Posted in Uncategorized

ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை

ஏமானில் கடும் மோதல் – இராணுவ நீதிபதி உள்ளிட்ட 65 பேர் படுகொலை

ஏமான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் கவுதி படைகள் அரச

இராணுவத்தினரை கட்டு பாட்டு தளம் பகுதிகளுக்குள் நுளைந்து அகோர தாக்குதலை நடத்தினர்

இதில் அரச இராணுவத்தை சேர்ந்த நீதிபதி மற்றும் முக்கிய இராணுவ தளபதிகள் உள்ளிட்ட 65 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்

ஏமான் Kassara பகுதியை கவுதிய படைகள் முழு கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ,மேலும்

தொடர்ந்து தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஈரானின் ஆதரவுடனும் ,அவர்கள் ஆயுத பலத்துடனும் போராடி வரும் கவுதிய படைகள் சவூதி நாட்டிற்கு எதிராகவும்

தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்த திடீர் தாக்குதல்கள் மூலம் நகர்களை கைப்பேற்றியுள்ளது களமுனையில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது

ஏமானில் கடும் மோதல்
ஏமானில் கடும் மோதல்
    Posted in உலக செய்திகள்

    சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

    சைபிரஸ் கடற் பரப்பில் 69 லெபனான் அகதிகள் – மடக்கி பிடித்த இராணுவம்

    லெபனான் நாட்டை சேர்ந்த அறுபத்தி ஒன்பது சட்ட விரோத அகதிகள் பயணித்த படகு ஒன்றை

    சைப்பிரஸ் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

    இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

    ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக இத்தாலிய கடல் பரப்புக்குள் நுழைய முயன்ற 14 ஆயிரம்

    அப்பாவி மக்கள் கடலில் இறந்து பலியாகியமை குறிப்பிட தக்கது

    லெபனான் அகதிகள்
    லெபனான் அகதிகள்
    லெபனான் அகதிகள்
    லெபனான் அகதிகள்
      Posted in சினிமா

      பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்

      பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்

      நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

      பெயர் மாற்றமா? – நடிகை திரிஷா விளக்கம்
      திரிஷா


      தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் கைவசம் கர்ஜனை,

      சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

      நடிகை திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி-யில் வெளியானது. அந்தப் படத்தின் டைட்டில் கார்டில் திரிஷா என்பதற்கு பதிலாக ‘த்ர்ஷா’ என்று

      போட்டு இருந்தார்கள். இதை வைத்து நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக பேசப்பட்டது.

      திரிஷா

      இதுபற்றி நடிகை திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‘‘நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு அவசியமில்லை. ‘திரிஷா’ என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த

      பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்’’ என்று அவர் கூறினார்.

        Posted in Uncategorized

        நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

        நீர்மூழ்கி கப்பலில் 53 இராணுவத்தினர் மரணம் – கடல்படை அறிவிப்பு

        இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 இராணுவத்தினரும் பலியாகியுள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது

        மிகவும் திறமை வாய்ந்த கப்பலோடிகளை கொண்டு இயங்கி வந்த மேற்படி நீர்மூழ்கி 2.800 கடலடி

        ஆழத்தில் சிக்கியத்தில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

        கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதுடன் அருகில் சென்று முழுமையாக அந்த கப்பலை மீட்க முடியாத

        நிலையில் இராணுவம் திணறி வருகிறது ,இறந்தவர்கள் சடலங்கள் அழுகிய நிலையில் காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது

        தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அதில் இருந்து மீட்க பட்ட சில தடைய பொருட்களை கடற்படை காட்சி படுத்தியுள்ளது

        கடல்படை அறிவிப்பு
        கடல்படை அறிவிப்பு
          Posted in Uncategorized

          இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

          இலங்கை உள்ளே நுழையும் ஐநா புலானய்வு ,விசாரணை குழு -தடயங்கள் அழிக்கும் இலங்கை

          இலங்கையில் ஆளும் சகோதர ஆட்சியில் நடத்த பட்ட தமிழ் இன படு கொலைக்கு தீர்வு இதுவரை

          கிட்டவில்லை ,மேற்படி இனப்படுகொலை தொடர்பாக ஐநா மன்றில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

          உள் நாட்டுக்குள் நீதிக்குழுவை அமைத்து அதன் மூலம் பாதிக்க பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவதுடன் குற்றவாளிகள் தண்டிக்க படுவர் என்ற இலங்கையின் பசப்பு வார்த்தைகள்

          பொய்யாகி போன நிலையில் தற்போது ஐநாவின் விசேட விசாரணை ஆணைய குழு ஒன்று இலங்கைக்குள் நுழையவுள்ளது

          இதில் புலனாய்வாளர்களும் உள்ளடங்க படுகின்றனர்

          ஆறு மாத்திற்கு மேலாக இலங்கையில் தங்கி நின்று இவர்களினால் திரட்ட படும் தரவுகள் ,மற்றும் போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள செல்வார்கள்

          இதனால் இவர்கள் நுழைய முன்னர் முள்ளி வாய்க்கால் பகுதி எங்கும் உருமாற்றம் செய்யு நகர்வில் சிங்கள உளவாளிகள் ஈடுபட்டுள்ளனர்

          அதாவது தடயங்கள் அழிக்கும் தீவிர நகர்வில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் ,செய்மதி புகைப்படங்கள்;

          ஊடக இவற்றை முக்கிய நாடுகள் சில அவதானித்துள்ளதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன

          விசாரணை குழுவின் அறிக்கை இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் தடயத்தை வழங்கும் என அடித்து கூற படுகிறது

          இறுதிப்போர்
          இறுதிப்போர்
            Posted in Uncategorized

            முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம் photo

            முல்லையில் குண்டு வெடிப்பு ஒருவர் மரணம்

            முல்லைத்தீவு வட்டு வாகல் பாலத்திற்கு அருகில் குண்டு ஒன்று வெடித்ததில் சம்பவ இடத்தில்

            ஒருவர் பலியானார் மேலும் ஒருவர் படுகாயமடைந்த்துள்ளார்

            காணி ஒன்றுக்குள் இருந்த குண்டே இவ்வித வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

            தமிழர் பகுதிகளில் மீளவும் புலிகள் மீள் உருவாக்கம் இடம்பெறுவதாக சிங்கள இராணுவம்

            பரப்புரை புரிந்து வரும் இவ்வேளையில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

            குண்டு வெடிப்பு
            குண்டு வெடிப்பு
            குண்டு வெடிப்பு
            குண்டு வெடிப்பு
              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்

              இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்

              இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் இவ்வேளையில் வெளி நாடுகளில்

              இருந்து உல்லாச பாயணிகள் அதிகம் நுழைந்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது

              பல நாடுகள் இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் நாட்டவர்களை தமது நாடுகளுக்குள் நுழைவதற்கு

              தடை விதித்துள்ளன

              அவ்விதம் இருந்தும் இலங்கைக்கு இவ்விதம் உல்லாச பாயணிகள் வருகை வழமை போன்ற

              நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்க படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

                டெங்கு நோயால் 6,389 பேர் பாதிப்பு

                இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 6,389 ஆக உயந்துள்ளது

                நிகழ் காலத்தில் பரவி வரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டவர்களையு இந்த கணக்கில் இலங்கை அரசு இனைத்துள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது

                இவ்விதம் யாழ்ப்பாணத்தில் இறந்தவர்களை டெங்கு நோயின் தாக்குதலில் இறந்தார்கள் என

                சடலங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                  Posted in சினிமா

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை

                  தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் போட்டோ ஷூட் மட்டுமே எடுத்து வருகிறாராம்.

                  பட வாய்ப்பு இல்லையென்றாலும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கும் நடிகை
                  கிசுகிசு


                  தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிதமிழில்கை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து

                  விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

                  ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தாராம். இதை

                  நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இருப்பினும் நடிகை போட்டோ ஷூட் எடுப்பதை கைவிடவில்லையாம்.

                    Posted in சினிமா

                    ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா

                    ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதுல்யா

                    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                    சமூகவலைதளங்களில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்டது. கையில் இன்டர்நெட் இருந்தாலே போதும். பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு துவங்கி

                    அந்தக் கணக்குகளைத் தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். இது தொடர்பாக அந்த பிரபலத்தின் பெயருக்குத் தான் கலங்கம் ஏற்படுகிறது. இதனாலேயே பிரபலங்கள் தங்கள்

                    பெயரில் போலிக்கணக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே ரசிகர்களை எச்சரித்து விடுகின்றனர்.

                    தற்போது நடிகை அதுல்யாவும் இந்த பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


                    அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

                    அதுல்யா ரவி

                    “பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் துறையில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

                    இது மிகவும் மோசமானது. ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த ஐடி-யை ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

                    அதுல்யா ரவி
                    அதுல்யா ரவி
                    Posted in குற்ற செய்திகள்

                    காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை

                    காதலை எதிர்த்த அண்ணனை – ரவுடிகளை வைத்து கொன்ற நடிகை

                    காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

                    காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை
                    ஷான்யா


                    கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட

                    நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை

                    செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.

                    இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

                    இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின்

                    அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது

                    ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.

                    காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை

                    இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார்.

                    அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகம

                    து உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.

                    அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு

                    , துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

                    இதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா

                    கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.

                      Posted in Uncategorized

                      ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?

                      ஜப்பான் – அமெரிக்கா பிரான்ஸ் இணைந்து போர் ஒத்திகை – மிரளுமா சீனா ..?

                      ஜப்பன்நாட்டின் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள ,சமவேளை வட கொரியாவோ

                      ஜப்பான் கடல் மீது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வாறு போர் முஸ்தீபுகள் இடம்பெற்று வரும் நிலையில்

                      அமெரிக்கா ,பிரான்சுடன் இணைந்து ஜப்பான் இராணுவம் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ,


                      இரண்டாம் உலக போரில் வல்லமை வாய்ந்த இராணுவமாக செயல் பட்டது ஜப்பான் இராணுவம்

                      ,அவ்விதமான அந்த இராணுவ பலத்தை முறியடிக்க அமெரிக்கா அணுகுண்டுதாக்குதலை நடத்தியது

                      அவ்விதமான கசப்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்க கூடிய இவ்வேளையில் மீளவும்

                      அமெரிக்காவை நம்பி ஜப்பான் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றமை வரலாற்றின் மறுபகங்களை புரட்டி பார்க்க வைக்கிறது

                      போர் ஒத்திகை
                      போர் ஒத்திகை
                        Posted in உளவு செய்திகள்

                        ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

                        ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

                        ஈரானுக்கு சொந்தாமான எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவின் கடல்பகுதியில் பயணித்து

                        கொண்டிருந்த பொழுது அந்தகப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

                        இந்த தாக்குதலில் சிக்கி அந்த கப்பலியில் பயணித்த இரு மாலுமிகள் உள்ளிட்ட மூவர் மரணமாகியுள்ளனர் ,
                        மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

                        கப்பலுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன

                        இஸ்ரேல் கப்பல்களை ஈரானும் தாக்கிய நிலையில், அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக

                        ஈரான் கப்பல் இது மீளவும் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளது

                        இவ்வாறு பரந்து விரிந்து செல்லும் இரு நாடுகளின் தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை மூட்டி விடும் பதட்ட அதிகரித்துள்ளது

                        இந்த கப்பல் இது ஆள் இல்லா உளவு விமான மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        வரும் நாட்களில் இஸ்ரேல் கப்பல்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கலாம்

                        ஈரான் எண்ணைக் கப்பல்
                        ஈரான் எண்ணைக் கப்பல்
                        Posted in Uncategorized

                        வெடித்து சிதறிய மருத்துவமனை 82பேர் மரணம் – 49 பேர் காயம் VIDEO

                        வெடித்து சிதறிய மருத்துவமனை82பேர் மரணம் – 49 பேர் காயம்

                        ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது

                        இந்த வெடிப்பு பெரும் சத்தத்துடன் கேட்டதாவும் ,இவ்வேளை அங்கு சிகிச்சை பெற்று வந்த 27 நோயாளர்கள் பலியாகியுள்ளனர்


                        மேலும் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த வெடிப்பு ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்து

                        சிதறியாதல் ஏற்பட்ட அசம்பாவிதம் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

                        காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,


                        மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                        (663) Deadly fire tears through Baghdad Covid-19 hospital after oxygen tank explodes – YouTube

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

                          லண்டனில் போலீசார் மக்கள் மோதல்ஏழு காவல்துறையினர் காயம்

                          லண்டன் ஆக்ஸ்போர்ட் வீதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கும் போலீசாருக்கும்

                          இடையில் மோதல் வெடித்தது ,இதன் பொழுது ஏற்பட்ட மோதல்களில் ஏழு காவல்துறையினர்

                          படுகாயமடைந்தனர் .

                          போலீசாரை தாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில் அங்கு கமராவில் பதிவான காட்சிகளை வைத்து பலர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          காயங்களுக்கு உள்ளான ஏழு காவல்துறையினரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          https://twitter.com/i/status/1386020682790674432
                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                            யாழில் தீயில் எரிக்க பட்ட இளம் கர்ப்பிணி – சிகிச்சை பலனின்றி மரணம்

                            இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற இளம் கர்ப்பிணி தன்னை

                            தானே தீமூட்டி கொண்டார் என தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

                            எனினும் இவரது மரணத்தில் சநதேகம் இருப்பதால் அவரது கணவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                            இவரே மனைவியை எரியூட்டி இருக்லகலாம் என சந்தேகிக்க படுவதால் போலீசாரை தொடர்ந்து

                            விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                              Posted in Uncategorized

                              ஆயுதங்களுடன் 22 பேர் கைது – தொடரும் விசாரணை

                              ஆயுதங்களுடன் 22பேர் கைது – தொடரும் விசாரணை

                              இலங்கை இரத்தினபுரி பகுதியில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் என்பன மீட்க பட்டுள்ளன ,பொலிசார் மேற்கொண்ட திடீர் முற்றுகையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

                              கைதானவர்கள் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

                              மேலும் நிகழாக்கள் கொரனோ விதிகளை மீறிய குற்ற சாட்டில் 19 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                              ,இவ்விதம் கைதானவர்கள் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

                                அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு – மிரட்டும் படு கொலைகள்

                                இலங்கை திருகோணமலை குச்சவெளி பகுதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவ சடலமாக மீட்க பட்டுள்ளார்


                                இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் அடையாளம் கண்டறியும் பணியில் போலீசார் ஈடு பட்டுள்ளனர்

                                இந்த படுகொலைகாண காரணம் உடாண்டியாக தெரியவரவில்லை

                                கோட்டா ஆட்சியில் நாள்தோறும் இவ்வாறான மர்ம படுகொலைகள் நாடெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                                  இரண்டாவது நாளில் தடை நீக்கத்திற்கான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் !VIDEO

                                  வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் தொடங்கிய விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” இன்று

                                  சனிக்கிழமை இரண்டாவது நாளினை எட்டியுள்ளது. பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வரையிலான இந்நடைப்பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

                                  பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும்

                                  அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

                                  தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

                                  இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை www.lifttheban.uk இந்த இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

                                  தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக

                                  இருக்கின்ற நிலையில், இத்தடையினை நீக்கக் கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ்உறவுகள் வெளிப்படுத்தும் வகையில் எனும் இணையத்தளம் செயற்படத் தொடங்கியுள்ளது.

