Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்

கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி

ஒம்சக் நகரில் இருந்து
ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி

உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையையடுத்து நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த

அலெக்ஸி நவல்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

நவல்னி – புதின்

இதற்கிடையில், தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும்

ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் இடம்பெற்றிருந்தன.

அப்போது புதினிடம் எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் கொடுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த புதின்,

அவர் (நவல்னி) அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ரஷிய அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், இதற்காகவெல்லாம் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டியதில்லை. அவரால் யாருக்கு என்ன பயன்?

ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் (நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால்) நாங்கள் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்.

என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்களை எச்சரித்த டக்கிளஸ்- இந்தியாவுக்கு கெடு

எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளலர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை

கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொடர்பு கொண்டுள்ள இந்தியத் தரப்புக்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை

விடுதலை செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும்

செயற்பாடுகளை இடை நிறுத்தி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு எதிர்கால இலங்கை

– இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதரப் பிரச்சினை ஏற்படாமல் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்

மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு

ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோயை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பொழுது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி

இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகை கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுப்படக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொலிஸார்,

பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொவிட் தொற்றை தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. இவ்வாறான

சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களை கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

படிவம் ஒன்றில் இந்த தகவல்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை

குறித்த கடிதத்துண்டு ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்; கைது

செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாக இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவ்வாறானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டவாறு செயல்படுமாறு

நாம் கேட்டுக் கொள்கிள்றோம். பண்டிகை மற்றும் குடும்ப வைபவங்களை குடும்பத்துக்குள் மாத்திரம் வரையறுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பி.சீ.ஆர் பரிசோதனையின் போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், ஏனைய சுகாதார நடவடிக்கைகளின் போதும் போலியான பெயர்கள் தகவல்கள்

வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இதுதொடர்பில் நாம் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு செயல்படுவோர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி வழக்கு தொடரக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இவ்வாறான வழக்கு

ஒன்றில் குற்றம் இழைத்தவராக காணப்படுவோர் 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் . இதனால் போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு

பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்..

Posted in இலங்கை செய்திகள்

35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்

35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்று இன்று (16) இரவு 9 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து

விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஜீப் வண்டி அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது வட்டவளை

பகுதியில் வைத்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த ஜீப் வண்டியை செலுத்தியவர் அக்கர்ப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈராக்கில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தினர்

ஈராக்கிய அரச இராணுவத்திற்கு சொந்தமான டிரோன் ரக உளவு விமானம் ,அதாவது ஆள் இல்லா உளவு விமானத்தை திடீரென சுட்டு வீழ்த்தியுள்ளனர்

இது தவறுதலாக இடம்பெற்ற ஒரு சம்பவம் என தெரிவித்துள்ளது ,குறித்த விமானத்தின் மொத்த செலவை தாம் தருவதாக

அமெரிக்கா அறிவித்துள்ளது ,உண்மையில் இது தான் காரணமா என்றால் அது அல்ல என்பதே சமாச்சாரம்

அப்டி என்றால் அதே நாட்டில் தங்கி அந்த நாட்டின் முக்கிய விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்துகிறது என்றால் சமாச்சாரம் வேறு ஏதோ நடக்கிறது

சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சி காவல் படையின் தளபதி ஈராக்கிற்கு

சென்று முக்கிய விடயங்கள் தொடர்பாக பேசி வந்ததன் பின்னர் இடம்பெற்ற சம்பவம் இது என்பது கவனிக்க தக்கது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா

இலங்கைக்கு அள்ளி நிதி கொடுக்கும் சீனா – கடுப்பாகும் இந்தியா

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

அதன்படிஇ நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழுப்பு துறைமுக நகரத்தினுள் (Pழசவ ஊவைல) வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான முறைமையொன்றை

உருவாக்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் துறைமுக நகரத்தினுள் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர்

சபாநாயகரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்றது.

அதேபோன்றுஇ 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாக ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் டயர்

தொழிற்சாலையை ஒத்த டயர் தொழிற்சாலை ஒன்றை மதுகம பகுதியில் நிர்மாணிக்க சீன அரசு எதிர்பார்ப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.

சீன அரசினால் இலங்கையில் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை ஒன்றை அடுத்த ஆண்டில் நிர்மாணிக்க

திட்டமிட்டுள்ளதுடன்இ அதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய தூண்டுதல் ஒன்றை வழங்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு சீன பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யுமாறு

சீன தூதுவர் இதன்போது மஹிந்த யாப்பா அபாயவர்தன அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இதன்போது சீன அரசினால் ருஹுனு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான நிதியுதவியினை அதன் உப வேந்தர்

பேராசிரியர் சுஜீவ அமரசேனவிடம் கையளித்ததுடன் இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு

இலங்கையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50,ஆயிரம் வட்டிக்கு வழங்கும் அரசு

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளைப்

பூர்த்தி செய்ய சலுகை வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த கடன் வழங்கல் 03 பிரிவுகளின் கீழ் இடம்பெறும். மாதத்திற்கு ரூ. 50,000 க்கு மேல் சம்பளம் அல்லது வருமானம் பெருவோருக்கு ரூ. 50,000 கடனாக பெறலாம். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ

.25,000 க்கும் ரூ .50,000 க்கும் இடைப்பட்டவர்களுக்கு ரூ.25,000 கடன் வழங்கப்படும். மாத சம்பளம் அல்லது வருமானம் ரூ .25,000 க்கும்

குறைவாக இருந்தால், கடன் தொகை ரூ .10,000 ஆகும். கடன்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படுகின்றன.

துணை நிவாரண நிதி வசதிகள் பெற விரும்பும் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் தங்கள் நிறுவன தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் தலைவர்

தனது ஊழியர்களின் சான்றளிக்கப்பட்ட பெயர் பட்டியலை சேவை நிலையத்திற்கு அருகிலுள்ள அரச வங்கியில் சமர்ப்பிக்கும் போது, அந்த கிளையினால் ஊழியர்களின் கணக்குகளுக்கு உடனடியாக அந்த தொகை வரவு வைக்கப்படும்.

கடன் தொகை 10 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அரவிடப்படும் மாத வட்டி 0.625 வீதமாகும். கடன்

தொகை 2021 ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையிலான காலப்பகுதியில் ஊழியரின் சம்பளத்திலிருந்து அரவிடப்படும்.

அரச ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கான கடன் வழங்கல் ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் சமுர்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.


முச்சக்கர வண்டிகள், பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பேணப்படும் அரச வங்கிகளில் தங்கள் தேசிய

அடையாள அட்டையை சமர்ப்பிப்பதன் மூலம் சலுகைக் கடனுக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பிரிவிற்குள் வராத ஆனால்

அரச வங்கிகளில் கணக்குகளை வைத்திருக்கும் நாளாந்த வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் வங்கிகளின் ஊடாக நிதி வசதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கோவிட் 19 சவாலுக்கு மத்தியில் பின்னடைந்துள்ள பொருளாதாரம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக மீட்டு, 2020

ல் இழந்த முன்னேற்றத்துடன், 2021 ஆம் ஆண்டில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தொற்றுநோய் காலப்பகுதியில் சுமார் இரண்டு மாத பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் ஏற்றுமதி, சுற்றுலா, நிர்மாணத்துறை மற்றும் ஏனைய உற்பத்தி மற்றும் சேவைகளை படிப்படியாக

இயல்பு நிலைக்கு கொண்டுவர உழைக்கும் மக்களும் வர்த்தக சமூகமும் பெரும் தியாகங்களைச் செய்தனர். இதற்கு சுகாதாரம், பாதுகாப்பு, பொலிஸ் மற்றும் அரச சேவைகளிடமிருந்து பெரும்

ஆதரவு கிடைத்தது. எனவே, 2020 ஆம் ஆண்டில் விவசாய உற்பத்தித் துறையில் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசிக்க முடிந்தது. நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கான உணவு

விநியோகத்தை இது உறுதி செய்தது. அவ்வாறு பங்களித்த மக்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற நிதி வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி சுமார் 612 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 25,161 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவர்களுடன் சுமார் 1632 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,லண்டன்

பகுதி சிவப்பு எச்சரிக்கி விடுக்க பட்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது

,அதனால் உணவகங்கள் டெக்கவே மட்டும் எடுக்க அனுமதிக்க பட்டு புதிய தடைகள் விதிக்க பட்டுள்ளன

Posted in உலக செய்திகள்

துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி

துருக்கி கப்பலை சிறை பிடித்த எதிரி நாடு – மிரட்டும் துருக்கி

துருக்கியின் மியாட் பெரும் சரக்கு கப்பல் ஒன்றை Libya’s Haftar இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் .

கிழக்கு பெங்காசி பகுதியில் சென்று கொண்டிருந்த மேற்படி கப்பல் தமது

எல்லைகளுக்குள் அத்து மீறி நுழைந்தது என கூறப்பட்ட நிலையில் அதற்கு

பல்லாயிரம் தண்டம் அறவிட பட்டு ,அந்த குற்ற பணம் செலுத்திய பின்னர் விடுவிக்க பட்டுள்ளது

இந்த கப்பல் சிறை பிடிப்புக்கு துருக்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

துருக்கி கப்பலை
துருக்கி கப்பலை
Posted in உலக செய்திகள்

ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு

ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு

எகிப்தில் சுமார் ஐந்தாயிரம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிக்க பட்டுள்ளது

,இதற்குள் இருந்த சடலம் மற்றும் ,பலகையிலான சைவ பெட்டிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளது

இவ்வாறு மீட்க பட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வைக்க பட்டு ஆய்வுகள்

இடம்பெற்று வருகிறது
இதே போன்று அண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட மம்மிகள் கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

பிரமிட்
பிரமிட்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி

ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி

ஈரானின் முக்கிய புரட்சி காவல் படையினர் உலகின் மிக முக்கிய தீவிரவாத

இயக்கங்களை ஒருங்கிணைந்து அதன் ஊடாக தனது எதிரிகளுடன் சமரிட்டு

வருகிறது எனவும் அதற்குரிய ஆயுதங்கள் மற்றும் பண உதவி என்பனவற்றை

ஈரான் செய்து வருவதாக பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கொதித்து பொங்கியுள்ளனர்

ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பனிப்போர் உச்சம் பெற்று வரும் நிலையில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் சினிமா

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்

தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

தேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்
மகளுடன் சத்யராஜ்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின்

தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில்

வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,

என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை

நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு

பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.” இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

திவ்யா சத்யராஜ்

திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு

முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’ என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.

சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி” என்ற இயக்கத்தை

ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக

வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க

வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.

சத்யராஜ் மகள்
சத்யராஜ் மகள்
Posted in சினிமா

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பை கிளப்பிய நடிகை

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கடுப்பை கிளப்பிய நடிகை

ஜெமினி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’,

கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் அதிக கவர்ச்சியில்

கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கிரண்

இந்நிலையில் தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்துகொண்டு பட்டன் போடாமல் இருக்கும் புகைப் படம் ஒன்று

வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிளப்பிய நடிகை
கிளப்பிய நடிகை
Posted in சினிமா

முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்

முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் சரவணன் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்திருக்கிறார்.

முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்… காரணம் தெரியுமா?


சரவணன் – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து 90களில் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன்.

பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு சித்தப்பு என்ற பெயரை வழங்கியதோடு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தது.

சரவணன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி

பெற்ற சரவணன், தற்போது மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிக்பாஸ் சரவணன்
பிக்பாஸ் சரவணன்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

ரசியாவின் வான் இடைமறித்து ஏவுகணையாக விளங்கும் எஸ் 400 ரக ஏவுகணையை துருக்கி வாங்கி குவித்தது ,இந்த ஏவுகணைகள்

உடனடி களமுனை பாவனைக்கு தருவித்து எல்லைகளில் குவிக்க பட்டுள்ளன

தம்மிடம் மேற்படி ரக ஏவுகணையை வாங்கிட அமெரிக்கா துருக்கிக்கு அழுத்தம் கொடுத்தது ,ஆனால் துணிந்து செயல் பட்ட

எடகோன் ,டிரம்பின் மிரட்டலை மீறி ரசியாவுடன் ஒப்பந்தம் செய்து சொன்னபடி ஏவுகணையை வாங்கி குவித்தார்

வாங்கி விடீர்கள் எப்படி கொண்டு வறுகிண்றீர்கள் பார்க்கலாம் என சவாலும் விட்டது ,அதற்கு ரஷியா உரிய மாற்று வழிகளை பயன் படுத்தி துருக்கியில் குவித்தது

இதன் எதாரொலியாக தற்போது பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநகரம்

மற்றும் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.

இந்த பொருளாதார தடையால்
இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து பறக்கிறது

அடிபணிய வைக்க முனையும் அமெரிக்காவின் நய வஞ்சகத்திற்கு துருக்கி அடிபணியுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

Posted in இலங்கை செய்திகள்

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

மரண வீட்டுக்கு சென்ற 10 பேருக்கு கொரோனா

காலி மாவட்டத்தின் இந்துரவ-துன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச்

சடங்கொன்றில் கலந்துகொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி மரணச் சடங்கில் பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய

பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு

இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது

மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது

ரிஷாட்டின் முக்கிய புள்ளி கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள

உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு

தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்

பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்

பிரிட்டனில் வாகன சாரதிகள் மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளும் நிறுவனமான

Driver and Vehicle Licensing Agency (DVLA) அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

தமது நிறுவனத்தின் பெயரை பயன் படுத்தி இணைய மோசடி நபர்கள்

தாம் கோருவது போன்ற விண்ணப்பத்தை அனுப்பி மக்களின்

விபரங்களை சேகரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது

இவ்வாறான விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றால் தம்முடன் தொடர்பு கொண்டு உறுதி படுத்து மாறு வேண்ட படுகிண்றீர்கள்

உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே விரைந்து அவர்களுக்கு தெரிய படுத்தும் படி வேண்ட படுகிறது ,தமிழர்களே எச்சரிக்கை