Posted in Uncategorized

அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு

அணுகுண்டுகள் தாங்கிய சீன விமானங்கள் -தாய்வான் மேலாக பறப்பு

தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடும் பனிப்போர் இடம்பெற்று வரும் நிலையில்


தற்போது சீனா தனது அணுகுண்டுகளை காவிய விமானங்களை எல்லையோரத்தில் பறக்க விட்டுள்ளது


இந்த விமானங்கள் திடீர் நுழைவால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் இராணுவம் , தாய்வான் எல்லையில் குவிக்க பட்டுள்ள நிலையில் இந்த
அதிரடி இராணுவ நகர்வை சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

    வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

    கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது.

    அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது.

    முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.

    பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே

    இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.

    அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் வினவினார்.

      Posted in இலங்கை செய்திகள்

      கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது

      கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது

      தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற, 19 வயது ஒருவர், இன்று (06) காலை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

      முல்லைத்தீவு – முள்ளியவளை  பகுதியைச் சேர்ந்த  சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

      குறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது,  இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.

      அங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால்,  2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

      விசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

      இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் குறித்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று (6) அதிகாலை, தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம்  சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

      அப்போது,  தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் வைத்து, இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி, குறித்த பெண்ணை, முதல் மணல் திட்டு பகுதியில், இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

      இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த  மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இராமேஸ்வரம் – மெரைன் பொலிஸார், படகில் சென்று குறித்த பெண்ணை கைது செய்து, தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.

      அவரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளை அடுத்து,  இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில், அவரை ஒப்படைத்தனர்.

      அத்துடன், அவரிடம்  இருந்து கடவுச்சீட்டு,  இலங்கை குடியுரிமை ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

      மேலும், தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில், அப்பெண்ணை அழைத்துச் சென்ற முகவரை  தேடப்பட்டு வருகின்றார்.


      விசாரணைகளின் பின்னர், அவரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      Posted in Uncategorized

      கிளிநொச்சி மாவட்டத்தில் ,சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை

      கிளிநொச்சி மாவட்டத்தில் ,சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை

      கிளிநொச்சி மாவட்டத்தில் ,இம்முறை சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த. இராஜகோபு தெரிவித்துள்ளார்.


      கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு பாரிய குளங்களும் 5 நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 ஆண்டுக்கு முன்னர்

      40சதவீதத்திற்கு குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68% ஆகவும் 2020 இல் 68.2% ஆகவும் இவ்வருடம் 2021 இல் 78.6% ஆக அதிகரித்துள்ளது.

      இவ் அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

      இம் முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிற்செய்கை 82% ஆக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பொது பங்குகள் பங்கணைத்தலில் ஏற்பட்ட

      அதிகரிப்பு மற்றும் அத்துமீறல்கள் என்பவற்றை கணக்கிடும் போது இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இடம்பெற்றுள்ளதை அறிய முடிவதாகவும் இவ் அடைவு

      மட்டமானது விவசாயிகளின் பங்களிப்புடன் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் சிறப்பான

      நீர் முகாமைத்துவத்தின் மூலம் அடையப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

        Posted in Uncategorized

        20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

        20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

        20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

        தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே இந்த வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று

        கொவிட் 19 வைரசு தொற்றுபரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

        இதேவேளை 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல்

        ஆரம்பமாகும் என கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

        கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்து பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக ,கொழும்பு சுகததாச உள்ளக அரங்கு,

        ஜிந்துப்பிட்டி பொதுச் சுகாதார அலுவலகம், ஃபோர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க், சாலிகா மைதானம், ரொக்ஸி கார்டின் ஆகிய இடங்களில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்படும்.

          Posted in இலங்கை செய்திகள்

          ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்

          ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்

          பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

          அவரது வீட்டில் தீ காயத்திற்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

          சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்

          மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

          இந்த நிலையில், மற்றுமொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து

          வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

            Posted in இலங்கை செய்திகள்

            கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்

            கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்

            ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் நாடு பூராவும் அமுல்படுத்தப்பட்டுள்ள


            அவசரகால நிலைமை குறித்து, பாராளுமன்றத்தில் இன்று (06)
            விவாதிக்கப்படவுள்ளது.

            அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால
            நிலைமை நாடளாவிய

            ரீதியில் அச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
            என்பதுடன் அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியிருந்தது.

            இந்நிலையில், இன்றையதினம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டிருந்த
            வாய்மூல விடைக்கான

            வினாக்களுக்கு பிரிதொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது
            என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.

              Posted in Uncategorized

              லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

              லண்டனில் போலிஸ் அதிகாரியை கடித்து குதறிய குற்றவாளி

              லண்டனில் காவல்துறை சிப்பாய் ஒருவர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றுள்ளார்

              .,அவ்வேளை அவரை குறித்த நபர் அவரது கையில் இரண்டு தடவை கடித்துள்ளார்

              இவரது கடி காயத்தினால் பாதிக்க பட்ட சிப்பாய் சிகிச்சை பெற்றுளளர் ,மேற்படி விடயம் பெரும்

              பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                Posted in உலக செய்திகள்

                ஈரானில் கொரனோ தாண்டவம் 610 பேர் மரணம்

                ஈரானில் கொரனோ தாண்டவம் 610 பேர் மரணம்

                ஈரானில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 610 பேர்

                பலியாகியுள்ளனர் ,மேலும் அதே தினம் இருபத்தி நான்காயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த பட்டு தடைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                  Posted in Uncategorized

                  பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்

                  பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் 3 பேர் மரணம் 24 பேர் காயம்

                  பாகிஸ்தான்,ஆப்கான் எல்லை பகுதியி, இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகியுள்ளனர்

                  மேலும் இருபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலை அடுத்து பாதுகாப்பு

                  பலப்படுத்த பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                    சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                    அவுஸ்ரேலியா Coffs Harbour பகுதியில் நபர் ஒருவர் சுறா கடித்து பலியாகியுள்ளார்
                    சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுக்கள் விரைந்த பொழுதும் அவரை காப்பற்ற முடியவில்லை

                    குறித்த பகுதியில் இது போன்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in மருத்துவம்

                      பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு

                      பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு

                      தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இந்த நோய் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

                      பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோயின் அறிகுறிகள்
                      பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோய்


                      தசை நார் தேய்வு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலில் உள்ள தசை நார்களின் செயல்பாட்டுக்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது.

                      அதில் குறைபாடு ஏற்படும்போது தசை நார்கள் பலவீனமாகி விடும். அதன் காரணமாக உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். நாளடைவில் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.

                      அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.

                      பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி

                      போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-

                      ‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள்.

                      கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை

                      பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு

                      அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான

                      பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.

                      ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை

                      இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும்,

                      நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

                      ‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு

                      பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.

                      தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

                      தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச

                      கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம்

                      பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

                      Posted in சினிமா

                      வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்

                      வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்

                      நடிகர் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது, இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

                      வீரம், அண்ணாத்த பட நடிகர் பாலா 2-வது திருமணம் செய்து கொண்டார்
                      நடிகர் பாலாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்


                      தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், அஜித்தின் வீரம், கார்த்தியுடன் தம்பி ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின்

                      தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திலும் நடிகர் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

                      கடந்த 2010-ம் ஆண்டு அம்ருதா சுரேஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட பாலா, அவருடன்

                      ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2019-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.

                      இதனிடையே கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை நடிகர் பாலா, ரகசியமாக 2-வது

                      திருமணம் செய்துகொண்டதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் நடிகர் பாலா மவுனம் காத்து வந்தார்.

                      இந்நிலையில், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடந்துள்ளது. இதுகுறித்த

                      புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டது உறுதியாகி உள்ளது.

                        Posted in சினிமா

                        லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

                        லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

                        கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

                        லாஸ்லியா ஹீரோயினாக அறிமுகமாகும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
                        லாஸ்லியா


                        ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள்ள படம் ‘பிரெண்ட்ஷிப்’. இப்படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அவருக்கு ஜோடியாக

                        பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

                        உதயகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

                        இந்நிலையில், ‘பிரெண்ட்ஷிப்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                          Posted in சினிமா

                          பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்

                          பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்


                          தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது.

                          பிரகாஷ் ராஜுக்கு 2 நடிகைகள் ஆதரவு…. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் திடீர் டுவிஸ்ட்
                          பிரகாஷ் ராஜ்


                          தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு

                          பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகை ஜீவிதா, விஷ்ணு மஞ்சு, ஹேமா ஆகியோர் தனித்தனி அணிகளாக களத்தில் இறங்கியிருந்தனர்

                          இந்நிலையில், தற்போது திடீர் டுவிஸ்டாக தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறிவந்த நடிகைகள் ஹேமா, ஜீவிதா ஆகியோர் பிரகாஷ்ராஜின் அணியில் இணைந்து விட்டனர்.

                          இதனால் அவரது அணியின் பலம் கூடி உள்ளது. அதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கும், விஷ்ணு மஞ்சுவிற்கும் இடையே நேரடி போட்டி நடக்க இருக்கிறது.

                          பிரகாஷ் ராஜ்

                          இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அணி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை தற்போது அறிவித்து உள்ளார். அதில், நடிகர் ஸ்ரீகாந்த் நிர்வாக துணைத் தலைவராகவும், ஹேமா

                          மற்றும் பேனர்ஜி துணைத் தலைவர்களாகவும், ஜீவிதா பொதுச் செயலாளராகவும் தனது அணி சார்பில் போட்டியிடப்போவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

                            Posted in சினிமா

                            விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி

                            விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி

                            லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடிகை ஷிவானி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

                            விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஷிவானி
                            ஷிவானி


                            தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும்

                            ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

                            இதனிடையே நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாகவும், அவர் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

                            இதுகுறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்த ஷிவானி, தற்போது முதன்முறையாக இதனை உறுதி செய்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக கலந்துரையாடிய

                            ஷிவானியிடம் ரசிகர் ஒருவர், விக்ரம் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் உள்ள கேரவனில் தனது பெயர் இடம்பெற்றிருக்கும்

                            புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஷிவானி. இதன்மூலம் விக்ரம் படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

                              Posted in Uncategorized

                              எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்

                              எருமையை பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகர் – அதிர்ச்சி சம்பவம்

                              எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                              ´நான் ஈ´, ´புலி´ படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார்.

                              இந்த நிலையில் அவரின் 50 நாள் பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்த நாளைக் கொண்டாடினர்.

                              இந்த நிலையில் கர்நாடகம் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான சுதீப் ரசிகர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடினர்.

                              அப்போது சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதைப் பலியிட்டு அந்த ரத்தத்தைக் கட் அவுட் மீது தெளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

                              அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெல்லாரி நகர் காவல்துறையினர் சுதீப் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in Uncategorized

                                நியூயோர்க் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு!

                                நியூயோர்க் தாக்குதல் – ரகசிய ஆவணங்களை வெளியிட உத்தரவு!

                                நியூயாா்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.

                                இதுகுறித்து அவா் கூறியதாவது: இரட்டை கோபுரத் தாக்குதல் குறித்து புலனாய்வுத் துறையினா் நடத்திய விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு நீதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

                                அந்த ஆவணங்கள் அடுத்த ஆறு மாதங்களில் படிப்படியாக வெளியிடப்படும்.

                                இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்த 2,977 பேரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

                                நியூயாா்க் நகரில் இரு கோபுரங்களைக் கொண்ட வா்த்தக மையத்தில் அல்-காய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 11 ஆம் திகதி தாக்குதல் நடத்தினா்.

                                பயணிகள் விமானங்களைக் கடத்தி அந்தக் கட்டடத்தின் மீது மோதச் செய்து நடத்தப்பட்ட அந்த கோரத் தாக்குதலில் 2,977 போ் உயிரிழந்தனா்.

                                அந்த பயங்கரவாதத் தாக்குதலில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபியாவுக்குத் தொடா்பிருப்பதாக பலா் சந்தேகம் எழுப்பினா்.

                                இதுதொடா்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு, ‘இரட்டை கோபுரத் தாக்குதலில் சவூதி அரேபிய அரசுக்கோ, உயரதிகாரிகளுக்கோ தொடா்பில்லை’ என்று தெரிவித்தது.

                                இதன் மூலம், சவூதி அரேபிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் இரட்டை கோபுரத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்றக் குழு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக சிலா் கூறினா்.

                                இதுகுறித்த முழு உண்மைகளை வெளிக் கொண்டுவர, விசாரணை அறிக்கை தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உறவினா்கள் கோரி வந்தனா்.

                                இந்த நிலையில், தாக்குதலின் 20 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்னும் சில நாள்களில் கடைபிடிக்கப்படவுள்ளதையொட்டி அதிபா் பைடன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

                                Posted in Uncategorized

                                நியுசுலாந்தில் மக்களை வெட்டிய இலங்கை முசுலீம் தீவிரவாதி

                                நியுசுலாந்தில் மக்களை வெட்டிய இலங்கை முசுலீம் தீவிரவாதி

                                நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31

                                வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

                                அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

                                இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

                                இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

                                காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முஹமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு கடைசி மகனான முஹகமது சம்சூதீன் ஆதில் பிறந்துள்ளார்.

                                அவருக்கு ஒரு சகோதரியும் 2 சகோதர்கள் உள்ளனர். 4 பேரை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆதில் ஆரம்பகட கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள

                                நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

                                இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளான்.

                                இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருகிறார். அவருடன் கனடாவிற்கு சென்று தந்தையார் குடியேறி வாழந்துவருகின்றார்.

                                அதேவேளை ஒரு சகோதரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருகின்றார். அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு

                                கொடுத்துள்ள தாயார்., காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள தனது வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்

                                இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முஹமது சம்சூதீன் ஆரிப் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்காரணமாக பொலிஸபரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

                                இந்நிலையில் அவர் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை

                                நியூசிலாந்து பொலிஸபர் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்துள்ளனர். இந் நிலையிலேயே அந்நாட்டு பொலிஸாரினால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

                                ஆதில், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பில், அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                கொரனோவுக்கு விதானையார் ஐவர் மரணம்

                                கொரனோவுக்கு விதானையார் ஐவர் மரணம்

                                கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என

                                இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.

                                அத்துடன், 500க்கு மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                கொரோனா பரவலுக்கு மத்தியில், பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் சுமார 14,000க்கும்

                                அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் எவ்வித மேலதிக கொடுப்பனவுகள் இன்றி கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.