விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

Spread the love

விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான

நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள்

உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.

நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற

இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.

அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.

சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.

மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.

அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.

விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள் உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.

நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.

Leave a Reply