Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் மீது பொலிசார் தாக்குதல் video

இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது


பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான


ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய தினம்


தாக்குதல் மேற்கொண்டுள்ளார்

ஜெயக்குமார் ஒரு முன்னாள் போராளி ,மாற்றுத்திறனாளி என்பதுடன் அவர் ஒரு
சந்தை வர்த்தகரும் கூட

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தந்து மரக்கறி வாணிபத்தில்


வியாபாரம் செய்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு
உறுப்பினர் ஜெயக்குமார் மீது சிவில் உடையில் இருந்த பொலிஸ் உப


பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான ஜெசிந்தன்


இழுத்து விழுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார்

நேற்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு விஜயம் மேற்கொண்ட ஜெசிந்தன்


தலமையிலான பொலிஸ் குழுவினர் சந்தை வர்த்தகர்களிடம் முகக்கவசம் அணியுமாறு


அறிவுறுத்திச் சென்றிருந்தனர் மீண்டும் 5 நிமிடத்தில் வந்த அவர்கள்
ஜெயக்குமாரிடம் ஏன் முகக்கவசம் அணியவில்லை என கேட்டுள்ளார்கள்

நண்பகல் என்பதால் நுகர்வோர் அதிகமாக இருக்கிறார்கள் கடையை இப்படியே


விட்டு செல்ல முடியாது அதனை விட ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி எனது


உதவியாளர் வருகைக்காக காத்திறுக்கின்றேன் என பதிலளித்துள்ளார்

உனக்கு கடைக்கு போய் வாங்குவதற்கு என்ன என்று கேட்டவாறூ சிவில் உடையில்


இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாற்றுத்திறனாளியான ஜெயக்குமா ரை இழுத்து
வீழ்த்தி தாக்கியுள்ளார்

தாக்குதலுக்குள்ளான தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுஉறுப்பினரும் சந்தை


வர்த்தகருமான ஜெயக்குமார் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபர்


காரியாலயத்திலும் மனித உரிமை ஆணைக் குழுவிலும் தனது முறைப்பாட்டை பதிவு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தாக்குதல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

பிரிட்டனில் வகுப்பறைகளில் மாணவர்களின் பிறந்த நாள்

நிகழ்வின் பொழுது ,அவர்களுக்கு வாழ்த்து பாட தடை விதிக்க பட்டுள்ளது ,

இவ்வாறான செயல் ஊட்டம் மூலம் தற்கால ரீதியில் பரவி வரும் நோயின்

தாக்குதல் அதிகரித்து வரும், நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி 15,166 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் 81 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 2400

க்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுகிறது .

மேலும் எதிர்வரும் வாரத்தின் இருந்து நாள் ஒன்றுக்கு 40

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து வரும் குளிர்கால நிலவரத்தை அடுத்து மேலும் நோயின் தாக்குதல்

அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நல்லதை செய் …!

நல்லதை செய் …!

கம்பெடுத்து வம்பளந்து
கண்டதென்ன கரிகாலா …?
செம்பெடுத்து நீர் கொடுத்து
செவந்து போனாய் பேரழகா

உன் படைப்பை நீ படைத்து
உலகை ஆளு நீ எடுத்து
செம்படையை நீ அமைத்து
சென்று வா போரெடுத்து

அண்டமெல்லாம் உன்னை கண்டு
அஞ்சும் படி செய்
ஆகாய பந்தலிலே
அறத்தை நாட்டி வை

நீ செய்த சேவைகளை
நீள் அடுக்கி வை
நீண்ட சீன பெரும் சுவராய்
நீ பெருக்கி வை

எவன் தருவான் உன் ஆட்சி
என்று சொல்ல வை
இது தானே வேண்டும்
இன்றெழுதி வை …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -10-10-2020

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காலம் உன்னில் காறி உமிழும் ..!

காலம் உன்னில் காறி உமிழும் ..!

ஓடி நடந்தவனின்
ஒரு கால் உடைத்தவரே
வலியோடு துடிக்கையில
வாழ்வு கொடுக்கலையே

ஏதொன்றும் கேளாது
ஏளனம் செய்பவரே
காரணம் புரிந்தது
கரிகாலன் இல்லையோ …?

உடல் தாங்கும் கால் ஒன்றின்
உயர்வு புரியாது
விலங்கிட்டு நடப்பவரே
விடியல் வெடிக்கும்

சிறையிட்டு வதையிட்டார்
சிறை படும் காலத்தில்
முளை விட்டு வான் எழும்
முன்னைய பரம்பரை

கிளை விட்டு நிழல் இட்டு
கீழான வாழ்வியலை
பூகோள அரசியல்
புதிதாக மாற்றும்

விதைகள் இப்போதே
வீழ்ந்து முளைக்கிறது
முளைகள் கண்விழிக்க
முன்னேறி கால் வைக்க

நடந்தவன் ஓடுவான்
நானிலம் நமதாகும்
அகவை இருபது
அரியணை பகிரும்

எழுந்திடார் என்றே
ஏளனம் செய்தவர்
வீழ்ந்திடும் காலத்தில்
விடுகதை உமிழும் .!

வன்னி மைந்தன்
ஆக்கம் -12-10-2020

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்

இந்தியா தமிழகத்தில் எழுபத்தி ஐந்து வயதன ஒன்பது பிள்ளைகளின்

தாய் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளினால் வீட்டை விட்டு துரத்தியடிக்க பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது

அரசு வழங்கும் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து மக்கள் வழங்கும் உணவை வைத்தும் தனது வாழ்வை ஒட்டி வருகின்றார் .

தமது மனைவிகள் மற்றும் ,கணவன்களுடன் இனைந்து தனது வீட்டை

அபகரித்து அங்கிருந்து துரத்தியடித்து விட்டதாக வயதான தாயார் தெரிவித்துள்ளார்

இது குறித்து காவல்துறையிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கிய

புகாரினை விசாரிக்கும் படி கோரிய நிலையில் ,மேற்படி விடயங்கள்

ஊடகங்களில் பரவியத்தை அடுத்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணைகளை

மேற் கொண்டு வருவதுடன் தாயாரை கொடுமை படுத்திய குற்ற சாட்டின் கீழ் பிள்ளைகள் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் காவல்துறை சிப்பாய் ஒருவர் நபர் ஒருவரை

பின் தொடர்ந்து துரத்தி சென்றனர் ,அவ்வேளை அவரை மடக்கி பிடிக்க

தமது காரினை வீதியில் விட்டு விட்டு குறித்த நபரை துரதியுள்ளனர் ,ஆனால்

திருடன் ஒருவன் போலீஸ் காரை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்

காவல்துறை காரை திருடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

,தொடர்ந்து திருடர்கள் எதாவது வில்லங்க தனம் செய்ய கூடும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே யாக்கிரதை ,தொடர்ந்து இது தொடர்பான விடயத்தை தம் அறிய

தந்த வண்ணம் இருப்போம் என தெரிவிக்க பட்டுள்ளது ,இவர்கள் சிலவேளை

இந்த காரினை தீவிரவாத செயலுக்கும் பயன் படுத்த கூடலாம் ,காரில்

காவல்துறை உடை இல்லாது யாராவது அந்த காரில் இருந்தால் உடனே பொலிசாருக்கு தெரிய படுத்துங்கள் ,போலீசுக்கே ஆப்பா ..? செம திருடன்யா

Posted in இலங்கை செய்திகள்

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் பதவி உ யர்வு

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தற்பொழுது

514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் தங்கள் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

அதன்படி, நான் இராணுவத் தளபதியாக பதவியேற்றதிலிருந்து 1897 அதிகாரிகள்

மற்றும் 41910 இராணுவ சிப்பாய்கள் அவர்களின் அடுத்தடுத்த பதவிகளில்

உயர்த்தப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 தொடர்பான உயர் நீதிமன்ற நிலைபாடு சபாநாயகரிடம்

20 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலத்திற்கு எதிராக தாக்கல்

செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான இரகசிய நிலைபாடு தனது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு சென்று அதனை திறந்து பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில்

குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான

பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு நிலையில் இந்த நிலமை

தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை

எடுப்பதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

வரணி பகுதி கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் இன்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து

பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிணற்றில்

இருந்து இன்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோணியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு


சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர்,

தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள்

நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திடீர் முடிவை அறிவித்துள்ளார். இனிமேல்

திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து

கொண்டு வாழ்வது என முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

சிம்புடன் சனாகான்

சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள்

அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் 533 பேர் பலி – 422 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் உள் நாட்டு மோதல்களால்

சிக்கி கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 533 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 422 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,ஆப்கான் இராணுவத்திற்கும்

,தாலிபான் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்களில்

சிக்கியே இவர்கள் பலியாகியுள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்

வெடித்து சிதறிய வெதுப்பகம் =- கருகி இறந்த நால்வர்

லெபனான் தலைநகர் பேரூட் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றின்

டீசல் தாங்கி வெடித்து சிதறியதால் அந்த வெதுப்பகம் முற்றாக

பற்றி எரிந்தது ,இதனால் அங்கு பணியாற்றிய நால்வர் தீயில் கருகி பலியாகினர்

இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வெடித்து சிதறிய வெதுப்பகம்
வெடித்து சிதறிய வெதுப்பகம்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்

சிரியாவில் இருந்து தமது இராணுவம் விலகும் – துருக்கி திடீர் குத்துகரணம்

சிரியாவில் அந்த நாட்டு இராணுவத்திற்கு எதிராக முப்பது ஆயிரம்

இராணுவத்தை துருக்கி அனுப்பி வைத்துள்ளது ,

அதமது ஆதரவு படைகளின் ஆதரவுடன் சிரியா இராணுவத்தின் மீது தொடர்

தாக்குதலை நடத்தி வருகிறது
,இவ்வாறான சமர் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது

இராணுவம் அங்கிருந்து விலகும் எனவும் ,தமக்குரிய பகுதிகளை வழங்கினால்

,அங்கு தாம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என துருக்கி அறிவித்துள்ளது

தேர்தல் வருவதை அடுத்து ,அதில் தான் தோற்று விட கூடும் என கருதும் எடகோன் இவ்விதம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in சினிமா

என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்

என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார்.

என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக்

சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை

இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ்

ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது

. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது.

செட்டில் 5 பேர்தான் இருந்தோம். நானே மேக்கப் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்தேன். இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார்.

பெண் இயக்குனர் படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஆண் இயக்குனர், பெண் இயக்குனர் என்று

பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் எல்லோரும் குரு. அவர்களை சொல்லுவதை திறமையாக செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

கல்யாணி பிரியதர்ஷன்

என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.

‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

துருக்கி எல்லையில் ஒருவர் சுட்டுக் கொன்று ஈரான் இராணுவம் வெறியாட்டம்

கிழக்கு குருதீஸ்தான் பகுதியில் இருந்து துருக்கி எல்லைவலியாக நுழைய

முயன்ற ஒருவரை ஈரானிய இராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர்

பலத்த காயமடைந்த நிலையில் அப்பாவி பொதுமகன் சிகிச்சை வழங்க

பட்ட பொழுதும் அது பயனின்றி அவர் பலியாகியுள்ளார்
சட்டவிரோத

குடியேற்ற வாசிகளும் இவ்விதம் நுழைந்து,இராணுவ சூட்டு

தாக்குதலில் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

பிரிட்டன் ஐரீஸ் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமாகியுள்ளார்

,அவரது இறுதி பிரியாவிடையின் பொழுது பலநூறு மக்கள் கூடியதுடன்

விமானத்தில் ஐரீஷ் கொடி வானில் பறக்க விட்ட படி அவரது இறுதி ஊரவலாம் எடுத்து செல்ல பட்டது ,

வானில் விமானம் வழித்துணை வழங்கி அஞ்சலிக்க, விலை உயர்ந்த கார்கள் பவனி வர குதிரையில் சடலம் எடுத்து செல்ல பட்டது

அரச விதிமுறைகளை மீறி பலநூறு மக்கள் கூடியதால் நிகழ்வு நடத்தியவர்களுக்கு தண்டம் அறவிடபட்டது

போலீசாரை புகுந்ததினால பரபரப்பட்டு ஏற்பட்டது

மக்களை காப்பாற்றும் முகமாக 15 பேருக்கு மேல் கூடிட வேண்டாம் என

அறிவுறுத்தல் விடுக்க பட்ட பொழுதும் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் கூடி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

துரோகம் …!

துரோகம் …!

பூமி அதிர்வொன்று
புகுந்தது நெஞ்சுக்குள்
இதய மாளிகை
இடிந்து போனது

சுனாமி அலையாய்
சுற்றியது நினைவு
கடல் அலையாய்
கத்தியது மனது

அத்தி வாரம்
அசைந்த போது
கார் மேகமாய்
கண்ணீர் கொட்டியது

வினாக்கள் வெடித்தன
விடைகள் கொதித்தன
அணு குண்டு
அகோரமாய் வெடித்தது

கணனி மூளைக்குள்
கறை படிந்த வைரஸ்
கொத்திய போது
கோபம் கொதித்தது

விரலின் நுனியில்
விஷம் உள்ளதை
நாவின் அசைவில்
நாடே அறிந்தது

அறுவடை நாளிற்காய்
அருகில் முளைத்ததை
காணாமல் இருந்தது
காதலின் தப்பு …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -09-10-2020

Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

வேகமாக பரவும் கொரனோ – புதிதாக 16 பேர் பாதிப்பு

இலங்கையில் மிக வேகமாக பரவி வருகிறது கொரனோ ,இவ்வேளை

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பதினாறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் ,


மேலும் பாதிக்க பட்ட இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்க

பட்டுள்ளதுடன் ,அப்பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் அடித்து பூட்ட பட்டு வருகிறது

இவ்வேளை இலங்கை எங்கும் வெளிநாட்டு சாராய கடைகள்

,காசினோக போன்றவை நடத்த 31 ஆம் திகதி வரை தடை விதிக்க பட்டுள்ளது