Posted in சீமான் பேச்சு

சீமானுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் – video

சீமானுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் – video

நீங்கள் சொல்வது சரியான உண்மையை ஐயா
நான் கடந்த 2014ஆம் ஆண்டு சீமான் அண்ணாவை சந்திக்கப் போனபோது மதிய சாப்பாட்டுக்கு

காட்சிகளையும் சோறும் தந்து அனுப்பினார் மிகவும் சிறந்த மனிதர்


அதுமட்டுமல்ல அப்போது இருந்த அனைத்து பேருடனும் சேர்ந்து அவரும் சாப்பிட்டார்
எதார்த்தமான மனிதன் எனக்கு எப்போதுமே பிடித்த ஒரு தலைவர்

click here vidfeo

Posted in சீமான் பேச்சு

அமீர் சொல்லும் சீமானின் அன்பு முகம்

அமீர் சொல்லும் சீமானின் அன்பு முகம்

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தொடர்பாக அமீர் அவர்கள் பேசிய பேச்சு ,


சீமான் எப்படியானவ ,என்ன நடக்கும் ,[போட்டுடைத்த அமீன்

clcik here video

Posted in சீமான் பேச்சு

அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன் கூடியே கணித்த சீமான் ,


இவரது முற்போக்கு சித்தனை சாத்தியமானது என்பது இது தாங்க

Posted in உளவு செய்திகள்

மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்

மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்

பாலஸ்தீனம் வேஸ்ட்பாங் பகுதியில் சற்று முன்னர் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம்

அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது ,இதில் இருபத்தி ஆறு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

,மேலும் எழுபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இனப் படுகொலையை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது ,

ரசியா அதிபர் உடனடியாக இஸ்ரேல் ,பலஸ்தீனம் போர் நிறுத்ததுக்கு செல்ல வேண்டும் எனவும் ,மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது

ஆனால் உலக நாடுகளின் கோரிக்கையை மதிக்காது இஸ்ரேல் தனது கொலை வெறி தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்

இரு அமெரிக்கா இராணுவ போர் விமானங்கள் வானில் மோதி சிதறல்

அமெரிக்கா கடல் படைக்கு சொந்தமான இரண்டு கடற்படை விமான ஜெட் நேரெதிர் மோதி சிதறின ,

பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.PHOTO IN

    இனப்படுகொலைக்கான நீதி வேண்டி பிரிட்டனிடம் கோரிக்கை முன்வைப்பு.

    18/05/2021

    பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

    ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில்

    படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள்.

    மே 2009 சிறிலங்கா அரசின்இனவெறித் தாண்டவத்தின்உச்ச கட்டம் எனபது உலகறிந்த உண்மை. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் ஈழத்திலுள்ள சமூக அமைப்புகளும் மே 2009 இல் காணாமல்

    ஆக்கப்பட்ட 146,679 தமிழ் மக்கள் இன்றும் கணக்கிடப்படாமல் உள்ளார்கள் என வருத்தம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறார்கள்.

    முள்ளிவாய்க்கால் படுகொலையில் இருந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று அப்பாவித் தமிழ் மக்கள் இனவெறி அரசாங்கத்தால் ‘பாதுகாப்பு வலையத்துக்குள்’ திட்டமிட்டு தள்ளப்பட்டு

    சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட இரசான ஆயுதங்களாலும் கொத்துக் குண்டுகளாலும் கொல்லப் பட்டார்கள்.

    பசி என ஒரு வேளை உணராது தம் உழைப்பால் உணவருந்தி இயற்கையோடு செறிந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் உண்ண உணவின்றி இறுதியில் கஞ்சிக்கு

    வரிசையில் கையேந்தி நின்றார்கள். ஆனால் சர்வதேசங்கள் நடப்பவற்றை நன்கு அறிந்தும் இனப்படுகொலையை நிறுத்தத் தவறியது. தொடர்ந்தும் அதற்கான நீதியை நாம் பெற பல வழிகளில் சதிகள் செய்து நீதி மறுக்கப்படுகின்றது.

    போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் 20க்கும் மேற்பட்ட பிரித்தானிய பல்கலைக்கழக தமிழ் சங்கங்களும் இணைந்து

    மதிப்பிற்குரிய Rt Hon Dominic Raab MP அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளார்கள்.

    கோரிக்கைகள் பின்வருமாறு :

     1. இன்றும் இலங்கை அரசாங்கத்தால் தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் செயல்களை இனவழிப்பு என இனங்காணப்பட வேண்டும். 
    
    2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த பரிந்துரை செய்ய வேண்டும் அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு தற்காலிக தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும்.
    
    3.  தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்களின் நியாயமான அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.  

    ஐக்கிய இராச்சியத் தமிழ் இளையோர்கள் ஆகிய நாம் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் எதை இழந்தோமென்றும் எதற்காக போராடுகின்றோமென்றும் உலகத்திற்கு

    எடுத்துக்கூறினார்கள். உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் இளையோர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் நடத்தப்படும் இனப்படுகொலையையும், இன அழிப்பையும், அடக்குமுறையையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள்.

    தமிழீழம் அடையும் வரை இந்த எழுச்சி தொடரும்!

    “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

    முள்ளி வாய்க்கால்
      Posted in Uncategorized

      தமிழர்களை கொன்ற 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு

      தமிழர்களை கொன்ற சிங்கள இராணுவ 452 அதிகாரிகள் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு

      சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது ,

      இவ்வேளை இதே தமிழர்களையும் ,புலிகளையும் கொன்று குவித்த 452 உயர் அதிகாரிகள் ,மற்றும் 4289 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டு கவுரவிக்க பட்டுள்ளனர்

      போர்க்குற்ற இன அழிப்பில் ஈடுபட்ட இந்த கொடிய படைகளுக்கு இதுவரை தண்டனை கிடைக்க

      பெறவில்லை என்பது உலக அநீதியின் உச்சமாக பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது

        கல்குடாவில் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் 10 பேர் கைது

        சிங்கள அரச பயங்கரவாதத்தால் தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .இவர்கள் நடத்திய இன படு கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை

        தொடர்ந்தும் தமிழர்களை சிங்கள பவுத்த போரினவாதம் புலிகள் என்ற போர்வையில் கைது

        செய்து வருகின்றனர் ,கல்குடா பகுதியில் முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை ,நினைவு கூர்ந்த

        இரு பெண்கள் உள்ளிட்ட பத்து தமிழர்கள் தலைவர் பிரபாகரனை நினைவு கூர்ந்தனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

          Posted in சினிமா

          உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு

          உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு

          சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு தினமும் பார்சலில் உணவு வழங்கி உதவி உள்ளார் யோகிபாபு பட தயாரிப்பாளர்.

          கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

          அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது.

          ஏழை மக்களுக்கு உணவு வழங்கியபோது எடுத்த புகைப்படம்

          இந்நிறுவனம், தற்போது தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

          சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு பார்சலில் உணவு மற்றும் ஜூஸ் வழங்கி வருகின்றனர். டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம்

          நடத்தி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

            Posted in சினிமா

            நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

            நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு

            தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் நயன்தாரா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு

            ஜோடியாக நடித்துள்ள இவர், இடையிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.

            நயன்தாராவை முதன்மைப்படுத்தி வந்த அறம் படம், அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

            இதையடுத்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

            நயன்தாரா

            நடிகை நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு கதாநாயகிக்கு

            முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு எடுத்து கதை கேட்டு வருகிறாராம்

            நயன்தாரா. தற்போது அவர் கைவசம் உள்ள நெற்றிக்கண் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

              Posted in சினிமா

              ஷங்கரின் தாயார் இன்று காலமானார்

              ஷங்கரின் தாயார் இன்று காலமானார்

              தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ்.

              முத்துலட்சுமி, 88 வயதான இவர் இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர்

              உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              ஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                லண்டன் பாராளுமன்றம் -லீவர் பூல் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே


                லண்டன் பாராளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் போராட்டம் – படங்கள் உள்ளே

                இன்று 18-05-2021 மதியம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில், லீவர் பூல் லைம் ஸ்ட்ரீட் முன்பாகவும் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள்

                என்ற அமைப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவு நிகழ்வை நடத்தினர் ,மதியம் ஒருமணி முதல் இரண்டு மணிவரை இந்த நிகழ்வு இடம்பெற்றது

                இலங்கையில் அடக்குமுறைக்கு உள்ளாக்க படும் தமிழர்களுக்கான விடுதலை ,காணாமல் போனவர்கள்

                விடுதலை ,மற்றும் முள்ளி வாய்க்காலில் சிங்கள இன படுகொலைக்கு நீதி என்பனவற்றை வேண்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது

                காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க ,நிகழ்கால கொரனோ விதிகளை கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                உலகம் தழுவிய நிலையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய பட்ட அப்பாவி மக்கள் நினைவுகூற படுகின்றனர் .12 ஆண்டுகளை கடந்த பொழுதும் இதுவரை இந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பது வேதனையாகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

                  கொரோனாவால் டாக்டர் சத்திய மூர்த்தி மரணம்

                  இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே பதிவு செய்து உள்ளனர்.

                  இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34

                  பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் உயிர் இழந்துள்ளனர்.இந்த டாக்டர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டது.

                  இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் ஐந்து மாதங்கள் கழித்து, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி

                  போட்டுக்கொள்ள டாக்டர்களை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

                  இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் கே கே அகர்வால் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

                  இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இந்திய மருத்துவ

                  சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                    இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                    மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

                    ஏழாவது ஆண்டாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதோடு, உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வொன்றினை இந்நாளில் ஏற்பாடு செய்துள்ளது.

                    2012 முதல் 2020 ஆண்டு வரை இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றிய Adama Dieng அவர்கள், 1995-2001 ஆண்டுகளில் கெய்ரி நாட்டுக்கான ஐ.நாவின் சிறப்பு

                    பிரதிநிதியாக பணியாற்றியிருந்தவர்.1982-1990 காலங்களில் அனைத்துலக நீதிபதிகள் ஆணையத்திலும் பங்கெடுத்திருந்தவர் மட்டுமல்லாது, 45க்கும் மேற்பட்ட கருத்தாக்கங்களை பதிப்பாக வெளியிட்டவர்.

                    பல்வேறு ஆளுமைகளை கொண்ட Adama Dieng அவர்கள் பங்கெடுக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, 18-05-2021 செவ்வாய்க்கிழமை New York 2 PM / UK : 7 PM / EU : 8 PM நேரத்துக்கு இடம்பெற இருக்கின்றது.

                    இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

                    இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு நியு யோர்க் நேரம் காலை 10 மணிக்கு (UK : 7 PM / EU : 8 PM) தொடங்குகின்றது.

                    பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்.

                    உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பது பல நாடுகளில் சவாலாக மாறியுள்ள நிலையில், இணையவழியே உலகளாவிய நிகழ்வாக இவ்விரு நிகழ்வுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

                    எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி

                    நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக நினைவேந்துவது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக

                    இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால்

                    கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாhக நினைவேந்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

                    • இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
                    • ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த
                    • சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை
                    • நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றை
                    • தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட
                    • கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால்
                    • இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                    ஊடகங்களுக்கான நேரஞ்சல் இணைப்புக்கு :

                    https://youtu.be/jhsmXffKvz4
                      Posted in இலங்கை செய்திகள்

                      துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்

                      துணுக்காயில் ஆலயம் உடைத்து – விஷமிகள் அட்டகாசம்

                      இலங்கை துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில் விசமிகள் நடத்திய தாக்குதலில் அந்த ஆலயம் முற்றாக சேதமாக்க பட்டுள்ளது

                      மேற்படி தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்ட நபரை கைது செய்யும் நடவடிக்கையில்

                      போலீசார் ஈடுபட்டுள்ளனராம்

                        Posted in Uncategorized

                        அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்

                        அரச இணையங்கள் நான்கின் மீது சைபர் தாக்குதல்

                        இலங்கையின் அரச இணையதளங்கள்நான்கின் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

                        இதில் அந்த சில மணிநேரம் செயல்பாடாது இருந்து ,தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறலாம் என முன்னர் அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு

                          சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு

                          சிங்கள இனவாத ஆளும் அரசினால் முள்ளிவாய்கால் மக்கள் படுகொலை செய்ய பட்ட நாளினை நினைவு கூற சிங்கள அரசு தடை விதித்துள்ளது

                          முல்லைதீவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் ,முள்ளி வாய்க்கால் தனிமை படுத்த பட்ட

                          பகுதியாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            பருத்துறை மீன் சந்தை அடித்து பூட்டு – மக்கள் அவதி

                            பருத்துறை மீன் சந்தை அடித்து பூட்டு – மக்கள் அவதி

                            இலங்கை யாழ்ப்பாணம் பருத்துறை மீன் சந்தை சுகாதார விதிமுறைகளை பினற்ற தவறிய

                            நிலையில் அந்த சந்தை தற்காலிகமா அடித்து மூடப்பட்டுள்ளது

                            நிகழ்கால கொரனோ பரவல் விதிகள் இங்கு செழுமையாக நடைமுறை படுத்த தவறிய நிலையில்

                            இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம்

                              Posted in இலங்கை செய்திகள்

                              போலீசர் வேட்டை 223 பேர் கைது

                              போலீசர் வேட்டை 223 பேர் கைது

                              இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை பின்பற்ற தவறிய 233 பேர் கவல்த்துறையினரால்

                              கைது செய்ய பட்டுள்ளனர்

                              கைதானவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாது உலவினர் என்ற குற்ற சாட்டில்

                              கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in சினிமா

                                கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

                                கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்

                                கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில்

                                நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார்.

                                ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல்

                                குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது.

                                கீர்த்தி சுரேஷ், நிதின்

                                இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன்

                                நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                                அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இப்படி நடித்துள்ளார்? என்று வியந்ததுடன், இனிமேல் அவரை படங்களில் கவர்ச்சியாக பார்க்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.