பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் பிரதி நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்க
பட்டுள்ளார் என அரசு அறிவித்துள்ளது
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் இருக்கும்.
இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்
இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்
இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை
வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி
சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-
செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்
பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர
சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை
வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில்க் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்
,அதிக நோயாளர்கள் சமீப நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பொழுதும் இறப்பு
வீகிதங்கள் குறைவு என கோரி , உரிய மரண எண்ணிக்கையை குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன
இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை
பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன
இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை
லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு
லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு
லண்டன் St Stephen’s Junior School in Canterbury பாடசாலையில் கல்வி பயின்று வரும் 45 சிறார்கள்
மற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் குறித்த
பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இதுபல வேறு சில பாடசலைகளிலும் சில மாணவர்களுக்கு தொற்று உள்ள பொழுதும் அந்த
பாடசாலைகள் இயங்கிவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
A primary school is facing calls to shut for Christmas early after recording
almost 50 confirmed Covid cases.St Stephen’s Junior School in
Canterbury has revealed 45 pupils and four staff members have tested positive for the virus.
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
லண்டன் கென்ட் Folkestone பகுதியில் வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்
முற்றுகையிட பட்டது ,குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பெண் ஒருவர் அந்த
வீட்டுக்குள் சென்று மேற்படி விடயத்தை உறுதி படுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த
நிலையில் மேற்படி வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் நடத்த பட்டது
அப்போதது அங்கிருந்து பெருமளவு பணமும் மீட்க பட்டுள்ளது ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
60 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் இந்த வீட்டுக்கு வந்தவர்கள் வந்தவர்கள்
தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் மக்கள் உதவியும் கோர பட்டுள்ளது
லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்
லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்
இன்று லண்டன் M25 clockwise carriageway near Dartford பகுதி சாலையில் இரு லொறிகள் இரு கார்கள்
மற்றும் கார் ஏற்றி இறக்கும் வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின ,இதில் இருவர்
காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பட்டனர்
இந்த விபத்தினால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,தற்போது அணைத்து
சாலைகளும் வழமை போல இயங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த
அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த
பிரிட்டன் Canterbury கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு ஆசிய நாட்டவர் ஒருவர் அமேசான் பாசல் டிலிவரி செய்துள்ளார் ,அவரது வீட்டுக்கு சென்ற அவர் அந்த வீட்டின் கதவினை தட்டவில்லை
,மாறாக அங்கு பாசல் டிலிவரி செய்ய பட்டுள்ளதாக குறும் தகவல் அனுப்பி விட்டு மேற்படி பாசலை வீட்டுக்கு திருடி சென்றுள்ளார்
மேற்படி காட்சிகள் யாவும் அங்கு பொறுத்த பட்டிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது ,மேற்படி பாசலின்
பெறுமதி முப்பது பவுண்டுகள் எனவும் அதற்கும் குழந்தைகளுக்கு உரிய பேனாக்கள் ,கொள்வனவு செய்ய பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார் .
மேற்படி திருடு சம்பவம் தொடர்பில் அமேசானுக்கு தெரிவித்த நிலையில் ,உரிய காணொளியும் வழங்க பட்ட நிலையில்
குறித்த சாரதி மீள நிறுவனத்திற்கு அழைக்க பட்டு ,இவரது திருட்டு காண்பிக்க பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நிறுத்த பட்டுளளார்
ஒரு திருட்டினால் அவரது வேலை பறிபோனதுடன் ,இவரது திருட்டு ஊடகங்களில் வெளியாகி அவரது மானத்தை வாங்கியுள்ளது
இப்படியும் சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை தந்தாலும் அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
தினமும் நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை நிறைய பேருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் குளிர்ச்சி அடைவதை தடுத்து வெப்ப நிலையை தக்கவைப்பதற்கு முயற்சிப்பார்கள்.
உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு அழகு சேர்க்கவும், இளமையை
தக்க வைக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் விருப்ப தேர்வாக நீராவி குளியல் அமைந்திருக்கிறது.
மெட்ரோ நகரங்களில் நீராவி குளியல் நிலையங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்த அறைக்குள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பரவி இருக்கும். பனிப் புகையும்
வெளிப்படும். இந்த குளியல் முறை மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அதே அளவுக்கு
தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்: நீராவி குளியல் உண்மையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்து விடும். அளவுக்கு அதிகமாக வெப்பம் வெளிப்படும்போது உடலுக்கு வசதியாகவும்,
ஆரோக்கியமாகவும் இருக்காது. தசை பலவீனம் அடையக்கூடும். தசை வலியும் உண்டாகும். அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளிப்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டாலோ,
உடல் உஷ்ணம் அடைந்தாலோ, அசவுகரியமாக உணர்ந்தாலோ நீராவி அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்: நீராவி அறையில் நிலவும் வெப்பநிலை இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யலாம். அப்படி 10 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பு அதிகரித்தால்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
வாஸ்குலர் செயல்பாடுகளில் அதன் தாக்கம் வெளிப்படும். வழக்கத்தை விட ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். ரத்த அழுத்தமும் உண்டாகக்கூடும். ரத்த அழுத்தம் அபரிமிதமாக அதிகரித்தால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கிருமிகள் அதிகரிக்கக்கூடும்: நீராவி குளியல் அறைக்குள் நிலவும் சூடான சூழல் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதற்கு வித்திடும். இது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகளை பரப்பும்
வாய்ப்பை உருவாக்கும். கொரோனா வைரஸ் முடிவுக்கு வராத சூழலில் நீராவி குளியல் நிலைமையை மோசமாக்கக்கூடும். நீராவி குளியல் அறை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால்
கிருமிகள் உடலுக்குள் நுழையலாம். ஏனெனில் வைரஸ் கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்த வகையான சூழல்தான் தேவை. எனவே நீராவி குளியலின்போது உடல் தூய்மையை பராமரிப்பது அவசியமானது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
நாள்பட்ட நோய் பாதிப்பை உண்டாக்கும்: தொடர்ந்து நீராவி குளியல் எடுத்துக்கொள்வது நாள்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஏனென்றால், பைப்ரோமியால்ஜியா போன்ற
நோய்கள் இந்த வெப்பநிலையில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை. ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கக்கூடும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகள்
உண்டாகலாம். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் நீராவி குளியல் மேற்கொள்ள வேண்டும்.
நீரிழப்புக்கு வித்திடும்: நீராவி குளியல் எடுப்பதன் மூலமும் நீரிழப்பு ஏற்படலாம். ஏனெனில் உடலுக்கு தேவையான வெப்பநிலையை விட வெப்பம் அதிகம் உமிழப்படும்போது உடலில் இருந்து
அதிகப்படியான வியர்வை வெளியேறும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். நீராவி குளியல் எடுக்கும்போது சிலருக்கு உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் உதடு உலர்வடைதல் போன்ற
பாதிப்புகள் நேரும். இதனை தடுக்க நீராவி குளியலுக்கு பிறகு உடலில் குளிர்ச்சியான சூழலை தக்கவைக்க வேண்டும். குளியல்தான் அதற்கு தீர்வாகும். ஆனால் குளிக்கும் போது திடீரென
உடலில் வெப்ப நிலை மாறுபடும் . அதனால் நோய் பாதிப்புகள் உண்டாகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தல்: கொரோனா அச்சுறுத்தல் தொடரும் இந்த சமயத்தில் நீராவி குளியல் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், கொரோனா வைரஸ் கடுமையான
வெப்பநிலையிலும் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. நீராவி குளியல் அறையானது கொரோனா வைரஸ் அங்கு நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு சிறந்த இடமாகும்.
எனவே நீராவி அறையில் சிறிய அளவில் கொரோனா வைரஸ் படிந்திருந்தாலும், அதனை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் அது பாதிக்கலாம். எனவே கொரோனா ஆபத்து குறையும் வரை நீராவி குளியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.
குடிமகனாக மாறிய சேரன்
குடிமகனாக மாறிய சேரன்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய சேரன், தற்போது தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
தமிழ்க் குடிமகனாக மாறிய சேரன்
சேரன்
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன்.
கடைசியாக திருமணம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில்
உருவாகி இருக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சேரன்
ஸ்ரீ பிரியங்கா – சேரன்
இந்நிலையில், சேரன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.
மேலும் லால், துருவா, தீபா, வேலாராமமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசக்கி
கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
கணவரின் மாமன் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா
கணவரின் மாமன் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா
நடிகை சமந்தா, நடிகரும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மாமன் மகனுமான ராணா டகுபதியின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
முன்னாள் கணவரின் மாமன் மகனுக்கு வாழ்த்து சொன்ன நடிகை சமந்தா
சமந்தா
நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து தனது மூன்று ஆண்டு கால திருமண
வாழ்க்கையில் இருந்து வெளியேறினார். அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது மீண்டும் கவனத்தை
பெற்றுள்ளது. நேற்று (டிசம்பர் 14) பிறந்தநாள் கொண்டாடிய ராணாவை குறிப்பிட்டு சமந்தா, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா.
உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்’ என வாழ்த்தியுள்ளார்.
ராணா டகுபதி
இதையடுத்து, நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் நட்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ராணா ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து பாஸ்கர் இயக்கிய ‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.2 – 1.5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 3 – 5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொவிட் மரணங்கள்; 5 வீதத்தால் குறைந்துள்ளன.
இவ்வாறு கொவிட் மரணங்கள் குறைவாக பதிவாவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
தற்போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 74 வீதமானோருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 62 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்; வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 14 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.2 – 1.5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 3 – 5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொவிட் மரணங்கள்; 5 வீதத்தால் குறைந்துள்ளன.
இவ்வாறு கொவிட் மரணங்கள் குறைவாக பதிவாவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
தற்போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 74 வீதமானோருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 62 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்; வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 14 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்
ஏமன் நாட்டுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த சவூதி நாட்டின் ஆள்
இல்லா உளவு விமானத்தை ஏமன் இராணுவத்தின் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
மேற்படி விமானமானது Shabwah பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காணொளிகள் வைரலாக பரவி வருகிறது
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்
விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்
கொலம்பியா Camilo Daza சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்
பெற்றுள்ளது ,இந்த அதிர்வு பல மைல் தூரத்திற்கு கேட்டுள்ளது ,மேற்படி வெடிப்பு சம்பவம்
தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஏற்படட முழுமையான சேத
விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்
வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்
கடந்த தினம் Haitian சிட்டி பகுதியில் எண்ணெய் தாங்கி ஒன்று திடீரென வெடித்து சிதறியது இதன்
பொழுது அந்த தீயனைத்தும் அருகில் உள்ள வீடுகளிலும் பற்றியது ,இதன் பொழுது வீடு மற்றும்
அந்த பகுதிகளில் நடமாடிய 54 க்கு மேற்பட்ட மக்கள் தீ பிடித்து எரிந்த வண்ணம் இருந்தனர்
இவர்களில் பலர் தற்போது இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,எனினும் முழுமையா சேத
விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை
அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
ஈராக் டியல பகுதியில் அப்பாவி மக்கள் நான்கு பேரை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்
,குறித்த பகுதியில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது ,
இவர்களை கட்டு படுத்த இராணுவம் பல நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
,ஆனாலும் அதனையும் மீறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பவி மக்களை கடத்தி சென்று
கொன்று வருகின்றமை சாதாரணமாக இடம்பெற்று வருவதாக இராணுவம் தெரித்துள்ளது
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி
அனைத்து தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.
காலை வேளையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ‘இரவு முதல் மறுநாள் காலை தூங்கி எழுவது வரை எதுவும் சாப்பிடாமல்
உடற்பயிற்சி செய்வது அதிக கலோரிகளை எரிக்க உதவும், இதனால் எடை குறையும்’ என்று நம்பப்படுகிறது.
ஆனால் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
அப்படி வெற்று வயிற்றில் பயிற்சி செய்யும் போது உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது உடற்பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதேவேளையில் கடுமையான
உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகிய, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வெறும் வயிற்றில் செய்யும் உடற்பயிற்சி உகந்தது.
மற்றவர்கள் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையக்கூடும். இதனால் தலைச்சுற்றல், குமட்டல் ஏற்படலாம். இருப்பினும் அனைத்து
தரப்பினரும் வெறும் வயிற்றில் மேற்கொள்ளும் பயிற்சிகள் சில உள்ளன. அவற்றுள் நடைப்பயிற்சி, ஜாக்கிங், எளிமையான ஏரோபிக் பயிற்சிகள், யோகா போன்றவை முக்கியமானவை.
உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?
காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவை சரியான அளவில் சாப்பிடும்போது உடலின் செயல் திறன் மேம்படும். குறிப்பாக உடற்பயிற்சி செய்வதற்கு
15-20 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப் பழம் அல்லது சில துண்டு ஆப்பிள்கள் சாப்பிடலாம்.
இவை உடலுக்கு ஊக்கம் அளித்து சோர்வில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு உதவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சிற்றுண்டியை சிறிதளவு சாப்பிடலாம்.
உடற்பயிற்சிக்கு முன் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள் போன்றவை சளியை உருவாக்கக்கூடும். மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதனால் உடற்பயிற்சியின் செயல்திறன் பாதிக்கப்படும்.
எண்ணெய் தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதும் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை போலவே நீர்ச்சத்தை பேணுவதும் முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு
தண்ணீர் பருகலாம். தாகமாக இருப்பதாக உணர்ந்து அதிக அளவில் தண்ணீர் பருகினால் உடனே உடற்பயிற்சி செய்யக்கூடாது. சிறிது நேரம் கழித்த பிறகே உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும்.
உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டியவை:
உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சாப்பிட வேண்டிய உணவு வகைகள் பல உள்ளன. அவற்றுள் பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், முட்டை, கோதுமை பிரெட், சாண்ட்விச், தயிர், பால் போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டியை உட்கொள்வது சிறந்த செயல்திறனுக்கு உதவும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாம்
என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படி உடற்பயிற்சி செய்யும்போது உடலானது உணவுகளின் மூலம் ஆற்றலை பெறுவதற்கு பதிலாக உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை பயன்படுத்தும். இது உடல் எடையை நிர்வகிப்பதற்கு உதவும்.
இருப்பினும் இதுபற்றிய ஆய்வில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன. 12 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, வெறும் வயிற்றில் பயிற்சி செய்த அவர்களின் உடலில் இருந்து
அதிகப்படியான கொழுப்பு வெளியேறியது கண்டறியப்பட்டது. இதே ஆய்வுக்கு பெண்களை உட்படுத்தியபோது அவர் களின் உடலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும்போது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டுமல்ல,
புரதங்களையும் உடல் பயன்படுத்துகிறது. அதனை ஈடு செய்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவை சாப்பிடுவது அவசியமானது.
உடலுக்கு தேவையான தசைகளை உருவாக்க இது தேவைப்படுகிறது. ஆதலால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சிறிதளவு சிற்றுண்டி சாப்பிடுவது ஆரோக்கியமானது.
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை
சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன்.
ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக
டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக
நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
விஜய் சேதுபதி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜனவரி 4ல் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
கவர்ச்சி பக்கம் திரும்பிய ராதிகா
கவர்ச்சி பக்கம் திரும்பிய ராதிகா
பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா, தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி இருப்பதாக கூறி இருக்கிறார்.
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா
ராதிகா
பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு
முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.
ராதிகா
இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.












