கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு ,வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

வெலிகம பிரதேச சபைத்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார்

சைக்கிள் புத்தளத்தில் உள்ள காட்டில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

புத்தள-கதிர்காமம் சாலையில் 16வது மைல் தூணில் உள்ள காட்டுப் பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் அதை மீட்டனர்.

சந்தேக நபர்கள் அம்பலந்தோட்டை

சந்தேக நபர்கள் அம்பலந்தோட்டைக்கு வந்து கதிர்காமம்-பத்தள சாலை வழியாக கெகிராவாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை அவர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ,மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு

சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்

ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடு

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில், உள்ளூராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக்

கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

மக்களின் ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது

மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை,

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே. மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில்

ஆட்சியமைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த

உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என

ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை

அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.

அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த

அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை

விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும்.

எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு

கஜேந்திரகுமாரைச் சந்திக்கிறது சங்கு கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு கஜேந்திரகுமாரை சந்திக்கிறது சங்குக் கட்சி என செய்திகள் வெளிவந்துள்ளன.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக் கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் கொள்கை அளவில் கூட்டிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சி மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன. தமிழ் மக்கள் அம்மூன்று தரப்புக்களுக்கே அங்கீகாரம் அளித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் சபைகளின் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடன் இம்மூன்று தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது.

அந்த வகையில் தான் நாம் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளோம். குறித்த உடன்பாட்டுக்கு அமைவாக வடக்கு,கிழக்கில் நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புக்களை வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, நாம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான முன்னணியுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம்.

அதற்காக நானும், செல்வம் அடைக்கலநாதனும் அவரை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

விரைவில் அச்சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எமக்குள்ளது. அதன்போது நாம் கொள்கை தொடர்பான விடயங்களையும் நேரில் தெளிவுபடுத்தி பேச்சுக்களை முன்னெடுப்போம் என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும், இணைத்தலைவர்களில் ஒருவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

நடைபெற்று நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்துக்கே ஆணை வழங்கியுள்ளார்கள்.

இதில் அவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் முழுமையான ஆதரவினை வழங்கியிருக்கவில்லை. அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புரிந்துகொண்டுள்ளார்.

அதேநேரம், தற்போது தமிழ் மக்கள் உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரம் சிங்கள தேசியக் கட்சிகளிடத்திலோ அல்லது ஆளும் தரப்பிடத்திலோ சென்றுவிடக்கூடாது என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானதொரு விடயமாகின்றது. அவ்விதமான நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம் பலம் கொள்கைக் கூட்டுப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் சம்பந்தமாக அவர் தெளிவு படுத்த வேண்டும். நாம் தமிழ்த் தேசிய சிந்தனையில் தான் பயணிக்கின்றோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காகவே செயற்படுகின்றோம். அதற்காகவே மக்கள் எமக்கும் ஆணை அளித்துள்ளார்கள் என்றார்.

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
Posted in விசேட செய்திகள்

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

இந்த விடயம் திட்டமிடப்பட்ட நிலையில் நடத்த படும் நாடகம் என்பதாகவே பார்க்க படுகிறது .

காணொளியில் முழுமையான விபாரங்கள் .

இதில் அழுத்தி காணொளிகளை பார்க்க

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு,பல மோட்டார் சைக்கிளை திருடி விற்று வந்த திருடன் ஒருவன் போலீசாரின் சிறப்பு குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இவரால் திருடப்பட்ட 4-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவர்களுடன் போதை வஸ்து பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட வந்த பொழுதே போலீசாரின் சிறப்பு குழுவினால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேற்கொண்ட விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளை திருடி குற்றவாளிகள் மற்றும் போதை போல் கடத்தல் கடத்தலுக்கு விட்டு வந்துள்ளது அந்த செயலுடன் செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தவர் 28 வயதுடைய இளம் வாலிபர் எனவும் இவரால் எவ்வாறு இந்த மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது என்ற வித்தையும் போலீசாருக்கு கற்றுக் கொடுத்தார்.

வீடியோ

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருகின்ற அவ்வாறான திருடர்களில் ஒருவரை இப்பொழுது வசமாக மாட்டி.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள் எவ்வாறு திருடப்படுகின்றன என்கின்ற வித்தையை காட்டிக் கொடுத்துள்ளார்.

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி என அந்த கடைசி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் ஒப்பம் இடுதல் ஊடாக அறிவித்துள்ளது .

தெரிவு செய்ய பட்ட பகுதிகள் யாவிலும் சைக்கிள் சின்னத்தில் ,சைக்கிள் கட்சி போட்டியிடவுள்ளது என்பது இந்த தேர்தல் வேட்பு மனு பதிவின் ஊடாக அறிவிக்க பட்டுள்ளது .

மக்கள் தாயக கொள்கை கோட்பாட்டை மறந்து பெட்டிக்கு போட்டியிட்ட இந்த கட்சிகள் ,தற்போது பாராளுமன்றம் செல்ல தயாராகி வருகின்றனர் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறந்த கயேந்திரன் குமார் அணியினர் இந்த தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வர்களாக என்பதே கேள்வியோ குறியாக உள்ளது .

எது எப்படியோ தற்போது வேட்டைக்கு சைக்கிள் கட்சி தயாராகி விட்டதை இந்த தேர்தல் வேட்பு மனு தாக்கல் கெயோப்பம் இடுதலுடன் அறிவித்துள்ளது .

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை

இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .