குட் நியூஸ் சொன்ன நதியா
குட் நியூஸ் சொன்ன நதியா
மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். அதன்படி திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.
‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் பூர்ணாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகை நதியா திரிஷ்யம் 2 ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
தனக்கு மேக்கப் செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் ஆஷா சரத் நடித்த போலீஸ் வேடத்தில் நதியா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரைசாவின் காதலர் இவரா?
ரைசாவின் காதலர் இவரா?
தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடிப்பில்
வெளியான ’பியார் பிரேமா காதல்’ படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார். சமீபத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். தற்போது ரைசாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரைசா
ஒருவர் மடியில் ரைசா உட்கார்ந்துக் கொண்டு நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ரைசா காதலில் விழுந்துவிட்டதாகவும், காதலர் வெளிநாட்டை நேர்ந்தவர் என்றும் கூறி வருகிறார்கள்.
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
மீன் தொட்டியில் விழுந்து குழந்தை மரணம்
வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேந்த ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ
கிளிநொச்சி, வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
எனினும், ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்இ கத்திக் குத்துக்கு இலக்காகி இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில், கடந்த 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கத்திக்குத்தில்,
அருளம்பலம் துஷ்யந்தன் பலியானார். இந்நிலையிலேயே, கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துச்செல்வதற்காக, பொலிஸாரின் பாதுகாப்புடன் உறவினர்கள் சிலர், அங்கு சென்றுள்ளனர்.
இதையறிந்த, கத்திக்குத்துக்கு இலக்காகி மரணித்தவரின் மனைவியும் சகோதரிகளும் ஒருசில கிராம மக்களும் ஒன்றுதிரண்டு, இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து, பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையிலேயே, சந்தேகநபரின் வீட்டைத் தீவைத்து சிலர் கொளுத்தியுள்ளனர். இதையடுத்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். காயங்களுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்
போலி பொலிஸ் அதிகாரி- மடக்கிய ரியல் பொலிஸ்
தன்னை உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டி, பொல்வத்தை பகுதியில் பொலிஸாரால் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மேற்படி சந்தேக நபர் பொலிஸ் சீருடை அணிந்த தனது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா
சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா
.சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் முடிவில் தென்மேற்கு சீனாவில் 4 கிலோ மீற்றர் கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள்
இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுடன்
தொடர்புடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸானது கொரோனா வைரஸின் மரபணுவை சுமந்திருந்தது என்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா
அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு
படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று முன்தினம் (மார்ச் 14) சோதனையிடப்பட்டது.
கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸாருடன் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார்.
வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, தொழில்முனைவோரின் நிதிப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தொடர்புடைய வங்கிகளுடன் இணைந்து இறுதி முடிவை எட்டுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
இது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எந்தவொரு தரப்பும் பாதிக்கப்படாத வகையில் அவற்றைத் தீர்ப்பது முக்கியம் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத எந்தவொரு தரப்பினருக்கும், வங்கி தரப்பிற்கும் இடையில் நியாயமான முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் தலையீடு தேவை என்று தெரிவித்த பிரதமர், இது தொடர்பாக சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்ட அரசு நிறுவனம் அல்லது அதிகாரியை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதன் மூலம் லீசிங் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் பொருந்தும் கடன் வழங்குநர்களுக்கு நிவாரணம் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
ஆறு வயது சிறுமியை கொன்று வீசிய 14 வயது சிறுவன்
ஆறு வயது சிறுமியை கொன்று வீசிய 14 வயது சிறுவன்
அமெரிக்கா வடக்கு இண்டியான பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார் ,இவரை தேடி அருகில் உளள கட்டு பகுதிக்குள் நூறு பேர் தேடுதலில் ஈடுபட்டனர்
அப்பொழுது அந்த சிறுமி சடலமாக மீட்க பட்டார்
சடலமாக மீட்க பட்ட பின்னர் அவரது கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்க படும் 14 வயது சிறுவன் கைது
செய்ய பட்டு பின்னர் விடுவிக்க பட்டுளளார் ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி
கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
டாப்சி அளித்த பேட்டி வருமாறு: சினிமாவுக்கு வந்த புதிதில் மளமளவென பட வாய்ப்புகளை ஒப்புக்கொண்டேன். அதனால் என்மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை விழுந்தது.
