பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்

Spread the love

பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன்

பிரியந்த குமார தியவடனவின் இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி மற்றும்

பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரியந்த குமார தியவடனவின் இழப்பு குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பிரியந்த குமார தியவடனவின் இழப்பிற்கு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளர் என்றும் ரமேஷ் பத்திரண மேலும் குறிப்பிட்டார்.

2.5 மில்லியன்களை வழங்குவது குறித்து 06.12.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தில் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடன அவர்களுக்கான பணத்தொகை வழங்கல்

  2. பாகிஸ்தான் சியல்கொட் பிரதேசத்தின் தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக பணிபுரிந்து வந்த பிரியந்த குமார தியவடன அவர்கள் 2021 திசம்பர் மாதம் 03 ஆம் திகதி கொலைகாரக்
  3. கும்பலால் மனிதநேயமற்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் பணியாளராக 11 வருடங்களுக்கு மேலாக அவர் இலங்கைப் பொருளாதாரத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பைக்
  4. கருத்தில் கொண்டு, அவருடைய இழப்பால் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மனைவி
  5. மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி மனிதநேய அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப்
  6. பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலம் 2.5 மில்லியன்களை வழங்குவதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    Leave a Reply