ஒரு குடும்பத்தில் கொரோனாவால் இருவர் மரணம்
மட்டக்களப்பு, கோட்டமுனை மூர் வீதியில் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்து 7 தினங்களில் அவரது
மனைவி கொரோனா தொற்றால் இன்று (22) உயிரிழந்துள்ளார் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றால்
மரணித்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை
(15) மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரது கும்பத்தில் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு, காத்தான்குடி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி, இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பகுதியான அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட
அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இதுவரை 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள்
இரண்டிலும் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்
தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் மூன்று அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள்
நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும்
மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாடு திறக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த 6 மாதங்களில்
சுற்றுலா பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மனிதன் மட்டும் மாறி விட்டான்
மனிதன் மட்டும் மாறி விட்டான்
சாதியில் இரண்டு ஊரடா -இறுதியில்
சனமது செத்த நிலமடா
இதனை செய்தவன் யாரடா
இந்த கேவலம் ஏனடா
சாதியில் என்ன சாதனையோ
சக மனிதற்கு இதனால் வேதனையே
ஆறாம் அறிவை முதல் தட்டு
அதனில் ஏறி அறம் நாட்டு
ஊர்வன பறப்பன மோதவில்லை
உலகை போரை மூட்டவில்லை
மனிதன் மட்டும் மாறி விட்டான் – அவன்
மண்டைக்குள் யாரோ புகுந்து விட்டான்
இறைவன் படைப்பில் முதல் யாதி
இவனே உலகில் முதல் யோதி
அன்பு செலுத்துதல் மறந்து விட்டு
அழித்தலை ஏனோ தொடர்ந்து விட்டான் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 23-01-2021
கரையான் முள்ளிவாய்க்கால் –
வெள்ளாம் முள்ளிவாய்க்கால் –
இலங்கையில் நில நடுக்கம் – குலுங்கிய வீடுகள்
வலப்பனை பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு
உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக
புவிச்சரிதவியல் மற்றம் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வியலுவ எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை
எச்சில் துப்பியவருக்கு ஆறு வருடங்கள் சிறை
பொதுசுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய, பட்டாரகம அட்டளுகமையைச்
சேர்ந்தவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.
பண்டாரக – அட்டளுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல
டிசெம்பர் 2ஆம் திகதி வந்த போது பொதுசுகாதார அதிகாரிகள் மீது அவர், எச்சில் துப்பியுள்ளார்.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள்
உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற
இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள் உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்
இலங்கையில் கொரோனா: தொற்றாளர்கள் , 276 மரணம்
இன்றைய தினம் (21) மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் 873 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 536 பேர் பேலியகொட கொவிட்
கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்களாவர். சிகிச்சை பெற்று வந்த 769 கொவிட் தொற்றாளர்கள் இன்று வைத்தியசாலைகளில் இருந்து
வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைவாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 55526. சிகிச்சை பெறும் நோயாளிகள் 7266.
கொரோனா தொற்றின் காரணமாக இன்றைய தினம் (21) இருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன்
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன் வேண்டுகோள்
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.
அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன்.
கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க்
அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம்
குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
மனித வெடிகுண்டு தாக்குதல் – 32 பேர் மரணம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் டயாரன் சதுக்கம் அருகே உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப்பகுதியில் நேற்று 2 பேர்
சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நடமாடிக்
கொண்டிருந்தனர். அவர்களை பாதுகாப்பு படையினர் பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது, இருவரும் தங்கள் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை
வெடிக்கச் செய்தனர். இதில் 32 பேர் பலியானார்கள். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஈராக்கில் நடந்த முதலாவது தற்கொலைப்படை
தாக்குதல் இதுவே ஆகும். ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாணியை
நினைவுபடு்த்தினாலும், இதற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.
பாகிஸ்தான் தொலைதூர ஏவுகணை சோதனை
பாகிஸ்தான் நேற்றுமுன்தினம் திடீரென ‘ஷாகீன்-3’ என்ற தொலைதூர ஏவுகணையை ஏவி சோதித்து இருக்கிறது.
இந்த ஏவுகணை தரையில் இருந்து புறப்பட்டு 2,750 கி.மீ. வரையில் பறந்து சென்று, தரையில் உள்ள இலக்கை தாக்கும். குறிப்பாக
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபாரை இலக்காக கொள்ளக்கூடியது.
பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ஏவுகணைகளில் மிக அதிக தொலைவுக்கு செல்லக்கூடியது, இந்த ஏவுகணைதான்.
இந்த ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்ட பாகிஸ்தான் கூட்டுப்படை தளபதிகளின் தலைவர் ஜெனரல் நதீம் ராசா கூறுகையில், “பிராந்தியத்தில் பாகிஸ்தான் அமைதியான சக
வாழ்வை விரும்புகிறது. பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தடுப்பதுதான் நமது ராணுவ திறன் ஆகும்” என குறிப்பிட்டார்.
இந்த ஏவுகணை சோதனை, அதன் பல்வேறு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாக கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி
தொடர்பு பிரிவான ஐ.எஸ்.பி.ஆர். கூறுகிறது. மேலும் இந்த சோதனை, அரபிக்கடலில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் சொல்கிறது.
இந்த சோதனை அதன் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு வரையறைகளை வெற்றிகரமாக சரி பார்த்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஏவுகணை முதன்முதலாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏவி சோதிக்கப்பட்டது. இன்னும் பாகிஸ்தான் படையில் சேர்க்கப்படவில்லை.
நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ்
நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக திரைப்படங்களில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
நடிப்பை விட்டு விலக காரணம் என்ன? அப்பாஸ் பதில்
அப்பாஸ்
தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட
கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை.
பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.
அப்பாஸ்
சமீபத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும்
வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும், நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை
விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கதாநாயகியாக களமிறங்கும் நடிகையின் மகள்
கதாநாயகியாக களமிறங்கும் நடிகையின் மகள்
தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
கதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்
ஶ்ரீதேவி மகள் குஷி
நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி
ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார். அடுத்து தோஸ்தானா 2, ரூஹி
அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
ஶ்ரீதேவி மகள்
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மாடியில் இருந்து குதித்து வயோதிபர் தற்கொலை
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம்
நடந்து ஒரு மணி நேரம் தாண்டியும் பிணத்தை மீட்க போலீசார் வராததால் பயணிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் கீழே குதித்து தற்கொலை
எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தில் இருந்து முதியவர் குதித்து தற்கொலை
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைந்திருக்கும் கட்டிடம் நேற்று வழக்கமான பரபரப்புடன் இயங்கியது. பயணிகள் நடமாட்டமும் வழக்கம்போலவே இருந்தது.
இந்தநிலையில் முதியவர் ஒருவர், அந்த கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தார். “எங்கே
செல்கிறீர்கள்?”, என சில பயணிகள் கேட்டும், அவர் அதை காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் கட்டிடத்தின் உச்சிக்கு சென்ற அவர், அங்கே அமர்ந்துகொண்டு தரையை வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அறிந்த பயணிகள் அவரை கீழே
இறங்குமாறு கூச்சலிட்டனர். சிலர் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை தெரியப்படுத்தி கொண்டிருந்தனர்
. அதேவேளை அங்கு வந்த ரெயில்வே போலீசாரும் இதை கண்டும் காணாதது போல சென்றனர்.
இதற்கிடையில் யாரும் எதிர்பாராதநிலையில் திடீரென அந்த முதியவர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த
வெள்ளத்தில் துடிதுடித்தபடி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில்வே போலீசுக்கு தொடர்புகொண்டனர்.
சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் அங்கே வரவில்லை. இதற்கிடையில் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அந்த முதியவர் இறந்துவிட்டதாகவும், உடலை கைப்பற்ற ரெயில்வே போலீசார் வருவார்கள் என்றும் கூறி சென்றுவிட்டனர்.
இதனால் ரத்தவெள்ளத்தில் அந்த முதியவரின் உடல் நீண்டநேரம் அங்கேயே கிடந்தது. இதனால் பயணிகள் ஆதங்கம் அடைந்தனர். சிலர் ஆவேசமாக எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் நடந்ததை தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில்வே போலீசார், தற்கொலை செய்த முதியவரின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து உயிரை விட்ட முதியவர் யார்? ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் ரெயில்வே போலீசாரின் தாமதமான நடவடிக்கையால் வேதனைக்குள்ளான பயணிகள் சிலர் கூறுகையில், “முதியவர் கட்டிடத்தில் ஏறும்போதே போலீசுக்கு தகவல் கொடுத்தோம். அப்போதே வந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம். அந்த முதியவர் உயிருக்கு போராடியபோதும் போலீஸ் வரவில்லை. போலீசாரின் இந்த அஜாக்கிரதை கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கே எட்டி பார்க்காத போலீசாரை இனியும் நம்பக்கூடாது. நமது பாதுகாப்பை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்போல…”, என்றனர்
ஈழம் மலரும் காத்திரு
ஈழம் மலரும் காத்திரு
இறந்தவர் கல்லறை உடைத்த கேவலன்
இவனா இலங்கா கோமகன் ..?
படைத்தவன் பிரம்மன் படைப்பினை அறிவான்
பலியுன்னை எடுக்க வருவான்
அறுக்கையில் தலைகளை
அழுதன குரல்கள்
அவை கண்ணீர் சாபம் விடுமா ..?- உன்
அரியணை இங்கு தொடருமா ..?
எரியும் நெஞ்சின்
எரிமலை பிழம்புகள்
எழுந்தே ஒரு நாள் ஆடும்
எங்களின் தேசம் மலரும்
விடுதலை என்றுமே சாகாது – அதன்
விதிகள் என்றுமே மாறாது
செய்தவன் பலியது தீர்க்காது
செந்தமிழ் என்றுமே உறங்காது
இனக்கொலை புரிந்த உன்னோடு
இணைந்து வாழ்தல் முறைகேடு
தனியது அரசை தமிழ் அமைக்கும்
தரணியில் இதற்கொரு இடம் கிடைக்கும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-01-2021
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
கொரனோ பரவல் -இரண்டு பாடசாலைகளுக்கு பூட்டு
அநுராதபுரம் கல்விவலயத்துக்கு உட்பட்ட நிராவிய பகுதியில் உள்ள இரண்டு
பாடசாலைகள் காலவரையறையின்றி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிராவிய கிராமத்தில் 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக
இனங்காணப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
மட்டக்களப்பில் இளம் தொழில் முயற்சியாளர்கள் 79,590 பேர் அரச காணிக்கு விண்ணப்பிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷவின் சுபிட்சத்தினை நோக்கிய நாடு என்ற கருப்பொருளில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை
மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கு விண்ணப்பங்கள்
கோரப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டு இருந்தது.
இதன் இடிப்படையில் காணி பாவணை திட்டமிடல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் கிஷhந்தி கலந்து கொண்டு காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியினை
விரைவாக பிரதேச செயலாளர்கள் முன்வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக எதிர்காலத்தில் நடாத்தப்படும் என குறிப்பிட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79,590 நபர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில்
70,769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர்.
அந்த வகையிலே கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 8438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 12860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 4652 பேரும், மண்முனை பற்று பிரதேச செயலகப்பிரிவில் 2714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவில் 4007 பேரும், கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 3044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 3516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 2168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் 2349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவில் 4631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவில் 6585 பேரும,; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் 3090 பேர்களுடைய விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
காணி பயன்பாட்டு திட்டமிடல் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் என்று நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் வேண்டுகோள் விடுத்தார்.
வெறுப்பு வராத அளவுக்கு நடிகைகள் ஆடைகளை அணிய வேண்டும் – சிங்கமுத்து
சிங்கமுத்து
நடிகர் சிங்கமுத்து சமீபத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நகைச்சுவை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். கடவுள்
நமக்கு கொடுத்து இருக்கிற சிறப்பு போனஸ் தான் சிரிப்பு. அது போல யாருமே வாய்விட்டு சிரிக்க மாட்டேங்கிறாங்க. அவர்களை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான்,
நாங்கள் எல்லோரும் சினிமாவில் இரவு பகலாக யோசித்து எப்படி எழுதலாம் எப்படி சிரிக்க வைக்கலாம் எந்த காட்சியை காட்டினால் சிரிக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறோம்.
கலைத்துறை என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி மக்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு ஆயுதமாகும். சினிமாவில் நடிக்கிற
நடிகைகள் பொதுமக்கள் வெறுப்பு வராத அளவுக்கு ஆடைகளை அணிந்து நடிக்க வேண்டும். அப்போது தான் நமது தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றதாகும்.
கொரோனாவுக்கு பயந்து மக்கள் சினிமா தியேட்டருக்கு செல்லாமல் இருந்துவிடாதீர்கள். முக கவசம் அணிந்து, சமூக
இடைவெளியை பின்பற்றி தியேட்டருக்கு சென்று சினிமா தொழிலை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு நடிகர் சிங்கமுத்து கூறினார்.
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை
அவுஸ்ரேலியா தலைநகர் அருகில் உள்ள விக்ட்டோரியா பகுதியில்
துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவரை சுற்றிவளைத்த போலீசார் சுட்டு கொன்றனர்
மேற்படி நபருக்கு எவ்விதம் இந்த ஆயுதங்கள் கிடைத்தன என்பது தொடர்பிலும் ,
இவரது பின்புலம் என்ன என்பது தொடர்பான விசாரணைகளை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர்
இது ஒரு தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் – மீறி சென்றால் தண்டம்
நெதர்லாந்தில் மீள் அவேக்மாக கொரனோ நோயானது பரவி வருவதால்
எதிர்வரும் வர விடுமுறையில் இருந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படவுள்ளது என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது
அதன் படி இரவு 8.30 pm மணி முதல் ,அதிகாலை to 4.30 am, மணிவரையில்
மக்கள் வெளியில் நடமாட தடை செய்ய பட்டுள்ளது ,அவ்விதம் மீறி செல்வோர்
மீது விதிக்க பட்டுள்ள விதிகளின் படி சட்டம் பாயும் என்பது நிலையாக உள்ளது மக்களே உசார்








