பலர் உயிரோடு எரிப்பு
Posted in Uncategorized உலக செய்திகள்

இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

இராணுவ தாக்குதலில் 200 மக்கள் படுகொலை – பலர் உயிரோடு எரிப்பு

நையீரியாவில் காட்டுப்புற பகுதியில் அமைந்துள்ள கிராம புறங்களை இலக்கு வைத்து அரச

இராணுவம் நடத்திய ஈரூடக தாக்குதலில் சிக்கி இதுவரை 200 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்க பட்டுள்ளதாகஆளும் அரசு கூறி வருகிற பொழுதும்

அப்பாவி மக்கள் அங்கு பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு அரச இராணுவத்தின் மனித வெறி தாக்குதலை அம்பல படுத்துயுள்ளன

இங்கு பல கிராமங்களில் மக்கள் உயிருடன் எரியுண்டு மரணித்துள்ளதான காட்சிகளும்

வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    பிரிட்டனில் கொரானாவுக்கு 313 பேர் மரணம்

    பிரிட்டனில் கொரானாவுக்கு 313 பேர் மரணம்

    பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
    கடந்த தினம் மட்டும் 313 பேர் பலியாகியுள்ளனர்

    இதே தினத்தில் 146 ஆயிரத்திற்கு ம்மேலானவர்கள் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் ஒரே நாளில் 669 பேர் பலியாகியும் 468 ஆயிரத்திற்கு மேலானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

      கடலில் மிதக்கும்
      Posted in இலங்கை செய்திகள்

      முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

      முல்லை கடலில் மிதக்கும் புதைக்க பட்ட வாகனங்கள்

      முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரை பகுதியில் மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.

      தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில்

      கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

      இந் நிலையில், நேற்று (08) காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில்

      புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

      உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள் கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

      2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

      சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

      முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு

      இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        கணவனை வெட்டி கொன்ற மனைவி

        கணவனை வெட்டி கொன்ற மனைவி

        மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.

        உயிரிழந்தவர் கந்தலந்த குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

        உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

        நேற்று இரவும் குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

        இதன்போது, கோடரி ஒன்றினால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

        தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

        குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

          இலங்கையில் அரிசி விலை ஏற்றம் – மக்கள் அவதி

          இலங்கை ஒரு கிலோ அசிசி தற்போது 160 முதல் 180 ரூபா வரை விற்க படுகிறது ,இதனால் மக்கள்

          மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

          அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிஅக்ரித நிலையில் ஆளும்

          ஆட்சியாளர்கள் மீது மக்கள் கடு கோபத்தில் உறைந்துள்ளனர்

            சீனா வெளிநாட்டு அமைச்சர்
            Posted in இலங்கை செய்திகள்

            சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு

            சீனா வெளிநாட்டு அமைச்சர் மகிந்தாவுடன் பேச்சு


            இலங்கை வந்தடைந்த சீன வெளிநாட்டது அமைச்சர் பிரதமர் மகிந்தவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளார்

            இரு நாடுகளின் பாதுகாப்பபு மாற்று பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இந்த பேச்சு


            இடம்பெற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது

              லொறியை துரத்தி சென்ற எம்பி
              Posted in Uncategorized

              லொறியை துரத்தி சென்ற எம்பி

              லொறியை துரத்தி சென்ற எம்பி

              இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து

              வ்ருகின்றனர் ,எரிவாயு ,மின்சார வெட்டு ,அத்தியாவசிய பொருட்களை விலை என தொடர்ந்த இன்னல்களை சநதித வண்ணம் உள்ளனர்

              இவ்வேளை எம்பி ஒருவர் டயனா க​மகே தமது வீட்டில் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில் எரிவாயு ஏற்றி சென்ற லொறி ஒன்றை துரத்தி சென்றுள்ளார்

              அந்த லொறி எரிவாயுவை இறக்கிய நிலையத்தில் வைத்து அதனை கொள்வனவு சையதுசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                Posted in Uncategorized

                தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு

                தடம்புரண்ட ரயில் – பயண சேவைகள் பாதிப்பு

                பதுளையில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட பயணிகள் தொடரூந்து ஒன்று தடம் புராணத்தில்

                அவ்வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது

                மீட்பு பணிகள் தொடர்நது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                மனித உடல்கள்
                Posted in Uncategorized

                காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்

                காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்

                மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

                மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது
                மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு

                காருக்குள் 10 மனித உடல்கள் – பதறிப்போன போலீஸ்

                வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

                இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

                இந்த நிலையில் மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று

                கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ

                இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த அந்த காரை சோதனை செய்தனர்.

                அப்போது காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து,

                போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் காருக்குள் 10 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

                அவர்களிடம் இந்த படுகொலையின் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

                  குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு
                  Posted in Uncategorized

                  குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு

                  குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு

                  முர்ரி பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிய சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன.

