பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்
பிரிட்டனில் 2000 அகதிகள் பொய்யான வயது வழங்கியது விசாரணையில் அம்பலம்
பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த அகதிகள் தமது
வயதை மறைத்து குறைத்து வழங்கி வந்தது விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது
சிறகை என்ற பிரிவுக்குள் தம்மை அடக்கிட இவ்விதம் பொய்யான
வயதை அவர்கள் வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணையில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது ,
தொடர்ந்து இரண்டாயிரம் பேரிடமும் அது தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்
குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த வைரஸ் நோயின் தாக்குதல்
குறைந்து வருவதாகவும் அதனால் டிசம்பர் இரண்டாம் திகதி
லொக்கடவுன் நீக்க படுவதன் பேச்சுக்கள் வெளியிட பட்ட வண்ணம் உள்ளன
இவை இவ்விதம் நகர நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கும் அரசு
அதனால் மீள மக்களை வெளியில் நடமாட அனுமதித்து வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முயற்சிப்பதன் நோக்கத்தை காண முடிகிறது
அதற்காக நத்தார் தினத்திற்குள் நமக்கு வீடுகள் ஒன்றிணைந்து சிறப்பிக்க
அனுமதி தரப்படுகிறது என கருத்து வெளியிட பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது
போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை
போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை
இந்திய தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது 14 வயது மக்களை
கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகள் உடல் நிலையில் ஏற்பட்ட மறுதலை அடுத்து அவரை
மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது
தயார் வழங்கிய முறைப்படடினை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
14 வயது மாணவனுக்கு அகோர கத்தி குத்து – பூட்ட பட்ட பாடசாலை
Arthur Phillip High School in Parramatta, western Sydney பகுதியில் உள்ள
பாடசாலையில் கல்வி கற்று வந்த 14 வயது மாணவன் மீது சரமாரி
கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த வாலிபன் வைத்திய சாலையில்
அனுமதிக்க பட்டார் ,மேலும் பாடசாலை அடித்து பூட்ட பட்டது
,மேற்படி சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
தமிழர் பகுதியில் எழுச்சி கொள்ளும் மாவீரர் நாள்
இலங்கையில் தாயக விடுதலைக்கு போராடி காவியமான மாவீரர்களை நினைவு கூறும் நாள் இன்று
இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மாவீரர் நாள்கள் சிறப்பாகக நினைவு கூற படும்
அவ்விதம் தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகிறது
அதேபோலவே புலம் பெயர் நாடுகளில் இம் முறை மக்கள் வீடுகளில் நினைவுகூற தயராகி வருகின்றனர்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள்
நேற்றைய தினம் 491 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை
அடுத்து இலங்கையில் 19,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றை தினம் இனங்காணப்பட்டவர்களுள் 487 பேர் மினுவங்கொட
மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களுள் இத்தாலியில் இருந்தும் மூவரும் துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
யாழில் எறிகணைகள் மீட்பு – குவிக்க பட்ட இராணுவம்
அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது
காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார்.
உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழில் நீரில் மூழ்கி இரு சகோதரர்கள் பலி
யாழ்ப்பாணம் மண்டை தீவு பகுதியில் ஏழு வயது மற்றும் ஐந்து
வயதுடைய இரு சிறுவர்கள் குளம் ஒன்றில் மூழ்கி பலியான சம்பவம் இடம் பெற்றுள்ளது
குறித்த இருவர் சடலங்கள் மீட்க பட்டு விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது
ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்
ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்
ஐ.தே.கவின் உபதலைவராக இருக்கும் ருவான் விஜேவர்த்தனவே என்று ஐக்கிய
தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தான்
உறுதியாக நம்புவதாக, ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (21), ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ருவான் விஜேவர்தனவே
கட்சித் தலைவராக வருவார் என்பதில், எந்தவொரு வாதமும்
முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்
காதலித்த பெண்களின் ஆபாச படம் வைத்திருந்த காதல் மன்னன் சிக்கினார்
தமிழகத்தில் பொறியியல் படிப்பு படித்த வாலிபர் ஒருவர் முகநூல் ,மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடக பல பெண்களுக்கு காதல்
வலை விரித்து அதில் பெண்களுடன் ஆபாசமாக உரையாடி
அவர்கள் அந்தரங்க காட்சிகளை கைபேசியில் வைத்திருந்த நிலையில் சிக்கினார்
இவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்க பட்டு வந்த இளம் பெண் ஒருவர் பெற்றவர்கள் காவல்துறைக்கு வழங்கிய
தகவலின் அடைப்படையில் குறித்த வாலிபர் நகர்வுகள் கண்காணிக்க பட்டன
அதன் வழியே காதல் மன்னன் மடக்கி பிடிக்க பட்டார்
அப்பொழுது
அவர் கைபேசியை ஆராய்ந்த பொழுதே இந்த அந்தரங்க ஆவணங்கள் பலநூறு சிக்கியது
சினிமாவை மிஞ்சிய காதல் கில்லாடி இவர் தான் போல
ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி
ஒரு பெண்ணை காதலித்த ,அண்ணன் தம்பி
தமிழகத்தில் சினிமா பாணியில் ஒரு பெண்ணை அண்ணன் தம்பி
காதலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
அண்ணன் காதலித்த பெண்ணை அதே தம்பி காதலித்து திருமணம் முடித்தார் ,
இதனால் மனம் உடைந்த அண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார் ,
இதனை அறிந்த தம்பதிகள் நஞ்சை அருந்தினர் ,இதனால்
தம்பதிகள் தொடர்ந்து மருத்துவ மனையில் அபாயம் கட்டத்தில் உள்ளனர்
சினிமாவை மிஞ்சிய அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு நிலவுகிறது
பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது ,ஆனல் தற்போது அதன் உயிர்
பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தற்பொழுது
டிசம்பர் இரண்டாம் திகதியுடன் லொக்கடவுன் முழுமையாக நீக்க
பட்டு பிரிட்டன் வழமை போன்று இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது
தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இவ்விதம் செய்கிறது என்ற குற்ற சாட்டு ஒருபுறம் ,மறுபுறம் கொரனோ ஊசி வெளியிட
பட்ட நிலையில் இந்த லக்கடவுன் மீள நீக்கும் நிலைக்கு அரசு செல்கிறது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது
மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்
மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ மீன்
தமிழகத்தில் மீனவர் வலையில் ஆயிரம் கிலோ எடையுள்ள திருக்கை மீன் ஒன்று சிக்கியுள்ளது
வலையை கரைக்கு இழுத்து வர சிரம பட்ட மீனவர்க்ள, மேலும் சில
படகுகளை இணைந்து கரைக்கு இழுத்தனர் அப்பொழுதே வலையில்
இந்த இராட்சத மீன் இழுத்து வரப்பட்டது
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அழகாக தோன்ற விரும்பும் பெண்களும், ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க
வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
பெண்களின் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருப்பது, சுத்தம். அதிலும் குறிப்பிடத்தக்கதாக இருப்பது அந்தரங்க சுத்தம். அதனால் அழகாக தோன்ற விரும்பும் பெண்களும்,
ஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்களும் அந்தரங்க சுத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இந்த சுத்தத்தை பேணினால் பெண்கள் பல்வேறு நோய்களில் இருந்தும் தப்பித்து விடலாம்.
அந்தரங்க சுத்தம் பற்றி குறிப்பிடும்போது பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஒரு பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. வெள்ளைப்படுதல் என்பது இயற்கையானது.
ஆரோக்கியமான கருப்பை யும், சினைப்பையும், இனப்பெருக்கத்திறனும் கொண்ட எல்லா பெண்களுக்குமே இயற்கை யாகவே உறுப்பு பகுதியில் வெள்ளைப்படுதல் தோன்றும்.
அந்தரங்க சுத்தம் பெண்களுக்கு அவசியம்
அதுபோல் பெண்களின் இனப் பெருக்க உறுப்புகளில் நோய் எதிர்ப்புத்திறனை தருவதற்காக இயற்கை அணுக்களும் காணப்படும். வெள்ளைப்படுதலை தவறாக புரிந்துகொண்டு
தேவையற்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டுவிட்டால், அந்த நல்ல அணுக்கள் அழிந்துவிடும். அப்போது அந்த திரவம்
நிறமாற்றத்துடன் வெளிப்பட்டு வாடையும் வீசும். அதுதான் நோய் பாதிப்பின் அறிகுறியாகும்.
பாதிப்பு எதுவும் இல்லாத இயற்கையான திரவம் நிறமற்றதாக இருக்கும். முகர்ந்து பார்த்தால் அதில் இருந்து வாடை எதுவும் வீசாது. இந்த இயற்கையான வெள்ளைப் படுதல் ஏற்படும்போது சுத்தமான
நீரால் கழுவினாலே போதுமானது. உறுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்கி சுத்தப்படுத்துவதும் அந்தரங்க சுத்தத்திற்கு அவசியம். கணவரோடு தாம்பத்ய தொடர்பு
வைத்துக்கொள்ளும் பெண்கள் பாலியல் உறவுக்கு முன்பும், பின்பும் தண்ணீர் பயன்படுத்தி கழுவவேண்டும். கணவன், மனைவி இருவருமே இதை அவசியம் கடைப்பிடிக்கவேண்டும். அந்தரங்க
சுத்தம் இல்லாத தம்பதிகளுக்கு தாம்பத்ய ஆர்வம் குறைந்துபோகும். அதனால் அவர்கள் தாய்மையடைவதும் தள்ளிப்போகும்.
அந்தரங்க சுத்தத்திற்கு உள்ளாடை பராமரிப்பும் இன்றியமையாதது. செயற்கை நூற்களால் உருவான உள்ளாடைகள் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றதல்ல. கோடைகாலத்தில்
தொடை இடுக்குப்பகுதிகளில் அதிகமாக வியர்க்கும். அந்த வியர்வை தேங்காத அளவுக்கு உறிஞ்சி எடுக்கும்
உள்ளாடைகளையே அணிய வேண்டும். அதனை துவைத்து சூரிய ஒளிபடும் இடத்தில்தான் உலரவைக்க வேண்டும்
ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா.
ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா, ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா… பொண்ணு யார் தெரியுமா?
பிரபுதேவா
சினிமாவில் நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன்
போன்றோர் நடித்த படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்தார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது.
நயன்தாராவை திருமணம் செய்ய முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல்
முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். தற்போது பிரபுதேவாவுக்கு 47 வயது ஆகிறது.
பிரபுதேவா
குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர்
உறவுக்கார பெண்ணை பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில், பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் எனவும்
கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர்
சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை.
தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு
தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு
சனம் ஷெட்டி – தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர்
தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,
தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில்
தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில்
மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல்
நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை
வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு
சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு
பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு
சினேகன்
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்
கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது
கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார்
சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல்
மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்
தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில்- கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.
பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை
கலவரம் நடந்த பல்பொருள் அங்காடியை படத்தில் காணலாம்
பிரேசிலியா:
தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால்
அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட பல்பொருள் அங்காடி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழத்
தொடங்கியுள்ளன. பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து
வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பல்பொருள் அங்காடியின் முன்பு மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட
காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி
போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி
ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள டாட்டின்ஸ்கி என்ற மாவட்டத்தை
சேர்ந்த சிலர் போதைக்காக மதுவுக்கு பதில் கிருமி நாசினியை குடித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த
போதும் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது
வீட்டில் சிக்கிய கஞ்சா – நடிகை கைது
அந்தேரி வீட்டில் கஞ்சா சிக்கியதை தொடர்ந்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.
வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு
பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்
தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது
செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை
பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை
நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும்
அடிபட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு
வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.







