Tag: சினிமா
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட நடிகை
அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்த ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா
ராஷி கண்ணா
2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவ
ர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில்
பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர்.சியுடன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம்
முன்னணி நடிகையாக உயர்ந்தார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ராஷி
கண்ணாவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ராஷி கண்ணா
இந்நிலையில் நடிகை ராஷி கண்ணா, தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நட்டு இருக்கிறார்.
இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கும் ராஷி கண்ணாவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
4 முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல், தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
தமிழ் பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகி
ஸ்ரேயா கோசல்
தமிழ் பட உலகில் பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பாடகர்களி
ல் ஒரு பாட்டுக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் பாடகர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.
பாடகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரபல இந்தி பாடகியான ஸ்ரேயா கோசல். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து மூன்றரை லட்சம் வரை வாங்குகிறார். மேற்கு வங்காளத்தை
சேர்ந்த இவர், 4 முறை தேசிய விருது பெற்றவர். 16 வயதில் இருந்து இந்தி படங்களில் பாடி
வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார்.
சித்ஸ்ரீராம்
‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘‘முன்பே வா…, ’’ ‘வெயில்’ படத்தில் இடம்பெற்ற
‘‘உருகுதே மருகுதே…, ’’ ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகிய பாடல்கள், ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.
இவருக்கு அடுத்த இடத்தில், அதிக சம்பளம் வாங்கும் பாடகி, சாதனா சர்கம். ஒரு பாடலுக்கு ரூ.2 லட்சம் வாங்குகிறார். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், தாபோல் துறைமுக நகரில்
உள்ள இசை குடும்பத்தை சேர்ந்தவர். ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘‘வெண்ணிலவே…’’
பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே…’’ என்ற கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல், சாதனா சர்கம் பாடி வெற்றி பெற்ற பாடல்கள்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா
பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்
ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக
உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன.
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.
மாளவிகா
அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு
முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக
வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நயன்தாரா
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில்
தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி
படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4
பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ்,
இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன்
அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல
நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்
தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி
ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
கமல்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும்
, பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார்.
கமல்
இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவு
ம், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டா, தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
பாவனா
பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில்
நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல
படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
பாவனா
ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்
படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா
என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக
நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக
கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
விஜய்
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த
ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில்
ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
விஜய் – பார்த்திபன்
இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை
இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி
இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் திருமணமா அதிர்ச்சியில் நடிகை
அவருடன் திருமணமா அதிர்ச்சியில் நடிகை
பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை
அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை
அமீர்கான்
கடந்த சில நாட்களாக பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து
கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக்
அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே
அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது.
தற்போது மூன்றாவதாக பாத்திமா சனா ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது.
பாத்திமா சனா ஷேக்
இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான் இது பற்றி என்னிடம் கேள்வி
கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
பிரபல நடிகர் மன்சூரலிகான், அங்கீகாரம் இல்லாமல் வீடு கட்டப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
மன்சூரலிகான்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.
வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி
நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டா
ர்.
மன்சூரலிகான்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று
வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது
தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான்
வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை.
இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்
கொரோனா தொற்று காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் கமல்… பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது இவரா?
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன.
தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், சில வாரங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து
வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்து இருந்தது.
விஜய் சேதுபதி
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன் மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தனக்கு நடந்த பாலியல் வன்முறை குறித்து பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.
டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார் – பிரபல நடிகை பரபரப்பு தகவல்
தேவோலீனா பட்டாச்சார்ஜி
பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார்.
அதில் தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக
கூறினார். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது,
“அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச்
செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம் தான் டியூஷனுக்குச் சென்றனர்.
திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன்.
அப்போது ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து
அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்
புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.
இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது
போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்” என கூறி உள்ளார்.
வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி
வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.
வலிமை பட வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி
மணமக்களுடன் சிரஞ்சீவி
அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில்
ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.
இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த
பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை
வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.
கார்த்திகேயா திருமணம்
இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை
சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் – நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
எம்.ஜி.ஆர்.மகன் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி
சசிகுமார் – ரஜினி
சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இப்படத்தில் நிக்கி கல்ராணி
கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கதிர்வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் 49 நடிகர்கள்
நடித்துள்ளனர். இப்படத்தின் விழாவின் சசிகுமார் பேசும்போது, ‘இந்த கூட்டுக்குடும்பம்
சம்பந்தப்பட்ட படத்தைக் கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு
குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
சசிகுமார்
இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்
அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில்
பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு
இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி.டி.ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு
ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தைத் தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்குச்
சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும் என்று அவர் சொன்னார்’ என்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்
நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன
. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு
காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.
கமல்
இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை மீண்டும் கதாநாயகி வேடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
கதாநாயகி வேடத்திற்கு அடம் பிடிக்கும் நடிகை
தமிழ் சினிமாவில் போ என்று சொல்லி பிரபலமான நடிகை, குறுகிய காலத்திலேயே பல
படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம். அதன்பின் முன்னணி இயக்குனர் படத்தில் நடித்து மிகவும்
பிரபலமானதால், தான் பெரிய நடிகையாகிவிட்டோம் என்று தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம்.
இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம். நடிகையும் கொஞ்சம் கொஞ்சமாக
சினிமாவை விட்டு விலகினாராம். தற்போது மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து
வருகிறாராம். ஆனால், பட வாய்ப்பு கேட்பவர்களிடம் கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று
கேட்கிறாராம். நடிகையின் பேச்சை கேட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மீண்டும்
நடிகைக்கு வாய்ப்புகள் எங்கு கிடைக்கபோகுது என்று பேசிக்கொள்கிறார்களாம்
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவரிடம் நடிகை ஒருவர் தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.
நடிகரை விடாமல் வாய்ப்பு கேட்கும் நடிகை
நடிப்பிலும், நடனத்திலும் ‘ராசா’வான மூன்றெழுத்து நடிகர், அவர். சமீபகாலமாக அவர் நடித்த
படங்கள் அனைத்தும் அதிரிபுதிரியாக ஓடி அமோக வெற்றி பெற்று வருகின்றன. அவருடைய
நட்சத்திர அந்தஸ்து, படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.
நடிகருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த ஒரு நடிகை கைவசம் தற்போது படமே இல்லையாம்.
அதனால் அந்த நடிகரை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம். ‘‘ஒரு பாட்டு என்றாலும் பரவாயில்லை…
உங்களுடன் சேர்ந்து ஆடினால் போதும்…’’ என்றாராம். வட இந்திய பெயரை கொண்ட அந்த
நடிகைக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், நடிகர்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் தெரியுமா?
பிக்பாஸ் 5
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர்
வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப்
படலம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இசைவாணி
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்பது குறித்த
தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர்
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என படத்தின் இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை – வருத்தம் தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்
ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல்
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி
கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின்
பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.
ஜெய்பீம்
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு
காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
பிரபல பாலிவுட் நடிகை, ராணி முகர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பரபரப்பை ஏற்படுத்திய ராணி முகர்ஜியின் பேச்சு
ராணி முகர்ஜி
மும்பை திரையுலகம் என்றாலே அதிரடிக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது என்பது பலருக்கும்
தெரிந்த விஷயம். பல சம்பவங்களை திரையுலகினர் வெளியில் சொல்வதில்லை. இப்போது ராணி
முகர்ஜி தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முஜ்சே தோஸ்தி கரோகே படத்திற்குப் பிறகு வேலை இல்லாமல் 8 மாதங்கள் சும்மா இருந்தேன்.
என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்தார்கள்.
ராணி முகர்ஜி
அந்த நேரத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு வந்தது. சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள்.
யஷ் சோப்ராவோ தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை
ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே
அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என்றார். ராணி
முகர்ஜியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது






