார்க் வலயத்தின் அனைத்து தலைவர்களுடனும் இந்தியா இதேபோன்று தங்களது கருத்துக்களை பரிமாற்றி கொண்டது.
ஜனாதிபதி தேர்தல் போன்றே பொதுத் தேர்தலிலும் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது. அதேபோன்று அனைத்து இனத்தவர்களுக்கும் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.
எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு ஏற்ப நாங்கள் கொவிட்-19 தொற்றை வெற்றிகொள்ள எடுத்த நடவடிக்கை தொடர்பாக பெருமை கொள்கிறோம்.
மிகவும் கடினமான சந்தர்ப்பங்களிலும் நாம் எமது மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கை எடுத்தமை பற்றி கூற வேண்டும்.
அதேபோன்று எவ்வாறான மோசமான நிலை ஏற்பட்டாலும் பொதுமக்களின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியவசிய தேவைகளை உச்ச அளவில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதபோன்று கொவிட் வைரஸ் நிலைமையிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, ஓய்வூதியம் பெறுவோருக்கு, விசேட தேவையுடையோருக்கும், நாளாந்த கூலி பெறுவோறுக்கும், விவசாயிகளுக்கும் நிதி நிவாரணங்கள் பெற்று கொடுத்தோம்.
வெளிநாடுகளிலிருந்த இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், அந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து சிறப்பாக நிர்வகித்தோம்.
கொவிட் வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை உலக சுகாதார அமைப்பினால் பாராட்டப்பட்டது.
சர்வதேச கடல் மார்க்கத்துடன் அண்மித்து காணப்படுவதால் ஏற்படும் பாதுகாப்பு, தேச எல்லை தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்க எமது நாடுகள் நெருக்கமாக பணியாற்ற வேண்டும்.
கொவிட்-19 உலகளாவிய தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் இந்திய சந்தைக்கு பொருட்கள் ஏற்றுமதியின் போது இலங்கையின் உற்பத்தி துறைகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவது உகந்ததாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். இது இரு நாடுகளினதும் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்.
சமய, கலாசார விடயங்கள் சமமாக காணப்படும் எமது நாடுகளுக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் இணையில்லாத தோழமையை அதே நிலையில் கொண்டு செல்லவும் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.
எமக்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான தொடர்புகளை போன்றே, எமது முற்பட்ட நாகரீகத்திலிருந்து பெறப்பட்ட பொறுமை, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அனைத்து சவால்களையும் வெற்றி கொள்ள முடியும் என நம்புகிறேன். என தெரிவித்தார்.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, எம்.யூ.எம்.அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஜீவன் தொண்டமான், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உட்பட அரசின் உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்
மணல் கொள்ளையர்களை மடக்கிய போலீஸ் – வாகனங்கள் பறிமுதல்
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சட்டவிரோதமான
முறையில் மண் ஏற்றி வந்த இரு வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அம்பாறை பிரதேசத்தில் இருந்து கனரக வாகனங்களில் சட்டவிரோதமான
முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றி வருவதாகப் பொலிஸாருக்குக்
கிடைத்த தகவலையடுத்தே இந்த வாகனங்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதோடு, வாகனத்தின் சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது
பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு – ஒருவர் கைது
40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை மோட்டார் சைக்கிளில்
கொண்டு சென்ற நபர் ஒருவர், தலுவ பிரதேசத்தில் வைத்து கைது
செய்யப்பட்டுள்ளாரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், நாகவிலு பிரதேசத்தைச் சேர்ந்தவர்
என தெரிவித்துள்ள பொலிஸார், புத்தளம் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தங்கமானது இன்று (27) இரவு கற்பிட்டி ஊடாக, இந்தியாவுக்குக்
கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார்
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி
இலங்கையில் புள்ளிகள் குறைந்தால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து- கோட்டா அதிரடி
எதிர்வரும் நாள்களில் சாரதிகளுக்கு விசேட புள்ளி வழங்கும் முறையை
அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்புக்க பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இதன்போது 24 புள்ளிகள் சாரதிகளுக்கு வழங்கப்படுவதுடன், சாரதிகளால்
முன்னெடுக்கப்படும் தவறுகளின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் 24 புள்ளிகள் குறைவடைந்த பின்னர், சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு தடைசெய்யப்படும் என்றார்.
பின்னர், அந்த சாரதிகள் உடற்பயிற்சி சோதனையை முடித்ததும் அவர்களுக்கு
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றார்.
பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்
பிரிட்டனில் போலீசார் மக்கள் மோதல் – போலீசார் காயம்
பிரிட்டனில் இரண்டாவது முறையாக அடித்து பூட்டும் நிகழ்வு ஏற்படுத்த
பட்டுள்ளது ,இதனை அடுத்து
தற்பொழுது மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
சுமார் பதின் ஐந்தாயிரம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் ,.இதன்
பொழுது மக்கள் மற்றும் பொலிசாருக்கு மோதலில் ஒரு போலீசார்
படுகாயமடைந்துள்ளார் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இந்த போராட்டம் Trafalgar Square பகுதியில் இடம் பெற்றுள்ளது
பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ
பிரிட்டனில் பல்கலைகழகம் ஒன்றில் 127 பேருக்கு கொரனோ
பிரிட்டன் Manchester Metropolitan University யில் கல்வி கற்ற மாணவர்களில்
127 பேருக்கு கொரனோ உள்ளது சோதனையின் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
குறித்த பகுதியில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து அந்த பகுதி
லக்கடவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 1.700 பேர் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் ,
இது போல பிற பல்கலை கழகங்களில் சோதனை நடத்த திட்டமிட்ட படுகிறது
மக்களே அவதானம் தற் பொழுது ஐம்பத்தி நான்கு விகிதம் இந்த நோயானது
அதிகரித்துள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,குளிர்கால நிலையில் நோயின் தாக்குதல் அதிகரித்துள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் பாடசாலையில் மரத்தில் இருந்து விழுந்து சிறுமி பலி
பிரிட்டன் Newcastle பகுதியில் உள்ள ஆரம்ப பாசாலை ஒன்றில்
கல்வி கற்ற
ஆறுவயது மாணவி ஒருத்தி அங்கிருந்த மரத்தில் ஏறி வீழ்ந்து
பலியாகியுள்ளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் ,
ஆசிரியர்களின் கவன குறைவின் செயல் பட்டால்
இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கிறது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது

மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video
மனைவியுடன் சண்டை – டவரில் குதிக்க முயன்ற நபர் – video
இந்தியா மத்திய உத்தர பிரேதச பகுதியில் நபர் ஒருவர் மனைவி இருக்கும்
பொழுதும் கணவனை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ,
இதனால் முதல் மனைவிக்கும் இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது ,
இதனை அடுத்து அவர் தொலை கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்திட
முயன்றார் ,
அவவாறான் காட்சி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை அதில் இருந்து இறக்கி சமரச படுத்தி அழைத்து சென்றுள்ளனர்
ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ
ஸ்பைடர் மான் போல சுவரில் பறக்கும் இந்தியா சிறுவன் – வீடியோ
இந்தியாவை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவர் ஸ்பைடர் மானை
போல சுவரில் ஏறி தாவும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
அவ்விதமான காட்சியை இப்பொழுது நீங்கள் பார்க்கலாம்
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
ரயில் சக்கரத்துக்குள் சிக்கிய 2 வயது சிறுவன் – மெய் நடுங்க வைக்கும் வீடியோ
இந்தியாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் ரயில் சக்கரத்தில்
சிக்கியுள்ள காட்சி ஒன்று உலக ஊடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இயந்திர சக்கரத்துக்குள் சிக்கிய நிலையில் சாரதியின்
கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்ட நிலையில் அந்த சிசு காப்பாற்ற பட்டுள்ளது ,
இயந்திரம் இயக்க பட்டு இருந்தால் சிறுவன் உடல் சிதறி பலியாகி இருப்பான் .
கடவுளின்செயலினால் அவன் அதற்குள் இருந்து காப்பாற்ற பட்டுள்ளான் .அந்த காட்சிகள் இதோ பாருங்கள்
நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video
நடுவர்களை போட்டு தாக்கும் ,ஆண்கள் பெண்கள் – சிரிக்காம பாருங்க – video
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நடுவர்களுடன் நடத்தும் சண்டைகள் ,அவர்களை திட்டும் நிகழ்வை பாருங்கள்
இது நிகழ்ச்சிக்காக செய்யப்படு பவையா அல்லது லொள்ளுக்கா செய்யப் படு [பாவையா என்பது தொடர்பில் தெரியவில்லை