                                  நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமது தொகுதி

                                  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

                                  இது தொடர்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடங்கியுள்ள இந்த நடைப்பயணமானது பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தினை வந்தடையவுள்ளது.

                                  தாம் முன்னெடுத்துள்ள இந்நடைப்பயணத்திற்கான ஆதரவினை தெரிவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் குறித்த இணையத்தளத்துக்கு சென்று தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்துவே தமது வேண்டுகோளாக இருக்கின்றது என இந்நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

                                  https://youtu.be/mLCJ_bpSY3o
                                  பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

                                    பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி
                                    நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

                                    (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

                                    பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

                                    இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்.

                                    விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், மாலைதீவுக்கான தூதுவர் ஒமர் ரஸ்ஸாக், பிரதித் தூதுவர் அஸ்லம் சாகிர், சிறைச்சாலை ஆணையாளர் மலின் லியனகே, மனித

                                    உரிமைகள் அமைப்பின் ஆளுநர் எ.ஜே. மொஹமட் பாய்ஸ், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி எஸ். சந்திரசேகரம் ஆகியோருடன் பல உள்நாட்டு, வெளிநாட்டு கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.

                                    இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரையாற்றும் போது,

                                    எமது நாட்டிலுள்ள பல வளங்களை இன்னும் சரியாக நிர்வகிக்க முடியாத நிலை காணப்பட்டு வருகிறது என்றும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டுக்குப் புதிய துறைகளை கற்ற துறை சார்ந்தவர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள்.


                                    இதனை அரசாங்கத்தினால் மற்றும் செய்துவிட முடியாது எனவும் இன்று இலங்கையின் பொருளாதார கல்வி வளர்ச்சியில் கணிசமான பங்கினை தனியார் துறையினரே வழங்கி வருகின்றனர் என்றும் அந்த வகையில் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

                                    எதிர்வரும் ஆண்டுகளில் உலகிலேயே அதிகமாக தேவைப்படுகின்ற தொழிற்துறையான Robertic Engineering,Green Technology, Solor Technology, Hybrid technology, Cloud Computing, Automated System, Mobile

                                    Technology, Wireless technology, போன்ற துறைகளுடன் தொடர்புடைய பாடநெகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

                                    உலகை மாற்றுவதற்கான முதல் சக்தி கல்வி அறிவாகும். எவருக்கு நல்ல கல்வி அறிவு ஞானம் இருக்கிறதோ அவர்கள் எந்தத் துறையில் பயணித்தாலும் வெற்றி பெறுவது நிச்சயம். இந்த

                                    அடிப்படையில் பம்பலப்பிட்டி அமேசன் உயர்கல்வி நிறுவனம் சுமார் 10 வருடங்களாக ஏனைய கல்வி நிறுவனங்களை விடவும் மாறுபட்ட முறையில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                    அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி, பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                    வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மையமாகக் கொள்ளாமல், மாணவர்களுக்கிடையே
                                    சுய வேலைத்திட்டங்கள், (Individual Project)பயிற்சி பட்டறைகள் (practical workshops), வெளிநாட்டு மாணவர்களின் தொடர்பாடல், (Foreign Students exchange), பல உள்நாட்டு நிறுவனங்களுடன்

                                    ஒப்பந்தங்களை கை சாத்தி, மாணவர்களுக்கு Individual Training போன்றவற்றை வழங்கி தொழில் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயாரித்து அனுப்புவது விசேட அம்சமாகும்.

                                    இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 140 மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

                                    இவற்றில் உளவியலும் உளவளத்துணையும், ஆசிரியர் பயிற்சி நெறி,
                                    தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.

                                    நிகழ்வில் பங்கேற்ற அனைத்து அதிதிகளுக்கும், சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறந்த விரிவுரையாளர்களுக்கும் , இணை நிறுவனங்களுக்கும் விசேட

                                    நினைவுச்சின்னங்கள் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இல்ஹாம் மரைக்காரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

                                    அமேசன் உயர் கல்வி

                                    அமேசன் உயர் கல்வி