Posted in Uncategorized

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் (06) யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Posted in Uncategorized

ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின்

முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய

மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில்

நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.

ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    Posted in சினிமா

    ஆக்‌ஷன் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

    ஆக்‌ஷன் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

    தினேஷ் லட்சுமணன் இயக்கும் புதிய கிரைம் திரில்லர் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார்.

    ஆக்‌ஷன் ஹீரோவுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
    ஐஸ்வர்யா ராஜேஷ்


    தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திட்டம் 2, பூமிகா ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது.

    இவர் அடுத்ததாக கிரைம் படங்களுக்கு பெயர் பெற்ற ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

    இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறார். இப்படம் குறித்து தயாரிப்பாளர் அருள் குமார் கூறும்போது, ‘இது ஒரு கிரைம் திரில்லர்

    இன்வெஸ்டிகேஷன் கதை, அர்ஜூன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம்.

    அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.

    இயக்குனர் தினேஷ் லட்சுமணன் திரைக்கதையை முதன்முதலில் விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன். திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும்

    பார்வையாளர்களுக்கு, நீண்ட காலத்திற்குப் பிறகு கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும். நடிகர் அர்ஜூன் இந்த வகையைச் சேர்ந்த

    திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு, தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்’ என்றார்.

      Posted in சினிமா

      சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்

      சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்

      நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் ஆகிய படங்கள் உள்ளன.

      சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் என் திருமணம் – நடிகர் ஜெய்
      ஜெய், சிம்பு
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

      அதில் பேசும் போது, பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன். ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்ட இல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

      திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, ‘சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து

      கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன்’ என பதிலளித்தார் ஜெய்.

      நடிகர் ஜெய் கைவசம் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித்துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம்

      ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஜெய், சுந்தர் சி-க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in சினிமா

        புதிதாக சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜி

        புதிதாக சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜி

        சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜிக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

        புதிதாக சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜி
        தாடி பாலாஜி
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் தாடி பாலாஜி. வெள்ளித்திரையை போல் சின்னத்திரையிலும்

        கவனம் செலுத்தி வந்த இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

        தற்போது பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜி, புதிதாக பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

        புதிய காரின் அருகே எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாடி பாலாஜி “காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

        சொகுசு கார் வாங்கிய தாடி பாலாஜிக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

          கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

          கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

          திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
          தீப்பிடித்து எரியும் வாகனங்கள்

          திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும்

          கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

          திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில்

          இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது.

          பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.

            Posted in Uncategorized

            மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை

            மண்வெட்டியால் வெட்டி ஆண் , பெண் படுகொலை


            நீர்கொழும்பு மற்றும் கொட்டவெஹர ஆகிய பகுதிகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            கொட்டவெஹர, திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய ஒருவர் மண் வெட்டியால் தாக்கப்பட்டுள்ள கொலை செய்யப்பட்டுள்ளார்.

            கொலை சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            இதேவேளை நீர்கொழும்பு, தளுபன பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

            தீக்காயங்களுடன் வீடொன்றின் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு

            கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 89 வயதுடைய குறித்த பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

            சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

              Posted in Uncategorized

              மன்னார் கடலில் எண்ணெய் கண்டு பிடிப்பு-123 வருடங்களுக்கு போதுமானது

              மன்னார் கடலில் எண்ணெய் கண்டு பிடிப்பு-123 வருடங்களுக்கு போதுமானது

              மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட

              முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வலுசக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

              இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 50 வீதத்தை வழங்கினாலும் 133.5 மில்லியன் டொலர் அரசுக்கு கிடைக்கும் எனவும், அது நாட்டின் மொத்த கடன் தொகையான 47 மில்லியன் டொலரை விட மூன்று மடங்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

              பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக முன்வைக்கப்படவுள்ள கனியவளங்கள் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர்

              இதனை குறிப்பிட்டதுடன் இந்த சட்ட மூலத்துக்கு இன்றைய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதியும் வழங்கப்பட்டது.

              இலங்கை கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கனிய வளங்கள் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதன் மூலம் அந்த

              நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் நோக்கிலான இந்த சட்ட மூலத்தை அரசின் முக்கிய விடயமொன்றாக கருதி பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

              மன்னார் கடற்பரப்பிலுள்ள எரிவாயுவினால் மாத்திரம் நுரைச்சோலை மின்சக்தி நிலையத்தை 120 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும், அங்கு காணப்படும் எண்ணெயின் மூலம்

              சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 வருடங்களுக்கு செயற்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.

