Posted in இலங்கை செய்திகள்

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

அரசியல் இராஜதந்திர வழியில் தற்போது முன்னகர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்ட நிலையில், தியாகதீபம் திலீபன்

மக்கள் எழுச்சியின் குறியீடாக இருப்பதோடு, இன்றைய தலைமுறைக்கு இரண்டு செய்திகளை அவனுடைய நினைவு

அறைகூவியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 33ம் நினைவேந்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய

நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்;டம் பெரும் நெருக்கடியினை சந்தித்திருந்த காலகட்டத்தில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினை பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழீழ

விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய எடுத்த முயற்சிகளை, லெப் கேணல் திலீபன் அகிம்சபை; போராட்டத்தின்

உச்சவடித்தினால் , தமிழீழ போராட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவனாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளான்.

உயிரைக் கொடுத்து போராடும் வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உரியதாக இருந்தது. 2009,மேக்கு பின்னரான இக்காலத்தில்

உயிர்த்தியாகம் நிறைந்த போராடும் நிலை இல்லாது போயுள்ளது.இருப்பினும்
திலீபன் காட்டிய வழியில்

1 – மக்கள் மீது முன்வைத்து போராடுங்கள்

2 – எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதிஉச்ச கட்ட அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்து தயாராக இருங்கள்

என்ற இரண்டு செய்தியானது, மக்கள் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்துக்கு விசுவாசமாக, உண்மையாக இருந்து

போராடுமாறு, தியாக திலீபனின் வாழ்வும் ஈகமும் இன்றைய தலைமுறைக்கு அறைகூவல் விடுக்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து நாம் தமிழர்கட்சி செந்தமிழன் சீமான், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, (கனடா) ரொரண்ரோ நகரசபை முன்னாள்

உறுப்பினர் நீதன் சான் உட்பட வட அயலர்லாந்து கட்சித் தலைவர் மற்றும் அமைப்பு பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய வணக்க நிகழ்வு இடம்பெற்றிருக்க, அமெரிக்காவின் நியு ஜெர்சி, பிரான்ஸ்,

பிரித்தானியா, ஜேர்மனி உட்பட பல இடங்களில் இருந்து வணக்க நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருந்தன.

கவிதைகள், பாடல்கள் இடம்பெற்றிருந்ததோடு, தியாகதீபன் திலீபன் உண்ணாவிரதகளத்தில் பங்காற்றியிருந்த முன்னாள் போராளி சிறி அவர்கள் அக்கால நினைவுகளை மீட்டிருந்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வு photo

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வின் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம்; என்ற தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

நேற்று நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்

வாழும் உறவுகளும் அதேபோல நெடுந்தீவு மண்சார்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள நெடுந்தீவின் உறவுகளும் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்

குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி கல்வி பொருளாதாரம் போக்குவரத்து ஆவணப்படுத்தல் குடிநீர் தொடர்பிலும் ஏனைய

பல்வேறு தேவைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்தின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் ஒன்று கூடி தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும்

ஆதரவுகளையும் வழங்கியிருந்தனர் இதில் அரசியல் கட்சி வேதங்கள் இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதத்தலைவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பிரதேச சபை

உறுப்பினர்கள் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நேற்று காலை பல்வேறு பிரதேசங்களில் இருந்து நெடுந்தொகை மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவு நோக்கி பயணித்த உறவுகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் எதிர்காலத்தில்

இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் அதிகளாவிலானோர் தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனின் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற நூல்
தெல்தோட்டையில் வெளியீடு

குறிஞ்சி வெளியீட்டில் தெல்தோட்டை கலாநிதி க.பிரபாகரனின் “அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற உயர்தர புதிய

பாடத்திட்டத்திற்கு அமைவான நூல் வெளியீடு தெல்தோட்டையில் நடைபெற்றது.

இந் நூல் வெளியீட்டு விழாவில் சமைய தவைவர்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக விரிவுரையாளர்கள்

பாடசாலைகளின் அதிபர்கள் அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட புத்திஜீவிகளும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உயர்தர வகுப்பில் பல்கலைகழக மட்டங்களில் அரசறிவியல் ஒரு பாடமாக

கற்பொரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற வகையில் கல்விக்கு மாத்திரம் அன்றி நடைமுறை வாழக்கைக்கும் அரசியல் அறிவு அவசியப்படுகின்றது

இலங்கையை பொருத்த வரையில் தமிழ்மொழி மூலமான அரசியல் நூல்கள் மிக அறிதாகவே காணப்படுகின்றது சில நூல்கள்  கடினமானமொழி நடையிலும் மிகைப்படுதப்பட்டதாகவும்

காணப்படுகின்றன. பெரும்பாலனோர் இவற்றை வாசித்து பொருளறிந்துக் கொள்ள சிரமபடுகின்றனர். இவ்வாறான நிலையில்

அரசியல் கற்பவர்கள்  இலகுவில் கற்றுக் கொள்ள இந்த நூல் வெளியீடு செய்யப்ட்டுள்ளது

அரசறிவியலில்  20 வருட அனுபவம் கொண்ட கலாநிதி க.பிரபாகரின் வண்ணத்தின் வெளியீடு செய்த இந்த புத்தகம்

உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைகழக வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் சட்ட மாணவர்களுக்கும்

முதுமாணி மாணவர்களுக்கும் அரசறிவியலை கற்ற விரும்பும் அனைவக்கும் உதவியாக இருக்கும்.

Posted in சினிமா

அனுஷ்கா பந்தா இல்லாத நடிகை – மாதவன்

நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.அனுஷ்கா, மாதவன்மாதவன், அனுஷ்கா நடிப்பில்

உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடிகர் மாதவன், பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது: “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு

அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில்

இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு. 
அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு

வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார். சினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக

நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.

சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே

தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.
ஓடிடி-யில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓடிடிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும்?

என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.” இவ்வாறு மாதவன் கூறினார்.

Posted in சினிமா

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

தமிழில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த முமைத்கான் மீது கார் ஓட்டுநர் ஒருவர் கார் வாடகை தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்
முமைத்கான்
மும்பையைச் சேர்ந்த நடிகை முமைத்கான், இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில்

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தனது கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில்

இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

கார் ஓட்டுநர் ராஜூ தெரிவிக்கும் போது, முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8

நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-த்தை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

முமைத்கான்

முமைத் கான் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம்

செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார். தன்னைப்போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக்கூடாது

என்பதற்காகவே இதை வெளியில் சொல்வதாகவும் கார் ஓட்டுநர் ராஜூ தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Posted in உலக செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட

உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மைசூரு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, கொப்பல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர்,

பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது உங்களது மாவட்டங்களில்

கொரோனா பரவலை தடுக்க முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, மந்திரி சுதாகர் உத்தரவிட்டார். இந்த

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது

இல்லை. முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியாக அணிவது இல்லை. இதனால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

பெங்களூரு நகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும்

சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல்

செய்து உள்ளோம். நாளை(இன்று) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முகக்கவசம் என்பது வாய், மூக்கை மறைப்பதற்காக அணியப்படுவது தான். ஆனால் சிலர் மூக்கு, வாய், கன்னத்தின் கீழ்

முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது முகக்கவசம் அணியாததற்கு சமம் தான். அவர்களுக்கும் இருந்தும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது

பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது

களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு, பொதுப் போக்குவரத்து

பஸ்ஸில் பயணம் செய்த, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய

பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை, அளுத்கம பொலிஸார் இன்று (30) கைதுசெய்துள்ளனர்.

பஸ்லில் பயணம் செய்யவாறே, ​ பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு

அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி,

பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,

சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை

கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை

பிரபல பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து

வருவதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேற்படி 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் மோசம்

இலங்கையில் மனித உரிமைகள் மோசம்

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ

குட்டேரஸ், இலங்கை தொடர்பான கடுமையான க​வலைகளையும் முன்வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதில், ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை மற்றும் ஜெனீவாவில், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான

இலங்கையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து

சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத்

தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை

அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான விடயங்கள் உடனடியாக

நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார். குறித்த விடயங்களுக்கான பதிலை இலங்கை அரசாங்கம்

உடனடியாக வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில்

அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல முறைப்பாடுகள் மீண்டும் கிடைத்துள்ளனவென, தனது

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழல் மோசமான காலப்பகுதி என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை

இதுதான் உண்மை என தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (30)

புதன்கிழமை நாவற்குடா இந்து சமய கலாசார மத்திய நிலைய கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 46 இந்து ஆலயங்களுக்கு 45 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபா நிதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது வழங்கினார்.

இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் ,இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக்

கொண்டிருக்கின்றோம். நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டுக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாத

ஒருவர் ஒரு சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்றவர் இதுவே யதார்த்த பூர்வமான உண்மை. அதனாலேதான் எனது

மாகாணம் எனது மாவட்டம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் எமது மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டு போகின்றது, அதற்கு மிக பிரதான காரணகர்த்தாக்களாக அமைந்தவர்கள், அமைந்து கொண்டு இருப்பவர்கள் கடந்த காலம் முதல் தற்காலம் வரை எமது தமிழ் அரசியல் வாதிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.

58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் 38.6 வீதமாக குறைந்துள்ளனர். ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள். எல்லைப்புறங்களில் உள்ள பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன,

கடந்த காலத்தில் 13 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கரை வருடங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னின்று போராடியவர்களுள் நானும் ஒருவன்.இதேபோன்று என்னை சார்ந்தவர்களுக் இதில் ஈடுபட்டனர். ஒரு இனத்தினுடைய ஒரு சமயத்தினுடைய கலை, கலாசார பண்பாட்டு அம்சங்கள் மனித விழுமியங்கள் மறுக்கப்படும் பொழுது அதற்கு குரல் கொடுப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும். அதை பாதுகாப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்காக போராடுபவர்களாக நாங்கள் மாற வேண்டும்.

நாடளாவிய றீதியில் இந்து ஆலயங்களையோ கிறிஸ்தவ ஆலயங்களையோ கட்டுவதற்கு அப்பால் எம் சார்ந்த சமூகத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவ்வாறு கட்டி எந்த பிரயோசனமும் இல்லை.

அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை சென்று பார்த்தால் இந்து ஆலயங்கள் மட்டும்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுற்றி தமிழர்கள் வாழ்ந்ததற்கு எந்த அடையாளங்களும் இல்லை, ஏன் அந்த பகுதியில் இருந்த மக்களின் இருப்பை பற்றி சிந்திக்கவில்லை, சில ஆலய நிருவாகங்கள் அரசியலையே நடத்துகின்றது.

என்னுடைய அரசியல் வாழ்வில் எந்தவொரு இந்து, கிறிஸ்தவ ஆலயத்தையும் எனது அரசியலுக்காக பயன்படுத்தியதே இல்லை, எமது அரசியல் பயணத்தில் எதிர்காலத்திலும் நாம் மதஸ்த்தலங்களை பயன்படுத்தப் போவதுமில்லை காரணம் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்

சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்

எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான

சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச

சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார.

வாழ்த்துச் செய்தி

            எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் 

விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். பிள்ளைகளின் உள, உடல், 
ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் 

முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.

            ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை 
மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது என நான் நம்புகிறேன். ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும்.

            உள, உடல். பலவீனங்களிலிருந்து விடுபட்ட பிரஜைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுவே எனது ஒரே எதிர்பார்ப்பாகும். அத்தகையதொரு நாட்டிலேயே சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான உறுதியான உத்தரவாதம் இருக்கும். இத்தகையதொரு தேசத்தின் நன்மைகளை அனுபவித்து மகிழும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு உங்களது பிள்ளைகளின் சிறு பராயத்தை நீங்கள் மிகுந்த பொறுப்புடன் நெறிப்படுத்துவீர்களென நான் எண்ணுகின்றேன். அப்போதுதான் 'எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்' என்ற இவ்வருட உலக சிறுவர் தின கருப்பொருளை யதார்த்தமாக்க முடியும்.

கோட்டாபய ராஜபக்ஷ

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ

வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ

அல்பேனியா இராணுவத்தினரால் எதிரி நாட்டு இராணுவத்தின் ஏவுகணை

வண்டிகள் மற்றும் அவர்கள் எடுத்து வந்த ஆயுத வாகன தொடரணிகள்

என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம்

தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளன

அவ்விதமான காட்சி பதிவே இதுவாகும் ,தற்போது அங்கு உக்கிர சமர்

இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் எல்லையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் விசேடமாக குவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபத்தி

ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த தினத்தை அளவான மக்கள் பலி இன்று இடம்பெற்றுள்ளது என அரசு

அறிவித்துள்ளது ,எனினும் அரசு கூறுவது போன்ரு உயிர் பலிகள் அதிகம்

என மக்கள் கருத்துக்கள் உள்ளது ,இவ்வாறு அதிக தொகையில் மக்கள்

பலியாகி வரும் நிலையில் பாடசாலைகளை அரசு மூட மறுத்து வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

வரும் பாடசாலை விடுமுறையுடன் மீள பாடசாலைகள் அடித்து பூட்ட

படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,சில பாடசாலைகளில் நோயாளர்கள்

உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையிலும் அவை அடித்து மூட மறுக்க பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்

எதிர் வரும் வெள்ளி முதல் திங்கள் வரையான நாட்களில் அதிக குளிர்

மற்றும் புயல் இடம்பெறும் எனவும் இவ்வேளை மேலும் அதிக மக்கள் நோயினால் பாதிக்க படுவது அதிகம் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு

பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு

பிரிட்டனில் அதிக பிரிட்டன் பூர்வீக குடிகள் வாழும் பகுதியான லீவர் பூல் ப

குதியில் சில வாரங்களில் கடுமையான கொரனோ நோய் தோற்று இடம்பெற்றுள்ளது

இதனை அடுத்து இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சாராயம் விற்க தடை

செய்ய பட்டுள்ளது ,அத்துடன் பத்து மணிக்கு பின்னர் அணைத்து கடைகளும் அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது

இதே நிலை மூன்று மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது ,இதே போன்ற நிலை லண்டன் பகுதிக்கும் விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

மக்களுக்கு அரசு விடுவிக்க பட்ட உத்தரவுகளை பின்பற்றும் படி வேண்ட படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்

லண்டனில் தங்கியுள்ள அகதிகளை தனித்தீவில் அடைத்து வைக்க நடவடிக்கை – அதிர்ச்சியில் அகதிகள்

பிரிட்டன் நாட்டுக்குள் சர்வதேச அளவில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் – அகதிகள் அதிக அளவில் நுழைந்து வருகின்றனர் ,

தற்போது கடல்வழியாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகள் நாள் தோறும்

நுழைந்து வருகின்றனர் ,இதனை தடுக்கும் முகமாக தற்பொழுது பிரிட்டனில்

இருந்து நான்காயிரம் மைல்கல் தொலைவில் உள்ள அத்திலாந்திக் St Helena, part

பகுதியில் உள்ள தீவு ஒன்றில் இவர்களை தங்க வைக்கும் ,சிறை படுத்தும்

நடவடிக்கையை குடிவரவு குயகழ்வு அமைச்சு அமைச்சர் பட்டேல் மேற்கொள்ளவுள்ளார்

இதற்கான வேண்டுதல் அரசிடம் விடுக்க பட்டுள்ளது

இவை அவுஸ்ரேலியாவில் அகதிகளை தீவில் அடைத்து வதைகள் செய்வது

போன்ற கொடிய செயலுக்கு ஒப்பானதாகும் ,இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரே அமைச்சராக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இவரது இந்த நடவடிக்கை அகதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இவ்வாறு ஏற்பட்டால் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்க படும் நிலை தோன்றும் என்பது கவனிக்க தக்கது

மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவராதது இந்த நடவடிக்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது

பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது

ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல்

லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே

அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர், பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.

‘உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது. நாளைக்கு அலுவலகத்தில் சனம் நிறைய

இருக்கும். ஆகையால், வீட்டுக்கே கொண்டுவந்து ஆவணத்தை தருகின்றேன்.

ஆவணத்துடன் முத்தமொன்றையும் தருகின்றேன். பதிலுக்கு முதலில்

முத்தம் வேண்டும்” என, அப்பெண்ணிடம் கிராமசேகவர் கேட்டுள்ளார்

என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்தனர்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மஹிந்த

ராஜாக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. இலங்கையில் பசு வதையை தடை செய்தல்

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும்

பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும்,

இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை

மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை

ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட

பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை

கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால்

நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்

Posted in இலங்கை செய்திகள்

வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை

இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள்

இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின்

ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின்

அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497

பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428

பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்தொற்று

எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை

பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர்

விகிதம் 83.33 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்

20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.29 தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி

மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?

பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?

பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில்

நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?
பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.

ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு

கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.

பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை

நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.