இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கூறியுள்ளது.

இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக குறித்த தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் வருகை தந்த பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தின் போது வீதியில் கவிழ்ந்ததில் அந்த லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த , தான் புத்தளத்திலிருந்து ஆனமடுவைக்கு பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
Posted in இலங்கை செய்திகள்

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி

ட்ரக் வாகனமொன்றில் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதன்போது, அவர் மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ட்ரக் வாகனத்தில் மோதுண்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் ட்ரக் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை

ஹாலண்டில் தமிழ் பெண் படுகொலை நகைகள் கொள்ளை

ஹாலண்டில் தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் ,இவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகள் என்பனவற்றை கொள்ளை அடித்து தமிழ் பெண்ணை படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஹொலண்ட் பேபார்வைக் பகுதியில் தனிமையில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண் ஒருவரே இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

இந்த படுகொலைகளின் காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,தொடர்ந்து போலீஸ் குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேற்படி சம்பவம் ஹொலண்ட் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு .

பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (12) 09.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

இதில், திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை தர பரிசோதகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி அத்துருகிரிய வெல்லவ பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

அப்போது கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் மின்சார சபையில் ஆங்கில தட்டச்சராக பணியாற்றி வந்ததும், கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

1989 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட நாளில், இது தொடர்பான உறவு தனது கணவருக்குத் தெரியவந்ததையடுத்து, அந்த பெண் தனது கள்ளக்காதலரை அத்துருகிரிய, வெல்லவயில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அங்கு கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து பீப்பாயிலிட்டு கிணற்றில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தம்பதியினர் பின்னர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, தம்பதியருக்கு 2019 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கொலையைச் செய்த தம்பதியை எந்த பொலிஸாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், கொலையைச் செய்த பெண், பண்டாரகம பமுனுகம பிரதேசத்தில் வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி விசாரணை அதிகாரிகள் நேற்று (09) அவரை கைது செய்தனர்.

தற்போது, ​​ஒரு குழந்தைக்கு தாயான குறித்த பெண்ணுக்கு 64 வயதாகும்.

படுகொலை தொடர்பில் 35 வருடங்களாக தேடப்பட்டு வந்த பெண் சிக்கினார்

பிணை வழங்கப்பட்ட பின்னர் கடந்த 35 வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தம்பதியினர் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் தாமும் கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது கணவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

சந்தேகநபரான பெண் இன்று (10) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.

அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.

ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.

“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.

சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ

சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ

சூதாட்டத்துக்கு பாட்டு பாடி பட்டைய கிளப்பிய காவல்துறை பெண் வீடியோ ஆன்லைன் சூதாட்டம் வேண்டாமுங்க என்ற பாடலை எழுதி பாடியுள்ளார் காவல் துறை அதிகாரி சசிகலா .

இருபதுதடவை கேட்டேன் மீள அவரது குரல் ,அழகிய வரிகள் வாழ்த்துக்கள்

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரலஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே திடீரென உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவயந்துள்ளது.

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

உயிரிழந்த நபர் நேற்று (25) மதியம் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.

பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி முகாமையாளரிடம் தெரிவித்தார்.

முகாமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அவரது வாயிலிருந்து சளி வெளியேறியதைக் கண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அப்போது அந்த பெண் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தப்பியோடிய பெண்ணை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த

பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மக்களை காரால் இடித்து மோதிய பெண்
Posted in உலக செய்திகள் எதிரி நியூஸ்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

மக்களை காரால் இடித்து மோதிய பெண்

அமெரிக்கா மொண்டான பகுதியில் பெண் சாரதி ஒருவர் காரை வேகமாக செலுத்தி ,மத யாத்திரிகள் மீது மோதி தாக்குதலை நடத்தினார் .

இவரது இந்த தாக்குதலில் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

க்களை காரால் இடித்து மோதிய பெண்

போதையில் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது.


தற்போது சாரதி பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் . .

குறித்த கார் மோதல் சமபவம் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனமொன்றை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (05) புதுக்கடை இலக்கம் 03 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு

போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்

வீதி பகுதியில் அமைந்துள்ள குறித்த கல்வி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும்

இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும்

12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை (29) உத்தரவிட்டார்.

நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில்

பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா தலைவர் என பெயரை எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில் பயணித்துள்ளார்.

கேக் கொண்டு சென்ற பெண்ணுக்கும் விற்றவருக்கும் விளக்கமறியல்

அங்கு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர், தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை? தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள், என சத்தமிட்டு சென்ற

நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடாந்து சென்று, துயிலும் இல்லம் சென்ற நிலையில் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இவரது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும், புலிகளின் மட்டக்களப்பு படை

தளபதி றமேஷ் மச்சாள் முறையான உறவினர் எனவும் தற்போது தனிமையில் நாவற்குடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கைது செய்து

விசாரணையில் குறித்த பேக்கரிக்கு சென்ற பெண் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் பிரபாகரன் பெயர் எழுதிதருமாறு கேட்டுக் கொண்டதற்கு இனங்க பெயரை பொறித்து கேக்கை விற்பனை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டிலும் அவருக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் பேக்கரியில்

கடமையாறிவந்து கேக்விற்பனை செய்தவர் உட்பட இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சடத்தின்கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து 29ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர்

போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பெண்ணை

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
Posted in இலங்கை செய்திகள்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில்,
இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

video

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்

கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு

ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே குற்றச் செயல் ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்து மாதத்தில் ஒருநாள் நீதிமன்றம் சென்று கையொழுத்து இட்டுவரும் குறித்த பெண்ணை

அங்கு கடமையாற்றி வரும் கல்முனை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்கடர் பெண்னை அனுகி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளர்

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரியை சிக்க வைத்த பெண்

இதனையடுத்து குறித்த பெண் கொழும்பிலுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில், கல்முனை கடற்கரை பகுதியிலுள்ள உல்லாச விடுதி ஒன்றில் கொழும்பில்

இருந்து வந்த இலஞ்ச உழல் பிரிவினர் மாறுவேடத்தில் சம்பவதினமான நேற்று காலை 9.30 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த பெண் பலாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரியை குறித்த விடுதிக்கு வருமாறு அழைப்பையடுத்து அங்கு சென்ற

பொலிஸ் அதிகாரி விடுதி அறைக்கு சென்ற நிலையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் பொலிஸ் அதிகாரியை மடக்கிபிடித்து கைது செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை 28 நாட்கள் விளக்கமறியலில்

வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை கொழும்பிற்கு இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஒழிப்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|


இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|

இஸ்ரேல் ஆமி பெண் பலி,ஹமாஸ் படையினரால் கைது செய்ய பட்ட இராணுவ இளம் பெண் சடலமாக மீட்பு.

அல்சீபா மருத்துவமனை சுற்றிவளைத்து தேடுதல் .

தமது ஆயுதங்களை வைத்து விட்டு ஹமாஸ் ஆயுதம் என பரப்புரை நடத்தும் இஸ்ரேல் இராணுவம் .

வீடியோ