Tag: திருடிய தையல் இயந்திரங்களை
Posted in இலங்கை செய்திகள்
திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்
Author: நலன் விரும்பி Published Date: 28/09/2020 Leave a Comment on திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்
திருடிய தையல் இயந்திரங்களை மீண்டும் வைத்த திருடன்
திருடிய மூன்று தையல் இயந்திரங்களை திருட்டுப் போன இடத்தில் திருடன் மீண்டும் வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை விசேட தேவையுடையோர்
பாடசாலையில் இருந்த மூன்று தையல் இயந்திரங்களும் திருடப்பட்டிருந்தன.
இதனை அறிந்து கொண்ட பாடசாலை நிர்வாகத்தினர் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சிலரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு பொலிஸாரிடம்
ஒப்படைத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
குறித்த தகவலை அறிந்து கொண்ட திருடன், திருடப்பட்ட மூன்று தையல்
இயந்திரங்களையும் திருடிய இடத்தில் மறுநாள் வைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