கவர்ச்சியாக கதாநாயகனுடன் சேர்ந்து ஆடுவது, பாடுவது, செடியையும், மரத்தையும் சுற்றி ஓடுவது என்று இருந்தால் வளர முடியாது என்பதையும், எனக்கு இருக்கிற திறமைக்கு இப்படி நடிப்பது சரியல்ல என்றும் புரிந்தேன்.
ஆனாலும் கண்ணை முடி திறப்பதற்குள் மூன்று வருடங்கள் அதுமாதிரி நடித்து விட்டேன். அப்படி நடிப்பது பிடிக்கவில்லை.
கதாநாயகி என்பதை விட நடிகையாக ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னிந்திய பட உலகில் எனது கனவு நிறைவேறவில்லை. அதனால் இந்தியில் முயற்சிகளை தொடங்கினேன்.
டாப்சி
இப்போது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரையை அழித்து விட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய நடிகையாக பெயர் வாங்கி விட்டேன்.
கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த வனிதா
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்தகன் பட போஸ்டர்
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதேபோல் அனல்காற்று, 2கே அழகான காதல் போன்ற படங்களிலும் வனிதா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி
சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் காமெடி நடிகர் மயில்சாமி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும்
தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும் ஒரு சிலர் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டு, தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
மயில்சாமி
எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது ஏன்?- பிரேமலதா பரபரப்பு பேட்டி
பிரேமலதா
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2011-ல் அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தது. அப்போது, அவர்களுடன் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.க. சார்பில் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. உடனே, தே.மு.தி.க. சார்பில் கொடும்பாவி எரிக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் நடத்தப்பட்டது. உடனடியாக, ஜெயலலிதா தனது
சுற்றுபயணத்தை ரத்து செய்துவிட்டு, விஜயகாந்த் வந்தால் தான் நான் பிரசாரத்துக்கே செல்வேன் என்று சொல்லி விஜயகாந்தை சந்தித்து 41 தொகுதிகளை கொடுத்து சிறப்பான கூட்டணி அமைத்து, அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சி, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் அமர்ந்தது அனைவருக்கும் தெரியும்.
இப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாகத்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் கூட்டணிக்கு வந்தார். நாங்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு செல்லவில்லை.
விஜயகாந்தை அனைவரும் வந்து சந்தித்தார்கள். அதன்பிறகு கூட்டணி உருவானது. நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் கால தாமதமாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுவும் நாங்கள் விரும்பாத தொகுதிகளை கடைசி நேர கட்டாயத்தால் அப்போது ஏற்றுக்கொண்டோம். அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.
அந்த நிகழ்வு மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த முறை பேச்சுவார்த்தையை டிசம்பரிலேயே ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் காலதாமதப்படுத்தினார்கள். கடைசி நிமிடம் வரை எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்ற எண்ணிக்கையும், தொகுதிகளின் பெயர் பட்டியலும் இறுதி செய்யப்படவில்லை.
அவர்கள், தே.மு.தி.க.வை அழைத்து பேசுவதற்கு பதில் மற்ற கட்சிகளை அழைத்து பேசி வந்தார்கள். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தே.மு.தி.க.வுக்கு பக்குவம் இல்லை என்றும், பக்குவமற்ற அரசியலை தே.மு.தி.க. மேற்கொண்டு வருகிறது என்றும் கூறி உள்ளார்.
இப்போது கூறுகிறேன், கூட்டணியை உருவாக்கி 41 தொகுதிகளை வழங்கி வெற்றிக்கூட்டணியாக மாற்றியது ஜெயலலிதா தான். அந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை.
எடப்பாடி பழனிசாமி
அவர்கள் பா.ம.க., பா.ஜ.க.வினரை அழைத்து பேசிவிட்டு, தே.மு.தி.க.வை கடைசியில் அழைத்து பேசினார்கள். எல்லோரையும் ஒரே நேரத்தில் அழைத்து பேசி தொகுதிகளை ஒதுக்கீடு
செய்யுங்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அவர்கள் பரிசீலிக்கவில்லை. உண்மையிலேயே இந்த கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றும் பக்குவம் இல்லாத முதல்-அமைச்சராகத்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார்.
இறுதிகட்ட பேச்சுவார்த்தையின் போதும் அவர்கள் 12, 13 தொகுதியில் இருந்து மேலே ஏறி வரவில்லை. இதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் 41 இடங்களில் இருந்து
குறைத்து 25 என்று பேசி இந்த கூட்டணி சுமுகமாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை பேசி மிக மிக விட்டுக்கொடுத்தோம். கடைசியில் 18 சட்டமன்ற தொகுதியும் 1 மாநிலங்களவை உறுப்பினரும் கொடுங்கள் என்று இறுதியாக விஜயகாந்த் கூறியதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தோம்.
விஜயகாந்த்
ஆனால், அவர்கள் 13 தொகுதியில் இருந்து இறங்கி வரவில்லை. கடைசியில் நாங்கள் அதற்கும் ஒத்திசைந்து, எந்தெந்த தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கேட்டதற்கு அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல், முதலில் நீங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கள் அதற்கு பிறகு எந்தெந்த தொகுதி என்று சொல்கிறோம் என்றார்கள். இதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் உடன்படவில்லை.
எனவே, இந்த கூட்டணியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகிக்கொள்கிறோம் என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
அதன்பிறகு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி, டி.வி.தினகரன் எங்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தே.மு.தி.க-அ.ம.மு.க. கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெற்று தமிழக அரசியலில் ஒரு சரித்திரம் படைக்கும். இந்த கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தான்.
தேர்தல் பிரசாரத்தில் எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் ஈடுபடுவார்கள். இறுதிகட்ட பிரசாரத்தில் விஜயகாந்தும் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த் உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நன்றாக இருக்கிறார். பிரசாரத்துக்கு எல்லாம் வருவார். இன்னும் சிறிது காலம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களின் அறிவுரைப்படி விஜயகாந்த் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இது ஒட்டுமொத்த தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தெரியும். விஜயகாந்த் ஓய்வெடுத்து மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் வீறுகொண்டு எழுந்து தே.மு.தி.க. என்ன நோக்கத்திற்கு தொடங்கப்பட்டதோ? அதை அடைவார்” என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது, தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
பனியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா – விமான நிலையங்கள் அடித்து பூட்டு
அமெரிக்காவில் மூன்று அடிக்கு மேலான சினோ பொழிந்து வருவதால் மிக முக்கிய விமான நிலையமாக விளங்கும் Denver’s airport அடித்து பூட்ட பட்டுள்ளது
தொடர்ந்து எங்கும் சினோ பொழிந்து வருகிறது ,இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
உண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டு கோளை யும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும்
நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார்.
அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில்
பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே, திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார். இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றி அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும்.
ஓட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும்
கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.
நிகழ்வினை இயன்ற மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன்
ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகை செல்வக்குமாரின் வெற்றியுரையம் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நேற்று அம்பிகைசெல்வக்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அம்பிகையின் ஆதரவு
மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது எனவே போராட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் நேற்று பி.ப. 3 மணிக்கு ஆரம்பமான மெய்நிகர் நிகழ்வில் Earling ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை ஒளிபரப்பப்பட்டதுடன் Enfield நாகபூசணி அம்மன் ஆலய குருக்கள் கமலநாதன் அமெரிக்காவிலிருந்து அருட்தந்தை றொகான் டொமினிக் மற்றும் தமிழகத்திலிருந்து ஷாகுல் ஹமிதத்தின் புதல்வி பாத்திமா பஹானா ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி அவர்களின் ஆதரவு அறிகை தொடர்பான கண்ணோட்டமும் தாயகத்திலிருந்து தமிழர் மரபுரிமை பேரவையின் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், அனைத்துலக மக்களவை சார்பில் திரு. கோபாலபிள்ளை ஜெயசங்கர், ஜேர்மனிலிருந்து வழக்கறிஞர் மாற்றி தேவதாஸ், திருமதி வாசுகி
சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு. சென் கந்தையா ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
அத்துடன் ஈழ பாரதி எனும் ஈழக்கவிஞர் யூட் நிக்சன் எட்வேட்டின் கவிதையும் சிறப்புப் பாடல்களும்இ கனடாவிலிருந்து சிறப்பு நடனம் இடம்பெற்றிருந்தன
17 ஆவதும் இறுதி நாளுமாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம்
மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல உருத்திரகுமாரன் !
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டதேயன்றி, தமிழர்களின் நீதிக்கானதல்ல தீர்மான வரைவு : பிரதமர் விஉருத்திரகுமாரன் !
சிறிலங்காவில் ஓர் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவ அவர் தெரிவித்துள்ளார்.
தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி (Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all allegations of gross human rights violations and serious violations of international humanitarian law, including for long- standing emblematic cases ) , ,இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள், சாட்சியங்கள், ஆதாரத் திரட்டல்கள் ஊடாக அமைந்த OISL அறிக்கை, பின்னராக முன்வைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் யாவற்றையும் கடந்து, புதிய தீர்மான வரைவானது நிலைமைகளை மேலும் பின்னோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளதெனவும் அவர் தெரவித்துள்ளார்.
ஏற்கனவே ஐ.நாவின் நிறையவே ஆதாரங்கள், சாட்சிகள் உள்ள நிலையில், புதிதாக சாட்சியங்கள், ஆதாரங்களை திரட்டுவதற்கான பொறிமுறையினை மீளவும் ஐ.நா ஆணையாளர் அவலுவலகத்திடம் கொடுத்து காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாக இது தீர்மான வரை அமைவதோடு, நீதித்துறையினை நோக்கிய செயல்முறை தெளிவாக முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை கோரியிருந்தது. ஆனால் இந்த தீர்மான வரைவானது , சர்வதேச நியமங்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வு செய்யுங்கள் சிறிலங்கா அரசிடம் கோருகின்றது.
தமிழ் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட சிற்சில விடயங்கள் மேலோட்டமாக பூச்சுவேலைகள் போல் உள்ளடக்கப்பட்டுள்ளதன்றி, பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைக் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளதாக தீர்மான வரைவு அமையவில்லை எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா, தொடர்பில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணையவழி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுப் போதே இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்
உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது
இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து
நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை
முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்
ஆயுதமுனையில் மக்கள் ,சிறுவர்களை கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகள்
நையீரியாவில் ஆயுதமுனையில் மக்களை கடத்திய தீவிரவாதிகள் தாம் சிறைபிடித்துள்ள கைதிகளை காட்சி படுத்தி காணொளியாக வெளியிட்டுள்ளனர்
இதில அரசுக்கு பலத்த செய்தியை வழங்கியுள்ளனர்
ஆயுதமுனையில் உள்ளவர்கள் மிக பெரும் கலக்கத்தில் ,பயந்த நிலையில் உள்ளதை காணமுடிகிறது
துப்பாக்கி முனையில் வைக்க பட்டுள்ள இவர்களை மீட்க இராணுவ நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ள வேளையில் இந்த காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
விமானத்தில் அந்த வேலை செய்த வாலிபருக்கு $320,000 தண்டம்
அமெரிக்காவில் Landon Grier fஇருந்து Colorado நோக்கி பயணித்த பயணிகள் விமானத்தில் பயணித்த இருபது வயதுடைய வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார் ,
அது மட்டுமா அந்த விமானத்தின் விமானியின் அறைப்பகுதிக்குள் நுழைந்த அவர் சிறுநீர் கழித்துள்ளார் ,போதையில் அதிக தகராறு செய்த நிலையில் விமானம் அவசரமாக தரையிறக்க பட்டது
இவரை கைது செய்த உளவுத்துறையினர் நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் ,இவருக்கு இருபது வருட சிறை மட்டும் ,$320,000 தண்டம் விதிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு -இருவர் படுகொலை -13 பேர் காயம்
அமெரிக்கா தெற்கு சிக்காக்கோ பகுதியில் வீடு ஒன்றில் இடம் பெற்ற பாட்டி நிகழ்வில் கலந்து கொண்ட
நபர் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில் மரணமாகினர் ,மேலும் பதின்மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்
அதிகாலை 4,41 மணியளவில் அவசர மையத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார்
மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் பாதிக்க பட்ட மக்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் ,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
மேற்படி சூட்டு தாக்குதலை மேற்கொண்டவர் 20 முதல் 44 வயதுக்குள் உட்பட்டவர்கள் என
போலிஸார் தெரிவித்துள்ளனர்,மேற்படி சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது








