கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்
கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்
தீ வைத்த நபர் மீது ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்- கர்நாடகாவில் பரபரப்பு
தீயணைப்பு படையினர் வங்கி தீயை அணைக்கும் காட்சி
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் இவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம்
அடைந்த வசிம் முல்லா, வங்கி கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் வங்கியில் இருந்த பெரும்பாலான பொருட்கள், பத்திரங்கள் தீக்கிரையாகின.
பொதுமக்கள் வருவதை பார்த்துவிட்டு தப்பி ஓட முயற்சி செய்த முல்லாவை அப்பகுதியினர் பிடித்து, அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தற்போது முல்லா மீது காகிநல்லி காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 436, 477 மற்றும் 435 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.
ஏமாற்றம்., ஏமாற்றம்., ஏமாற்றம்., மனசு ரொம்ப வலி(மை)க்குது என்று அஜித் ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை போஸ்டர் ஒட்டி தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்
அஜித்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்
காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை
வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது.
கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில்
குறிப்பிட்டிருப்பது, “ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it’s ok” என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்டரின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா
என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நடிகை சமந்தா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறார்.
என்னைக் காப்பாற்றியது அவர்கள்தான் – சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய பாடல் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமந்தா பேசும்போது,
உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்திலிருந்தால் அவர்களோடு உரையாடுங்கள். அப்போதுதான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு இயல்பாக வாழ முடியும். எனக்கு இப்போது
ஏற்பட்டிருக்கும் நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டு வந்தது என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் துணையில்தான் நான் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இரவு ஊரடங்கு
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்
தமிழர் பகுதிகளில் அகல கால் பதிக்கும் சீன நிறுவனம் – வேலை வாய்ப்பாம்
தமிழர் தாயாக பகுதிகளை இலக்கு வைத்து சீன நிறுவனம் நிறுவ படுகிறது ,இந்த நிறுவனம்
தமிழர்கள் வாழ் வாதாரத்தை பெருக்குவதாக கூறி கொண்டு அங்கு தனது அகல கால் பாதிப்பை நிலை நாட்டை முயல்கிறது
இதற்கு ,கோட்டா ,மகிந்தாவுக்கு பல கோடி லஞ்சமாக வழங்க பட்டுள்ளதாக செய்திகளும் கசிகிறது
நாட்டில் விலைவாசிகளை உயர்த்தியும் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடக
இந்த நிறுவனங்களை அங்கு அகல கால் ஊன்ற வைக்கும் நகர்வு முன்னெடுக்க பட்டுள்ளது
தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே
தனது பிறந்த நாளில் மாணவர்களுக்கு உதவி புரிந்த சுவிஸ் தமிழச்சி -படங்கள் உள்ளே
இன்று திருமதி ச நவநீதமணி ஆசிரியை அவர்களால் ,சகானா திருச்செல்வம் (சுவிஸ்) அவர்களின் பிறந்தநாள் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைக்கப்பட்டது,
நாடு கடந்து புலத்தில் வசித்தாலும் தமது தொப்பிள் கொடி உறவுகளை மறவாது இவ்விதம் இவர்களுக்கு உதவி புரிந்தமை நம்மை எல்லாம் நெகிழ வைக்கிறது
இன்று போல் என்றும் நீடூழி வாழ வாழ்துகொறோம் ,மேலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
மேற்படி தகவலை குறித்த கல்விசாலை அதிபர் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ,சகானாவுக்கு எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது .வீழ்க தமிழ்,வளர்க உன் புகழ் ,



வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம்
லண்டன் Albany Road, Sittingbourne. பகுதியில் கார் ஒன்று வீட்டு மதிலை இடித்து உள்ளே ;புகுந்தது
,இதில் வீடு மதில் பலத்த சேதமடைந்துள்ளது
வேகமாக பயணித்த அவுடி ரக கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து இவ்விதம் விபத்தில் சிக்கியது ,சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
போதையில் காரை செலுத்தியதுடன் காருக்கு காப்புறுதியும் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
ஈராக் Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் வாகான
தொடரணியை இலக்கு வைத்து தாகுதல் நடத்த பட்டது ,இந்த தாக்குதலில் சிக்கி வாகனங்கள் சிதறின
எனினும் இதில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவிலை .
கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது
கணவனை அசிட் ஊற்றிக் கொன்ற மனைவி , மாமி கைது
தினமும் மதுபோதையில் வந்து தகராறை ஏற்படுத்தும் இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது அசிட் வீச்சு தாக்குதலை நடத்தி, கோடரியால் வெட்டிக் கொன்ற சந்தேகநபர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவியும் மாமியாருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 20ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
35 வயதுடைய நபரே இவ்வாறு அசிட் வீச்சுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், 31 வயதுடைய அவருடைய மனைவியும் 52 வயதுடைய மாமியாருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 8ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் உயிரிழந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதுடன், கையில் கத்தியை வைத்தக்கொண்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இதன்போது தனது தம்பியின் வீட்டுக்கு உயிரிழந்தவரின் மனைவி சென்ற நிலையில், அவர் அங்கேயும் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போதே, ஆத்திரமடைந்த மனைவி தனது கணவன் மீது அசிட்டை ஊற்றியுள்ளதுடன், தம்பியின் வீட்டிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த நபர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபர்களான தாயும் மகளும் குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நேற்று (9) இரத்தினபுரி பதில் நீதவான் பிரியங்க குணவர்ணசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்
விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்
விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்
பிரேசில் உள்ளாய் பயணிகள் சென்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 10 பேர்
பலியாகினர் ,மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
குடும்பத்தை கடத்தி 75 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை குடா ஓயா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பூசகர் மற்றும் அவரது மனைவி
பிள்ளைகளை வானில் கடத்தி சென்று எழுபத்தி ஐந்து லட்சம் கொள்ளையடித்த நல்லவர் அடங்கிய குழு ஒன்று காவல்துறையின் விசேட வேட்டையில் சிக்கினார்
இந்த கடத்தல் காரர்கள் பயன்படுத்திய வான் உள்ளிட்டவை மீட்க பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
பேரூந்து டிப்பர் மோதல் – 26 பேர் காயம்
அம்பாறையில் இருந்து திருகோணமலை போக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து
ஒன்றுடன் டிப்பர் ரக வாகனம் மோதியதில் அதில் பயணித்த 26 பேர் படுகாயமாடைந்தனர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி
விபத்து தொடர்பில் மூதூர் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
பயங்கர கலவரம்- 164 பேர் பலி- கார்களுக்கு தீ
பயங்கர கலவரம்- 164 பேர் பலி- விமான நிலையமும் மூடப்பட்டது
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.
கஜகஸ்தானில் பயங்கர கலவரம்- 164 பேர் பலி
போராட்டத்தில் கார்களுக்கு தீ
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான வாயு (எல்பிடி) விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. பொது மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சமாதானப்படுத்த பிரதமர் ஆஸ்கர் மமின் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஆனாலும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் கார்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன.
அல்மாட்டி விமான நிலையமும் மூடப்பட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுமாறு அந்நாட்டு அதிபர் காசிமா ஜோமார்ட்டோகயோவ் உத்தரவிட்டார்.
இதனால் பொது மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வன்முறையை அடக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். வன்முறை சம்பவங்களில் 164 பேர் இறந்தனர். இதில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த 16 பேர் பலியானார்கள்.
மேலும் போராட்டக்காரர்கள் 2,200 பேரும், பாதுகாப்பு படையினர் 1,300 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தற்போது கஜகஸ்தானில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து அரசு அலுவலகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் படத்தின் வேதா கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வைரலாகும் விக்ரம் வேதா படத்தின் இந்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர்
விக்ரம் வேதா
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர்
உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா
இயக்கிய புஷ்கர் – காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து
இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
வேதாவின் பர்ஸ்ட் லுக்
வேதாவின் பர்ஸ்ட் லுக்
இதனை தொடர்ந்து வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான்
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தமக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு
நடிகை ஷோபனா
இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பொன்மனச் செல்வன், பாட்டுக்கு ஒரு தலைவன், தளபதி, சிவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷோபனா. தெலுங்கு, மலையாளத்திலும் அதிக
படங்களில் நடித்துள்ளார். தற்போது நடன பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு
உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு
அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத்தொடங்கியது.
தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது
வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள
வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமைக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
சீனா வெளிநாட்டு அமைச்சருடன் கோட்டா சந்திப்பு
இலங்கை வந்தடைந்துள்ள சீனாவின் வெளிநாட்டு அமைச்சருடன் இலங்கை அதிபர்
கோட்டாபாயாவும் சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பின் பொழுது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பபு அபிவிருத்தி தொட்ரபில்
கலந்துரையாட பட்டுள்ளது என தெரிவிக்க படுகிறது
பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்
பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது, ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்
மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது
குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது
ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு
ஈரானில் சுட்டு வீழ்த்த பட்ட உக்கிரேன் விமான பயணிகளுக்கு நஸ்ட் ஈடு
ஈரானில் 2020 ஆண்டு பறந்து கொண்டிருந்த உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஈரான்
இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டது ,இதன் பொழுது அதில் பயணித்த சுமார் 176 பயணிகளும்
பலியாகினர் ,அவ்விதம் பலியான அனைத்து மக்களுக்கும் ஈரான் நாஷ்ட ஈடு வழங்க ஆரம்பித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது






















