Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?

ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி

பொது மன்னிப்பு மற்றும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கொள்கை ஆகிய பின்னணிகளில்,

தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொள்ள

வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற

உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து

வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட

விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும் அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி

பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது

தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதங்கள்
ஆயுதங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி

திருகோணமலை மத்திய வீதியில் நேற்றைய தினம்(1)கொரோனா

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒருவருக்கு தோற்று உறுதி

செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி

ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

பொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Posted in உலக செய்திகள்

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

118 பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

உலகில் 1903 ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த தனக்கா என்ற

பெண்மணி தனது 118 டாவது பிறந்த தினத்தை கொண்டாடினார்

இவரே உலகில் அதிக வயதான பெண்மணி என்ற கிண்ண

சசாதனையை தற்போது தட்டி சென்றுள்ளார்

இவரது இந்த நிகழ்வை அறிந்த மக்கள் சமுக வலை தளங்கள்

ஊடாக தமது வாழ்த்தினை குவித்து வருகின்றனர்

மூதாட்டி
மூதாட்டி
Posted in உலக செய்திகள்

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்

நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்

இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்

அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ

காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்

காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்

மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன

பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி

வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி

கொரனோ தாண்டவம் அமெரிக்காவில் 2,081 மற்றும் பிரிட்டனை 445 பேர் பலி

இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2,081 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் 230,551 பேர் ஒரே நாளில் பாதிக்க

பட்டுள்ளனர் இவர்களுடன் 29,258 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அதேபோல பிரிட்டனில் 445 பேர் பலியாகியும் 57,725 பேர் பாதிக்க பட்டுள்ளன ,

இதுவே பிரிட்டனில் இதுவரை பாதிக்க பட்ட மக்கள் அதிக தொகையினை காண்பிக்கிறது

வரும் நாட்களில் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in சினிமா

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்
பாரதிராஜா


சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து

பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக

ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா,

முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு

மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு

சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.

Posted in சினிமா

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரி

தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்த நடிகர் வையாபுரி யின் புதிய கெட்டப் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வையாபுரியின் புதிய கெட்டப்
வையாபுரி


கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய
இளையதலைமுறை நடிகர்களுடனும் நடித்து வருகிறார். காமெடி

நடிகராக மட்டுமே பரிச்சையமான வையாபுரி, ‘பிக் பாஸ்’
நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர

வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவார், என்ற நம்பிக்கையை பல
இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், புத்தாண்டில் புது முயற்சி மேற்கொள்ளும் விதமாக போட்டோ ஷூட் ஒன்றை நடிகர் வையாபுரி நடத்தியுள்ளார். மிக


வித்தியாசமான கெட்டப்போடு இருக்கும் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி
வருவதோடு, இளைஞர்கள் அந்த புகைப்படங்களை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

வையாபுரி

“யாரு…ஹாலிவுட் நடிகரா இவரு, இல்லப்பா நம்ம ஊரு வையாபுரிப்பா…”, ”தினேஷ் கார்த்திக் செமயா இருக்காருல, யோவ் அது


வையாபுரி யா” இப்படி பல வகையில் வையாபுரியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி


வெளியிட்டு வர, தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காகியுள்ளது வையாபுரியின் புகைப்படங்கள். பிரபல

காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, வையாபுரி தோற்றத்தை இப்படி ஸ்டைலிஷாக மாற்றி இருக்கிறார்.

Posted in சினிமா

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… என்று கூறியுள்ளார்.

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி
சிம்பு


சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்

நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி

முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க

பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள்.

அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை

நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில்

கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது

. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல்

செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

சிம்பு அதிரடி
சிம்பு அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது

ன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்

பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த

சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நேற்று இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள். கடந்த டிசெம்பர்

20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்தார்கள். 136 பேர் காயமடைந்தார்கள்.

இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில்

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இதன்போது திரையரங்களுகள் அதன் திறனில் 25 மாத்திரமே செயற்பட இடமளிக்க அனுமதிக்கப்படுள்ளது.

இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார

வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் நாடளாவிய

ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்கத்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

சிரியாவின் அலெப்போவின் Jabal Anadanபகுதியில் இருந்து தமது இராணுவத்தை

முற்றாக விலக்கியுள்ளது ,இடம் பெற்று வரும் சமரச முயற்சிகளின் பயனாக இந்த படை விலக்கல் இடம் பெற்றுள்ளது

எனினும் மறுபுறத்தே இராணுவ குவிப்பை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

தேவை ஏற்படாது போது தமது இராணுவம் முற்றாக அங்கிருந்து விலக்க

படும் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது

துருக்கி
துருக்கி
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்காவின் இராணுவ மையங்களை இலக்கு வைத்து ஈராக்கில் ,ஈரானின்

ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்த ,இதன் தாக்குதல்

எதிரொலியாக டிரம்ப் பலத்த மிரட்டலை ஈரானுக்கு விடுத்திருந்தார் ,இந்த

நிலையில் தற்பொழுது ஈரான் தமது அணு உலைகள் அருகில் ஏவுகணை வான் தடுப்பு ஏவுகணைகளை குவிந்துள்ளது

அரண்களாக குவிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகளினால் பெரும் பதட்டம் நிலவுகிறது

அமெரிக்காவின் நாசகார நீர்மூழ்கி உள்ளிட்ட கப்பல்கள் ஈரான் அருகில்

சுற்றிய வண்ணம் உள்ளன ,அவ்வாறான நிலையில் இந்த ஏற்பாட்டை

ஈரான் செய்துள்ளமை விரைவில் பெரும் தாக்குதல் ஒன்று வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

ஏவுகணை
ஏவுகணை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

புத்தாண்டு முதல் பிறந்த சிசு இது தான்

2021 ஆண்டு அயர்லாந்து Dublin நில் பிறந்த முதலாவது சிசு இதுவாக

பதிய பெற்று சாதனை படைத்துள்ளது ,
புத்தான்டு

பிறந்து நான்கு செக்கனில் இந்த குழந்தை பிறந்து சாதனை பெற்றுள்ளது

2021 ஆண்டில் பிறந்த முதலாவது சிசுவாக இந்த சிசு முதல் இடம் பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது ,


சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

புத்தாண்டு முதல் பிறந்த சிசு
புத்தாண்டு முதல் பிறந்த சிசு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

புத்தாண்டில் வீடுகளில் பாட்டி வைத்த 126 பேருக்கு தண்டம் -பொலிஸ் வேட்டை

வட அயர்லாந்தில் புத்தான்டு தினத்தில் வீடுகளில் பாட்டி வைத்து

மகிழ்ந்த 126 பேருக்கு போலீசார் தண்டம் அறவிட்டுள்ளனர்

இவ்வாறு தலா ஒருவருக்கு இருநூறு பவுண்டுகள் விகிதம் அறவிட பட்டுள்ளது

,மேற்படி குற்ற பணம் 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின் அவர்களுக்கு

மேலும் தண்டம் அதிகரிக்க படும் ,இதேவேளை 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

சமகால நிகழ்வு விதிகளை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வின்

பொழுது போலீசார் மேற்படி தண்டத்தை அற விட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in சினிமா

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்
இசையமைப்பாளர் டி இமான்


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய

பயணத்தை துவங்கவுள்ளார். “DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான்.

இமான்

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது. முழுக்க இயேசு

கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

Posted in சினிமா

புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே

புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி
தீபிகா படுகோனே


பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் 52.5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். ட்விட்டரில் 27.7 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போஸ்டுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துள்ளார். அதோடு டிபியும்

மாற்றப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் முடிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோனே

அவரது அக்கவுண்டுகள் ஹாக் செய்யப்பட வில்லை என்றும், அவரே

புகைப்படங்களை வேண்டும் என்றே நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்

நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல

நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்

எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது

இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்

அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது