புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்
புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளர் மரணம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆஸ்தான மொழி பெயர்ப்பாளரான திருவாளர் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் ஐயா நேற்றைய தினம் தனது 85வது வயதில் காலமாகி விட்ட செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியுள்ளது.
மிகச்சிறந்த மொழி ஆளுமையும், சமூகம் மீதான அதீத அக்கறையும் கொண்ட அவருடன் தனிப்பட்ட ரீதியில் பழகிய நாட்கள் பசுமையானவை. தபால் அதிபராக இருந்து செவ்வனே தன் பணிகளை ஆற்றி ஓய்வு பெற்ற அவர், தன் பணி ஓய்வின் பின்னர் தான் சார்ந்த இனத்தின்
மீட்சிக்காக போராடிய தனிப்பெரும் இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான் மொழி பெயர்ப்பாளராக, சமாதான முயற்சிகளின் பங்காளனாக, போராளிகளுக்கு சிறந்த ஆங்கில ஆசானாக தனது பணியை ஓயாது தொடர்ந்தவர்.
இறுதிப்போரின் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலமாக, போரின் வடுக்களைத் தாங்கி, பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடரமுடியாது தவித்த எத்தனையோ
மாணவர்களுக்கு, தனதும் தனது நண்பர்களின் ஆதரவோடும் கல்விக்கான மாதாந்த உதவிகளை வழங்கி அம் மாணவர்களின் கல்வி பயணத்திற்கு உதவி புரிந்த வண்ணமே இருந்தார்.
பஞ்சரட்ணம் என்ற தனது இயற்பெயரைக் கடந்து ஜோர்ஜ் மாஸ்டராகவே எம் எல்லோரது மனங்களிலும் நிறைந்திருக்கும் இவரது செயற்பாடுகள் எனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் மானிட வாழ்வு தொடர்பான சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்திருந்தன.
உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறேன். ஒருநாள் தனது மருத்துவ தேவைக்காக பண்ணை வைத்தியசாலைக்கு சென்றவர் அங்கே காசநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை கண்டு விசாரித்ததில் வடலியடைப்பைச் சேர்ந்த கணவனை இழந்த
அப்பெண்மணி மிகவும் வறுமைப்பட்டவர் என்பதையும், வறுமையினால் அவரது இரு குழந்தைகள் பாடசாலைக்கு கிரமமாக செல்வதில்லை என்பதையும் அறிந்து, தனது நோயுற்ற நிலைமையையும் பொருட்படுத்தாது பருத்தித்துறையிலுள்ள தனது வதிவிடத்திற்கு வந்து தேவையான கோரிக்கை
கடிதங்களை தயாரித்து, தானே நேரடியாக வடலியடைப்பிலுள்ள அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தேவையான ஆவணங்களையும் கையொப்பத்தையும் பெற்று அப்போது சமூக சேவை
அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி. இமெல்டா சுகுமார் அம்மையாருடன் தொடர்புகொண்டும் அப்போதைய ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் எழிலரசி அம்மையாரை
நேரடியாக சந்தித்தும் உடனடியாகவே குறித்த பெண்மணிக்கு ஒரு தொகை பணமும் பின்னர் மாதாந்த உதவு தொகையும் கிடைக்க வழி ஏற்படுத்தியிருந்தார்.
இத்தகு கருணையும், காருண்யமும் நிறைந்த மனப்பாங்குள்ள மனிதர்களை இன்றைய சமூகத்தில் காண்பது அரிது. தான் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் முழுமைக்கும் தன்னாலான
அரசியல், சமூக, கல்வி, மனிதநேயப் பணிகளை மானசீகமாக ஆற்றி, எம் எல்லோரது வாழ்வுக்கும் முன்னுதாரணமானவராக இருந்து, இறையடியில் இணைந்துகொண்ட ஐயாவின் ஆத்மா அமைதிபெற நாமும் பிரார்த்திக்கிறோம்.
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வேட்டிக்குள் இன்றொரு தாய் கண்டேன் – இந்த
வேளையில் அவருக்கு நன்றி இட்டேன்
போதைக்குள் உறைந்த மனம் கண்டேன் – இந்த
பொதிகையை கண்டே நான் மிளிர்ந்தேன்
பெண் எல்லாம் தாய் என்று யார் சொன்னார் – இந்த
பேய்களின் சிசு கொலை யார் சொன்னார் ..?
முலை கொண்டும் பால் தரா பேயானார் – இந்த
மூளைகள் கொடும் செயல் யார் சொன்னார் ..?
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வந்தாரை மதியாத கீழானர் – இந்த
வந்தேறி வீட்டில் கோலானார்
தந்தவன் தாலிக்கு மேலானார் -இந்த
தவளைக்கு யார் கால் வைத்தார் ..?
மடியாத சேலைக்கு கண் வைத்தார் – இந்த
மாடத்தை காணா அன்றிருந்தார்
கூவத்தில் வாழ்ந்ததை ஏன் மறந்தார் – இந்த
கூடத்தில் இன்னாரை ஏன் இழிந்தார் ..?
அகவையில் இன்றே சிறிதானார் – இன்றோ
ஆடும் பட்டம் போலானார் – இந்த
கீழிடை சிந்தையில் ஏன் நின்றார் – இந்த
கிழிசலை என்று இவர் எறிவார் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
மனைவி இறந்து 3 நாளில் இறந்த கணவன்
கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்து மூன்று நாள்களின் பின் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நுணாவில் பகுதியில் பதிவாகி உள்ளது.
சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3 ஆம் திகதி கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.
கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது
கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 69 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 66,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது..
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் வாகன விபத்து – ஒருவர் மரணம்
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளொன்று, ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில், எதிரே வந்த கடற்படை பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மாலை(06) இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதான
அனுஸ்க அபயரத்தின லக்மால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு
பிரிட்டனில் புலிகள் மீதான தடைக்கு நன்றி – இலங்கை அரசு
நியூசிலாந்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், இலங்கையின் அனைத்து புலனாய்வு பிரிவும் நியூசிலாந்தில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இதற்கான பணிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார் என்றார்.
சர்வதேச ரீதியில் தீவிரவாதம் மற்றும் அதன் தாக்கம் குறித்து தெளிவான அறிவை அனைத்து நாடுகளும் அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாத செயற்பாட்டால் தெற்கு ஆசிய நாடுகள் மாத்திரமின்றி உலக நாடுகளையும் அழுத்தங்களுக்கு இட்டுச் சென்றுள்ளமைக்கு நியூசிலாந்தில் இடம்பெற்ற சம்பவம் சிறந்த உதாரணமாகும் என்றார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரித்தானியா நீக்காமைக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்த அவர், குறித்த தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக பல சக்திகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் பிரித்தானியா நீதிமன்றம் அக்கோரிக்கையை நிராகரித்து வருகின்றது.
போர் முடிந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாகவே பிரித்தானியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என நினைக்கிறோம். இத்தீர்மானமானது ஏனைய நாடுகளுக்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.
இதேவேளை,இலங்கை தொடர்பில் பல்வேறு சக்திகள் போலியான பிம்பத்தை தோற்றுவித்து, பங்கம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை சர்வதேசத்தில் முன்னெடுத்து வருகின்றன.
இந் நிலையில், அவற்றை நீக்கி நாட்டின் யதார்த்த உண்மையை ஐரோப்பாவுக்கு முன்வைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமாக ஐரோப்பிய நாடுகளின் உயரிய மாநாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பை கருதுவதாகவும், இந்த மாநாட்டின் முதல் அமர்வில் பேசுவதற்கும் பிரதமருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொரனோவால் பரிதிசைகள் ஒத்தி வைப்பு
கொரனோவால் பரிதிசைகள் ஒத்தி வைப்பு
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி
2 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் 88,441 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 200,961 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 887,724 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 43,075 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 376,383 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 216,308 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 772,396 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 705,610 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் எமது காட்டு பாட்டில் – தலிபான்கள் அறிவிப்பு
ஆப்கான் முழுவதும் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தாலிபான்களை அறிவித்துள்ளனர் ,இறுதியாக போரிடம்பெற்ற இறுதி மாநிலமும் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்
அரச இராணுவம் தலிபான்கள் வசம் சரண் அடைந்துள்ளனர் ,
அங்கு குவிக்க பட்டிருந்த முள் ஆயுத தளபாடங்களும் மீட்க பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காகோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் நான்கு வயது சிசு பலியாகியுள்ளது
தற்போது தொடராக நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயமடைந்து ,பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
ரீ- என்ட்ரி கொடுக்கும் கனகா
ரீ- என்ட்ரி கொடுக்கும் கனகா
கரகாட்டக்காரன் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை கனகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க இருக்கிறார்.
ரீ- என்ட்ரி கொடுக்கும் கனகா
கனகா
மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 1999-ல் வெளியான விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்த பின் சினிமாவை விட்டு விலகினார்.
தற்போது மீண்டும் நடிக்க வருகிறார் கனகா. இதுகுறித்து கனகா வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.
சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது.
ஒப்பனை, சிகை அலங்காரம், துணி மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன்’’ என்று பேசி உள்ளார்.
திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை
திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை
திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, திருமண நாளில் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை
நீலிமா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சின்னத்திரையில் ஒளிப்பரப்பான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. சின்னத்திரை தவிர, குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நீலிமா நடித்துள்ளார்.
நடிகை நீலிமா, இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நீலிமா தனது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ஜனவரியில் நாங்கள் நான்காகப்
போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி!” என குறிப்பிட்டுள்ளார்.
நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்
நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நடிகை நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்… வைரலாகும் புகைப்படம்
தனுஷ் – நித்யா மேனன்
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.
இப்படத்தை அடுத்து தற்போது மித்ரன் ஜவஹார் இயக்கி வரும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது.
தனுஷ் – நித்யா மேனன்
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியுடன் மோதும் அஜித்
ரஜினியுடன் மோதும் அஜித்
பேட்ட’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித்
ரஜினி – அஜித்
ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
அதே தினத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #ValimaiDiwali என்ற பெயரில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
அஜித் – ரஜினி
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ மற்றும் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான நிலையில் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் மோத இருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முக ஸ்டாலின்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சென்னை
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
- செப்டம்பர் 17ந் தேதி தலைமைச்செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.
பெரியார்
- இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார்.
- பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.
- பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 ஜிகாத் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 ஜிகாத் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
இஸ்ரேல்இராணுவத்தின் சிறையில் அடைத்து வைக்க பட்ட ஆறு பலஸ்தீன ஜிகாத் குழுவை சேந்த கைதிகள் நிலத்தடியால் சுரங்கம் வெட்டி அதன் ஊடக தப்பி ஓடியுள்ளனர்
இவ்விதம் சுரங்கத்தை வெட்டிய, அவர்கள் அங்கிருந்து மறைவிடம் ஒன்றில் தரித்து நின்ற உலங்கு வானூர்தி மூலம் தப்பி சென்றுள்ளனர்
மேலும் இவர்களது தப்பித்தலுக்கு டிரோன் விமானம் பயன் படுத்த பட்டுள்ளது கண்டு இஸ்ரேல் உளவுத்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது
தப்பியவர்களை போட்டு தள்ளும் நடவடிக்கையில், அல்லது கைது செய்யும் வேட்டையில், இஸ்ரேல் உளவுத்துறை தேவைரமாக ஈடுபட்டு வருகிறது
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து மீள் பிரான்சுக்கான இலங்கை எயார் லங்கா விமான சேவைகள் மீள
ஆரம்பிக்க பட உள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது
கட்டம் கட்டமாக முழுமையான பயண சேவைகள் இடம்பெறும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
தாயுடன் காட்டுக்கு சென்ற மகளை காணவில்லை – தேடும் பொலிஸ்
பூண்டுலோயா பகுதியில் தயவுடன் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற இருபத்தி ஐந்து வயது மகள் காணாமல் போயுள்ளார்
இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தின் ஈடுபட்டுள்ளனர் ,இவர் உயிருடன் உள்ளாரா என்பது தொடரபில் ஐயம் நிலவுகிறது
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
கொரனோ தொற்றுக்கு இலக்காகி 180 மரணம்
இலங்கையில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 180 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பத்து ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
நிலாவே நீயா வீழ்ந்தாய்
நிலாவே நீயா வீழ்ந்தாய்
பன்முகத்து ஆளுமையாய்
பாரெங்கும் ஒலித்தவளே
பா முகத்தின் திரைதழுவி
பல கதை சொன்னவளே
இடுப்பின் கீழ் செயல் இழந்தும்
இடராது நடந்தவளே
போர் குணத்து வெறிபிடித்து
புரட்சி பல செய்தவளே
வீடு வந்த வேளையில
விருந்து வைத்து மகிழ்ந்தவளே
ஆர தழுவியென்னை
அன்புருகி நின்றவளே
உந்தன் பிரிவு இன்று
உள்ளமதை வாட்டுதடி
கண்ணில் நீர் வடிய
கலங்கி மனம் துடிக்குதடி
நிலாவே நீ வீழ்வாய் என்று
நியமா நான் நம்பவில்லை
நம்ப முடியா ஒன்றை
நம்பிட ஏன் வைத்தாய் …?
படைக்க பலதிருக்க – நீ
பார் கடந்து பொனதெங்கே …?
விதைத்த பூங்கொடியே
விசாலமாய் உறங்கு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 06-09-2021
http://ethirinews.com/
லண்டனில் –அறிவிப்பாளர் ,பாவலர் ,பன்முக ஆளுமை,.நிலா அக்காவின் மரண துயர் அறிந்த பொழுது
கண்ணீரில் மனம் …
வன்னி மைந்தன் கவிதைகள்








