Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டன் Wandsworth இல் பாட்டி -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

லண்டன் Wandsworth இல் -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 16,41 மணியளவில் Wandsworth.

பகுதியில் பாட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

இரகசியமாக கூடி மேற்படி பாட்டியில் கலந்து கொண்ட இருபத்தி

ஐந்து பேருக்கும் நிர்ணயிக்க பட்ட 800 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது

நட்டத்தில் இயங்கும் அரசுக்கு இவர்கள் இவ்விதம் செயல்படுவதால்

பணத்தை உழைக்கும் நிலை கிட்டியுள்ளது ,


இவ்வாறு சில தமிழர்களுக்கும் பணம் செலுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

    Posted in உலக செய்திகள்

    நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

    நாயை மதிலோடு அடித்த நபர் – விலங்கிட்டு இழுத்து சென்ற போலீஸ்

    நபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாய் ஒன்றை வீதியில் சங்கிலியால்

    கட்டி இழுத்து சென்றார் ,அதன் பின்னர் அந்த நோயினை மதில் சுவருடன்

    சேர்த்து அடித்துளளார் ,இவரது தாக்குதலில் நாயானது பலத்த காயமடைந்துள்ளது

    மேற்படி காட்சியை அவ் வீதியால் சென்ற ஒருவர் படம்,பிடித்து விலங்கு

    பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைத்தார் ,அவர்கள் மேற்கொண்ட விசாரணையில்

    குறித்த நபர் கைது செய்து போலீசார் விலங்கிட்டு இழுத்து சென்றனர் ,


    செல்ல பிராணிகளை இவ்வாறு மிக கோரமாக வதை செய்யு நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்

      Posted in உலக செய்திகள்

      கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

      கொரனோ தாக்குதலில் அமெரிக்காவில் 2,303 மற்றும் இங்கிலாந்தில் 915 பேர் மரணம்

      இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி

      அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,303

      பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 84,552 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதேபோல பிரிட்டனில் 915 பேர் மரணமாகியும் 20,634 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      ,தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

      கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

      இலங்கையின் 73 டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் அடைத்து

      வைக்க பட்டிருந்த பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய

      சுமார் 146 கைதிகள் ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

      செய்ய படுகின்றனர் என சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது

      இவ்வாறு விடுவிக்க படுபவர்களில் தமிழர் பத்து வீதம் மட்டுமே

      என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

      Posted in Uncategorized

      129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

      129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

      இலங்கையையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சுமார்

      129 முக்கிய குற்றவாளிகள் என ஆளும் அரசு கருதும் 129 பேருக்கு

      இண்டர்போல் சிவப்பு அறிவித்தல் வெளியிட பட்டுள்ளது

      இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் நடவடிக்கையில்

      சர்வதேச போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in Uncategorized

      இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்

      இன்று இலங்கையின் 72டாவது சுதந்திர தினம்

      இன்று இலங்கையின் 72 டாவது சுதந்திரதினம் ஆகும் ,.கொழும்பு சுதந்திர

      சதுக்கத்தில் சுகாதார முறைமையை கடைபிடித்து இந்த வெற்றி நிகழ்வு

      கொண்டாட படுகிறது .கோட்டாவின் முதலாவது ஜனாதிபதி ஆட்சியின்

      முதலாவது சுதந்திர தின நிகழ்வாக உள்ளது ,இந்த நாளை

      தமிழர்கள் கறுப்பு நாளாக புறக்கணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

      கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்

      கிழக்கு லண்டன் பகுதியில் நபர் ஒருவர் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்

      குறித்த கஞ்சா செடிகளின் மணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதை

      அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,பறந்து

      வந்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்அங்கே கஞ்சா பண்ணை இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது

      உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் மிகவும் நேர்த்தியான முறையில்

      இவை வளர்க்க பட்டு வந்துள்ளது கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்

      மேலும் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      Posted in உலக செய்திகள்

      கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

      கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் அமெரிக்காவில் 3,999 மற்றும் லண்டனில் 1,322 பேர் மரணம்

      அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம் பெற்ற கொரனோ

      நோயின் தாக்குதல் உயிர்ப்பலி எண்ணிக்கை நான்காயிரத்தை

      எட்டியுள்ளது ,மேலும் இதே நாளில் 113,459 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

      அதேபோல இங்கிலாந்தில் 1,322 பேர் மரணமாகியும் 19,202 பேர்

      பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      தடுப்பூசிகள் போடப் பட்டு வருகின்ற போதும் ,உயிர்பலிகள்

      அதிகரித்து செல்வது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உலக செய்திகள்

      இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்

      இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்

      லெபனான் எல்லை பகுதியில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்

      உளவு விமானம் மீது ஹிஸ்புல்லா போராளிகள் குழுக்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்

      எனினும் இவர்களின் தாக்குதலில் இருந்து தமது விமான தப்பித்து

      தமது எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது

      எனினும் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை இலக்குகளை தாக்கி அழிக்கும்

      தீவிர நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு

      ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு

      அமெரிக்காவில் அளவும் அதிபர் பைடன் ஆட்சியில் அமர்ந்த நிலையில்

      ஈரானை மிரட்டும் வகையில் டிரம்பினால் அனுப்பி வைக்க பட்ட விமான

      தாங்கி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பன பாரசீக குடாவில் இருந்து உடனடியாக விலக்க பட்டுள்ளன

      ஈரானுடன் இணக்க பாட்டு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள

      பைடன் முயன்றுள்ள நிலையில் இந்த படை விலகல் இடம்பெறுகிறது

      எனினும் மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றுள்ள நிலையில் உடனடியாக

      ஜனநாயகவழிக்கு மியன்மார் செல்ல வேண்டும் என பைடன் மிரட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in உலக செய்திகள்

      புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

      புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா

      ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் பலப் படுத்தும் நோக்குடன்

      வானில் திர வாயுவில் இயங்கும் புதிய ரொக்கட் ,சாட்லைட்டை ஏவியுள்ளது

      திட்டமிட்ட படி தனது இலக்கை சென்றடைந்துள்ளது என தெரிவித்துள்ள

      ஈரான் இதன் மூலம் தமது எதிரிகளின் இலக்குகள் மற்றும் நாட்டின்

      பாதுகாப்பு பலமடங்கு மேல் உயர்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

      மேலும் சில புதிய சாட்லைட்டுகக்ளை வானில் ஏவும் முயற்சியிலும்

      அது ஈடு பட்டுள்ளது

      ஈரானின் இந்த திடீர் அசுர வளர்ச்சி அமெரிக்கா ஏமாற்றும்

      இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

      Posted in Uncategorized

      நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

      நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

      தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட

      முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.


      ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில்

      இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

      தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது.

      அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி

      உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு

      சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.

      வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல்

      குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது.

      நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.

      நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

      எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட

      பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும்.

      அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால்

      வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை

      பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.

      விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும்.

      அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள்

      நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள்

      கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.

      வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக

      தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும்

      நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா

      பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம்

      செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர

      நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.

      வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக

      செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி.

      தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.

        Posted in Uncategorized

        வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர் video

        வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர் video

        வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ்

        புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

        இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.

        இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா

        , டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

        யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன்

        ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை

        எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

        இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.

        பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது.

        மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை

        சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்.

        Posted in Uncategorized

        கணவரை உளவு பார்க்கும் அந்த நடிகை

        கணவரை உளவு பார்க்கும் அந்த நடிகை

        தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு

        படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு

        நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

        திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

        சமந்தா

        சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தனது

        ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, ரசிகர் ஒரு ரகசியத்தை கூறுமாறு

        கேட்க, அப்போது “யாருக்கும் சொல்லாத ரகசியத்தை இங்கே உங்களிடம்

        சொல்கிறேன்.. நான் ஏன் ஜிம்மில் இணைந்தேன் தெரியுமா..? ஏன்னா

        என் கணவர் நாகசைதன்யாவும் இந்த ஜிம்தான். அவர் இங்கே என்ன

        செய்கிறார், நிஜாமாகவே வொர்க் அவுட் செய்கிறாரா என கணவரை

        உளவு பார்க்கத்தான் இந்த ஜிம்மில் சேர்ந்தேன்” என தான் ஜிம்மில் இணைந்தது ஏன் என்பது குறித்த ரகசியத்தையும் போட்டு உடைத்தார்

        Posted in Uncategorized

        தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ video

        தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ

        தனது காலத்தில் தமிழீழம் அமைய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார் ,தமிழர் தேசிய விடுதலை அழிந்து போக உழைத்தவர் ,பல காட்டி கொடுப்புக்களை நடத்திய அதே வைகோ இப்பொழுது இப்படி பேசுகிறார்

        Posted in Uncategorized

        காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்

        காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்

        அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் நபர் ஒருவர் வீடு மாறியுளளார் ,அப்பொழுது

        அந்த வீட்டில் உள்ள பொருட்களை தனது கொண்ட ரக காரின் ஊடாக

        எடுத்து செல்ல முயன்றார் ,அபபோது நான்கு மடங்கு அதிகமாக

        காரின் கூரைக்கு மேல் பொருட்களை வைத்து எடுத்து சென்றுள்ளார்

        இதை படம் பிடித்த ஒருவர் அதனை வெளியிட்டார் ,மேற்படி காட்சி தற்போது

        சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ,மேலும் குறித்த சாரதியை போலீசார் துரத்தி சென்றனர்

        Posted in Uncategorized

        இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா அரசு தீர்மானம்.

        இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா

        அரசு தீர்மானம்.

        ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்

        சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையை

        அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக

        அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

        Posted in Uncategorized

        கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

        கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு

        பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)

        மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு

        மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்

        வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

        இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை

        பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப்

        வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும்

        13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

        இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி

        மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள்

        தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.

        Posted in Uncategorized

        அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் மரணம்

        மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று (3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற

        விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம்.

        சல்மான் (வயது-29) என்பவர் உயிரிழந்துள்ளார்.

        குறித்த விபத்து அடம்பன் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

        உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனவும்,

        அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதியே விபத்திற்கு உள்ளாகியது.

        இதன் போது படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

        சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

        அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து வீடு நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

        மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in Uncategorized

        இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

        இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ

        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை

        ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை

        கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்

        ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்

        அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது