பொலிஸாரின் வலையில்
Posted in Uncategorized

பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனையின் போது, ​​ஹோட்டலில் 33 பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.