Posted in சினிமா

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்

பிரபல நடிகர் மன்சூரலிகான், அங்கீகாரம் இல்லாமல் வீடு கட்டப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்.

நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
மன்சூரலிகான்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மன்சூரலிகான், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு அறப்போட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியிலும் தீர்வு கண்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் மன்சூரலிகானின் வீடு, அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதாக கூறி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, தனது வீட்டில் மாட்டிக்கொண்ட தான் வளர்க்கும் பூனையை மீட்பதற்காக வீட்டை திறக்க வேண்டும், என்ற கோரிக்கையும் வைத்தார்.

வெளிநாட்டை சேர்ந்த மன்சூரலிகானின் செல்ல பூனை அந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி, பூனையை மீட்பதற்காக 1 மணி

நேரம் மட்டும் வீட்டை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார். ஆனால், பூனை ஒரு மாதமாக உணவு இன்றி உயிரிழந்ததால், நீதிமன்றம் அறிவித்தது போல், தனது வீட்டை திறக்க வேண்டாம், என்று மறுப்பு தெரிவித்த மன்சூரலிகான், அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு கடிதமும் கொடுத்து விட்டா

ர்.

மன்சூரலிகான்

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நடிகர் மன்சூரலிகான், ”தான் 20 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் முறையாக அனுமதி பெற்று

வீடு கட்டினேன். இன்று வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அந்த சொத்தை வாங்கியவர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனை காரணமாக, என் வீட்டின் மீது

தவறான தகவல்களையும், புகார்களையும் பரப்பி, என் வீட்டுக்கு இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் என்னை போன்று தான்

வீடு கட்டியுள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்படவில்லை. காரணம், நான் ஒரு நடிகன் என்பதால் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக போராட்டம் நடத்தி தீர்வு காணும்படி, என் நண்பர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களுக்காக போராடி வரும் நான், எனக்காக போராட விருப்பம் இல்லை.

இருந்தாலும், இந்த பிரச்சனையை உச்ச நீதிமன்றம் மூலம் நிச்சயம் தீர்வு காண்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

    Posted in சினிமா

    இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்

    இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்

    இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மன்சூரலிகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் – மன்சூரலிகான்
    நடிகர் மன்சூரலிகான்


    அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட

    சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும்

    பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த

    பிரபலங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான், இனவெறிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து மன்சூரலிகான் கூறியிருப்பதாவது:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மூலம் மக்களை பீதியடைய செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் மக்களிடம்

    கொரோனா பயத்தை அதிகரிக்க செய்திருக்கும் அரசு, மக்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பெருத்த

    ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்பதை காட்டிலும், பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க

    தொடங்கியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், இதற்காக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    மன்சூரலிகான்

    அதே சமயம், அமெரிக்காவில் இனவெறி காரணமாக கொடூரமாக கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு இதய அஞ்சலி

    செலுத்துவதோடு, இப்படிப்பட்ட சம்பவத்திற்கு எதிராக அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

    உலகமே இக்கட்டான சூழலில் இருக்கும் போது, இப்படி ஒரு இனவெறி கொலையை அரங்கேற்றியவர்கள் கடுமையாக

    தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, இதுபோன்ற இனவெறி சம்பவங்களுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும்

    ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மன்சூராலிகான் தெரிவித்துள்ளார்.