                  பாகிஸ்தானில் பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள்… குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு பனிப்பொழிவில் சிக்கிய கார்

                  பாகிஸ்தானின் பிரபல மலை வாசஸ்தலமான முர்ரியில் திங்கட்கிழமை முதல் பனிப்பொழிவு உள்ளது. பனிப்போர்வை போர்த்திய ரம்மியமான அப்பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள்

                  குளிரில் உறைந்து 22 பேர் உயிரிழப்பு

                  வாகனங்களில் சாரை சாரையாக வந்தவண்ணம் இருந்தனர். செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தது. சுமார் ஒரு லட்சம்

                  வாகனங்கள் முர்ரி நோக்கி வரும் பாதைகளில் வந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. முன்னும்பின்னும் நகர முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

                  அதேசமயம் நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதனால் வாகனங்களில் இருந்தவர்கள் குளிரில் நடுங்கினர். ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

                  இதற்கிடையே வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் கடுமையான குளிர் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இன்று இரவு நிலவரப்படி 10 குழந்தைகள் உள்பட 22 பேர் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

                  பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்கள்

                  சுமார் 23 ஆயிரம் வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முர்ரியில் இருந்து வெளியே கொண்டு

                  வரப்பட்டன. இன்னும் சுமார் 1000 வாகனங்கள் சிக்கி உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

                  கடும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் பலர் இறந்ததையடுத்து முர்ரி பகுதியை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. மருத்துவமனைகள்,

                  காவல் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முர்ரி நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

                  Posted in சினிமா

                  பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

                  பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?

                  பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.

                  பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா?
                  கமல்


                  நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன

                  பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா,

                  தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.

                  தாமரை
                  தாமரை

                  இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். சென்ற வாரம் 12

                  லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியே சென்று விட்டார். தற்போது 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் தாமரை வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                    பூஜா ஹெக்டே
                    Posted in சினிமா

                    வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி

                    வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி

                    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவின் வீடியோ வைரலாகி வருகிறது.

                    வைரலாகும் பீஸ்ட் நடிகையின் உடற்பயிற்சி வீடியோ
                    பூஜா ஹெக்டே


                    நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில்

                    நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்.

                    தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி

                    வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக

                    வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                      இலங்கையில் கொரானாவுக்கு 13 பேர் மரணம்

                      இலங்கையில் கடந்த தினம் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 13 பேர்

                      பலியாகியுள்ளதக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                      எனினும் இவர்கள் வெளியிடும் இழப்புக்களை விட அதிக மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக

                      சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                        Posted in Uncategorized

                        இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                        இலங்கையில் நாள் தோறும் விபத்தில் 35 பேர் மரணம்

                        இலங்கையில் நாள்தோறும் இடம் பெறுகின்ற பல்வேறு பட்ட விபத்துக்களில் சிக்கி முப்பத்தி ஐந்து

                        பேர் பலியாகிய வண்ணம் உள்ளதுடன் ,35 ஆயிரம் பேர் படுகாயமடைந்து வைத்யசாலைகளில்

                        அனுமதிக்க பட்டு வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                        மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                        மாலைதீவு கடலில்
                        Posted in இலங்கை செய்திகள்

                        மாலைதீவு கடலில் மூழ்கிய இலங்கை படகு – 5 பேர் மாயம்

                        மாலைதீவு கடலில் மூழ்கிய இலங்கை படகு – 5 பேர் மாயம்

                        இலங்கை மீனவர்கள் சென்ற படகு ஒன்று மாலைதீவு கடல் பகுதியில் மூழ்கியதில் ஐவர் காணாமல் போயுள்ளனர்

                        இவ்வாறு காணாமல் போன மீனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகளை முடக்கிவிட பட்டுள்ளன

                        சீனா
                        Posted in இலங்கை செய்திகள்

                        சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                        சீனா வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வருகிறார்

                        இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை அடுத்து சீனாவின் வெளிநாட்டு அமைச்சர்


                        Wang Yi began இலங்கை வரவுள்ளதுடன் ,

                        இவர் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதுடன் ,இலங்கையின் பொருளாதார

                        அபிவிருத்தி தொடர்பாகவும் பேச உள்ளார் என தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

                          அமெரிக்காவில் ஒரேநாளில் 2,025 பேர் மரணம்

                          அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ ணொயின் தாக்குதலில் சிக்கி 2,025 பேர் .

                          பலியாகியுள்ளனர் மேலும்
                          849,181 பேர் பாதிக்க பட்டுள்ளனர் இதே போல பிரிட்டனில் 229 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 178

                          ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்.

                          உலக நாடுகளில் அதிக மக்கள் மரணங்கள் இடம் பெறும் நாடாக அமெரிக்கா பதிய பெற்றுள்ளது.

                            பேருந்து விபத்தில்
                            Posted in இலங்கை செய்திகள்

                            பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

                            பள்ளத்தில் பாய்ந்த பேருந்து

                            ஹட்டன், சலங்கந்தை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று வீதியைவிட்டு 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், நடத்துனரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

                            இன்று (08) காலை 8.30 மணியளவில், சலங்கந்தை பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

                            சலங்கந்தை பஸ் தரிப்பிடத்துக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

                            இயந்திரகோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                              ஓய்வூதிய வயதெல்லை
                              Posted in இலங்கை செய்திகள்

                              அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

                              அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65 வரை நீடிப்பு

                              அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65ஆக அதிகரித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

                              நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்ற சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான

                              வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக

                              அதிகரிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

                                12 முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

                                15 முதல்19 வயது வரையான சிறுவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 12 முதல் 15 வயது வரையான பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட சிறுவர்களுக்கும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

                                இதன் கீழ் சுமார் 30- ஆயிரம் சிறுவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்த சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

                                பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைக்கு இணைவாக இதுவரை 3 ஆவது தடுப்பூசி செலுத்தப்படாத மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் இருந்து பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கு உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

                                எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை வழமைக்குக் கொண்டு வந்து அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் வகையில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.