              எமது அண்டைய நாடான இந்தியா 1940 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு அண்மித்த கடலிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபட்டதுடன், பல்வேறு விடயங்கள் காரணமாக

              இலங்கைக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலை அடுத்து இதற்கான பல கரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

              கடந்த காலங்களில் இலங்கையில் எண்ணெய் ஆய்வுக்காக உலகிலுள்ள பாரிய நிறுவனங்கள் முன்வரவில்லை எனவும் அதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

              “இதற்கு முன்னர் இது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் போது, இந்தத் துறையில் அதிகாரிகளுக்கு காணப்பட்ட நிபுணத்துவம் குறைவு என்பதால், கனிய வளங்கள் அதிகார சபையை ஸ்தாபிப்பதன் மூலம் நிபுணர்களுக்கு இந்த பணியை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை

              எடுத்தோம். அதேபோன்று, கடந்த காலங்களில் அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது உள்ளிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அமைச்சரையை மையப்படுத்தி காணப்பட்டதால் அமைச்சர்கள் மாறும் போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சருக்கு

              வழங்கப்பட்டிருந்த அனைத்து அதிகாரங்களையும் இந்த அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று, பழைமையான வரைபடங்களுக்கு பதிலாக எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுக்கு நவீன வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

              அதேபோன்று, பல மில்லியன் டொலர்கள் இதற்கு முதலிட வேண்டும் எனவும் இந்த பாரிய முதலீடுகளை பாதுகாக்க தேவையான பலம் வாய்ந்த நீதிக் கட்டமைபை அறிமுகப்படுத்துவதும், அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் விசேட குழுவொன்று நியமிக்கப்படுவதும் இந்த சட்டமூலத்தின் ஊடாக இடம்பெறுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

              பொதுவாக உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வின் போது ஒரு நாட்டில் ஏழு கிணறுகள் அகழ்வு செய்யும் போது ஒன்று வெற்றிபெறுவதாகவும், நோர்வே நாட்டுக்கு முதலாவது வெற்றியடைவதற்கு 31 கிணறுகள் அகழ்வு செய்ய வேண்டி ஏற்பட்டதாகவும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 4 கிணறுகள் அகழ்வின் போதும் 3 கிணறுகள் வெற்றியடைந்தமை நல்லதொரு நிலைமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

              இந்த நடவடிக்கைகளுக்காக உலகம் பூராவும் உள்ள துறை சார்ந்த இலங்கை நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

              குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நளின் பண்டார, முதிதா பிரஷாந்தி, குணதிலக ராஜபக்ஷ ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி. ரத்னசேகர, வலு சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர். ஒல்கா ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு


              இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு

              பிரதமர் ; மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

              அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரின் இந்த வியத்தை குறிப்பிட்டார்.

              விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுகமகே ,அரசாங்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த மகாநாட்டில் ,இலங்கையில்

              இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக புனித பரிசுத்த பாப்பரசரிடம் ,பிரதமரும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் தெளிவுபடுத்த இருப்பதாக கூறப்படுவதாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்

              ,இருதரப்பினருக்கிகடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்காகவே இந்த விஜயம் இடம்பெறுகிறது இந்த விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்

              தாக்குதல்கள் தொடர்பான தேவையான விடங்கள் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து பரிசுத்த பாப்பரசரிடம் அவசியம் தெளிவுபடுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

                Posted in இலங்கை செய்திகள்

                பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது

                பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது

                நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் தொடர்பிலான விபரங்களுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.

                அதில்,

                தனிமைப்படுது்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரையிலும் 67,342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                24 மணிநேரத்தில்

                செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை 6 மணிமுதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ்.

                கைதானவர்களின் எண்ணிக்கை -675

                கைப்பற்றப்பட்ட வாகனங்கள்- 42

                சோதனைச் சாவடிகளில்

                மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

                மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிபோது சோதனை செய்யப்பட்ட விவரம்

                வாகனங்கள் -812

                நபர்கள்- 1,206

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

                  இலங்கையில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

                  இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                  அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                  2021 செப்டம்பர்08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

                  மழை நிலைமை:

                  புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

                  காற்று :

                  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                  காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                  கடல் நிலை:

                  காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது

                  கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

                    Posted in Uncategorized

                    லண்டன் கடல் கரையில் குண்டு மீட்பு

                    லண்டன் கடல் கரையில் குண்டு மீட்பு

                    பிரிட்டன் கென்ட் கடல் பகுதியில் நபர் ஒருவர் கிளஸ்டர் ரக குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளார் ,அவசர அழைப்பு மையத்திற்கு

                    தெரிவிக்க பட்ட நிலையில் குண்டு செயல் இழக்கும் இராணுவம் ,போலீசார் குவிக்க பட்டு சோதனை நடத்த பட்டத்துடன் குறித்த குண்டு செயல் இழக்க வைக்க பட்டது

                    இவை இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது பாவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                      டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

                      டிராக்கை திருடி சென்ற திருடனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்

                      லண்டன் Kent Road வீதியில் டிராக் ஒன்றை திருடிய திருடன் அதனை போதையில் செலுத்தி சென்றுள்ளார் ,சந்தேகம் அடைந்த பொலிசார் குறித்த வாகனத்தை துரத்தி சென்ற பொழுது

                      மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
                      தற்போது அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                      ஆண்டு தோறும் பிரிட்டனில் ஒரு லட்சம் கார்கள் திருட படுவதான திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        இரான் பெரும் இராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறது – இஸ்ரேல் எச்சரிக்கை

                        இரான் பெரும் இராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறது – இஸ்ரேல் எச்சரிக்கை

                        ஈரான் தனது அணு ஆயுத சோதனையில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ,புதிய கொடிய ஆயுதங்களை தயாரிக்கும் நகர்வில் தன்னை தீவிர ப்படுத்தியுள்ளது

                        மேலும் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் நோக்குடன் அது நகர்ந்து வருவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது

                        ஈசனின் ஆதரவுடன் இயங்கும் போராளி குழுக்கள் ஊடக இந்த பெரும் தாக்குதலை ஈரான் நடத்த உள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது

                          Posted in Uncategorized

                          மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video

                          மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்ல படும் கார்கள் -16 பேர் பலி -video

                          மெஸ்சிக்கோ வெள்ளத்தில் சிக்கி இதுவரை பதினாறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலு சிலர் காணாமல் போயுள்ளனர்

                          இந்த அகோர வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்ல படும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                          நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்

                          தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                          click here video

                          https://www.youtube.com/watch?v=tPsTVC9pofw
                            Posted in உலக செய்திகள்

                            வீதியில் பற்றி எரியும் ஆடம்பர கார் – தப்பிய சாரதி

                            வீதியில் பற்றி எரியும் ஆடம்பர கார் – தப்பிய சாரதி

                            அவுஸ்ரேலியாவின் வீதி ஒன்றில் அதிவேகமாக பயணித்த ரேஞ்சு ரோவர் கார் ஒன்று திடீரென

                            சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது ,இதன் பொழுது அந்த கார் திடீரென தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                            மேற்படி விபத்தில் சாரதி உயிர் தப்பியுள்ளார் ,தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              Posted in சினிமா

                              மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி

                              மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி.

                              நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

                              மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி?
                              விஜய் சேதுபதி
                              இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                              தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா.

                              இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

                              இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.

                              ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு

                              நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

                                Posted in சினிமா

                                200 கோடி ரூபாய் மோசடி -நடிகை கைது

                                200 கோடி ரூபாய் மோசடி -நடிகை கைது

                                நடிகை லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ‘பிரியாணி’ பட நடிகை கைது
                                லீனா மரியா பால்
                                இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீனா.

                                கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை, டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

                                பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர் சுகேஷ் சந்திரசேகரின் காதலியான நடிகை லீனா மரியா, மருந்து நிறுவனமான ரான்பாக்சியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                லீனா மரியா பால்

                                நேற்று கைது செய்யப்பட்ட லீனா மரியா பாலை டெல்லி கோர்ட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. 5 நாட்கள் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

                                இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர்.

                                இவர் டெல்லியில் தொழிலதிபர்களிடம் பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது காதலி லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                                  Posted in சினிமா

                                  பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை

                                  பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை


                                  கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளவில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.

                                  பிக்பாஸ் 5 சீசனில் நான் இல்லை… என் பெயரை நீக்குங்கள்… பிரபல நடிகை
                                  கமல்
                                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான புரமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

                                  இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 5 சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வலம் வருகின்றன.

                                  இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

                                  இது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன்.

                                  நான் பிக்பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் 5-ல் லட்சுமி ராமகிருஷ்ணன் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

                                    Posted in Uncategorized

                                    சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி

                                    சிங்கள இராணுவத்தால் கற்பழித்து கொல்லப்பட்ட கிருசாந்தி

                                    கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி. சிறுவயதில் தந்தையை இழந்தவர். தாய் ஆசிரியர். கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டவர். திறமையான மாணவி. சாதாரண தரப்பரீட்சையில் ஏழு டி மற்றும் ஒரு சி என்ற அதிதிறமை சித்தி எய்தியவர்.

                                    செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது மரண வீட்டிற்கு சென்ற மாணவர்களில் கிருசாந்தி

                                    குமாரசாமியும் ஒருவர். யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் இராணுவ முகாமடியில் கிருசாந்தி தடுத்துநிறுத்தப்பட்டாள்.

                                    கோப்ரல் தர இராணுவ அதிகாரி ஒருவர் கிருசாந்தியை உள்ளே கொண்டுவருமாறு கூறியுள்ளார். அவள் இராணுவத்தினரால் தடுக்கப்பட்டதை ஊரார் அவதானித்துச் சென்றனர்.

                                    இந்த நிலையில் கிருசாந்திக்காக காத்திருந்த தாயாருக்கு அவள் இராணுவமுகாமடியில் வைத்து விசாரிக்கப்பட்ட செய்தியை ஊரார் கூறினர். இந்த நிலையில் கிருசாந்தியின் தயாரார் 59

                                    வயதான இராசம்மா பக்கத்து வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை அழைத்துக் கொண்டு டியூஷன் போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்தபடி குறித்த இராணுவமுகாமிற்குச் சென்றார். இராணுவமுகாமில் கிருசாந்தியை விசாரித்தனர்.

                                    அவளை விசாரிக்க வந்த மூவரையும் இராணுவமுகாமிற்குள் கொண்டு சென்று சித்திரவதை புரிந்தனர். இரவு பத்து மணியளவில் அவர்கள் மூவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டனர்.

                                    கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொருபேர் வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்குபேரையும் புதைத்தனர்.

                                    அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது.

                                    இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை

                                    முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

                                    செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிரிசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது!

                                    தீபச்செல்வன்.