உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்

Spread the love

உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்

உத்தரகாண்டின் ஆளுநராக பதவி வகித்து வந்த பேபி ராணி மவுரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் 7-வது ஆளுநராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி முதல்

பதவி வகித்து வந்தவர் பேபி ராணி மவுரியா (65). இவர் நேற்றுமுன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இவர் மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் பதவி வகித்த 2-வது பெண் ஆளுநர் ஆவார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், உத்தரகாண்டின் ஆளுநராக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அசாம் ஆளுநராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply