யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் ஓட ஓட வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வீதியால் வந்த இளைஞனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது.
தாக்குதலில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் , வண்ணார்பண்ணை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் அவர்களது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
அதன் போது , வாள் வெட்டு சம்பவத்திற்கு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன் பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு
இலங்கையில் பரவும் ஒமிக்ரான்- நால்வர் பாதிப்பு
இலங்கையில் தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் ஒமிக்ரான் நோயினால் பதஹிக்க பட்டு நல்லவர் சிக்கியுள்ளனர்
மேலும் இந்த நோயானது வேகமாக பரவும் நிலை ஏற்படுவதால் ,பலத்த கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளது
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 டிசம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி
வெடித்து சிதறிய பயணிகள் விமானம் – பலர் பலி
டொமினிக் நாட்டுக்கு சொந்தமான இலகுரக ஜெட் விமானம் ஒன்று
அவசர தரை இறக்கம் ஓன்றை மேற்கொண்ட பொழுது வெடித்து சிதறியது ,இதன் பொழுது அதில்
பயணித்த பிரபலங்கள் உள்ளிட்ட ஆறு பேரும் விமன பணிப்பெண்கள் அடங்களாக ஒன்பது பேர்பலியாகியுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை
ஈரான் ஓமான் இராணுவம் கூட்டு இராணுவ போர் ஒத்திகை
ஈரான் மற்றும் ஓமான் இராணுவத்தின் இனைந்து பாரிய போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளனர்
முப்படைகளும் கலந்து கொண்ட பாரிய ஒத்திகை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளதாக நோக்க படுகிறது
இரண்டு அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
இரண்டு அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமன் நாட்டு எல்லை அருகே பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த
ஸ்கான் கழுகு என்ற ஆள் இல்லா விமானத்தை ஏமான் இராணுவத்தினர் இரண்டாவது நாளும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
இரு நாட்களில் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்த பட்டது சவுதிய படைகளிற்கு பெரும்
அதிர்ச்சியை கொடுத்துள்ளது
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன்.
நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.
நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்
செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்
சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை
சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை
ராப் மெஷின்ஸ் வேர்ல்ட்வைட் மற்றும் வைல்ட்லென்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் டேனியா பால்சன் நடித்த ஏடிகே-வின் ‘பச்சை’ இசை வீடியோ விரைவில் வெளியாக இருக்கிறது.
சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை பேசும் பச்சை
பச்சை ஆல்பம் போஸ்டர்
இயற்கை மற்றும் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பச்சை’ இசை வீடியோ டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பாடலை வைல்ட்லென்ஸ்
ஸ்டுடியோவுடன் இணைந்து ராப் மெஷின்ஸ் வேர்ல்டுவைடின் நிர்வாக இயக்குநர் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ளார்.
ராப்பர் ஏடிகே என்கிற ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் இந்த இசை வீடியோவை இயக்கியுள்ளதோடு பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா,
விஜய் ஆண்டனி, தமன் மற்றும் டி இமான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் ஏடிகே பணியாற்றியுள்ளார்.
‘பச்சை’ பாடலை இசையமைத்து பாடியிருப்பவர் பிரியாமாலி. இதற்கு முன்பு இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் ஆகியோருடன் இவர் பணிபுரிந்துள்ளார்.
டிக் டாக் பிரபலம் டேனியா பால்சன் இந்த பாடலில் நாயகியாக நடித்துள்ளார். ஏடிகே சிறப்பு
தோற்றத்தில் தோன்றுகிறார். ஒரு இளம் பெண் வனப்பகுதிக்குள் ஓடி, புதிய காற்றை சுவாசித்து
, அங்கு கிடைக்கும் சுதந்திரத்தை அனுபவிப்பது போல இந்த பாடலின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தலைப்புக்கேற்றார் போல் பாடலுக்கான வரிகள் இயற்கையின் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகின்றன, காட்சிகள் கண்ணனுக்கு இனிமையாக அமைந்துள்ளன. வைல்ட்லென்ஸ்
ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் தீபன் ராஜ் இந்த இசை வீடியோவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விக்ரமுக்கு கொரோனா
விக்ரமுக்கு கொரோனா
நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.
நடிகர் விக்ரமுக்கு கொரோனா
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.
- லலித் குகன் மறைவு வழக்கில் இணையவழியில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றம் வருகை
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
மாணவனை போட்டு தாக்கிய ஆசிரியர் கைது
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவரை
பிளாஸ்டிக் குழாயால் தாக்கிய சம்வத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியரை கைது செய்த வெயாங்கொடை பொலிஸார், அத்தனகல்ல நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று காலை சட்டத்தரணி ஊடாக வெயாங்கொடை பொலிஸில் முன்னிலையாகியதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலையில் நேர வகுப்புக்கு மாணவன் வராததால் குறித்த தொழில்நுட்ப ஆசிரியர், பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு வந்து மாணவனின் கை மற்றம் கால்களில் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனால் கை, கால்களில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாணவன்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தொழில்நுட்ப மாணவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
பிரதி நிதி அமைச்சராக பீரீஸ் நியமனம்
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசினால் பிரதி நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்க
பட்டுள்ளார் என அரசு அறிவித்துள்ளது
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
இலங்கையில் புதிய கொரனோ சட்டம் அமூல்
புதிய சுகாதார வழிகாட்டல், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறையில் இருக்கும்.
இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்
இயக்கச்சியில் வீதியில் நின்றவரை மோதி தள்ளிய டிப்பர்
இலங்கை இயக்கச்சி பகுதியில்15-12-2021 வீதியின் ஓரத்தில் மிதிவண்டியுடன் நின்றவரை
வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி ,தள்ளியது இதன் பொழுது இயக்கச்சி
சங்கத்தார் வயலை சேர்ந்தவரும் , தற்போது உசனில் வசித்து வருபவருமான செல்லத்தம்பி-
செல்வகுமார் என அழைக்க படும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இந்த விபத்தில் சிக்கினார்
பலத்த காயமான நிலையில் தற்பொழுது யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையில் அவசர
சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இதுவரை அவர் கண் விழிக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
சாரதி பளை காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கை
வீதி நடை முறைகளை பின்பற்ற தவறி சாரதிகள் வேகமாக பயணிப்பதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 16 பேர் மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலில்க் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர்
,அதிக நோயாளர்கள் சமீப நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பொழுதும் இறப்பு
வீகிதங்கள் குறைவு என கோரி , உரிய மரண எண்ணிக்கையை குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்
ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன
இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை
பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன
இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை
லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு
லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு
லண்டன் St Stephen’s Junior School in Canterbury பாடசாலையில் கல்வி பயின்று வரும் 45 சிறார்கள்
மற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் குறித்த
பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இதுபல வேறு சில பாடசலைகளிலும் சில மாணவர்களுக்கு தொற்று உள்ள பொழுதும் அந்த
பாடசாலைகள் இயங்கிவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
A primary school is facing calls to shut for Christmas early after recording
almost 50 confirmed Covid cases.St Stephen’s Junior School in
Canterbury has revealed 45 pupils and four staff members have tested positive for the virus.
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
லண்டன் கென்ட் Folkestone பகுதியில் வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்
முற்றுகையிட பட்டது ,குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பெண் ஒருவர் அந்த
வீட்டுக்குள் சென்று மேற்படி விடயத்தை உறுதி படுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த
நிலையில் மேற்படி வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் நடத்த பட்டது
அப்போதது அங்கிருந்து பெருமளவு பணமும் மீட்க பட்டுள்ளது ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
60 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் இந்த வீட்டுக்கு வந்தவர்கள் வந்தவர்கள்
தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் மக்கள் உதவியும் கோர பட்டுள்ளது
லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்
லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்
இன்று லண்டன் M25 clockwise carriageway near Dartford பகுதி சாலையில் இரு லொறிகள் இரு கார்கள்
மற்றும் கார் ஏற்றி இறக்கும் வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின ,இதில் இருவர்
காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பட்டனர்
இந்த விபத்தினால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,தற்போது அணைத்து
சாலைகளும் வழமை போல இயங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த
அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த
பிரிட்டன் Canterbury கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு ஆசிய நாட்டவர் ஒருவர் அமேசான் பாசல் டிலிவரி செய்துள்ளார் ,அவரது வீட்டுக்கு சென்ற அவர் அந்த வீட்டின் கதவினை தட்டவில்லை
,மாறாக அங்கு பாசல் டிலிவரி செய்ய பட்டுள்ளதாக குறும் தகவல் அனுப்பி விட்டு மேற்படி பாசலை வீட்டுக்கு திருடி சென்றுள்ளார்
மேற்படி காட்சிகள் யாவும் அங்கு பொறுத்த பட்டிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது ,மேற்படி பாசலின்
பெறுமதி முப்பது பவுண்டுகள் எனவும் அதற்கும் குழந்தைகளுக்கு உரிய பேனாக்கள் ,கொள்வனவு செய்ய பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார் .
மேற்படி திருடு சம்பவம் தொடர்பில் அமேசானுக்கு தெரிவித்த நிலையில் ,உரிய காணொளியும் வழங்க பட்ட நிலையில்
குறித்த சாரதி மீள நிறுவனத்திற்கு அழைக்க பட்டு ,இவரது திருட்டு காண்பிக்க பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நிறுத்த பட்டுளளார்
ஒரு திருட்டினால் அவரது வேலை பறிபோனதுடன் ,இவரது திருட்டு ஊடகங்களில் வெளியாகி அவரது மானத்தை வாங்கியுள்ளது
இப்படியும் சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
நீராவி குளியல் உடலுக்கு சில நன்மைகளை தந்தாலும் அதே அளவுக்கு தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
தினமும் நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை நிறைய பேருக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் குளிர்ச்சி அடைவதை தடுத்து வெப்ப நிலையை தக்கவைப்பதற்கு முயற்சிப்பார்கள்.
உடலில் இருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றி சருமத்திற்கு அழகு சேர்க்கவும், இளமையை
தக்க வைக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் விருப்ப தேர்வாக நீராவி குளியல் அமைந்திருக்கிறது.
மெட்ரோ நகரங்களில் நீராவி குளியல் நிலையங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. அந்த அறைக்குள் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பரவி இருக்கும். பனிப் புகையும்
வெளிப்படும். இந்த குளியல் முறை மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும். அதே அளவுக்கு
தீமைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நீராவி குளியல் முறையை அதிகம் பயன்படுத்தும்போது அனுபவிக்கும் உடல் நல பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்: நீராவி குளியல் உண்மையில் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்து விடும். அளவுக்கு அதிகமாக வெப்பம் வெளிப்படும்போது உடலுக்கு வசதியாகவும்,
ஆரோக்கியமாகவும் இருக்காது. தசை பலவீனம் அடையக்கூடும். தசை வலியும் உண்டாகும். அளவுக்கு அதிகமாக வியர்வையும் வெளிப்படலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டாலோ,
உடல் உஷ்ணம் அடைந்தாலோ, அசவுகரியமாக உணர்ந்தாலோ நீராவி அறையை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்: நீராவி அறையில் நிலவும் வெப்பநிலை இதயத் துடிப்பை அதிகரிக்க செய்யலாம். அப்படி 10 நிமிடங்களுக்குள் இதயத்துடிப்பு அதிகரித்தால்
நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள்
வாஸ்குலர் செயல்பாடுகளில் அதன் தாக்கம் வெளிப்படும். வழக்கத்தை விட ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். ரத்த அழுத்தமும் உண்டாகக்கூடும். ரத்த அழுத்தம் அபரிமிதமாக அதிகரித்தால் இதய நோய் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கிருமிகள் அதிகரிக்கக்கூடும்: நீராவி குளியல் அறைக்குள் நிலவும் சூடான சூழல் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதற்கு வித்திடும். இது பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் தொற்றுகளை பரப்பும்
வாய்ப்பை உருவாக்கும். கொரோனா வைரஸ் முடிவுக்கு வராத சூழலில் நீராவி குளியல் நிலைமையை மோசமாக்கக்கூடும். நீராவி குளியல் அறை சுத்தமாக பராமரிக்கப்படாவிட்டால்
கிருமிகள் உடலுக்குள் நுழையலாம். ஏனெனில் வைரஸ் கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்த வகையான சூழல்தான் தேவை. எனவே நீராவி குளியலின்போது உடல் தூய்மையை பராமரிப்பது அவசியமானது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
நாள்பட்ட நோய் பாதிப்பை உண்டாக்கும்: தொடர்ந்து நீராவி குளியல் எடுத்துக்கொள்வது நாள்பட்ட நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஏனென்றால், பைப்ரோமியால்ஜியா போன்ற
நோய்கள் இந்த வெப்பநிலையில் பாதிப்பை உண்டாக்கக்கூடியவை. ஆஸ்துமா, தொடர் இருமல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு பாதிப்பை அதிகரிக்கக்கூடும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகள்
உண்டாகலாம். அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில்தான் நீராவி குளியல் மேற்கொள்ள வேண்டும்.
நீரிழப்புக்கு வித்திடும்: நீராவி குளியல் எடுப்பதன் மூலமும் நீரிழப்பு ஏற்படலாம். ஏனெனில் உடலுக்கு தேவையான வெப்பநிலையை விட வெப்பம் அதிகம் உமிழப்படும்போது உடலில் இருந்து
அதிகப்படியான வியர்வை வெளியேறும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். நீராவி குளியல் எடுக்கும்போது சிலருக்கு உடல் சோர்வு, தலைசுற்றல் மற்றும் உதடு உலர்வடைதல் போன்ற
பாதிப்புகள் நேரும். இதனை தடுக்க நீராவி குளியலுக்கு பிறகு உடலில் குளிர்ச்சியான சூழலை தக்கவைக்க வேண்டும். குளியல்தான் அதற்கு தீர்வாகும். ஆனால் குளிக்கும் போது திடீரென
உடலில் வெப்ப நிலை மாறுபடும் . அதனால் நோய் பாதிப்புகள் உண்டாகக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தல்: கொரோனா அச்சுறுத்தல் தொடரும் இந்த சமயத்தில் நீராவி குளியல் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், கொரோனா வைரஸ் கடுமையான
வெப்பநிலையிலும் ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. நீராவி குளியல் அறையானது கொரோனா வைரஸ் அங்கு நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு சிறந்த இடமாகும்.
எனவே நீராவி அறையில் சிறிய அளவில் கொரோனா வைரஸ் படிந்திருந்தாலும், அதனை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் அது பாதிக்கலாம். எனவே கொரோனா ஆபத்து குறையும் வரை நீராவி குளியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.












